Monday, December 28, 2015

காக்கை  உட்கார  பனம்பழமா ==

இரண்டு நாட்களுக்கு முன் புதுவையில் இறுதி ஊர்வலம் பற்றி  ஒரு பதிவை முகநூலி ல் பதிவு  செய்திருந்தேன். அதில்  முப்பது வருடங்களுக்கு  புதுவையில்  இறந்தவருக்கு  போடப்பட்ட மாலைகள என்ன  செய்வார்கள்  என்றும்  தற்போது   இறுதிஊர்வலத்தில் வீசப்படும் மாலைகளால்  ஏற்படும்  அல்லல்களை  சொல்லி இருந்தேன்.. .

இன்றைய தினமலர்  நாளிதழில்  புதுவை நகராட்சி  ஆணையரின்  அறிவிப்பு  ஒன்று  வெளி வந்துள்ளது .  அது  உங்கள்  பார்வைக்கு

=========================================================================
===== உழவர்கரை நகராட்சி  ஆணையர்  வெளியிட்டுள்ள  செய்தி  குறிப்பு ========

             சவ  ஊர்வலத்தின் போது  மாலைகள்  மற்றும் மலர் வளையங்களையும்  உதிரியாகவும்  நார்களுடனும்  சாலைகளில்  வீசுகின்றனர்    இதனால்  பாதசாரிகள்  , இரு சக்கர வாகங்களில்  செல்வோர்  வழிக்கி  விழுந்து  விபத்துக்குள்ளாகி  காயமடைகின்றனர். சில சமயம்  உயிர்  சேதமும்  நேர்ந்துள்ளது .

எனவே  ஆபத்தான  சூழ்நிலைகளை  கணக்கில்  கொண்டு   சாலைகளில் மலர்கள்  மலர்  வளயைங்கள்  வீசுவதை  தவிர்க்க    அப்படியே  இடுகாடு, சுடுகாட்டில்  அவரவர்  சம்ப்ரதாயப்படி  வைத்து விட்டால்  அதை   நகராட்சி அப்பு ரப்படுத்தும்.

            இறந்தவர்  வீட்டில் குவியும்  மாலைகள்  மலர்  வளையங்கள் குறித்து  அணைத்து  நாட்களிலும்  காலை 9.00 மணி முதல்  மாலை  6.00  மணி  இயங்கும் இலவச தொலைபேசி எண்  18004255119 என்ற எண்ணில்   தெரிவித்தால்  அவற்றை சவ ஊர்வலம்  புறப்பட்ட  உடனே  இலவசமாக  அப்புறப்படுத்தப்படும் .============

======================================================================

என்பதிவு  கவனத்தை  ஈர்த்து  நடவடிக்கை எடுக்கப்பட்டதா  அல்லது  காக்கை உட்கார  பனம்பழமா என்று தெரியவில்லை   எது எப்படியாயினும்
உழவர்கரை நகராட்சி  ஆணையர்  அவர்களுக்கு   என்  நன்றியையும்  பாராட்டையும்  தெரிவித்துகொள்கிறேன்.  என் பதிவில் பின்னூட்டம்  அளித்த  நண்பர்களுக்கும்  நன்றி .




Sunday, December 27, 2015

sava oorvalam

ஓரம் போ  ஓரம் போ  இறுதி ஊர்வல  வண்டி  வருது.==


சுமார் முப்பது  வருடங்களுக்கு  முன்பாக புதுவையில்  இறுதி  ஊர்வலம் எதிரில்   வருகிறது  என்றால்   பாதசாரிகள்  அப்படியே நின்று  விடுவர் .  சைக்கிளில் ,  ரிக்க்ஷாவில் , இரு சக்கர  வாகனங்களில் பயணிப்போர்  வண்டியை நிறுத்தி விட்டு  அந்த இறுதி ஊர்வலம்   தம்மை  கடந்து சென்றவுடன்  புறப்படுவார். அது இறந்தவருக்கு  செய்யும்  அஞ்சலி . இறந்தவரின் உடலில் வைக்கப்பட்ட மாலைகள்  தனியாக ஒரு வண்டியில் ஏற்றி  இடுகாட்டிலோ  சுடுகாட்டிலோ  மொத்தமாக  வைத்து விடுவார்கள்.  காவல் துறை  நண்பர்கள் தங்கள் தொப்பியை கழற்றி  கையில் வைத்து கொள்வார்கள் .இறுதி ஊர்வலம்  அவர்களை தாண்டியபின் தொப்பி வைத்து கொள்வார்கள்.

பின்  சில வருடங்களுக்கு  முன்  பேண்ட் வாத்தியம் முழங்க  இறுதி ஊர்வலம்  வெடி வெடிப்புடன்  வரத்தொடங்கியது.  மாலைகளை  பிய்த்து  சாலை  ஓரமாக போட்டு கொண்டு வருவார்கள்.

இப்போது இறுதி  ஊர்வலம் வருகிறது என்றாலே  பயமாய் இருக்கிறது.  காரணம்  மாலைகளை நாளா பக்கமும்  தூக்கி வீசுகிறார்கள்.  அதுவும்  மாலைகளாகவே  போடும்போது  மக்களுக்கு  பெரும் இடைஞ்சலை தருகிறது.   சரி ஊர்வலம்  வருகிறதே  என்று நின்றால்  முன்னால் வரும் இளைஞர் படையினர்  காரை  தட்டியும் ஸ்கூட்டரை எட்டி உதைத்தும்  எதிரில் வருபவர்களை  பீப் பாடலைவிட  மோசமாக திட்டுவதும்  வாடிக்கையாகி விட்டது. காரணம்  துக்கமாம்.  இறந்தவர்  வி  ஐ  பி  ஆகவோ    தாதா ஆகவோ இருந்து  விட்டால்  சொல்லவே  வேண்டாம் .  மக்களும் காவல் துறையும்  படும் பாடு.

இப்போது  புதுவையில்  இறுதி ஊர்வலம்  அமைதி ஊர்வலம்  என்ற நிலை
மாறி , ஆர்பாட்ட   ஆடம்பர  ஊர்வலம்  என்றாகி  விட்டது. 

Thursday, November 26, 2015

parinaama valarchi

பரிணாம வளர்ச்சியா=  பரிதாப தளர்ச்சியா?  

ஆரஞ்ச் டே  கொண்டாடப்பட்டதாக   முக நூலில்   பார்த்தேன்..  முதலில்  அது என்னவென்றே   தெரியவில்லை. பின்  வழக்கம் போல் இணையத்தில் தேடி  . தெரிந்து கொண்டேன்.  நவம்பர் 25  முதல்  டிசெம்பர்  10  ஆம் தேதிவரை  ஆரஞ்ச்  டேவாம் . பெண்களுக்கு  ஆதரவான  நாளாம் . 

80களில்   பாண்டி  கிளையில்  பணி   புரிந்தபோது  நவராத்திரி  விழா  கொண்டாடப்பட்டது . ஒவ்வுறு  நாளும்  மாலை  பூஜை  நடந்து  பிரசாதம்   வழங்கப்படும். அதற்கான செலவை  ஒவொரு   நாளுக்கு ஒவ்வொரு  துறை ஏற்றுக்கொள்ளும் . மகளிர் தோழர்கள்  சம்ப்ரதாய  பாடல்களையும்  பக்தி பாடல்களையும்   பாடுவார்கள் . பெண்மையை  சக்தியை    போற்றும் நாளாக  அந்த  தினங்கள்  கொண்டாடப்பட்டது


பின்பு  பல வருடங்கள் கடந்த  பின்  மார்ச் 8 ஆம் தேதி  மகளிர் தினம்  என்று  கொண்டாடப்பட்டது.  இந்த நாளில்  பெண்மையை போற்றும் விதமாக  கருத்தரங்கங்கள்  கவிதைகள்  கோல போட்டிகள்  நடத்தப்பட்டன.  அந்த கொண்டாட்டங்களில்  ஒரே மாதிரியான  நிறம்கொண்ட  ஆடைகளை  மகளிர்  தோழர்கள்  உடுத்தி வந்தது  அப்போது   பெரிய செய்தியாக  பேசப்பட்டது.

இப்போது  பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை  தடுக்கும் விதமாக  ஆரங்ஜ்  டே  கொண்டாடப்படுவதாக  அறிந்தேன்.   மகளிர் தோழர்கள்   ஆரஞ்ச்  பலூனுடன்  ஆரஞ்ச் நிற உடை உடுத்திய  படத்தினை முக நூலில்  பார்த்தேன்..

இன்னும் எத்தனை  தினங்கள்  மகளிர்க்காக  உருவேடுக்கப்போகிறதோ  தெரியவில்லை.

எது  எப்படியோ  புரட்சி தலைவர்  பாடியது  போல்  திருடனா  பார்த்து  திருந்தா விட்டால்  திருட்டை  ஒழிக்க  முடியாது.




Wednesday, November 11, 2015

vaedhaalam

வேதாளம்  திரைப்பார்வை

சந்தேகமே இல்லாமல்  தல தலைதான்.  படத்தை பற்றி அப்புறம் பாப்போம்
படம் பார்த்த  அனுபவத்தை  பகிர்கிறேன்.   சாதாரணமாக  திரை உலக பாஷையில்  ஒபெநிங் ( அதாவது முதல் காட்சிக்கு வரும் ரசிகர்கள் ) பிரமாதம் என்று சொன்னால் பெரும்பாலும்  அது ரஜினி , கமல்  விஜய்  அஜீத் படமாக இருக்கும். இதில் எப்போதுமே  அஜீத்திற்கு  ஒபெநிங்   நன்றாக இருக்கும்.  ஆனால் இந்த வேதாளம் படத்திற்கு  ஒபெநிங்  இருக்கிறதே  அது அத்தனை   நடிகர்களின் படத்தையும்  தூக்கி  சாப்பிட்டு விட்டது.. புதுவையில் ஏறக்குறைய  அணைத்து பெரிய திரை அரங்குகளிலும் வெளியிடப்பட்ட  வேதாளம்  படம்  மிகப் பெரிய  கூட்டத்தை  ஈர்த்தது.  திரை அரங்கினுள்  படம் தொடங்கியதும்   தல ரசிகர்களின்  ஆர்பரிப்பு  என்னை மிகவும் ஆச்சர்ய பட  வைத்தது. 

இம்மாதிரி  ஆரவாரம் ஆர்பாட்டம்  எல்லாம்  நான்  சிவந்த மண் , உலகம் சுற்றும் வாலிபன்  போன்ற படங்களுக்கு தான்  பார்த்து  இருக்கிறேன்.

அதிகம் பேசாத , ஊடகங்களில்  தலை காட்டாத, விளம்பர படங்களில்  நடிக்காத  சர்ச்சைகளுக்கு  ஆளாகாத  ஒரு  நடிகனாக  மட்டுமே தன்னை வெளிப்படுத்தி கொள்ளும்   அஜீத்திற்கு  எப்படி இப்படி ஒரு மாஸ்.
எத்தனை  காரணங்களை யோசித்தாலும்  புரியாத புதிராக இருக்கிறது.

சரி  இனி படத்தை பற்றி பாப்போம் .
  அடிதடி   அலம்பல்,ஆக்ரோஷம்   ஸ்டைல், அவயங்களை அதிர வைக்கும்  பாடல்கள்  பாச மலர் செண்டிமெண்ட்  பளீச்  ஒலிப்பதிவு  பர பர  காட்சிகள்   பஞ்ச் வசனங்கள்  . மொத்தத்தில்  சரி விகித  மசாலா கலவை.
 சுவையான  மசாலா.


thoongaavanam

தூங்காவனம்  திரைப்பார்வை==


கமல் படம் = போதை பொருள் கடத்தல் = ஹீரோ  அதை பிடித்தல் . அதற்காக  வில்ல ன்   ஹீரோவின் மகனை கடத்தல். கெட்ட  மனிதருக்கான ஹோட்டல்  அதில் டமால்  டுமீல்  சண்டை . ஹீரோ ஜெயித்தல் . சுபம் --  ஆபரேஷன்  வெற்றி   நோயாளி ???  

பொங்கலுக்கு  ஏதாவது  தொலைகாட்சியில் பாத்துகலாங்க.  

கமல் அடுத்த  படம் உங்க  படமா கொடுங்க .


Tuesday, October 27, 2015

seena pattasu

சற்று சிந்தித்து  செயல்படுவோம்.

தேச சேவை செய்ய  வ வு சி போல்  செக்கிழுக்க தேவை இல்லை . பகத்சிங் சிங் போல் வீர மரணம் தேவை இல்லை  திருப்பூர்  குமரன் போல்  கொ டி காத்து  மரணிக்க தேவை இல்லை .   இன்றைய சூழலில் நம் செய்ய வேண்டியது  ஒரு சிறு செயல் தான்.  அதாவது  சீன பட்டாசுகளை  புறக்கணிப்பதுதான்..

நண்பர்களே  ஏற்கனவே  ஜவுளி துறை  பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரம்  கேள்வி குறியாக்கப்பட்டுவிட்டது.

விவசாய தொழிலாளர்களின் நிலை கேட்கவே வேண்டாம்.

பட்டாசு தொழிலை நம்பி  லக்ஷக்கனக்கானோர்  உள்ளனர் . இந்த நிலையில் சீனாவில் இருந்து பட்டாசு அதிக அளவில் இந்தியாவிற்குள்  நுழைந்துள்ளதாக ஊடகங்கள் தகவலாக தெரிவிக்கின்றன.   தீபாவளியை முன்னிட்டு அதிகமாக  செயல்படும் பட்டாசு கம்பனிகள்  , இப்போது உற்பத்தியை  குறைத்துள்ளதாம் . நமது நாட்டின் பொருளாதாரத்தை  அசைத்து பார்க்கும்  வண்ணம்   சீன  பட்டாசுகலின்  வரவு இருக்கிறது.

சீனா  ஏற்கனவே    நச்சுத்தன்மை வாய்ந்த பொம்மைகளை குறைந்த விலைக்கு  இந்தியாவில் விற்பனை  செய்ததாக செய்திகள் வெளியாகின.

சீனாவை பற்றி நம் எல்லோர்க்கும் தெரியும் .  

இன்னொன்று நண்பர்களே  சிவகாசி பட்டாசுகள்  தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள்  அவ்வளவாக ஆபத்தை விளைவிக்கா தது . ஆனால் சீன  பட்டா சுகலின் மூலப் பொருட்கள்  அதிக  ஆபத்தை  உண்டாக்ககூடியது  என்று  பத்திரிகளில் படித்து அறிந்தேன்.

எ னவே நாம் செய்ய வேண்டியது , லக்ஷக்கணக்கான  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிககச் செய்யும்  சீனப் பட்டாசுகளை  புறக்கணித்து
நம்மாலான கடமையை  ஆற்றுவோம்.  

Saturday, October 3, 2015

nadigar sanga thaerthal

தேவையா  இந்த பரபரப்பு ==

நடிகர் சங்க தேர்தல் - விஷால் அணி  = சரத்குமார் அணி  கமல் ஆதரவு  என்ற பத்திரிகைகளும்  ஊடகங்களும்  பரபரப்பு செய்திகளை  வெளியிட்டு வருகின்றனர். மக்களும் அதை ஆவலுடன் பார்கின்றனர்.

நண்பர்களே யோசித்து பாருங்கள் .. நாட்டில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன . அரசியல்  சார் புடனும்  அரசியல் சார்பில்லாமலும்.  எல்லா சங்கங்களிலும் தேர்தல் நடக்கிறது . அது அந்தந்த சம்பத்தப்பட்ட  சங்கங்களின்  கடமை மற்றும் உரிமை.  நடிகர் சங்கத்தின் தேர்தலுக்கு  மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்.  இது ரசிகர்களிடையே  கசப்பான  உணர்வுகளை தராதா.

எனக்கு தெரிந்து நடிகர் சங்கத்தில் அரசியல்  நுழைந்தது கிடையாது. இப்பொது அரசியல்  சாயம் மெல்ல மெல்ல பூசப்படுவது போல்  ஒரு தோற்றம் உருவாகி வருகிறது.  அது அவர்களின் பிரச்சனை நாம் கவலை பட  தேவையில்லை.  ஆனால் நம்மை பொருத்தவரையில்  சில விழயங்களில் கவலைப்பட்டே தீர வேண்டி இருக்கிறது.  நல்லதோ கேட்டதோ , தெரிந்தோ தெரியாமலோ  சினிமா  தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றி விட்ட ஒரு விழயமாகி விட்டது.   சரி நாம் ஏன் கவலை படவேண்டும் .

