Thursday, July 30, 2015

abdul kalam

அந்த விஞ்ஞானி  வின்னுலகிர்கே  சென்று விட்டார் . மண்ணில் அவர் பணி  முடிந்துவிட்டது. . 

இரண்டு நாள் நிகழ்சிகளை மனம் அசை போடுகிறது. 

இப்படி ஒரு அஞ்சலியா?   திரும்பிய பக்கமெல்லாம்  கலாம் கலாம் . இது காசு கொடுத்து நடந்ததா.  அன்றாடம் காய்ச்சி முதல்  அரசு வரை  ஆத்மார்த்தமான அஞ்சலியை  செலுத்தியது  எப்படி சாத்தியம்.  அவர் மிகபெரிய திரை  நட்ச்சத்திரமா . பெரிய அரசியல் கட்சி தலைவரா  அல்லது மதத்தலைவரா . எது அவருக்கு  இம்மாபெரும்  புகழை ஈட்டி தந்தது.  ஒரே பதில்   அவர் ஒரு சாதாரண மனிதர். இயல்பாக பழகக்கூடியவர். நல்லவர் .குழந்தைகளை நேசிப்பவர், இளைஞர்களின் உந்து சக்தி  எல்லாவற்றிக்கும் மேலாக  மனித நேயம் மிக்கவர். 

பதவி அவர் தலையை  வீங்கச்செய்யவில்லை .  படிப்பு அவரை பாமரர்களிடமிருந்து  அந்நிய படுத்தவில்லை.  மெய்ஞானம் கலந்த விஞ்ஞானி . மாசற்ற தேசிய உணர்வு , தாய்  நாட்டை  உயர்த்தி காட்டுவதிலே 
தீராத அர்பணிப்பு.  

இவை எல்லாவற்றிக்கும் மேலாக   நல்லவர், நம்மவர், நம்பிக்கைக்கு உரியவர்  என்ற அனைவரின் உள்ளத்திலும்  உள்ள அழுத்தமான  கருத்தின் பிரதிபலிப்பே  இப்படி ஓர் அஞ்சலியை சாத்தியமாக்கியது. 

ஆனால் இணையத்திலும் ஊடகங்களிலும்  சிலர் எதிர் மறை கருத்துக்களை எழுதியதை பார்த்தேன்.  அதே போல  தூக்கு கைதியை அப்பாவி போல சித்தரித்து  தூக்கு தண்டனை வேண்டாம்  என்ற தொனியில்  சில கட்டுரைகளையும் கண்டேன்.  அது அவரவர்  கருத்து . நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை . 

ஆனால் எனக்கென்று ஒரு கருத்து இருக்குமல்லவா.  கலாமை விமர்சிப்பவர்கள்   தேசத்தில் அவரின் பங்களிப்பில்   ஒரு சதவிகி தமாவது 
பங்கலளி த்திருப்பார்களா ? 

எதற்கு இறக்கிறோம்  என்று தெரியாமலேயே  தீவிரவாதத்திற்கு பலியான குடும்பத்தினரின் இழப்புக்கு காரணமான  குற்றவாளியை  ஒன்றும் தெரியாத அப்பாவி  போல் சித்தரித்து   எழுதுகிறார்களே   அவர்கள் இறந்தவர்களின் குடும்பத்தை நினைத்து பார்க்க மாட்டார்களா. 

வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் ஒரு வசனம் வரும் 

     கட்டபொம்மனும்  எட்டப்பனும்  ஒரே  மண்ணில்         என்று . அதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. 
 

Monday, July 20, 2015

nadigar thilagam ninaivu naal

ஐயா  சிவாஜி அவர்களே ,

நாளை உங்களுக்கு நினைவு  தினமாம்.  ஒருவரை மறந்தால்தானே  நினவு கொள்ளமுடியும் . உங்களை தமிழகம்  நாள்தோறும்தான்   நினைவில் கொண்டிருக்கிறதே.  அது எப்படி என்கிறீர்களா ? 

கலைஞரின்  திறமை என்று பேசப்படும்போது , கூடவே உங்கள்  மொழி ஆற்றல் பேசப்படுகிறதே.

கவி அரசு கண்ணதாசன்  பாடல்கள் அற்புதம் என்று சொல்லும்போது  நடிகர் திலகமே  நீங்கள் நடித்த காட்சிதானே விழித்திரையில் ஓடுகிறது. 

மெல்லிசை மன்னர் இசை யமைப்பு அற்புதம் எனும்போதே  உங்கள் முக பாவங்கள் இசையுடன் சேர்ந்தே வருகிறதே. அதுவும் யார் அந்த நிலவு  பாடலில் .

சௌந்தரராஜன்  பாடுகிறார்   என்று சொல்வதை விட  சிவாஜி பாட்டு என்றல்லவா சொல்கிறார்கள். 

மாணவர்களின் பிரிவு உபசார விழாக்களில்  இன்ன்றும் நீங்கள் கலந்து கொள்வது ----பசுமை நிறைந்த நினைவுகள் தானே ===

தேசிய தலைவர்கள்  பிறந்த நாட்களை  நினைவு நாட்களை   அரசு  கொண்டாடும்போது  வ வு சியா  எங்கள் கண்ணில் தெரிகிறார்கள்  .

ஆடி மாத கோயில் திருவிழாக்களில்  திருவிளையாடலையும் , சரஸ்வதி  சபதம் பட  வசனங்களையும் ஒலி பரப்பாத   கோயில்கள் உண்டா. 

பரதன், கர்ணன் எனும்போது  விழிவழியே  உலவும் உருவம் நீர்தானே ஐயா. 


