Wednesday, April 22, 2015

puthaga dhinam

புத்தக தினம் .
சிறு வயது முதலே புத்தகம் , திரைப்படம்  பத்திரிகை வாசிப்பு  என்பது எனக்கு மிகவும்  பிடித்தமான ஒன்று  மட்டுமல்ல சலிக்காத ஒன்றும் கூட.
ஒரு படத்தில் சுஜாதா வசனம் எழுதி இருப்பார்.  நம் வாழ்க்கைக்கும் flash
back( rewind  பண்ணி   பாக்கிறமாதிரி )  வசதி  இருந்திருந்தா  எவ்வளவு  நல்ல இருக்கும்னு .  ஆனா எனக்கு கதைகள்  திரைப்படம்  இவைகளை பற்றி யோசிக்கும்போதே , புத்தகங்களையும்  கதைகளையும்  கட்டுரைகளையும்
அறிமுக படுத்திய  நண்பர்கள் அவர்கள் தொடர்பான நிகழ்வுகள் , ரசனையான நிமிடங்கள்  ரகளையான தருணங்கள்  அனைத்தும்  காட்சியாக  மனதில் விரியும் . அப்படி ஒரு தருணத்தின் பதிவே இது.

நான் படித்து  திரைப்படமான சில கதைகளை பார்ப்போம்.

1. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதை இன்றளவும் திரைப்படங்களில் ஒரு மைல்  கல்.  (தில்லான மோகனாம்பாள் )

2.   அகிலன் எழுதிய  கதை பாவை விளக்கு படம்.

3.    பெண் எழுத்தாளர்  லட்சுமி  எழுதிய  பெண் மனம்  படம்  நடிகர் திலகம் நடித்த இருவர் உள்ளம்.

4.  மகரிஷியின்  புவனா ஒரு கேள்விகுறி.

5.  சுஜாதாவின் ஏராளமான கதைகள்  சாம்பிளுக்கு  கரை எல்லாம் செண்பகபூ

6.  ஜெயகாந்தனின் பல கதைகள்  சாம்பிளுக்கு  .சில நேரங்களில் சில மனிதர்கள்.

 இன்னும் நிறைய  உடனடியாக  நினைவுக்கு வரவில்லை.

நிற்க, இந்த தருணத்தில் எனக்கு  புத்தகங்களை அறிமுகம் செய்த நண்பர்களை  நன்றியுடன் நினவு கூறுகிறேன்.  புத்தகம் வாசிப்பது  சிந்தனையை விரிவாக் க ம் செய்யும் என்பது என் அனுபவ உண்மை. .

கதை படிக்க என்னை  முதலில் தூண்டியது  தின தந்திதான் . அது அறிமுக படுத்திய  தொடர் கதையை  இன்றும் படித்து கொண்டிருக்கிறேன்.  ஆச்சர்யமாய் இருக்கிறதா    சிந்து பாத்  கதைதாங்க அது.

பள்ளி பருவத்தில்  அன்பு நண்பன்  அன்பழகன்   அம்புலி மாமா வாசகன் . இருவரும் சேர்ந்தே இருப்பதால்  அவனால் அம்புலி மாமா  எனக்கும் மாமா ஆனார்.

கொஞ்சம் வளர்ந்ததும்  இரும்புக்கை  மாயாவி  போன்ற சித்திர புத்தகங்கள் .

 பதின் பருவத்தில்  உதயசங்கர் , சேட்டு நண்பன்  தமிழ் அவ்வளவாக தெரியாது  அவன் எனக்கு  பிரபல ந டிகையின் பெயர் கொண்ட  புத்தகத்தை படிக்க கொடுத்தது  ஆச்சரியமான ஒரு விழயம் . நண்பா ராஜஸ்தானில் இருக்கும்  இது உன் கண்ணில் படாது என்று  எழுதி இருக்கிறேன்.

அப்புறம்  கல்லூரி அலுவலகம் என்று வந்த பிறகு , புலி பாய்ச்சலில்  புத்தக பயணம் தொடர்ந்தது.

எத தனை விதமான புத்தகங்கள்  எத தனை விதமான நண்பர்கள்.  மாறு பட்ட சிந்தனகைள்  வேறுபட்ட கோணங்கள் .

pride and prejudice    oliver twist  endra kathaigalai  எப்போதும் சிலா கித்துகொண்டஇருக்கும்  கல்லூரி நண்பன்  மகாதேவன் (பொதுத்துறை வங்கியில்  உயர்  பதவியில் )  தொல்லை தாங்காமல் படித்து ?? முடித்தேன்.
பின்னர் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்  மற்றும் அநாதை ஆனந்தன் படங்களை பார்த்த போது   மேற்கண்ட கதைகள் புரிய ஆரம்பித்தது. .