விஜய் ரசிகர்களும்  அஜீத் ரசிகர்களும்  இணையத்தில்  கலாய்த்து கொண்டிருப்பது  கொண்டிருப்பது , சற்று எல்லை மீறி கூட ==நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .  ரஜினி கமல் ரசிகர்கள் மனோபாவமும் நமக்கு தெரியும் .  எம் ஜி யார்  சிவாஜி  காலத்தில் தொழிற் போட்டி இருந்தாலும் நடிகர் சங்கத்தில் அரசியல் புகவில்லை .மக்களுக்கும் அது ஒரு பெரிய விஷயமுமில்லை.

ஆனால் இப்போது கமல் விஷால் அணிக்கு ஆதரவு  இன்னும் பல நடிகர்கள் ஆதரவு  என்றும் அதே போல் சரத்குமார் அணிக்கு சில பிரபலங்கள் ஆதரவு
என்ற செய்திகளும்  அவர்களுடனே நிற்காது . அது அவரவர்  ரசிகர்மன்றங்கலிலும்  ஒரு  தாக்கத்தை உண்டு பண்ணும்..என்ன மாதிரி  தாக்கம் என்று உங்களுக்கே புரியும்.  எந்த அணி வெற்றி பெற்றாலும்  வெற்றியை இழந்த அணி  மீண்டும் சுமுகமாக  சங்கப்பணி யில் ஈடுபடமுடியுமா. .

நாடக நடிகர்களின் ஆதரவு எங்களுக்கு  இளைய தலைமுறையின் ஆதரவு எங்களுக்கு  என்று மாற்றி மாற்றி கூறி வரும்  இரு அணிகளும்  சற்று சிந்தித்து பார்த்து, தங்கள் வேற்றுமைகளை மறந்து  ஓரணியாய் இணைந்து  பதவிகளை பகிர்ந்து  சங்கத்தின்  செயல்பாடுகளை  செழுமை படுத்துங்கள் .

தற்போதை சினிமாவின் நிலை ?? விநியோகஸ்தர்  திரை அரங்க உரிமையாளர்கள்  கருத்து வேறுபாடு , படம் தோல்வி அடைந்தால்  நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்பது , குறிப்பிட்ட தேதியில்  படம் வெளியிட  முடியாத நிலை  சின்ன படங்களுக்கு திரை அரங்கு கிடைக்காத நிலை  என்று சினிமா உலகம் சிரம திசையில் இ ருக்கும்  போது   சங்கங்கள்  ஒற்றுமையுடன்  செயல்பட்டால்தான்  ஒரு நல்ல தீர்வு காண முடியும் .

சினிமா ஆயிரக்கணக்கான  தொழிலாளர்களின் வாழ்வாதாரம். பல கோடி பணம் புழங்கும் இடம் . திரைத்துறையின்  அந்தந்த சங்கங்கள் வலுவாக இருந்தால்தான் நியாயம் கிடைக்கும். இந்த பொறுப்பு  கூடுதலாக நடிகர் சங்கத்திற்கு உண்டு .

பத்திரிகையாளர்களே  ஊடகங்களே  உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் .
 நடிகர் சங்க செய்திகளை வெளியிடுங்கள்  ஆனால் சரியான நோக்கத்தில் வெளியிடுங்கள்.  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு  கொண்டாட்டம் என்று
சொல்லிக்கேட்டதுண்டு . நடிகரில் இரண்டு பிரிவு  நமக்கு பரபரப்பு என்ற ரீதியில் செய்திகளை வெளியிடாதீர்கள்.

ஊடக , வாசக  ரசிக  மற்றும் சினிமா ஆர்வலர்களே   நடிகர் சங்க தேர்தலை ஒரு சங்கத்தின் தேர்தலாக மட்டும் பாப்போம் , மற்ற  சங்கங்களின் தேர்வை போலே..

Monday, September 28, 2015

பண்ணபுரத்தாரே  என்ன இப்பிடி  .பண்ணீட்டீங்க .

நேற்று மாலையில் இருந்தே  இரவு இசைஞானி யின் எம் எஸ் வி  அஞ்சலி நிகழ்ச்சியை  காண  ஆவலாய் இருந்தேன்.  நிகழ்ச்சியை  முழுவதும் பார்த்தேன்.  ஆனால் ====?? 

முதலிலேயே சொல்லி விடுகிறேன்  நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன்.  அதற்காக எம் எஸ் வி பாடல் பிடிக்கவில்லை  என்ற  அர்த்தமில்லை.
எம் எஸ் வி பாடல்கள்  என்னுடைய இளம்பருவத்தில் இரவின் மடியில் தேனாக காதில் பாய்ந்த காலங்கள் உண்டு. .

நேற்றைய நிகழ்ச்சியில்  இளையராஜாவின்  பேச்சு  என்னை  அவ்வளவாக 
ரசிக்க செய்யவில்லை.  என் பார்வையில் அந்த  நிகழ்ச்சி அஞ்சலி நிகழ்ச்சி மாதிரி இல்லை. 

எம் எஸ் வி பாடல்களில்  அற்புதமாக பாடிய  டி எம் எஸ்  அவர்கள் பாடல் ஒன்று கூட  பாடப்படாதது  தற்செயலா அல்லது திட்டமிட்ட புறக்கனிப்பா .

ஒரு பாடலை குறிப்பிட்டு  அது கே  வி  மகாதேவன் இசை அமைத்தது  என்று 
சொன்னார். அது அவசியமா  அல்லது அந்த பாடலையே தவிர்த்திருக்கலாமே. 

ஆஸ்தான இசை அமைப்பாளரை நீக்கி விட்டு  எம் எஸ் வி யை ஒப்பந்தம் செய்த கேள்வியை கேட்டு  அவர் வீட்டில் எம் எஸ் வி  அறை  வாங்கினார் . என்ற தகவல் நினவஞ்சலி யில் தேவையா. .

ஒரு பாடலை குறிப்பிட்டு விட்டு இம்மாதிரி பாடலை  இன்றைய  சூப்பர   ஸ்டார்களுக்கு  போட முடியாது  என்ற சொன்ன ராஜா ,,  ரஜினிக்கு 
சஹானா சாரல் தூறுதே  என்ற பாட  ல்  போடப்பட்டதை  மறந்து விட்டாரா. 

வீடு வரை உறவு , பேசுவது கிளியா   ஒ ஒ  மாம்பழத்து வண்டு  போன்ற பாடல்கலை பற்றி  குறிப்பிட்டது  எப்படி எம் எஸ் வி க்கு அஞ்சலி என்று புரியவில்லை.    ஒரு பாடலை குறிப்பிட்டு    கவிஞர்  தாமரை மனதில் வைத்து  என்று எழுதியுள்ளாரே 
அதில் கிளாரிட்டி இல்லை என்று ராஜா என்னமோ சொன்னார்.  அதற்கு இன்று  காலை முகநூலில்  கவிஞர் மகுடேஸ்வரன்  என்பவர்  விளக்கம் அளித்துள்ளதாக  எனக்கு ஒரு பதி வு  வந்தது. .  அதன் விளக்கம் வருமாறு 

           நீரில் சூழ்ந்து இருந்தாலும் தா மரையோ  அதன் இலைகளோ தண்ணீருடன்  ஒட்டாது . அதை போன்று எனக்கு சுற்றங்கள் இருந்தாலும்  என் மனது அவர்களுடன் ஓட்டாது . அதன் காரணமாக தாமரை மனதில் வைத்தேன்  என்று எழுதியிருப்பதாக  கவிகன்ர் மகுடேஸ்வரன்  கூறியுள்ளார். 

இந்த கேள்வி அந்த நிகழ்ச்சியில் அவசியமே இல்லையே. .

இன்னொன்றையும் ராஜா  குறிப்பிட்டார் .  எம் எஸ் வியை வைத்து தொடர்ந்து 
படம் எடுத்தவர்  ஒருநாள்  ராஜாவிடம் வர   ராஜா  அவரிடம் தான் ஒப்புக்கொள்ளமுடியாது என்று தெரிவித்தாக கூறினார்.   ஆனால்  பின்னாளில்  அவருக்கு  சில பல படங்கள் பண்ணி இருக்கிறாரே என்ற எண்ணம் என் நினைவிற்கு வந்தது. 

எல்லாவற்றையும் விட  காமராஜர் ஆட்சியில்  அரிசி பஞ்சம் வர  comunist  ஆன
பாவலர்       சுப்ரமணியன் அரிசி வேண்டும்   சுப்ரமணியம்  அரிசி வேண்டும் என்று  பாடினார்கலாம்.

பண்ணையாரே  மன்னிக்கவும் , பன்னைபுரத்தாரே  இவையெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு தேவையா. 

சரி அப்ப இருந்த  அரிசி பஞ்ச காமராஜ்  ஆட்சியும்  பாவலர்   சிந்தனைகளும் 
இப்ப எப்படி இருக்கிறது . காமராஜ் ஆட்சியை விட சிறப்பாக இருக்கிறதா .தங்கள் பொது உடமை சித்தாந்தம் எந்த அளவில் உள்ளது. 

நேற்றைய  நிகழ்ச்சியை பற்றி இவ்வளவு உங்களை விமர்சித்தாலும்  உங்கள் இசையில் எனக்கு தீராத காதல் உண்டு .. 

இசை கேட்டால் புவி அசைந்தாடும்  அது  இறைவன் அருளாகும் . அந்த இசை ஆண்டவன் அருளால் உங்களிடம் அபரிதமாக இருக்கிறது   எனவே தங்களின்  வார்த்தைகளை விட  தங்களின் இசை எங்களை தனி உலகத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறி  தொடரட்டும் உங்களது இசைப்யணம்   என்று முடிக்கிறேன்.  


Thursday, September 24, 2015

kutram  kadithal


குற்றம் கடிதல்  ஒரு திரைப்பார்வை.

குத்து பாட்டு கிடையாது  மனதை வருடும் இசை உண்டு.   அபத்த காமடி  கிடையாது  அர்த்தமுள்ள  காட்சிகள் உண்டு.  த்ரிஷா  நயன்தாரா அனுஷ்க  மாதிரி கவர்ச்சி நாயகி கிடையாது   ஆனாலும்  கதாநாயகி அழகாக இருக்கிறாள் .

ஒவ்வொரு கதா பாத்திரமும் தன்  இயல்பை மீறாமல் அமர்கள படுத்தியிருக்கிறார்கள் .

பாரதி பாடல் பொருத்தமாக கையாளப்பட்டிருக்கிறது.

தலைமை ஆசிரியராக வருபவரும்  தோழராக வருபவரும்  பின்னி இருக்காங்க.

 ஆசிரியைக்கு கடைசி காட்சியில்  கார்கியின்   தாய் புத்தகத்தை  பரிசளிப்பது
கவிதை.

அதே போல் அறிவியல் ஆசிரியை  பிறப்பை பற்றி  படம் வரைந்து பாடம் எடுக்கையில்  மாணவ மாணவிகளின்  குறும்புகளை  சமாளித்து  பாடத்தை முடிக்கும் போது கை தட்டி   கண் கலங்கி மாணவர்கள் நிலை மாறும் காட்சி
அற்புதம்.

நான் நீண்ட நாட்களுக்கு பிறகு  அமைதியாக உணர்வு பூர்வமாக  ரசித்த படம்.
நம்மாலும் நல்ல படத்தை தர முடியும்  என்று நிருபித்த பட குழுவினருக்கு  நன்றி,.

Sunday, September 20, 2015

trisha illaanaa nayanthaara

த்ரிஷா  இல்லேன்னா  நயன்தாரா. ==


பாஹுபலி, பாபநாசம் , கா க்கா முட்டை  தனி ஒருவன்  என வரிசையாக நல்ல படங்கள் வருகிறது என்று   எந்த மாபாவி கண் பட்டதோ தெரியவில்லை
இப்படி ஒரு படம்.  சாக்கடையாக.  வசனங்கள் கள் ஆபாசத்தின் உச்சம் . பெண்களும்  மது அருந்தும் அவலம் .

ஒரு முறை  ஒரு கவிஞருக்கு  பாராட்டு விழா கலந்துரையாடலாக  நடந்ததாம் .  கூட்டத்தில்  ஒருவர்  உங்கள் கவிதை    ஆபாசமாக இருக்கிறதே  என்றாராம்.  உடனே கவிஞர்  வீடு என்றால் வரவேற்பறை, சமையல் அறை , படுக்க அறையுடன்  ஒரு கழிப்பறையும்  இருக்கும்  அது போலத்தான் என்பாடலும்  என்றாராம்.  உடனே இன்னொருவர்  அது சரிங்க  சமீப காலமா நீங்க வீடு பூரா  முழுக்க கழிப்பறையா  கட்டுரீங்கலே என்றாராம்.

அது இந்த படத்திற்கும் பொருந்தும் .

பதின் வயது இளைஞர்களின் கூட்டம்   திரை அரங்கை  மொய்க்கிறது .
வியாபார ரீதியாக  படம் வெற்றி பெறும்  தார்மீக ரீதியாகவும்  கலாசார ரீதியாகவும் இந்த படம்  நம்மை  சம்மட்டியால் ஓங்கி அடித்திருக்கிறது.

இது குடும்பத்தோடு  பார்க்ககூடாத படம். 

Thursday, September 17, 2015

ganesanai enakku romba pidikkum

கணேசனை எனக்கு  ரொம்ப பிடிக்கும்.  

கண  என்றால் குழு  என்றும்   பதி  என்றால்  முதன்மையானவன்   என்றும்  சமீபத்தில் இணையத்தில் படித்தேன் .

கணேசன்  குழுக்களின்  முதல்வன்  அன்றும் இன்றும் என்றும்.

கணேசன் சிலையை   போற்றவும்  செய்வர்  தூற்றவும் செய்வர். எதை பற்றியும் கவலை இன்றி தன்  வழி செல்லும்  நம்பிக்கைக்கு உரியவர்.

எல்லோர் இதயங்களிலும்   கொலுவிருக்கும்  கணேசன்   சிலையை  உடைத்தொரும் உண்டு  அகற்ற  நினைத்தொறும்  உண்டு.

 தாயை போற்றிய கணேசன்   தாயை    அன்னை இல்லத்தில் வைத்து பூசித்தார்.

கணேசன் படமாகவோ  சிலையாகவோ  வெளி வருகிறார் என்றால்  திருவிழா கோலம்தான் .

 தோரணங்கள்  வாத்தியங்கள்  மக்கள்  கூட்டம்  மகிழ்ச்சி வெள்ளம் .

கணேசன் கலைஞர்களுக்கு  வரப்ரசாதம் . அவரை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் .  இசை கருவிகளை வாசிப்பவனாக ,  விளையாட்டு வீரனாக
எப்படி வேண்டுமானாலும் தோன்றுவார்.

கலைஞருக்கு மிகவும் பிடித்த கணேசன்.

கணேசன் எளிமையானவர்.  

கணேசன்  குழந்தைகளுக்கு பிரியமானவர் . கணேசன் பெரியவர்களுக்கு
நம்பிக்கை நாயகன் .

இனம் மதம்  நாடு கடந்து கணேசன் எல்லார்க்கும்  பிடிக்கும்

எனவே எனக்கு  கணேசனை பிடிக்கும். .

இன்று  பதிவிட்டிருக்கிறேன்   எந்த கணேசன்  உங்கள் யுகத்திற்கு. நீங்கள் எந்த கணேசனை  நினைத்தாலும்  எனக்கு மிகவும் பிடித்தமானவரே .


Friday, September 11, 2015

baarathi

பாரதி  என்னை மன்னிப்பாயா ??

 உன் பாடல்கள்  எனக்கு மிகவும் இஷ்டம்.  எனக்கு மட்டுமா  உரை வீச்சாலர்களுக்கு , பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு ,  பள்ளி கல்லூரிகளில்  மாறு வேட போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு , அனல் பறக்க ஆவேசமாய் பேசும் அரசியல்வாதிகளுக்கு  எல்லோருக்கும் தான்.

பாரதி ,பெண்ணுரிமை  தேச பக்தி  இன்னும் பலவற்றிக்கு  நீ  BRAND AMBASAADOR   ஆக பயன்படுகிறாய் . அப்போதுதான் கைதட்டல்கள்  அதிகம் கிடைக்கிறது .