முஹூர்த்த நேரங்களில்  பூமுடிப்பால்  இந்த பூங்குழலி  என்று நாதஸ்வரம் 
குழையும் பொது  விழி நீரை  சொந்தங்கள் தொடைத்துகொண்டிருக்கும்போது அங்கே நீ அல்லவா  வாழ்கிறாய். 

தங்கைக்காக  ஒரு அண்ணன்  உருகும்போது   ஆமா இவரு பெரிய பாசமலர் சிவாஜி  அப்படியே உருகராறு என  யாராவது  எந்த வீட்டிலாவது  சொல்வது 

இன்றும் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறது .

இன்றைய தலைமுறை யினர் , கிண்டலாக  ஆமாம் சிவாஜி  ஐந்து ரூபாய்க்கு 
நடிக்க சொன்னால்  ஆயிரம் ரூபாய்க்கு நடிப்பார்  என்று சொல்கிறார்கள். 
அவர்களுக்கு தெரியாது  ஒருதொழிலின் உச்சம் அது என்பதும்  மற்றவர்கள் ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால்  ஐந்து பைசாவிற்கு கூட  முயற்சி செய்யமாட்டார்கள்  அல்லது முடியாது என்பதும. 

காமராஜ் என்று சொல்லும்போதே  அதினுள்  கடைசி தொண்டன் சிவாஜி என்பதும் அடங்கியதுதானே. .

தனியார் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியில்  இப்பெல்லாம்  உன் பாடல்களைத்தான்  வெற்றி பெற பயிற்சி செய்கிறார்கள்.  ஐயா அதற்காகவே 
உங்கள் பட கேசெட்டுகள் வாங்கி பயிற்சி செய்கிறார்கள்.  அந்த படங்களையும் 
பாடல்களையும் பார்த்து விட்டு  பிரமித்துபோய் இருக்கிறார்கள்  என்பது நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம் ஐயா .

நேரம்  தவறாமை, தொழில் பக்தி, தேசபக்தி,  தெய்வ பக்தி,  பாச உணர்ச்சி ,
தமிழ் உச்சரிப்பு  சக தோழர்களை ஊக்குவித்தல்  போன்ற அரும் பண்புகளை 
எங்களை போன்றோர் உங்களிடம் தானே கற்றுகொண்டோம் ..

தமிழகத்து  மக்களின்  இதயத்தில் ஒரு பகுதி நிரந்தரமாக உங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது  ஐயா. 

அனுசரிக்கப்படு பிறந்த நாட்களும்  நினைவு நாட்களும்  வெறும் சம்ப்ரதாயங்கலே. . 

இயற்கை உள்ளவரையிலும் , தமிழ் உள்ளவரையிலும்   தேசிய கலைஞனே 
நீ வாழ்கிறாய். 

ஐயா உங்களை என் போன்றவர்கள் என்றுமே நடிகனாக பார்த்தது இல்லை 

Tuesday, July 14, 2015

bahubali

பாகுபலி

உண்மையிலேயே  பிரமிக்க வைக்கும் படம் .அவசியம் குடும்பத்துடன் பார்க்கவும

சிறு வயதில் நான் பார்த்து பிரமித்த சில பிரம்மாண்ட படங்கள்.

சம்சன் டி லைலா   - உச்ச கட்ட காட்சியில்  கட்டிடங்களின்  தூண்கள் விழும் காட்சி.


TEN COMMANDMENTS  :  கடல் இரண்டாக பிரியும் காட்சி

 BENHUR  :  CHARIOT RACE  SCENE.

BIRDS: ஆயிரக்கணக்கான  பறவைகள்  ஒரு வீட்டை தாக்க முயலும் காட்சி

LAWRENCE OF ARABIA :  பாலைவனத்தில்   ஒட்டகங்கள் மீது வந்து  ரயிலை தாக்கும் காட்சி.

MECKENNAS  GOLD   படத்தில்  சூரியனின் நிழல் மலைகளின் மீது விழுந்து தங்கமென ஜொ லிப்பது.

WHERE EAGLES DARE    EAGLES OVER LONDON  போன்ற படங்களில்   எண்ணற்ற விமானங்கள்   குண்டு மழை பொழிவது

POSEIDON ADVENTURE , TITANIC  படங்களில் கப்ப மூழ்குவது

TOWERING INFERNO PADATHTIL  தீ  பற்றி எரியும் காட்சிகள் .

இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று ஏங்கிய என்போன்றவர்களுக்கு
இதுவும் முடியும்  இன்னமும் முடியும்  என்று கன்னத்தில் அறைந்து  சொல்லியுள்ள  பகு பலி குழுவினருக்கு   வாழ்த்துகள்.

படம் பார்க்கும்போது  வீரத்திருமகன்   அடிமை பெண்  அரச கட்டளை போன்ற படங்கள் அவ்வப்போது நினைவில் வந்தாலும்  படம்  பிரமிக்க வைக்கிறது.

தொடர்ச்சியாக  மூன்று நல்ல படங்களை  ரொம்ப வருடங்களுக்கு பிறகு இப்போ தான் பார்கிறேன்.   அவை  காக்கா முட்டை    பாபா நாசம்   பாகுபலி.




Thursday, July 9, 2015

guru peyarchi

குருபெயர்ச்சி.

நாங்கள் குடும்பத்துடன் குரு பெயர்சிக்காக  ஆலங்குடி கோயிலுக்கு சென்றிருந்தோம் . திவ்ய தரிசனம்.

ஆனால் விழயம் அதுவல்ல.  கூட்டத்தில்  கண்ணில் பட்டது  திராவிட இயக்க கரை வேட்டிகள்தான்.  அண்ணா திமுக வை விடுங்கள்  அவர்கள் இப்போ து  அம்மாவிற்காக  எல்லா  கோவில்களையும்  எல்லா வேண்டுதல்களையும்  பகிரங்கமாக செய்கிறாகள்/