உன் வரிகளை நான் உச்சரிக்கும்போதெல்லாம் , அந்த வரிகளுக்கும் நடைமுறைக்கும் துளி கூட சம்பந்தமில்லை என்பது  மட்டும் அல்ல  முரணாகவும் இருக்கிறது .

காணி நிலம் வேண்டும் என்று பாடினாய்   இப்போது ஏக்கர் ஏக்கராக நிலம்    களவாடப்படுகிறது  அல்லது காயடிக்கப்படுகிறது.

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர்
வாராது போல வந்த மாமணியை தோற்போமா   என்று  உணர்சிகரமாக பாடும்போது   தாராள  மயமும்   அந்நிய மூலதனமும்   தோற்போம் போலிருக்கிறதே  என்று  எண்ண  தோன்றுகிறது  பாரதி. .

பாரதி  வெள்ளை நிறத்தில் ஒரு பூனை  எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பாடல் வரிகள் ஞாபகம் இருக்கிறது ?  அதை நீ பாடிகொண்டே வரும்போது
வண்ணங்கள் மாறுபட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை  ஒரு வரி வரும்  அதை நான் நினைக்கும்போது  மனதில் சிறு மின்னல் போல ஒரு எண்ணம் . இப்போது வண்ணங்கள்   ஆன்மீகம  அரசியல்  சாதி  என்று  தங்களை நிறமாக அடையாளப்படுத்தி  கொள்கிறது.

இன்னும் என்னென்னமோ தோணுது பாரதி .  அஞ்சி அஞ்சி  சாவர் அவர் அஞ்சாத பொருளில்லை  என்று நீ பாடினாயே  அது எனக்குத்தான்.  என்ன செய்வது  முக நூலில் எழுதினால் கூட மு ஜாமீன் கிடைக்குமா என்று பார்த்து  எழுத  வேண்டி இருக்கிறது. .

 பாரதி  இன்று நடந்த சம்பவம் ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.  காலை
கடைக்கு சென்ற போது  ஒரு  பதின்  வயது  பெண்  பொருட்கள் வாங்கிய பிறகு எவ்வளவு என்று கடைக்காராய்   கேட்க   அவர்  முப்பத்தி இரண்டு  ரூபாய் என்று சொல்ல  அந்த பெண் திரு திரு என்று விழித்து  பின் மெதுவாக
அப்படீனா எவ்வளுவு அங்கிள்  என்று கேக்க   அருகிலிருந்த ஒரு நண்பர்
தர்ட்டி டூ  ருபீஸ் என்ற. உடனே அந்த பெண்  ஓ  தர்ட்டி டூவா  சாரி அங்கிள் என்று  சொல்லி பணத்தை கொடுத்தது.

மெல்லத்தமிழ் இனி சாகும் என்று சொன்னாயாமே    நீ சொன்னதில் இது  ஒன்றுதான்  உடனே நடக்கும் போல் இருக்கிறது.

இப்படி எல்லாம் எழுதியதிற்கு  என்னை மன்னிப்பாயா   பாரதி. 

Monday, August 31, 2015

inteligence


INTELLIGENCE IS NOT ENOUGH.

INTELIGENCE  IN OTHER WORDS COMMON SENSE OR JUDGEMENT. SOME SAY IT IS ABILITY TO ADAPT ONESELF TO JUDGE WELL, UNDERSTAND WELL AND REASON WELL.

IT IS A CAPACITY OF SUCCESFUL ADJUSTMENTTT IN ALL SORTS OF SITUATION.

INTELIGENCE IS NOT ENOUGH.  SOCIAL INTELLIGENCE  AND EMOTIONAL INTELLIGENCE ARE ALSO IMPORTANT FOR SUCCESS.

   INTELLIGENCE  alone is not enough; it has never been enough on its own. You may be an ordinary student but you can be an extraordinary success at whatever you choose to do. The two most important ingredients for a successful life are a goal and persistence with confidence.
   there  are many forms of intelligence.   and any one alone may not lead to success. The key is to know your strengths, but also be aware of weaknesses and know how to compensate for them.BRILLIANT PEOPLE ARE  OFTEN UNDONE BY LACK OF EMOTIONAL INTELLIGENCE.



according to martin luther king

We must remember that intelligence is not enough. Intelligence plus character--that is the goal of true education. The complete education gives one not only power of concentration, but worthy objectives upon which to concentrate. The broad education will, therefore, transmit to one not only the accumulated knowledge of the race but also the accumulated experience of social living."

It is a mistake to assume that intelligent people are necessarily good thinkers. Intelligence is a potential. Without the ability to harness that potential through ‘thinking skills’, however, it can be wasted.


here are social games, money games, status games and little mini-games within each professional discipline.
Intelligence doesn't necessarily give you an advantage in all these games, it might even handicap you (e.g., the social game). Either because a game is simple enough that it doesn't take more than average intelligence to fully master it, or perhaps more commonly because the game is too unpredictable / chaotic for intelligence to model it usefully at all.
For example, it doesn't matter how smart you are, you can't predict the weather reliably more than a week into the future, because the weather is a chaotic system. Predicting the weather isn't just a random example. In the real world you're much more likely to come up against non-linear problems than linear ones. Chaos makes fools of the best of us.
 Unfortunately for the unusually intelligent there aren't many of them around and life is generally not a math puzzle or a game of chess. Being more intelligent certainly makes you different but it won't make you more successful unless you're very careful to choose a lucrative field that can take full advantage of it inside a support structure that frees you from most of the drudgery.


Sunday, August 30, 2015

தனி ஒருவன்


தனி ஒருவன்  ஜெயம் ரவி படம் ஒரு பார்வை===

படத்தின் ஆரம்ப  காட்சியே   ரசிகர்களின் கரவொலிஉடன்தொடங்கி விட்டது..
சவாலான  வில்லன்  சமாளிக்கும் கதாநாயகன் . விறு விறு என்று  கதை நகரத் தொடங்குகிறது. கதை களம் வித்தியாசமாக இருக்கிறது . ஒட்டு மொத்தமாக அருமையான டீம் வொர்க் .  அமர்களப்படுத்தி இருக்கிறார்  அரவிந்த்சாமி .
அருமையாக பொருந்தி இருக்கிறார் ஜெயம் ரவி.  துளி கூட போரடிக்கவில்லை. வசனங்கள் பளீச் . நீங்கள் துப்பறியும்  நாவெல்  படிப்பவர்  என்றால்  நிச்சயமாக பிடிக்கும் . கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாத படம்.


பி      கு. பதினைந்து வயதிலேயே  தமது  சாமர்த்தியத்தினால்  குறுக்கு வழியில்
வாழ்கையின் உச்சத்துக்கு போகும்  ஒரு பாத்திரம் , ஊரிலுள்ள   அத்தனை தொழில்களையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும்  மகனின்   அரசியல் வாதி அப்பா   ஹவாலா மோசடி  மணல் கொள்ளை  இவைகளை படத்தில் பாக்கும்போது  ஏதோ  ஒரு குடும்பம் ஞாபகத்திற்கு வருது  ஆனால் படத்தின் ஆரம்பத்திலேயே  இவை கற்பனை பாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல  என்று போட்டு விடுகிறார்கள்.  அதனால் என் எண்ணம் தப்பு ..

வாதி               அப்பா  

Friday, August 21, 2015

chemmeen

செம்மீன்


இன்றைய முக நூல் பதிவில் தோழர்  ராமன் அவர்கள்  தகழி சிவசங்கரன் பிள்ளையின்  தோட்டியின்  மகன்  என்ற கதையை பற்றி  பதிவிட்டிருந்தார். நண்பர் மனோகரன்  சில வருடங்களுக்கு முன்  எனக்கு படிக்க கொடுத்த புத்தகம் அது. அற்புதமான  கதை.

எனக்கு ரொம்ப வருடங்களுக்கு  முன்பே  தகழி  என்ற எழுத்தாளரை பற்றி தெரியும் . ஏனெனில்  அவரின் செம்மீன்  கதையையும், கயறு  என்ற கதையையும்  படித்திருக்கிறேன்.  நீ எப்ப அந்த கதையை  தேடி படித்தாய் என்று  கேட்டால்  அதற்கு காரணம் சினிமாதான்.

ஒரு சுவாரசியமான செய்தி நேற்றுடன்  செம்மீன் வெளியாகி சரியாக ஐம்பது வருடம் ஆகிறது. .  என் நினவு இந்த படம்  சரியாக இருக்குமானால்  தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் தேசிய விருது பெற்ற படம்.
நான்  படத்தை பார்த்த பிறகுதான்  கதையை படித்தேன்.

கதையை சிதைக்காமல்  இயக்குனர்  ராமு காரியத்  படத்தை மிக இயல்பாக
எடுத்திருந்தார். இந்த படம் மீனவர்களின் வாழ்க்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது  என்ற  போராட்டமும்  நடைபெற்றது.  ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  பின்னாளில்  இயக்குனரை  கதையின் நாயகி மணந்து கொண்டார்  என்ற செய்தியும் உலா வந்தது .உண்மையா தெரியவில்லை.

மீனவர்களின் வாழ்கையை   எழில் கொஞ்சும் கேரள அழகில், வட  இந்திய இசை அமைப்பாளர் மற்றும் பாடகர்களை கொண்டு  உருவாகிய அந்த படத்தின் பாடல்  அற்புதம்.

தகழி சிவா சங்கர் பிள்ளை நிறைய எழுதி இருந்தாலும் , செம்மீன் , தோட்டி மகன்  கயறு போன்றவைகள்  காலத்தால் அழிக்க முடியாதவை .

என் எண்ண  அலைகளை பல வருடங்கள் பின்னோக்கி  செலுத்த காரணமாயிருந்த  தோழர் ராமனுக்கு நன்றி. 

Wednesday, August 19, 2015

ஐயா பதில் சொல்லுங்க ஐயா

 நானொரு முட்டாளுங்க ....

தெரியாம சில கேள்விகளை கேட்டா   முட்ட்டாபயன்னு  திட்றாங்க .

என்ன கேள்வின்னு கேக்கறீங்களா ?  இதோ கேள்விகள்


ஒரு தியாகி  மது கூடாதுன்னு  ரொம்ப வருஷமா போராடிக்கிட்டு இருந்தாராம்  அறவழியில.   ஆனா திடீர்னு  செல்போன் டவர்லே  ஏறி
போராட்டம் பண்ணும்போது செத்து போயிட்டாராம்.  நோக்கம்  போராட்டம் எல்லாம் சரிதான். செல்போன்  டவர்ல ஏறலாமா ?  கேட்ட்ட என்ன முட்டாப்பயன்னு  சொல்றாங்க ==


மதுவை விட  புகைபிடிப்பது ஒன்னும் பெரிய பாதிப்பு இல்லைன்னு  ஒருத்தர் சொல்றாராம்.  பின்னே புகை பிடித்தால் புற்று நோய் வரும்னு
ஏன் சொல்றாங்க  கேட்டா என்ன முட்டா பயனு சொல்றாங்க

ஆட்சிக்கு வந்து கடையை திறந்தவரே   நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
கடையை மூடுவோம் என்கிறாரே - கேட்டா  என்ன முட்டா பயன்னு சொல்றாங்க ==

முன்னெல்லாம்  வர்க்கப்போராட்டம்   முதலாளி தொழிலாளி  அப்படின்னு பேசியவங்க எல்லாம்  இப்ப  தீண்டாமை , மது விலக்கு  மக்கள் நல கூட்டணி  என்று  பாதையை மாற்றி விட்டார்களே என்று கேட்டால்  என்ன முட்டா பயன்னு
 சொல்றாங்க .

 நாம குடிக்க கூடாத  மது உற்பத்தி செய்யற முதலாளியும் , பிடிக்கவே கூடாத சிகரெட்டை  விக்கிற முதலாளியும்  செழிப்பா  வாழறாங்க  ஆனா  நாம் சாப்பிட்டே ஆகவேண்டிய  உணவு பொருட்களை  உற்பத்தி செய்யற  விவசாயி  ஏன்  வறுமையிலே வாடராங்கனு  கேட்டா  முட்டா பயனு என்னை திட்றாங்க.

ஏங்க நான் முட்டாபயனாங்க ..

Tuesday, August 4, 2015

traffic lights

நாங்கெல்லாம்  எப்பவும் அப்படித்தான்.

டிராபிக் சிக்னல்ஸ்  இன்று நூற்றாண்டு விழா  கானுகிரதாம் . தகவல் உபயம் வழக்கம்போல் இணையம்தான்.    ம் ம் ம்  ஒன்னுமில்லீங்கோ  எங்க ஊரை நெனைச்சி   ட்ராபிக் சிக்னலை  நினைச்சிதாங்க  பெருமூச்சி.

நாங்க மனுசங்களுக்கு  தாங்க மரியாதை கொடுப்போம் .அக்றிணை களுக்கு  மரியாதை கொடுக்கலாமா.  நாங்க வாகனம் ஓட்டும்போது  சிக்னலை பாக்கமாட்டோமுங்க . பதிலா போலீஸ்காரர் எங்க இருக்கார்னு பாப்போம் .அவரு இல்லன்னு வச்சிகுங்க  ஒரே ஜாலிதான் சும்மா சர் புருன்னு  சர்க்கஸ் மாதிரி வண்டி ஓட்டுவோம் பாருங்க . அட போங்க அதுக்கு ஒரு  தில் வேனுங்க.                                                                                                                                  

போலீஸ்காரங்கன்ன  சும்மாவா .  அவங்க சிக்னலா யாரும் பாக்காத இடத்துல  நின்னுகிட்டு கபால்னு  வந்து மடக்குவாங்க பாருங்க  சூபேரா இருக்கும் .

சமயத்துல வேற வழியில்லாம  சிக்னல்ல நிக்கறோம்னு வச்சிக்கிங்க
உயிரை கைல பிடிச்சிக்கிட்டு  நிப்போம் பாருங்க . அப்ப பீ  பி   டெஸ்ட் எடுத்தீங்க   ரீடிங்  எப்படி இருக்கும் தெரியுமா . வாணாம் உடுங்க  அத பாத்தாலே மறுபடியும்  ரீடிங் ஏறும்.

சிக்னல்ல நிக்கும்போது நிச்சயமா நம்மள  உரசின மாதிரி  ஒரு பஸ்சோ , லாரியோ, அல்லது  குப்பை வண்டி லாரியோ பக்கத்துல நிக்கும் . பின்னாடி ஒரு இநோவாவோ  தவேராவோ  மோதுவதற்கு தயாராக நி க்கும் . இதெல்ல பாத்துகிட்டு இருக்கும்போதே  சர்ருன்னு  ஒரு இளவட்டம் வித்தியாசமான
ஒலி எழுப்பிக்கொண்டு  எந்த பக்கம்  போகப்போரானு தெரியாமலே குறுக்க நிப்பான்.  திடீரென்று வண்டி எல்லா ம் ஓட ஆரம்பிக்கும்  ஆனா சிக்னல்ல  சிகப்பு விளக்கு எரிஞ்சிகிட்டே இருக்கும். நீங்க விதிகளை மதிச்சி பச்சை விளக்கு வரட்டும்னு காத்திருந்தீங்க  உங்க விதி முடிஞ்சிடும். நீங்க உலகத்தோட ஓட்ட ஒழுகினால் தா ன்  ஒழுங்க வீடு போக முடியும் .

இதெல்லாம் பாத்துகிட்டு  நூற்றாண்டு காணுகிற  சிக்னல் லைட்டு  ஏ வீ எம் சரவணன்  கையை கட்டிக்கிட்டு அமைதியாய் இருக்கிற மாதிரி  தேமேன்னு நிக்கும்.

ஆனா ஒன்னு மட்டும் புரிய மாட்டேங்குதுங்க . சிக்னலோ  போலிசோ இல்லாத இடத்துல  ட்ராபிக் மிக அழகாக இருக்குதுங்க.  

Sunday, August 2, 2015

friendship day

நட்பு  உறுதியானது அல்ல -  அது ஒரு நீர்க்குமிழி ===

பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள் --

நண்பர்கள் தினம் . நம் வாழ்க்கையில்  எத்தனை நண்பர்களை சந்தித்து இருப்போம் . ஒவ்வொரு கால கட்டத்தில்  ஒவ்வொரு உயிர  நண்பன்  இருந்திருப்பான். இங்கு நான் நண்பன்  என்று  நண்பர் என்று குறிப்பிடுவது  ஆண் பெண் இரு பாலரையும்தான் .
 என் அனுபவத்தில் இருந்தே கூறுகிறேன் .

பள்ளி நாட்களில் முக்கியமான  கட்டத்தில் ஜாமெட்ரி பாக்ஸ்  கொடுத்தவன் உற்ற நண்பனாகினான் . இருவரும் ஒன்றாகவே சுற்றினோம்  காக்கா கடி கடித்து  கமர்கட் சாப்பிட்டோம்   வருடங்கள் ஓடி  வகுப்புகள் மாறியபோது
வேறு ஒரு  நண்பன்  அவனுக்கு ஏதோ உதவி செய்ய போக  அவன் என்னை உயிர் தோழனாக கருதினான்.  இருவரும் வகுப்பை  புறக்கணித்து  திரைப்படம்  பாப்போம்   சில நாட்கள் அவன் வீட்டில் சென்று நான் படிப்பேன் . அவன் என்வீட்டில் வந்து சில நாள் படிப்பான்   தெருவே எங்கள் ஒற்றுமையை கண்டு வியந்து பேசும் ..இதுதான் நட்பு என்று நினைதேன்

அடுத்து  கல்லூரி  அங்கு மூன்று நண்பர்கள்  . நாங்கள் நால்வரும்  ஓர் அணியாகவே சுற்றுவோம் . பெல் பாட்டம்  சைடு  கிருதா   ஒரே
 மாதிரி  உடைகள் . அவரவர்  வீடுகள் வேறு வேறு பகுதியில் இருந்தாலும் , ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி ஒன்றாகத்தான்  வருவோம் போவோம் . அட் இதுவல்லவோ நட்பு  என்று புளகாங்கிதம்  அடைந்தேன்.

அடுத்த கட்டம்  சற்று முதிர்ந்த மன நிலை கொண்ட பருவம் . இதில்தான்
எத்தனை அனுபவங்கள். ஏராளமான  உற்ற நண்பர்கள்  கிடைத்த பருவம் இது.
சில நண்பர்களுடன் தனியாக எடுத்த படங்கள்  ஒரு கனவு போல் இருக்கிறது .
சிலர் பெயர்கள் எனக்கு மறந்து கூட விட்டது. அந்த நண்பர்கள் எனது நெருங்கிய நண்பர்கள்  அந்த கால கட்டத்தில்.

 நண்பனின் திருமணத்திற்கு செல்வது, திருமண வேலைகளில் உதவிகரமாக இருப்பது , திருமணத்திற்காக  நண்பர்கள்   மனமகனான நண்பனின் வீட்டிற்கு .வெள்ளை அடிக்கும் பொறுப்பை கூட  ஏற்றுகொண்ட நட்பு கூட இருந்தது.

அது மட்டுமல்ல  தங்களின் காதலை  நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் உண்டு. . மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியாத  விழயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்களும் உண்டு . அது போல்  என்னை சார்ந்தவர்களுக்கு  தெரியாத என்னை பற்றிய  இன்னொரு பக்கத்தை  தெரிந்த நண்பர்கள் உண்டு . நட்பு இல்லையென்றால் உலகம் அழிந்திருக்கும் , நட்பு புனிதமானது  என்றெல்லாம் வசனம் பேசிய பருவமிது.

அத்தனை நட்புகளும்இன்று தொடர்கிறதா. ஏதோ ஒரு காரணத்திற்காக , கால மாற்றத்தினால், இட மாற்றத்தினால், குண மாற்றத்தினால்  பதவி மாற்றத்தினால்  சிறு சிறு மனத்தாங்கல்களால் , புதிய நட்பு கிடப்பதால்
எதை எல்லாம் உயிர் நட்பு என்று   நினைத்து இருந்தோமோ  அவை எல்லாம்
நீர்க்குமிழி மாதிரி தானே.

அப்போது உண்மையான நட்பே இல்லையா.  இருக்கிறது  அது ஆத்மார்த்தமானது . இத்தனை வயதில்  யோசித்து பார்த்தல்  ஒரு பத்து உயிர் நண்பர்கள் தேறுவது கடினம்.  ஆனால் எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒரு சிலரே  மனதில் அழுத்தமானவர்களாய்  அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் வெகு தூரத்தில் இருக்கலாம் , நம்மை  காரணமின்றி வெறுப்பவராக இருக்கலாம் . சில நிர்பந்தங்களுக்காக  நம்  நட்பை  விலக்கும்  கட்டாயத்தில் இருக்கலாம் .
   
சிறு வயதி ல்   என்சகோதரனை  அவனது ஆசிரியர்   தோழன் என்பவன் யார்
என்று கேள்வி கேட்க  அதற்கு அவன்     நம்ம கூடவே வருவானே  அவன்தான் சார்னு  என்று   சொன்னது  இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

இதோ நண்பர்தின வாழ்த்து அட்டைகளையும்  கைபட்டையும்  வாங்க இளைஞர்கள் குழு குழுமி இருக்கிறது   சில  வருடங்கள் கழித்து பார்த்தால் எத்தனை  நண்பர்கள்  இதே உணர்வுடன் இருப்பார்கள் என்று நினைக்கும் போதுஒரு மெலிதான புன்னகை  தவழ்கிறது /  அதிலிருந்து ஒரு குரல்  அங்கிள் உங்களுக்கு இதெல்லாம் புரியாது  என்று குரல் கொடுத்தது.


இத்தனையும்  தாண்டி நீண்ட வருடங்களாக  நண்பர்களாக  இருக்கிறோம் என்று சொல்லும் நண்பர்களுக்கு  சிறப்பு நண்பர்தின வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Thursday, July 30, 2015

abdul kalam

அந்த விஞ்ஞானி  வின்னுலகிர்கே  சென்று விட்டார் . மண்ணில் அவர் பணி  முடிந்துவிட்டது. . 

இரண்டு நாள் நிகழ்சிகளை மனம் அசை போடுகிறது. 

இப்படி ஒரு அஞ்சலியா?   திரும்பிய பக்கமெல்லாம்  கலாம் கலாம் . இது காசு கொடுத்து நடந்ததா.  அன்றாடம் காய்ச்சி முதல்  அரசு வரை  ஆத்மார்த்தமான அஞ்சலியை  செலுத்தியது  எப்படி சாத்தியம்.  அவர் மிகபெரிய திரை  நட்ச்சத்திரமா . பெரிய அரசியல் கட்சி தலைவரா  அல்லது மதத்தலைவரா . எது அவருக்கு  இம்மாபெரும்  புகழை ஈட்டி தந்தது.  ஒரே பதில்   அவர் ஒரு சாதாரண மனிதர். இயல்பாக பழகக்கூடியவர். நல்லவர் .குழந்தைகளை நேசிப்பவர், இளைஞர்களின் உந்து சக்தி  எல்லாவற்றிக்கும் மேலாக  மனித நேயம் மிக்கவர். 

பதவி அவர் தலையை  வீங்கச்செய்யவில்லை .  படிப்பு அவரை பாமரர்களிடமிருந்து  அந்நிய படுத்தவில்லை.  மெய்ஞானம் கலந்த விஞ்ஞானி . மாசற்ற தேசிய உணர்வு , தாய்  நாட்டை  உயர்த்தி காட்டுவதிலே 
தீராத அர்பணிப்பு.  

இவை எல்லாவற்றிக்கும் மேலாக   நல்லவர், நம்மவர், நம்பிக்கைக்கு உரியவர்  என்ற அனைவரின் உள்ளத்திலும்  உள்ள அழுத்தமான  கருத்தின் பிரதிபலிப்பே  இப்படி ஓர் அஞ்சலியை சாத்தியமாக்கியது. 

ஆனால் இணையத்திலும் ஊடகங்களிலும்  சிலர் எதிர் மறை கருத்துக்களை எழுதியதை பார்த்தேன்.  அதே போல  தூக்கு கைதியை அப்பாவி போல சித்தரித்து  தூக்கு தண்டனை வேண்டாம்  என்ற தொனியில்  சில கட்டுரைகளையும் கண்டேன்.  அது அவரவர்  கருத்து . நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை . 

ஆனால் எனக்கென்று ஒரு கருத்து இருக்குமல்லவா.  கலாமை விமர்சிப்பவர்கள்   தேசத்தில் அவரின் பங்களிப்பில்   ஒரு சதவிகி தமாவது 
பங்கலளி த்திருப்பார்களா ? 

எதற்கு இறக்கிறோம்  என்று தெரியாமலேயே  தீவிரவாதத்திற்கு பலியான குடும்பத்தினரின் இழப்புக்கு காரணமான  குற்றவாளியை  ஒன்றும் தெரியாத அப்பாவி  போல் சித்தரித்து   எழுதுகிறார்களே   அவர்கள் இறந்தவர்களின் குடும்பத்தை நினைத்து பார்க்க மாட்டார்களா. 

வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் ஒரு வசனம் வரும் 

     கட்டபொம்மனும்  எட்டப்பனும்  ஒரே  மண்ணில்         என்று . அதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. 
 

Monday, July 20, 2015

nadigar thilagam ninaivu naal

ஐயா  சிவாஜி அவர்களே ,

நாளை உங்களுக்கு நினைவு  தினமாம்.  ஒருவரை மறந்தால்தானே  நினவு கொள்ளமுடியும் . உங்களை தமிழகம்  நாள்தோறும்தான்   நினைவில் கொண்டிருக்கிறதே.  அது எப்படி என்கிறீர்களா ? 

கலைஞரின்  திறமை என்று பேசப்படும்போது , கூடவே உங்கள்  மொழி ஆற்றல் பேசப்படுகிறதே.

கவி அரசு கண்ணதாசன்  பாடல்கள் அற்புதம் என்று சொல்லும்போது  நடிகர் திலகமே  நீங்கள் நடித்த காட்சிதானே விழித்திரையில் ஓடுகிறது. 

மெல்லிசை மன்னர் இசை யமைப்பு அற்புதம் எனும்போதே  உங்கள் முக பாவங்கள் இசையுடன் சேர்ந்தே வருகிறதே. அதுவும் யார் அந்த நிலவு  பாடலில் .

சௌந்தரராஜன்  பாடுகிறார்   என்று சொல்வதை விட  சிவாஜி பாட்டு என்றல்லவா சொல்கிறார்கள். 

மாணவர்களின் பிரிவு உபசார விழாக்களில்  இன்ன்றும் நீங்கள் கலந்து கொள்வது ----பசுமை நிறைந்த நினைவுகள் தானே ===

தேசிய தலைவர்கள்  பிறந்த நாட்களை  நினைவு நாட்களை   அரசு  கொண்டாடும்போது  வ வு சியா  எங்கள் கண்ணில் தெரிகிறார்கள்  .

ஆடி மாத கோயில் திருவிழாக்களில்  திருவிளையாடலையும் , சரஸ்வதி  சபதம் பட  வசனங்களையும் ஒலி பரப்பாத   கோயில்கள் உண்டா. 

பரதன், கர்ணன் எனும்போது  விழிவழியே  உலவும் உருவம் நீர்தானே ஐயா. 


முஹூர்த்த நேரங்களில்  பூமுடிப்பால்  இந்த பூங்குழலி  என்று நாதஸ்வரம் 
குழையும் பொது  விழி நீரை  சொந்தங்கள் தொடைத்துகொண்டிருக்கும்போது அங்கே நீ அல்லவா  வாழ்கிறாய். 

தங்கைக்காக  ஒரு அண்ணன்  உருகும்போது   ஆமா இவரு பெரிய பாசமலர் சிவாஜி  அப்படியே உருகராறு என  யாராவது  எந்த வீட்டிலாவது  சொல்வது 

இன்றும் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறது .

இன்றைய தலைமுறை யினர் , கிண்டலாக  ஆமாம் சிவாஜி  ஐந்து ரூபாய்க்கு 
நடிக்க சொன்னால்  ஆயிரம் ரூபாய்க்கு நடிப்பார்  என்று சொல்கிறார்கள். 
அவர்களுக்கு தெரியாது  ஒருதொழிலின் உச்சம் அது என்பதும்  மற்றவர்கள் ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால்  ஐந்து பைசாவிற்கு கூட  முயற்சி செய்யமாட்டார்கள்  அல்லது முடியாது என்பதும. 

காமராஜ் என்று சொல்லும்போதே  அதினுள்  கடைசி தொண்டன் சிவாஜி என்பதும் அடங்கியதுதானே. .

தனியார் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியில்  இப்பெல்லாம்  உன் பாடல்களைத்தான்  வெற்றி பெற பயிற்சி செய்கிறார்கள்.  ஐயா அதற்காகவே 
உங்கள் பட கேசெட்டுகள் வாங்கி பயிற்சி செய்கிறார்கள்.  அந்த படங்களையும் 
பாடல்களையும் பார்த்து விட்டு  பிரமித்துபோய் இருக்கிறார்கள்  என்பது நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம் ஐயா .

நேரம்  தவறாமை, தொழில் பக்தி, தேசபக்தி,  தெய்வ பக்தி,  பாச உணர்ச்சி ,
தமிழ் உச்சரிப்பு  சக தோழர்களை ஊக்குவித்தல்  போன்ற அரும் பண்புகளை 
எங்களை போன்றோர் உங்களிடம் தானே கற்றுகொண்டோம் ..

தமிழகத்து  மக்களின்  இதயத்தில் ஒரு பகுதி நிரந்தரமாக உங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது  ஐயா. 

அனுசரிக்கப்படு பிறந்த நாட்களும்  நினைவு நாட்களும்  வெறும் சம்ப்ரதாயங்கலே. . 

இயற்கை உள்ளவரையிலும் , தமிழ் உள்ளவரையிலும்   தேசிய கலைஞனே 
நீ வாழ்கிறாய். 

ஐயா உங்களை என் போன்றவர்கள் என்றுமே நடிகனாக பார்த்தது இல்லை 

Tuesday, July 14, 2015

bahubali

பாகுபலி

உண்மையிலேயே  பிரமிக்க வைக்கும் படம் .அவசியம் குடும்பத்துடன் பார்க்கவும

சிறு வயதில் நான் பார்த்து பிரமித்த சில பிரம்மாண்ட படங்கள்.

சம்சன் டி லைலா   - உச்ச கட்ட காட்சியில்  கட்டிடங்களின்  தூண்கள் விழும் காட்சி.


TEN COMMANDMENTS  :  கடல் இரண்டாக பிரியும் காட்சி

 BENHUR  :  CHARIOT RACE  SCENE.

BIRDS: ஆயிரக்கணக்கான  பறவைகள்  ஒரு வீட்டை தாக்க முயலும் காட்சி

LAWRENCE OF ARABIA :  பாலைவனத்தில்   ஒட்டகங்கள் மீது வந்து  ரயிலை தாக்கும் காட்சி.

MECKENNAS  GOLD   படத்தில்  சூரியனின் நிழல் மலைகளின் மீது விழுந்து தங்கமென ஜொ லிப்பது.

WHERE EAGLES DARE    EAGLES OVER LONDON  போன்ற படங்களில்   எண்ணற்ற விமானங்கள்   குண்டு மழை பொழிவது

POSEIDON ADVENTURE , TITANIC  படங்களில் கப்ப மூழ்குவது

TOWERING INFERNO PADATHTIL  தீ  பற்றி எரியும் காட்சிகள் .

இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று ஏங்கிய என்போன்றவர்களுக்கு
இதுவும் முடியும்  இன்னமும் முடியும்  என்று கன்னத்தில் அறைந்து  சொல்லியுள்ள  பகு பலி குழுவினருக்கு   வாழ்த்துகள்.

படம் பார்க்கும்போது  வீரத்திருமகன்   அடிமை பெண்  அரச கட்டளை போன்ற படங்கள் அவ்வப்போது நினைவில் வந்தாலும்  படம்  பிரமிக்க வைக்கிறது.

தொடர்ச்சியாக  மூன்று நல்ல படங்களை  ரொம்ப வருடங்களுக்கு பிறகு இப்போ தான் பார்கிறேன்.   அவை  காக்கா முட்டை    பாபா நாசம்   பாகுபலி.




Thursday, July 9, 2015

guru peyarchi

குருபெயர்ச்சி.

நாங்கள் குடும்பத்துடன் குரு பெயர்சிக்காக  ஆலங்குடி கோயிலுக்கு சென்றிருந்தோம் . திவ்ய தரிசனம்.

ஆனால் விழயம் அதுவல்ல.  கூட்டத்தில்  கண்ணில் பட்டது  திராவிட இயக்க கரை வேட்டிகள்தான்.  அண்ணா திமுக வை விடுங்கள்  அவர்கள் இப்போ து  அம்மாவிற்காக  எல்லா  கோவில்களையும்  எல்லா வேண்டுதல்களையும்  பகிரங்கமாக செய்கிறாகள்/  

Tuesday, June 2, 2015

mandhaiyilae nindraalum ivar veera paandi thaeru

மந்தையிலே நின்னாலும் இவரு வீர பாண்டி தேரு .

ஒரு நண்பரிடம் பேசிகொண்டிருந்தபோது  கலைஞர் பற்றியும்  சிவாஜி பற்றியும் பேச்சு வந்தது.  பேச்சின் நடுவே  நண்பர்  கலைஞர்  வசனத்தால்  சிவாஜி  பெருமை பெற்றார் என்று கூறினார்.  உடனே நான் மறுத்து  இல்லை என சொல்ல  நண் பர் பராசக்தியையும்மனோகராவையும்  சுட்டி காட்டினார்.

அவருக்கு நான் அளித்த பதில்  இதோ.

நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற வசனம்   வானம் பொழிகிறது  பூமி விளைகிறது === இதன் வசனகர்த்தா  சக்தி கிருஷ்ணசாமி அவர்கள்.

பாசமலர் படத்தில் சிவாஜியும்  ஜெமினியும்  தொழிற்சாலையில்  மோதும்  வசனங்கள்  இன்றும் கைதட்டல்களை வாரி குவிக்கிறது.  இதற்கு வசனம்  அரூர்தாஸ்.

பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் ஒரு சில வார்த்தைகளில் அவர் பேசிய  வசனங்கள்  இன்றும் மறக்க முடியாது.  உதாரணம்.  கவுரவம் படத்தில்  கண்ணா நீ எங்கடா போவே -    போகணும்னு மட்டும்தான்  தோன்றது எங்க போகணும்னு தெரியலையே. என்று  சொல்லும் வசனம்  இன்றளவும் மறக்க முடியாதது..

தேவர்  மகன் படத்தில்  ஒரு காட்சியில்  --    நாளைக்கு நான் இருப்பனான்னு தெரியாது   ஆனா  வெதை  நான் போட்டது . இது என்ன பெருமையா  ம்ம்
கடமை  இதற்கு வசனம் யார்.

சத்ரபதி சிவாஜியாக  ராமன் எத்தனை ராமனடி படத்தில்  சிவாஜி பேசி நடித்த வசனங்கள்  கவியரசு கண்ணதாசனுக்கு சொந்தமானவை. .


வியட்நாம் வீடு படத்தில்  அத்தே  நீ முந்திண்டா நோக்கு  நான் முந்திண்டா நேக்கு இது சுந்தரத்தின் வசனம்.

இது போல் ஏராளமாக சொல்லலாம்.  இறுதியாக நான் சொன்னது
ஏன் கலைஞரின் வசனத்தை மற்ற படங்களில் பேசிய நடிகர்கள்   சிவாஜி அ ளவிற்கு  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ..

கலைஞர் மிக சிறந்த வசனகர்தாதான் ஆனால் அவர்  வசனத்தினால்தான்
திலகத்தின் புகழ் உயர்ந்தது என்பதை  எக்காலத்திலும் ஏற்க இயலாது..

ulaga paal dhinamum

 உலக பால் தினம்.

உலக நாடுகள் பாலை பற்றியும் பால் பொருட்கள் பற்றியும்  விழிப்புணர்வு ஏற்படுத்த  ஜூன் 1 தேதியை  பால் தினமாக  அனுசரித்து வருகிறது.
பதிவு அதை பற்றி அல்ல  ஆனால் பால் பற்றிதான் .

முதலிலையே நான் ஒன்றை தெளிவாக சொல்லிவிடுகிறேன். கடவுள் நம்பிக்கைகளிலும்  வழிபாடுகளிலும்  நம்பிக்கை  உள்ளவன் .நான்.  ஆனாலும் சில விஷயங்களை  என் மனம் ஒப்ப மறுக்கிறது. அதில் ஒன்று பிரதோஷம்

சமீப காலமாக  பிரதோஷ வழிபாடு  மிகவும் அதிகமாகவும் விமரி சையாகவும் கொண்டாடபடுகிறது.  ஏற்கனாவே நான் பலமுறை இதைப்பற்றி பதிவு செய்து விட்ட்டேன். இருந்தாலும்  உலக பால் தினம் பற்றி அறிந்ததிலிருந்து  பிரதோஷத்தின் மீதே கோபம் வருகிறது.   நான் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடக்கும். ஆனால்  அபிஷேகம் என்ற பெயரில்  குடம் குடமாக பாலை ஊற்றுவது என்பது  எனக்கு சரியாக படவில்லை.  சோமாலி போன்ற நாடுகளில்  பட்டினியால் லட்சக்கணக்கான குழந்தை பால் கூட இல்லாமல் மடிகின்றனர். மறுபடியும் சொல்கிறேன்  நான் புரட்சி சமுதாயம்  என்றெல்லாம்  பேசவில்லை.  பக்தர்கள் எவ்வளவு பால் கொடுத்தாலும்  சிறிதளவு இறைவனுக்கு அபிஷேகம் நடத்தி விட்டு மீதமானதை  பக்தர்களுக்கோ , அல்லது அரசு  மருத்துவ  மனையில் உள்ள
பச்சிளம் குழந்தைகளுக்கோ  அல்லது ஆதரவு அற்ற குழந்தகளுக்கோ கொடுக்கலாமே.

பல நூல் படித்து நீ அறியும்  கல்வி      பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்   பிறர் உயர்வினிலே  உணகிருக்கும் இன்பம்   இவை அனைத்திலுமே  இருப்பதுதான்   தெய்வம் என்று உணர்ந்து  நம் பக்தியின் போக்கை பயனுள்ள பாதையில் திருப்பலாமே.

புயலொன்று பூவானது ==

1976 ஆம் வருடம் திரை இசை உலகில்  திடீரென ஒரு புயல்.. அந்தபுயலின் பெயர் இளையராஜா .அன்னகிளியில்  ஆரம்பித்த உலா  அகிலம் முழுதும் சுற்றியது.  முதல் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் என்று ஏகடியம் பேசியோர்க்கு ,
இசையாலேயே  பதில் சொனார் அந்த ராஜா. திரை இசை கால ஓட்டங்களில் புது புது  பரிணாமங்களில்  தன்னை வெளிப்படுத்தி வருகிறது. எத்தனை  எத்தனை ஜாம்பவான்கள்  அன்றும் இன்றும் .ஆயினும் இவரின் தனி  சிறப்பு  என்ன. ? ஏன் இவர் மட்டும் என்னை அதிகமாக கவர்ந்தார்.  என்னை மட்டுமா.?

மழை  பெய்து  விட்டபின்  கிராமிய  வரப்புகளில்  நடந்த  அனுபவம் உண்டா. ஈரமான பாதையும், மண்ணின் வாசனையும் , மெலிதான காற்றில் ஈரம் சொட்ட சொட்ட தலை ஆட்டும்  வண்ணப் பூக்களின் நேர்த்தியும்  மனதில் சிலீரென்ற  உணர்வை உண்டாகும்.  அத்தனை உணர்வுகளையும்  தன்  இசையில் குழைத்து  விருந்து படைதவரல்லவா  ராஜா.

நினைவோ ஒரு பறவை  விரிக்கும் அதன் சிறகை .கேட்கும்போதே நாமே சிறகை விரித்து பறப்பது போல் இல்லையா ?

நீரோடை போலவே  சிரித்தாடி ஓடினால் வலை ஓசையே காதிலே சிந்து பாடுதே  என்ற வரிகளின்  போது  நீரோடையும்  வலை ஓசையும்  இசையாலே நம் முன்னே நிறுத்தியவர அல்லவா.

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்  சொந்தம் இந்த சொந்தமம்மா  வாழ்விருக்கும் நாள்  வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம்மம்மா --இசை வடிவில்  அழகு தாம்பத்தியத்தை  வாசித்து காட்டிய  உன்னத ராஜா.

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம்  நனையும் முகிலெடுத்து
முகம் துடைத்து  விடியும் வரை நடை பயிலுவதை  கிடார் இசையுடன்  கேக்கும்போது  பனி நிலா முகில்  அத்தனையும் இசையில் நனைந்து வழிவதை சாத் தியமாகியதே ராஜாதானே .

தூக்கணாம் குருவிஎல்லாம் தானறிஞ்ச  பாஷையிலே  மூக்கோடு மூக்கு வச்சு  முனு முனுன்னு  பேசயிலே  மடையை திறந்து விட்டா  மழை தண்ணி நெறைஞ்சிருக்கும் -- இப்படி ஒரு காட்சி வடிவத்தை  இசை சிற்பமாகும் ரசவாதம்  ராஜாவிற்கு மட்டும் உரியது தானே.

ஒருகாலத்தில் இரவின் மடியில் என்ற நிகழ்ச்சிக்காக தவமிருந்தோம்.
இன்றைய கால கட்டத்தில்  உடம்பையே ஆட வைக்கிற இசையையும் ரசிக்கிறோம் .  ஆனால்  உணர்வு பூர்வமாக , இசை கருவிகள் குறிப்பாக நமது பண்பாடு இசைகருவிகள்  ராஜாவின் கைவண்ணத்தில்  மனதை வருடுவதை மாறாக இயலுமா.

ராசாவே வருத்தமா  ஆகாயம் சுருங்குமா   என்ற சோகத்தில் கூட ஒரு சுகமானா இசை.

ஏ ஆத்தா ஆத்தோரமா  என்ற இசை வரும்போது  ஒரு துள்ளல் ,
போடா போடா புண்ணாக்கு என்ற போது  ஒரு எள்ளல்.  ஜகதாரிணி  சிம்மவாகினி  என்ற போது  இசையின் ரீங்காரம் ,, வாய் பேசிடும் புல்லாங்குழல்  நீதான் ஒரு பூவின் மடல் என்றபோது ஒரு  மென்மை .

சொல்லிகொண்டே போகலாம் .. ராசாவே   நீ எங்கள் மண்ணின் அடையாளம் .
வாழ்க பல்லாண்டு.















Tuesday, May 5, 2015

ra ra rusputin

உத்தம வில்லன் --

எண்பதுகளில் கல்லூரி மாணவ மாணவியர்கள் மத்தியில்   ரா ரா  ரஸ்புடின்  என்ற  பாடல் மிக மிக பிரபலம்.   BONEY M  என்ற இசைக்குழுவினரின் மிக பிரபலமான பாடல் இது.   கல்லூரி மாணவர்களோ  அல்லது இளவயதினரோ  சுற்றுலா செல்லும் போது   சுராங்கனி சுறாங்கனி ,   சின்ன மாமியே உன் செல்ல மருமகள் ,  ஆன்   எ ஹாட்டு   சம்மர் மோர்னிங்  எ கேர்ள் வென்ட் வாக்கிங் ,  ஜெய் ஜெய் சிவ ஷங்கர்  என்ற பாடல்களுடன்  கட்டாயம் ஒலிக்கும்  இந்த அயல் நாட்டு டிஸ்கோ பாடல்.  ரா ரா  ரஸ்புடின்  பாடல் எனக்கு முழுதுமாக தெரியாத காரணத்தால்  கும்பலில் கோவிந்தா போட,இரண்டு வரி மட்டும் தெரியும்

                                     RAA RAA  RASPUTIN
                                     LOVER OF THE RUSSIAN QUEEN

                                     RAA   RAA RASPUTIN
                                     RUSSIAS GREATEST LOVE MACHINE.

பாட்டின் ஒவ்வுறு பத்தி முடியும் போதும்  இதை அனைவரும் கோரசாக சொல்லுவோம்.

சரி விழயத்திற்கு வருவோம் .எண்பதுகளில்  அதன் அர்த்தம் தெரியாமல்  பாடினோம்.   பின்பு காலம் கரைந்தது . 2007 ம்  ஆண்டு வாக்கில்   போபாலில் எங்கள் அலுவலகம் நடத்திய அகில இந்திய விளையாட்டு போட்டியில் தென்மண்டலத்தின் சார்பாக  நான் கலந்து கொள்ள( SOUTH ZONE CARROM TEAM MANAGER) ரயிலில் செல்லும்போது  எங்களுடன் வந்திருந்த இளம் குழுவினர்
ரா ரா  ரஸ்புடின்  பாடலை  பாடினர். பாடும்போது நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே பாடினர்.   பின் பயணம் முடிந்து  அலுவலகம் திரும் பி  வழக்கமான பணிகளை  தொடர்ந்தேன். ஆனாலும்  அந்த நமட்டு சிரிப்பிற்கு காரணம் என்ன அது என்ன மாதிரி பாடல்  என்ற கேள்வி மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது.  அலுவலகத்தில் என்னுடன் பணியாற்றும்
திருமதி அன்னபூரனா     (( (இந்த இடத்தில அன்னபூர்ணா பற்றி ஒரு சிறு குறிப்பு.
எனது உற்ற தோழி, சகோதரி , மகள் , அன்னை  என்று எது வேண்டுமானாலும்
 அழைத்து கொள்ளுங்கள். அன்றும், இன்றும் என்றும்  UPTO DATE  ஆக தன்னை தயார் படுத்திகொள்ளும்  ஒரு பாங்கு எப்போதும் இவரிடம் உண்டு. என்னையும் அவர்களின் இளைய தலைமுறைகுழுவில் இணைத்துக்கொண்டு  அவ்வப்போது    எனக்கும்  லேட்டஸ்ட்  TREND ENNA ENDRU UPDATE SEIVAAR. இதுபோலத்தான் நண்பர் வெங்கடேஷ்  சங்கர் பாபு ,நண்பர செல்வம்  நண்பர் பாரி போன்றவர்கள்))))))     அவர்களிடம் இதைப்பற்றி கேட்டபோது   RASPUDIN  ஒரு  BAD MONK ENDRU கூறினார் .  நினைவிருக்கிறதா அன்னபூரண  அம்மணி == அவரை குறித்து பாடப்படும்  FOLK SONG  ITHU  என்றும் சொன்னார் . நான் உடனே  நம்மூர் மலையூர் மம்பட்டியான்  பற்றி
காட் டு வழி போற புள்ளே கவலைப்படாதே  என்ற  பாட்டு மாதிரியா  என்றேன்.
சார் அது வேறு இது வேறு என்று சொல்லாமல்  தவிர்த்து விட்டார். .

இளைய தலைமுறையின் TREND  பற்றி அறிந்து கொள்ள  மேலே உள்ளவர்கள்  என்றால் வரலாறு மற்றும்  அன்றாட  நிகழ்வுகளுக்கு  RBS SIR
VAITHI SIR, நண்பர்கள் முருகையன், ஸ்ரீதரன்  போன்றவர்கள்.

ஒரு நாள் RBS AVARGALIDAM  ரஸ்புடின் பற்றி கேட்ட போது , அதை ஏன்டா என்னைபார்த்து  அந்த கேள்வியை கேட்ட என்று  கவுண்டமணி கணக்கா என்னை  அடிக்கத குறையாய்   கோபமாய் பார்த்தார்.  நான் கொடுத்த  RISE AND FALL OF THIRD REIGH  படித்தாயா இல்லையா என்று கேட்க , இல்ல  சார்  அப்படின்னு பதில் சொல்ல  வழக்கம் போல திட்டு.  அப்புறம் கோபம் தணிந்து
ரஷ்யா என்றவுடன்  ரஸ்புடின் பற்றி ஏன் கிட்டே கேட்டியா  என்று சொல்ல  அமாம் சார்  GLASSNOST  PEROISTIRIKA (SPELLING  சரியாய் தெரியல)  புத்தகம் தோழர் முருகையன் கொடுத்தபோது  அத பத்தி நாம எல்லாம் பேசினோமே
அதனால் தான் உங்கள கேட்டேன் என்று சொன்னேன்.  அது ஒன்னும் பெரிய வரலாறு இல்ல  ஒன்னும் தெரிஞ்சுக்க வேணாம்னு சொல்லி விட்டார்.

 சென்ற ஞாயிற்றுகிழமை  PUDUVAI SANDAY MARKET பக்கம்  பழைய புத்தகம் வாங்க போக  அங்கே ஒருவர்  ஏராளமான  பழைய ஆடியோ டேப்களை  விற்றுகொண்டிருந்தார். அதில்  எதேச்சியாக   OSSIBISA  ABBAAS   BONEY M  போன்ற  டேப் களும்  இருக்க  அதில் கொட்ட எழுத்தில்  ரா ரா  ரஸ்புடின்  என்ற பாடலுடன்  ஒரு கேசட் . மனதில் பளீரென ஒரு மின்னல்.

உடன் வீடு திரும்பி  ருச்புடின்  என்று இணையத்தில் தேட  அவரின் வரலாறு தெரிந்து  கொண்டேன்.. புரிந்த மாதிரியும் இருந்தது  புரியாத மாதிரியும் இருந்தது.  ரஸ்புடின்  வாழ்க்கையையும்  ராரா ரஸ்புடின் பாடலையும் முழுதாக இணையத்தில்  பார்க்கவும்.

ஏனோ எனது மனது  நான் பார்த்த கமலின் உத்தம வில்லன் படமும் , ரச்புடினின்  கதையும்  ஒரே வட்டத்தில் சுத்தி வருவது போல ஒரு பிரமை.




Wednesday, April 22, 2015

puthaga dhinam

புத்தக தினம் .
சிறு வயது முதலே புத்தகம் , திரைப்படம்  பத்திரிகை வாசிப்பு  என்பது எனக்கு மிகவும்  பிடித்தமான ஒன்று  மட்டுமல்ல சலிக்காத ஒன்றும் கூட.
ஒரு படத்தில் சுஜாதா வசனம் எழுதி இருப்பார்.  நம் வாழ்க்கைக்கும் flash
back( rewind  பண்ணி   பாக்கிறமாதிரி )  வசதி  இருந்திருந்தா  எவ்வளவு  நல்ல இருக்கும்னு .  ஆனா எனக்கு கதைகள்  திரைப்படம்  இவைகளை பற்றி யோசிக்கும்போதே , புத்தகங்களையும்  கதைகளையும்  கட்டுரைகளையும்
அறிமுக படுத்திய  நண்பர்கள் அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் , ரசனையான நிமிடங்கள்  ரகளையான தருணங்கள்  அனைத்தும்  காட்சியாக  மனதில் விரியும் . அப்படி ஒரு தருணத்தின் பதிவே இது.

நான் படித்து  திரைப்படமான சில கதைகளை பார்ப்போம்.

1. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதை இன்றளவும் திரைப்படங்களில் ஒரு மைல்  கல்.  (தில்லான மோகனாம்பாள் )

2.   அகிலன் எழுதிய  கதை பாவை விளக்கு படம்.

3.    பெண் எழுத்தாளர்  லட்சுமி  எழுதிய  பெண் மனம்  படம்  நடிகர் திலகம் நடித்த இருவர் உள்ளம்.

4.  மகரிஷியின்  புவனா ஒரு கேள்விகுறி.

5.  சுஜாதாவின் ஏராளமான கதைகள்  சாம்பிளுக்கு  கரை எல்லாம் செண்பகபூ

6.  ஜெயகாந்தனின் பல கதைகள்  சாம்பிளுக்கு  .சில நேரங்களில் சில மனிதர்கள்.

 இன்னும் நிறைய  உடனடியாக  நினைவுக்கு வரவில்லை.

நிற்க, இந்த தருணத்தில் எனக்கு  புத்தகங்களை அறிமுகம் செய்த நண்பர்களை  நன்றியுடன் நினவு கூறுகிறேன்.  புத்தகம் வாசிப்பது  சிந்தனையை விரிவாக் க ம் செய்யும் என்பது என் அனுபவ உண்மை. .

கதை படிக்க என்னை  முதலில் தூண்டியது  தின தந்திதான் . அது அறிமுக படுத்திய  தொடர் கதையை  இன்றும் படித்து கொண்டிருக்கிறேன்.  ஆச்சர்யமாய் இருக்கிறதா    சிந்து பாத்  கதைதாங்க அது.

பள்ளி பருவத்தில்  அன்பு நண்பன்  அன்பழகன்   அம்புலி மாமா வாசகன் . இருவரும் சேர்ந்தே இருப்பதால்  அவனால் அம்புலி மாமா  எனக்கும் மாமா ஆனார்.

கொஞ்சம் வளர்ந்ததும்  இரும்புக்கை  மாயாவி  போன்ற சித்திர புத்தகங்கள் .

 பதின் பருவத்தில்  உதயசங்கர் , சேட்டு நண்பன்  தமிழ் அவ்வளவாக தெரியாது  அவன் எனக்கு  பிரபல ந டிகையின் பெயர் கொண்ட  புத்தகத்தை படிக்க கொடுத்தது  ஆச்சரியமான ஒரு விழயம் . நண்பா ராஜஸ்தானில் இருக்கும்  இது உன் கண்ணில் படாது என்று  எழுதி இருக்கிறேன்.

அப்புறம்  கல்லூரி அலுவலகம் என்று வந்த பிறகு , புலி பாய்ச்சலில்  புத்தக பயணம் தொடர்ந்தது.

எத தனை விதமான புத்தகங்கள்  எத தனை விதமான நண்பர்கள்.  மாறு பட்ட சிந்தனகைள்  வேறுபட்ட கோணங்கள் .

pride and prejudice    oliver twist  endra kathaigalai  எப்போதும் சிலா கித்துகொண்டஇருக்கும்  கல்லூரி நண்பன்  மகாதேவன் (பொதுத்துறை வங்கியில்  உயர்  பதவியில் )  தொல்லை தாங்காமல் படித்து ?? முடித்தேன்.
பின்னர் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்  மற்றும் அநாதை ஆனந்தன் படங்களை பார்த்த போது   மேற்கண்ட கதைகள் புரிய ஆரம்பித்தது. .

அந்த காலகட்டத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில்  சிறு சிறு குழுக்கள்
கூட்டம் போட்டு  கதைகளை பற்றி விவாதங்களும் விமர்சங்களும் செய்ய ஆரம்பித்தன.





Thursday, April 9, 2015

ungalukku theriyuma jeyakanthan.

உங்களுக்கு தெரியுமா ஜெயகாந்தன். ??

என் பயணத்தில் ஒரு கட்டத்தில்   நீங்களும் வந்திருக்கிறீர்கள்.-நீங்கள் இறந்து விட்டீர்களாம். உங்களை போன்றவர்களுக்கு  மரணம் என்பதே கிடையாது.

அது கிடக்கட்டும்  நான் எப்படி உன் பயணத்தில்  என்று  அங்கேயிருந்து  கேட்பது புரிகிறது.  சொல்கிறேன். சில பத்து வருடங்கள் பின்னோக்கி  செல்வோம்.

எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அநேகமாக பிரபலமான எழுத்தாளர்களின்கதைகளை  தேடிப்படித்து  அதனை விவாதிக்கவும் செய்வோம்.   அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் தங்களின்  யுகசந்தி  எனும் சிறுகதையை படிக்க நேர்ந்தது.  கதையின்  சாராம்சம்  கொஞ்சம் நினைவு படுத்தி பார்கிறேன்.

               "  ஒரு விதவை  பிராமண பாட்டி . ,
                    தன் மகன் வீட்டிற்கு மாதம் ஒரு முறை  வருவாள். மகன் மருமகள்
                    பேரன்  பேத்தி  என அனைவரும் பாட்டியை வரவேற்பார்கள்.
                     பாட்டி  தன  பேத்தி  கொடுத்து அனுப்பிய ஒரு  கடிதத்தை  இந்தாப்பா
                    உன்  பொண்ணு ஒனக்கு  லெட்டர் ஒன்னு கொடுத்திருக்கா என்று
                     மகனிடம்  கொடுப்பார்.  பாட்டியும் இந்த பேத்தியும்  வெளியூரில்
                     வசிக்கிறார்கள் .பேத்தி வேலைக்கு போவதால் பாட்டி துணைக்கு
                     அவளுடன் தங்கி இருக்கிறாள். அந்த பேத்தியும்  இளவயதிலயே
                     விதவை ஆனவள்.  பாட்டி மாதா மாதம் இங்கு வருவது  மகனை
                     பார்க்க மட்டுமல்ல  தனது முடியை மழித்து கொள்ளவும் கூட.
                     அந்த  கடிதத்தில்  விதவை பேத்தி தான்  ஒருவரை  திருமணம்
                     செய்து கொள்ளப்போவதாகவும்   மனமிருந்தால்  வந்து
                     வாழ்த்துங்கள் இல்லையெனில்  தலை முழுகுங்கள்  என்று எழுதி
                     இருப்பாள்.  குடும்பமே கூக்குரலிடும் .  ஆனால் பாட்டியோ
                      காலங்கள் மாறும் போது நாமும் மாறனும்  நான் என் பேத்தியின்
                     முடிவை வரவேற்கிறேன் என்று சொல்லுவாள்.

                      இது கதையின் சுருக்கம் மட்டுமே. . இதை படிக்கும் போது 
                       பாத்திரங்களின் தன்மை  மற்றும் எழுத்தாளரின் சமூக சிந்தனை
                      அழகாக வெளிப்பட்டிருக்கும்.

ஐயா ,  எங்களுக்கு  ரொம்ப தெரிந்த  குடும்பம். அந்த குடும்பத்தில்  ஒரு இளம் வயது  பெண்  திருமணமான சில மாதங்களிலேயே  கைம்பெண்  அதனால்.
குடும்பமே மன உளைச்சலில் திளைத்தது.

ஒரு  நாள்  நான் புத்தகம் படித்து கொண்டிருந்தபோது  எனது அப்பா  என்ன படிக்கிறாய் என்று கேட்க  ஜெயகாந்த கதை  என்றேன். . என்ன கதை என்று மறுபடியும் கேட்க  கதையை சொன்னேன்.   அந்த நேரம் பார்த்து  அந்த குடும்பத்தினரில் சிலர் வர ,அவர்களும்  என்ன பேசி கொண்டிருகிறீர்கள்  என்பர் கேட்க  அப்பா  யுகசந்தி  கதையை பற்றி சொன்னார்.  வந்திருந்தவர்களில் ஒருவர்  இது என்ன கதையா என்று கேட்க   என் அப்பா  என்னதப்பிருக்கு  நான் இதை முழுமையாக ஏற்கிறேன், என்று சொன்னார். நானும் அதான் சரிப்பா   என்றேன் .

அன்று மாலை  அந்த  பெண்ணின் சகோதரன்  பேச்சு வாக்கில் விதவை   பெண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாமா  என்று என்னை கேட்டதுடன் நில்லாமல்  உங்கப்பாவும்  அதை சரி என்கிறாரே  என்று  என்னை பார்த்தான். இந்த விழயத்தில்  எங்கள் நிலை சரிதான் என்று சொன்னேன்.

சில நாட்கள் கழித்து  வேறு சில நண்பர்கள்  என் அப்பாவிடம்  நீதான்  விதவை திருமணம் செய்யலாம்னு  யோசனை  சொன்னியாமே  என்று கேட்க  அப்போதுதான் அவர்கள்  தன பெண்ணுக்கு இன்னொரு வரன் பார்கிறார்கள் என்று தெரிந்தது.  அவர்கள் அவர்கள் குடும்பத்தினரிடம்   உறவினர்களிடமும் ராதாதான்  இந்த யோசனையை சொல்லிச்சு என்று சொல்லியிருக்கிறார்கள்.
எங்கப்பாவும்  உறுதியாக  அது தப்பில்லை  என்றே சொன்னார்.  எது எப்படியோ  திருமணம் இனிதாக முடிந்தது. அந்த குடும்பத்தினரின் முகத்தில்
அளவற்ற மகிழ்ச்சி .  இது நடந்து  முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
அந்த பெண்  தன் கணவன்  மகன்களுடன்  சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயகாந்த ஐயா இப்போது சொல்லுங்கள்   உங்கள் கற்பனை சிந்தனை ,
எப்படி ஒருவரின்  வாழ்வில் ஒளி ஏற்றி உள்ளது  என்பதை.

ஜெயகாந்த ஐயா  ஒரு கோரிக்கை ஐயா . நீங்கள் மீண்டும் பிறந்து வந்து
எழுத தொடங்குங்கள்.  ஏன்னா  இப்பவும் கூட சில பேர்   ஒரு  பிரபலத்தை
இன்னமும் இவள்  பூவெல்லாம் வச்சிக்கிட்டு  ஜிமிக்கி போட்டுக்கிட்டு பொது மேடைக்கு   வருது பார்  என்று பினாத்தி கொண்டிருகிறார்கள்.

Tuesday, March 24, 2015

ennaparavai

நினைவோ ஒரு பறவை ===

வழக்கம்போல்  பத்திரிகைகளை  படித்துகொண்டிருந்தபோது  ஒரு செய்தியை காண நேர்ந்தது.  சுவாரசியமாய் கூட இருந்தது.   GBBC   கேள்வி பட்டிருகிரீர்களா ?  ஒவ்வுறு ஆண்டும் பெப்ரவரி  மாதம்  பதிமூன்றாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.  GREAT BACKYARD BIRD COUNT (GBBC).   இது என்னவென்றால்  மேலே கூறிய தினங்களில் ஒரு பதினைந்து நிமிடம்  ஒதுக்கி , நம் வீட்டின் புழக்கடையில் அமர்ந்து  எத்தனை வகையான  பறவைகள் வருகிறது என்று கணக்கெடுத்து  அதன் கணக்கை  அதற்கென்று  உள்ளை இணையத்தில் பதிவிட வேண்டும் .இது உலகம் முழுதும் உள்ள பறவை ஆர்வலர்களும் இயற்கையை ரசிப்போரும்  கொண்டாடும் ஒரு திரு விழா  சென்ற வருட விழாவின் போது  ஒரு ஆச்சர்யமான செய்தி  அதிக அளவு பல்வேறு வகையான பறவைகள் இந்தியாவில் இருந்துள்ளன , இவ்வளவு இயற்கை சீரழிவுக்குபின்னரும் ..

சரி  நாமும் அப்படி ஒரு முயற்சியில் இறங்கலாமே  என்று  இறங்கியதன் விளைவு== சோகம்தான் மிஞ்சியது.

நம்புங்கள் நண்பரே  காக்கையை தவிர  ஒரு பறவையை கூட காணோம்.

முப்பது  வருடங்கள்  பின்னோக்கி பார்கிறேன்  வழக்கம்போல். =

புதுவை நகரின் மையப்பகுதியில்தான் வீடு.  இருந்தாலும் எத்தனை
எத்தனை  பறவைகள்.

தத்தி தத்தி தாவிப்பறக்கும் சிட்டுகுருவி  அதன் கீச் கீச் சத்தம்  எவ்வளவு இனிமை.

மாடி  வீடுகளிலே  ஒய்யாரமாக  வாலாட் டிகொண்டிருக்கும் கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு குருவியும் பழுப்பும் மஞ்சளும் கலந்த ஒரு குருவியும்  பார்க்க எவ்வளவு அழகு. அந்த குருவிகளுக்கு பெயரே  வாலாட்டிகுருவி.

சட்டென்று பச்சை பசேலென்று  கூட் டமாக கொஞ்சி விளையாடும் பச்சைகிளிகள் .

ஆனைச்சாத்தான் குருவிகள். கேள்விப்பட்டதில்லையா  நம்ம ரெட்டைவால் குருவிதான்தாங்க.  மின் கம்பிகளின் மேல் ஒரு ஒழுங்குடன்  வரிசையாக அமர்ந்திருக்கும்  காட்சி .

இன்னும் தேன் சிட்டு குருவி,   சிட்டான் குருவி   அப்ப்புறம் மஞ்ச குருவி.
வெ ப்ப மரத்தில்  அதிகமாக வசிக்கும் ..

ஹூம்  கொட்டிகொண்டே இருக்கும் குருவியை இன்றைய தலைமுறையினர்  பார்திருப்பாகளா என்பது சந்தேகம்.. அதுக்கு பேறு கனான் குருவி .

மனதை வருடும் ஒரு லயத்தோடு மரத்தை கொத்தும மரங்கொத்தி பறவை .

அப்புறம் இருக்கவே இருக்கிறது  மணிபுறா  மாடப்புறா .

அப்போதெல்லாம்  காராசேவ்  முறுக்கு  பகோடா போன்றவைகளை  மனதார இலையில் கட்டி தருவார்கள்.  நாம் கடையிலிருந்து வீட்டிக்கு வருவதற்குள்

நம்மை பின்தொடர்ந்து வரும்  பருந்துகள் அசந்த நேரத்தில் கையில் உள்ளதை பிடுங்கி  விறென்று பறக்கும். அவைகள் எங்கே.

வியாழக்கிழமை  கருடனை பார்த்தால்  கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும்  அதனுடனே

  குங்குமான்கித  வர்ணாய  குந்தேந்து தபலாயஸா
   விஷ்ணு வாஹந    விச்துப்யம்  பட்சிராஜா நமஹா

என்ற ஸ்லோகத்தை சொல்லவேண்டும்  என்று பெரியவர்கள் சொல்லி யிருந்தார்கள் .  அந்த சுலோகம் நான் சரியாக சொல்லிருக்கேனா  அதன் அர்த்தம் என்னவென்று  எனக்கு தெரியாது.  அனால் இப்போது தப்பாக இருந்தாலும் பரவாயில்லை  சுலோகம் சொல்ல தயாராய் இருக்கிறேன்.
கருடனைதான் காணோம்.

 ஒன்று மட்டும் உண்மை  இயற்கையிலிருந்து விலகி வெகு தூரம் நாம்  வந்துவிட்டோம்.

என் ஜோடி மஞ்ச குருவி ,  பூஞ்சிட்டு குருவிகளா ,  அந்த கானன்காத்த குருவிக்குத்தான் கழுத்துல வெள்ள ,  தூக்கணாம்  குருவி எல்லாம் தானறிந்த
பாஷையிலே  ,  பொன் பட்டாடை  மூடிசெல்லும்  தேன் சிட்டோடு மெல்ல,
 சிட்டான்  சிட்டான்  குருவி  உனக்குத்தானே   என்ற பாடல்கள் மூலமாவது
இவைகளை அறிவது  ஒரு நல்ல விழயம் தான்.







Monday, March 9, 2015

andru arasukku indru thaniyaarukku

அன்று அரசுக்கு  இன்று தனியாருக்கு ---

முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது அரசியல் பதிவல்ல.

விஜய்  டிவியின்  சூப்பர் சிங்கர் முடிந்து வாரங்கள் சில ஓடிய பின்னும் அது பற்றிய சர்ச்சைகள்  இணையத்தில் இன்னும் ஓய்ந்த பாடில்லை.  இவருக்குதான் முதல் பரிசு கொடுத்திருக்கணும்  இல்ல இல்ல இவர்தான் சூப்பர் , ஐயோ எல்லார விட இவர் தூள்  என்று  ஏகப்பட்ட  கண்டன குரல்கள் .

இதை பார்க்கும்போது  நான் படித்துகொண்டிருக்கும்போது  நடந்த ஒரு பரிசு போட்டி  ஞாபகத்திற்கு  வருகிறது.

ஒரு வெற்றிபெற்ற திரைப்படத்தை பற்றிதான் போட்டி.  என்னவென்றால்
அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களில்  சிறந்த  நடிப்பை நல்கிய கதா பாத்திரம் எது  அதை வரிசைபடுத்த வேண்டும் என்பதே போட்டி . படக்குழுவினர்  ஏற்கனவே  வரிசை படுத்தியுள்ள   வரிசையுடன்  நாம் அனுப்பும்  வரிசையும் ஒத்துப்போனால்  நமக்கு பரிசு . கேட்பதற்கு  சுலபமாக இருக்கும் இந்த போட்டி  மிக கடினமானது . நாம் வரிசைபடுத்திய  கதா பாத்திரங்கள் போஸ்ட் கார்டில் தான் அனுப்ப  வேண்டும். அப்போது மின்னஞ்சல், குறுஞ்செய்தி  வலைத்தளம்  போன்றவைகள் கனவில் கூட வந்திராத காலம் .

நாங்கள் ஒரு நண்பர்கள் குழு ஆரம்பித்து  ஒவ்வொரு நண்பனும் ஒவ்வுறு பாத்திரத்தின் நடிப்பை வரிசைபடுத்தி  தபால் கார்டில் போஸ்ட் செய்தோம் . அப்போது அது மிக கடினமான வேலை என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள்  பத்து பேர்  ஒன்பது விதமாக வரிசைபடுத்தி  பத்தாவது போஸ்ட் கார்டில் குருட்டாம்போக்கில் கதா பாத்திரத்தின் நடிப்பை  வரிசை படுத்தினோம். பரிசு நிச்சயம் எங்களுக்குத்தான் என்று இருந்தோம்  ஆனால் அது சுலபமானது அல்ல என்பது போட்டியின் முடிவை பார்த்த போதுதான் தெரிந்து கொண்டோம் . ஏனென்றால்  ஆயிரக்கணக்கில் கடிதங்கள்  வேறு வேறு மாதிரி  வரிசைபடுத்தப்பட்டு.

எந்த படம்  எந்த காதாபாத்திரம் என்று நீங்கள் சரியாக ஊகித்திருந்தால்  நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுகொள்ளுங்கள்.

தெரியாதவர்குக்கும் இன்றைய தலைமுறையினருக்கும்   விடை : படம்  நவராத்திரி   வரிசைபடுத்தவேண்டியது  நடிகதிலகம் நடித்த ஒன்பது வேடங்களில்  எந்த பாத்திரம் சிறப்பாக இருந்தது.

அந்த ஒன்பது கதா பாத்திரங்கள்  விபரம்:  கதாநாயகன் , அற்புதராஜ், முரடன் ,
குடிகாரன், டாக்டர், நாடக நடிகன், விவசாயி , போலீஸ் அதிகாரி  தொழுநோயாளி .

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது  நான் வரிசைபடுத்தியது.  அவைகள்
1) டாக்டர்     2)  விவசாயி   3  தொழு நோயாளி       போலீஸ் அதிகாரி      நாடக நடிகன்   குடிகாரன்     முரடன்    அற்புதராஜ்     கதாநாயகன்

எதற்கு பரிசு கிடைத்தது என்று ஞாபகம் இல்லை . யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி விழயதிர்க்கு வருவோம்.  முடிவு வெளியானவுடன்  இதே போன்று   சர்ச்சைகள்  அப்போதெல்லாம்  இதை விமரிசிக்க     நமது கருத்தை வெளிபடுத்த  இவ்வளவு   வாய்ப்பும்  வசதியும் அப்போது இல்லை . இருந்தாலும்  நண்பர்களுக்குள்  இது சரியில்லை  அது சரியில்லை  என்ற விவாதங்கள்  தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதில் தெரிந்தது என்னவென்றால் ஒரு முடிவு என்றால் எந்த காலமாய் இருந்தாலும்  அதிருப்தி  என்பது இருக்கத்தான் செய்யும்.

ஒரே நடிகர் நடித்து ஒன்பது பாத்திரங்களிலேயே   சிறந்தது எது எனும், முடிவை  அறிவிக்கும் போது  விமர்சனத்திருக்கு  ஆளாகும்போது , ஆறு போட்டியாளர்கள்    வேறு  வேறு  மாநிலங்களை  சேர்ந்தவர்கள்  கலந்து கொண்ட போட்டியின் முடிவுகள் அனைவரும் ஒத்து  போகும்  படியாகவா இருக்கும்.

அந்த போட்டியினால்  தபால்  துறைக்கு .  நல்ல வருமானம் . நிறைய  தபால்  விற்றல் லாபம் தானே .

இப்போது போட்டிகளில் முடிவை தீர்மானிக்க மினஞ்சல் , குறுஞ்செய்தி ,வலைத்தளம் என்ற  வாய்ப்பு  இருந்தாலும்  வருமானம் என்னவோ தனி யாருக்குத்தான் .

உங்களில் நவராத்திரி படம்பார்தவர்கள்  இன்றைய சூழ்நிலையில்  அதில் நடிகர் திலகத்தின்  எந்த பாத்திரத்தின்  நடிப்பு  முதல் இடம்  இரண்டாம் இடம்  .என்று  வரிசை படுத்துங்களேன்  

 
ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வருமானம் தற்போது நாட் டு நலன்களுக்காக  செலவ செய்யப்படுகிறது.   அதில் அந்நிய முதலீட்டை அதிகபடுத்தினால்  அது சாத்தியமா.  இன்று நாடெங்கிலும் உள்ள  எல் ஐ சி ஊழியர்கள்  அந்நிய முதலீட்டை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.  இதற்கும் மேலே உள்ள பதிவின்  தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை. . தோன்றியது  எழுதினேன் .



Tuesday, March 3, 2015

antha varisail ippothu santhiyum.

அந்த வரிசையில் இப்போது சாந்தியும் ===

பழமை புதுமையாய் மாறும்போது  எண்ணங்கள் எப்படியெல்லாம் பயணிக்கிறது.  சென்னை சாந்தி தியேட்டர்  பொழுதுபோக்கு வளாகமாக மாறப்போகிறது  என்ற செய்தி  என் நினைவுகளை பின்னோக்கி செலுத்துகிறது.

கட்டிடங்கள் வெறும் கற்கள் அல்ல அவைகள் எத்தனையோ ஆச்சர்யங்களையும் , சாதனைகளையும், வரலாறுகளையும் , சோகங்களையும் ,இனிப்புகளையும்  சோர்வுகளையும்  இ ன்னும் எண்ணற்ற  உணர்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  அதை அதில் உணர்ந்து பார்த்தவருக்குத்தான்  உண்மையான வீச்சு புரியும்.

இப்படி ஒரு-- அல்ல அல்ல -- சில அனுபவங்கள்  எனக்கும் உண்டு.

முதலில்  35 A  செட்டி தெரு   பாண்டிச்சேரி , எங்கள் வீட் டு விலாசம். . அரவிந்தர்   ஆஸ்ரமம்  இந்த தெருவில்தான் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக  எங்கள் முன்னோர்  காலத்திலிருந்தே  அதுதான் எங்கள் வசிப்பிடம்.
எண்பதுகளில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் குடும்பம்  பெரிது ஆனதினாலும்  அந்த வீட்டை விற்று விட்டு சகோதரர்கள் அனைவரும் தனி தனியாக வீடு வாங்கி விட்டோம் . என்னதான் இப்ப்போது என்னுடைய வீடு சற்றேறக்குறைய  வசதிகளுடன் இருந்தாலும்  செட்டி  தெரு வீடு  வீடுதான்.
காரணம்  திண்ணை , ரேழி , முற்றம்  தாவாரம்  வீட்டின் பின்புறம்  கிணறு.
என்று சகல் அம்சங்களுடன்  ஓடு எப்போது தலையில் விழும் என்ற நிலையுடனும் ஒரு நிம்மதி வாழ்கை அங்கே இருந்தது.  அது மட்டுமல்ல
மகா பெரியவா  புதுவை வந்த போது  எங்கள் இல்லத்தில் அவருக்கு சொர்ண அபிஷேகம்  நடந்ததாக எங்க தாத்தா சொல்ல கேட் டிருக்கிரேன். . புரட்சிக்கவி பார திதாசன் எங்கள் வீட்டில்  எங்கள் அப்பாவுடன் பேசிகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டை வாங்கியவர் அதை புதுப்பிக்க வேண்டி இடித்த  போது  மனம் அழுதது  முதல் முறை..

அஜந்தா தியேட்டர்  புதுவையின் பெருமைக்குரிய திரை அரங்கம் . ஏனெனில்
அந்த காலத்தில்   BENHUR,  TEN COMMANDMENTS, PHSYCO,  HATARI ,மற்றும்  JERRY LEWIS  நடித்த  அத்தனை படங்களும்,  CHRISTOPHER LEE  நடித்த  டிராகுல படங்கள் என வரிசை கட்டி அடித்த திரை அரங்கம். எங்க வீட்டு பிள்ளை படத்திற்காக மக்கள் திலகம் இங்கு வந்ததும் , பாவை விளக்கு படத்திற்கு நடிகர் திலகம் இங்கு  வந்ததும்   இன்னொரு மகுடம் .  அறுபதுகளிலேயே  கண்ணாடி போட்டுகொண்டு அனைவரும் பார்த்த படம்  13 GHOSTS என்ற ஆங்கில படம். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல்  இந்த திரை அரங்கில்  metro goldwyn mayor (MGM)  என்று  ட்ரைலர்  போடுவார்கள் . எதற்கு இவ்வளவு பீடிகை என்றால்  எனது தந்தையார்  இந்த தியே டேரில்தான்  ஆரம்பம் முதல் இறுதிவரை மேலாளராக பணி  புரிந்தார்..

அந்த தியேட்டர்  நவீன சொகுசு ஓட்டலுக்காக  இடிக்கப்பட்டபோது  இரண்டாம் முறை இதயம் வலித்தது.

கலவை கல்லூரி == நான் படித்த பள்ளி =நூறாண்டு பாரம்பரியம் உள்ள பள்ளி.
ஆங்கில வழியில் அரசு பள்ளி . மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதினால் அரசு  இதை புனரமைப்பு  செய்ய வேண்டி  தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக செய்தி. வானளாவிய மரங்களுடன்  நகரின் மைய்யபகுதியில் கொத்து கொத்தாக  மாணவர்கள் அருகில் உள்ள திடலுக்கு உடற்பயிற்சி செய்ய  P.T. PERIODல்  வெளியே செல்ல திரும்ப வரும்போது பாதி மாணவர்கள் எஸ்கேப் ஆகி இருப்பது  மறுநாள் ரகளையான ரசனையாக மாறும்.

அந்த பள்ளியை புதுப்பிக்க இடிக்கும்போது  எனக்கும் வலிக்கும்தானே.

சாந்தி  தியேட்டர் :   மாணவ பருவத்திலே  நாங்கள் பெருந்தலைவர்  ஐயாவை
காண செல்லும்போதெல்லாம்  அன்னை இல்லத்திற்கு விஜயம் என்பது கட்டாயம்.  அந்த சிங்கம் படப்பிடிப்பிற்காக  வெளியூர் சென்று இருந்தால்  எங்கள் அடுத்த இடம் சாந்தி  திரை அரங்க வளாகம்தான் . சிவாஜி ரசிகர்களின் அறிவிக்கப்படாத அரங்கமாக இருந்தது  சாந்தி திரை அரங்கம். அங்கு அப்போது தினசரி ஆஜராகும்  சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்  மகாதேவன் (மகாதேவா இப்ப எங்க இருக்க ?))  துபாய்க்கு போக முயற்சி செய்து கொண்டிருந்த  அன்சாரி பாய்  இன்னும் நாகர் கோயில் அண்ணாச்சி என்று ஏராளமான நண்பர்கள்.

நான்  LIC EMPLOYEE    ஆன பின்பும் சென்னைக்கு செல்லும்போதெல்லாம்  சாந்தி திரை அரங்கிற்கு  அருகில் உள்ள எல் ஐ சி கிளையில் உள்ள நண்பர்களை  பார்த்து விட்டு சாந்தி திரை அரங்கிற்கு வருவேன். அப்போதும் நான் ரசிகர்களை பார்ப்பது  உண்டு.

சில மாதங்களுக்கு முன் சென்னையில்  என் மகள் ஒரு தேர்வு எழுத வேண்டி இருந்ததால்  நானும கூட  சென்றேன்.  அப்போது வா சரவணா பவனில் சாப்பிடலாம் என்று கூறி  சாந்தி திரை அரங்க வளாகத்திற்கு  விஜயம் செய்தேன்.

உண்மையை நான் சொல்லியிருந்தால்  என் மகள் என்னை விநோதமாக பார்திருப்பாள் . காரணம்  இன்றைய தலைமுறைகளுக்கு எல்லாமே சாதாரணமாக போய்விட்டது.

உங்களில் சிலர் கூட என்னை திட்டலாம்  ஆனால்  சட்டென்று  உணர்வுக்குள் மூழ்கிடும் 
சராசரி மனிதன் தானே நான்.

DAVINCI CODE படித்த நான்தான்  TED MARKAIYUM  படித்தேன். சே குவரா படித்த நான்தான்  சத்திய சோதனையும் படித்தேன். சுஜாதா ஈர்த்தார் என்றால்
ஜெயமோகனை  தவிர்க்க வேண்டுமா. ?  கம்பனும் ஆழ்வார்களும்  தமிழ் சொல்லி கொடுத்தனர். நான் ஏ நாத்திகனானே என்று கேட்டுகொண்டே  அர்த்தமுள்ள  இந்து மதம் படிக்கிறேன்.  எனக்கு எத்தனை முகமூடிகள்.

ஆனாலும் நான் நானேதான்  என்று உணர்சிகள் சொல்கிறதே.



.

Friday, February 13, 2015

ambala manasu

ஆம்பள மனசு .-


ஏங்க ஏழு மணிக்குதனே உங்க  கல்லூரிகால நண்பர்கள் சந்திப்பு . இப்ப மணி  ஒன்னுதானே . ஏன் இன்னிக்கு பறக்கறீங்க.

ஒனக்கு தெரியாதா  பழைய   நண்பர்களை முப்பது வருஷம் கழிச்சு சந்திக்கிறது  எவ்வளவு பெரிய விழயம் . அதிலும்  ரம்யா வேற வரா.
மகேஸ்வரி உனக்கு  ரம்யாவை  பத்தி சொல்லியிருகேன்ல .

என்னது  ரம்யாவை பத்தியா  இதனை வருஷத்துல அவளை பத்தி சொல்லாத நாட்கள்தான் கம்மி.  நீங்க ஒரு பலகீனமான நேரத்திலே  ரெண்டு பேரும் லவ் பண்ணினதா கூட சொல்லி இருக்கீங்க.

சரி சரி அதை விடு  . மீட்டிங்குக்கு  கிரே கலர்  டி ஷர்ட் போட்டுக்கவா. ரம்யாவுக்கு அந்த கலர் ரொம்ப பிடிக்கும்.   ரமேஷ்  நண்பர்கள் சந்திப்ப்பிற்கு
கிளம்புவதற்குள்  நூறு முறையாவது   ரம்யா  பெயரை உச்சரித்து இருப்பான்.

சரி மகேஸ்வரி மணி ஆருஆயிடுச்சி  நான் கிளம்பறேன்.

ஏங்க ஒரு நிமிஷம்   அங்க  சங்கரை பாத்தீங்கனா  மகேஸ்வரி உங்களை விசாரிச்சான்னு  சொல்லுங்க.  .

தலை வலிக்குது  நான் நண்பர்கள் சந்திப்பிற்கு போகலை  என்றான் ரமேஷ். .

Friday, January 16, 2015

MGR

எம் ஜி யாரும்  காந்தியாரும் --

மக்கள் திலகம் .. இந்த மனிதரை தமிழகம் அன்பால் கட்டிபோட்டதா  அல்லது இந்த மனிதர் தமிழகத்தை அன்பால் கட்டிப்போட்டரா  ?

எம் ஜி யாரின் பாடல்களை கேட்கும்போதெல்லாம்  எனக்கு ஒரு விழயம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.  திராவிட இயக்கத்தின் முக்கிய தூணான எம் ஜி யார்  தன்  பாடல்களில்  காந்திக்கும்  முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதே  அந்த விழயம். நீங்களே பாருங்களேன் .

        புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
        தோழா  ஏழை நமக்காக.----


         முன்பு இயேசு வந்தார்  பின்பு காந்தி வந்தார்
          இந்த மானிடர் திருந்திட அவர் பிறந்தார் ---


     எனக்கொரு மகன் பிறப்பான் என்ற பாட்டில்  தன்னுடைய மகன் எப்படி                  இருப்பன் என்பதை பாடலில் கூறும் போது

          சாந்தி வழியென்று காந்தி வழி சென்று  கருணை தேன் கொண்டு
           வருவான்  என்று பாடுவார் --

தம்பி நான் படித்தே காஞ்சியிலே நேற்று என்ற பாடலில்

           இந்தியாவின் தந்தை என காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல்  கந்தை அணிந்தார்  என்று பாடுவார்.

இன்னொன்று மக்கள் திலகம் தேசிய எண்ணம் கொண்டவர் என்ற  கருத்துக்கு வலு சேர்ப்பது போல்  இந்த பாடல்களை  பாரு ங்கள்.

     காஷ்மீர்    பியூட்டிபுல்  காஷ்மீர்   என்ற பாடலில்  காஷ்மீரை பற்றி சொல்லும்போது
 
                     என் தாய்  திருநாட்டிற்கு  வாசலிது      என் நாட்டவர்க்கும்
                     கலைக்கோவில் இது  என்று பாடிக்கொண்டு வரும் எம்ஜியாரின்
                     எண்ணம் இங்கே எப்படி என்று பாருங்கள்
                     
                              யாரும்  வந்து சொந்தம் கொள்ள கூடுமோ
                              வீரம் மானம் நம்மை விட்டு போகுமோ

இன்னொரு  பட பாடலில்  நான் ஏன் பிறந்தேன் நாட்டிற்கு நலம் என்ன புரிந்தேன்  என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என்தோழா  என் பாடி இருப்பார்.



           கண் போன  போக்கிலே  கால் போகலாமா  என்ற பாடலில்
           மனிதன் போன பாதையை மறந்து போகலாமா  என்ற இடம் வரும் போது
           கேமரா  ஜூம் ஆகி காந்தியை போல் ஒரு மனிதனை  காட்டும் .

ஒன்றே குலம்  என்று பாடுவோம் என்ற பல்லாண்டு வாழ்க திரைப்பட பாடலில்  பாவம் என்ற கல்லறைக்கு பலவழி  என்றும் தரும தேவன் கோயிலுக்கு ஒரு வழி ------ என்ற வரிகளின் போது  சுவற்றில் காந்தியின் படம் மாட்டப்பட்டிருக்கும். இன்னும் நிறைய படங்களில்  காந்தி படம் இடம் பெற்றிருக்கும்.  பாடல்கள் எழுதியவர்கள் யாரோ பாடியவர்கள் யாரோ என்றாலும் எம்ஜியாரின் அனுமதியின்றி  எதையும் படங்களில் சேர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த விழயமே.
மக்கள் திலகம் திராவிட கட்சியின்  அங்கம் என்றாலும்  என் வரையில் அவரும் ஒரு தேசிய  கலைஞர்தான் .


காணும் பொங்கல்

நினைத்தாலே இனிக்கும்


இதோ அமைதியாக  அமர்ந்திருக்கிறேன்.  வயதானதாலோ , நேரம் கிடைப்பதினலோ  என்னவோ  இப்போதெல்லாம் எனக்கு   பழைய நினைவுகள்  அடிக்கடி வருகிறது. அதை அசை போடுவதிலும் ஒரு சுவை இருக்கிறது.

வாசலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது , ஒரு மொபெட்டில்  ஒருவர்  சில கடிதங்களை  சில வீடுகளின் உள்ளே விட்டெறிந்து விட்டு போனார்.  அநேகமாக  எல்லார் வீடும் கதவு  சாத்தியே இருந்தது..  அவர் யாராக இருக்கும்.  கொரியர்  கம்பனியை  சேர்ந்தவராக இருப்பாரோ ? அல்லது தபால் காரராக இருப்பாரோ.

எழுபதுகளில். அதாவது எங்களது பதின்  வயதுகளில்  தபால்காரர்  எப்போது வருவார் என்று காத்திருப்போம். காரணம்  பொங்கல் வாழ்த்து அட்டைகள்.
உறவினர்களிடமிருந்து , நண்பர்களிடமிருந்து  சமயத்தில் நாங்களே எங்கள் சகோதரர்களுக்கு  அனுப்பிய பொங்கல் வாழ்த்துகளை  எதிர் பார்த்து காத்திருப்போம்.  நமது பெயருக்கு வாழ்த்து அட்டை வரும்போது  ஏதோ நாம்தான் உலகத்தின் உச்சியில் இருப்பது போன்ற மன நிலை  தோன்றும்.
காக்கி சட்டை அணிந்த  தபால்காரர்  மெதுவாக நடந்து வருவார். ஏறைக்குறைய அணைத்து வீடுகளுக்கும் தபால் இருக்கும்.  கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல்  தபால் பட்டுவாடா செய்வர்.

காணும் பொங்கல் அன்று முதல் மரியாதை தபால் கரருக்குத்தான். இரண்டு பேர் வருவார்கள்  ஒருவர்  மணி ஆர்டர்  கொடுப்பவர்  மற்றோவர் தபால் பட்டுவாடா செய்பவர். வெற்றிலை பாக்கு பழம்  மற்றும் ஐந்து ரூபாய் பணம் வைத்து அவருக்கு கொடுப்போம். அவர்களும் புண் முறுவலுடன் ஏற்றுகொள்வார். நிச்சயமாக இது லஞ்சம் அல்ல.  அவர்களில் சேவையின் அங்கீகாரமாக கொடுக்கப்படும் பணம் இது.  இப்போது அந்த நிலை தொடருகிறதா . இப்போது தபால் அனுப்புவதே குறைந்து விட்டதே . அப்படியே வந்தாலும்  எல் ஐ சி  பிரீமிய நோட்டீஸ் , டெலிபோன் கட்டண பில் , வங்கியில்  கிரெடிட் கார்டு வாங்கியிருந்தால் அதன் தவணை நோட்டீஸ்  சில வட்டி கடைகாரர்கள்  தங்களின் வாடிக்கையாளருக்கு தவணை ஞாபகப்படுதுதல்  போன்றவைதான் இருக்கும்.  தபால் காரரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.(ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம் )
மக்களும் அதே மூடில் தபாலை பெற்றுகொள்வார்கள்.

வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள் . சிவாஜி   எம் ஜி யார் ,  பத்மினி  சரோஜாதேவி , விநாயகர்  சரஸ்வதி , வெங்கடசலபதி, அரசியல்  தலைவர்கள்  காமராஜ்  அண்ணா கலைஞர்  படங்கள் போட்டது  சிறு குடும்பம் மாடு பொங்கல் கரும்புடன் நிற்பது என்று எண்ணற்ற வாழ்த்து அட்டைகள்.  அதனுள் ஒரு ரோஸ்  நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் ஒரு இணைப்புத்தாள் . அந்த இணைப்புத்தாளில்   நம் கையாலே பொங்கல் வாழ்த்தை எழுதி அனுப்பும்போது கிடக்கும் சுகம் இப்போது வருமா.  எங்களில் நிறைய பேர்  கவிதை என்ற பெயரில்  நிறைய கிறுக்கியது  எங்களை கவிஞனாக்கியது  பொங்கல் வாழ்த்து அட்டைகள் தானே.  தற்போது பிரான்சில் வசிக்கும்  .
நண்பர்களில் சிலர்  விடலை பருவத்தில்  தன்  மனதிர்க்கு  இனியவளின்  பெயருக்கு  அவள் விரும்பும்  படத்தை  பொங்கல் வாழ்த்தை கையெழுத்திடாமல்  அனுப்பி விட்டு  பிறகு என்ன ஆகுமோ  என்ற பதை பதிப்பில் தவித்த  தவிப்பை இன்று நினைத்தாலும் இனிக்கிறதே.  அந்த பெண்களோ  அந்த வாழ்த்தை பெற்றுக்கொண்டு நண்பர்கள் எதிரிலேயே  எழுதியவன் எதிரிலே இருப்பது அறியாமல்  ஒரு வேலை அவன் அனுப்பி இருப்பானோ இல்லை இவ ன் அனுப்பி இருப்பானோ  என்று சொல்லும்போது  அந்த நண்பர்களின் முகத்தில்  இரு வேறு உணர்வுகள் தோன்றும் ஒன்று அப்பாடா நம்மை கண்டுபிடிக்கவில்லை  என்ற சந்தோஷமும்  நம்மை தவிர எல்லோரையும் சொல்கிறார்களே  என்ற  எரிச்சலும்  ஒரு சேர  காட் டும் அந்த முகபாவம்  நடிகர் திலகத்திற்கு கூட வராது..  மாமா  பெரியப்பா சித்தப்பா அத்தை  மாமி
தூரத்து உறவினர்  என்று வாழ்த்து அட்டைகளை பெறும்போது உறவு சங்கிலிகள்  பலப்பட்டு இருந்தன . இப்போது  ???  டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது    வாழ்க்கைதரம்  உயர்ந்திருக்கிரதாக  நாம் எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால்  விலை மதிக்கமுடியாத சில சந்தோஷங்களை  இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது என்பதே உண்மை.    பழைய நெனப்புடா பேராண்டி  என்று சொல்லி  வாழ்த்து கூறி முடிக்கிறேன். 

Saturday, January 10, 2015

thodarum thenkural

மனம் இனிக்க இனிக்க.

அகவை எழுபத்தைந்து -  யாருக்கு -  இந்திய  மக்களை இசையால்  மயக்கிய  திரு ஜேசுதாஸ் அவர்களுக்குத்தான்.

ஜேசுதாஸ்  இந்தியாவின் அடையாளம்.  மத நல்லிணக்கத்திற்கு  அற்புதமான  எடுத்துக்காட்டு.  இசையால்  பல்வேறு மொழி பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்களை  மகுடி கேட்ட நாகம் போல் மயங்க வைப்பது  ஒரு சாதாரண  செயலா?  சாதித்து இருக்கிறார்  அந்த இந்தியன்.

ஹிந்தி எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த நேரத்தில்  ஜாநேமன்  ஜநேமன்  என்று ஒரு தேன் ஹிந்தியில் சொட்டியதை  மறக்க முடியுமா ?  கடலின் அக்கர போனோரே --- - போய்  வரும் போழ் என்ன கொண்டுவரும்  பதினாறாம் ராவிலே --  மலையாள வரிகள்  மனதை வருடியதை மறக்க முடியுமா.
தமிழில் நீயும் பொம்மை நானும் பொம்மை  என்று ஆரம்பித்த  அந்த வசீகர குரல் இன்றுவரை ஆட்சி செய்து வருகிறதே.

என் நினைவில் இன்றும் அன்றும் என்றும் நினைவில் தங்கியுள்ள சில பாடல்களை  அசைபோடுகிறேன்.

பியானோவின்  இசைபிர தானமாக கொண்ட  உன்னிடம் மயங்குகிறேன் --உள்ளத்தால் நெருங்கிறேன்   என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலே  இன்றளவும் என் மனத்தில் முதல் இடத்தில் உக்காந்திருக்கிறது.

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை  என்ற பாடலில்
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்  சொந்தம் இந்த சொந்தம் அம்மா  என்ற வரிகளை  ஜேசன்னா  குரலில் கேட்கும்போது  அந்த தாம்பத்தியத்தின்  அர்த்தம்  அழகாக வெளிப்படுமே.

இந்த பச்சைக்கிளிக்கு செவ்வந்திபூவினில் தொட்டிலை கட்டி வைத்தேன்
பாடல் ஒரு முறை கேட்டு பாருங்கள் .

அதிசய ராகமும் மலரே குறிஞ்சி மலரேவும்  நம்மை ஆகாயத்தில் ஊஞ்சலாடும்படி செய்திடுமே.

சபரி மலை   சென்றவர்கள்  அந்த அதிகாலையில்  குளிர் நிலையில்  வானில் மிதந்து வரும்  ஹரிவராசனம்  விஸ்வமோகனம்  பாடலை கேட்கும் சுகானுபவத்தை   பெற்றிருப்பார்கள்.

சாஸ்திரீய சங்கீதம் தெரியாதவர்களையும்  தன்  இனிமையான குரலால் கட்டிபோட்டவர்.

ஒரு முறை புதவை கம்பன்  கலை அரங்கிற்கு  ஜேசுதாஸ் வந்தபோது
அவர் கர்நாடக சங்கீதம் பாட ஆரம்பித்தார். உடனே ஒரு கும்பல் எழுந்து சினிமா பாடலை பாடவேண்டும் என்று கூச்சலிட்டனர்.  அப்போது அவர்  நான்இந்த மேடைக்கு கர்நாடக பாடலை பாடுவதற்குதான் வந்துள்ளேன்  . அதை தவிர வெறுத்தும்  பாட மாட்டேன் என்று உறுதி பட கூறி உடன் ஒரு கர்நாடக சங்கீத பாடலை பாட ஆரம்பித்து விட்டார். அவரின் குரல் இனிமையை சட்டென்று உணர்ந்த அந்த கும்பல்  அமைதியாக  கச்சேரியை கேட்க  ஆரம்பித்தது..

இவர் எத்தனை மொழிகளில் பாடி இருக்கிறார் தெர்யுமா.  தமிழ்,  தெலுங்கு மலையாளம், ஹிந்தி  கன்னடம்  பஞ்சாபி ,குஜராத்தி , ஒரிய  மராத்தி  வங்காளம்  சமஸ்க்ருதம்  துளு ,மலாய் மொழி  ரஷ்ய மொழி இலத்தீன் மொழி  ஆங்கில மொழி  ஆகியவற்றில் திரைப்பாடல்களும் இன்னும் பிற பாடல்களும்  பாடி சாதனை புரிந்துள்ளார்.

ஆன்மிகம் , மத நல்லிணக்கம், தேசிய பார்வை  மனித நேயம்  எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட  இந்த இசை விருட்சம்  நீண்ட ஆயுளை பெற்று  தனன் சேவையை  தொடர  இறைவனை  வேண்டுகிறேன்.