அந்த காலகட்டத்தில் இலக்கிய வட்டம் என்ற பெயரில்  சிறு சிறு குழுக்கள்
கூட்டம் போட்டு  கதைகளை பற்றி விவாதங்களும் விமர்சங்களும் செய்ய ஆரம்பித்தன.





Thursday, April 9, 2015

ungalukku theriyuma jeyakanthan.

உங்களுக்கு தெரியுமா ஜெயகாந்தன். ??

என் பயணத்தில் ஒரு கட்டத்தில்   நீங்களும் வந்திருக்கிறீர்கள்.-நீங்கள் இறந்து விட்டீர்களாம். உங்களை போன்றவர்களுக்கு  மரணம் என்பதே கிடையாது.

அது கிடக்கட்டும்  நான் எப்படி உன் பயணத்தில்  என்று  அங்கேயிருந்து  கேட்பது புரிகிறது.  சொல்கிறேன். சில பத்து வருடங்கள் பின்னோக்கி  செல்வோம்.

எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அநேகமாக பிரபலமான எழுத்தாளர்களின்கதைகளை  தேடிப்படித்து  அதனை விவாதிக்கவும் செய்வோம்.   அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் தங்களின்  யுகசந்தி  எனும் சிறுகதையை படிக்க நேர்ந்தது.  கதையின்  சாராம்சம்  கொஞ்சம் நினைவு படுத்தி பார்கிறேன்.

               "  ஒரு விதவை  பிராமண பாட்டி . ,
                    தன் மகன் வீட்டிற்கு மாதம் ஒரு முறை  வருவாள். மகன் மருமகள்
                    பேரன்  பேத்தி  என அனைவரும் பாட்டியை வரவேற்பார்கள்.
                     பாட்டி  தன  பேத்தி  கொடுத்து அனுப்பிய ஒரு  கடிதத்தை  இந்தாப்பா
                    உன்  பொண்ணு ஒனக்கு  லெட்டர் ஒன்னு கொடுத்திருக்கா என்று
                     மகனிடம்  கொடுப்பார்.  பாட்டியும் இந்த பேத்தியும்  வெளியூரில்
                     வசிக்கிறார்கள் .பேத்தி வேலைக்கு போவதால் பாட்டி துணைக்கு
                     அவளுடன் தங்கி இருக்கிறாள். அந்த பேத்தியும்  இளவயதிலயே
                     விதவை ஆனவள்.  பாட்டி மாதா மாதம் இங்கு வருவது  மகனை
                     பார்க்க மட்டுமல்ல  தனது முடியை மழித்து கொள்ளவும் கூட.
                     அந்த  கடிதத்தில்  விதவை பேத்தி தான்  ஒருவரை  திருமணம்
                     செய்து கொள்ளப்போவதாகவும்   மனமிருந்தால்  வந்து
                     வாழ்த்துங்கள் இல்லையெனில்  தலை முழுகுங்கள்  என்று எழுதி
                     இருப்பாள்.  குடும்பமே கூக்குரலிடும் .  ஆனால் பாட்டியோ
                      காலங்கள் மாறும் போது நாமும் மாறனும்  நான் என் பேத்தியின்
                     முடிவை வரவேற்கிறேன் என்று சொல்லுவாள்.

                      இது கதையின் சுருக்கம் மட்டுமே. . இதை படிக்கும் போது 
                       பாத்திரங்களின் தன்மை  மற்றும் எழுத்தாளரின் சமூக சிந்தனை
                      அழகாக வெளிப்பட்டிருக்கும்.

ஐயா ,  எங்களுக்கு  ரொம்ப தெரிந்த  குடும்பம். அந்த குடும்பத்தில்  ஒரு இளம் வயது  பெண்  திருமணமான சில மாதங்களிலேயே  கைம்பெண்  அதனால்.
குடும்பமே மன உளைச்சலில் திளைத்தது.

ஒரு  நாள்  நான் புத்தகம் படித்து கொண்டிருந்தபோது  எனது அப்பா  என்ன படிக்கிறாய் என்று கேட்க  ஜெயகாந்த கதை  என்றேன். . என்ன கதை என்று மறுபடியும் கேட்க  கதையை சொன்னேன்.   அந்த நேரம் பார்த்து  அந்த குடும்பத்தினரில் சிலர் வர ,அவர்களும்  என்ன பேசி கொண்டிருகிறீர்கள்  என்பர் கேட்க  அப்பா  யுகசந்தி  கதையை பற்றி சொன்னார்.  வந்திருந்தவர்களில் ஒருவர்  இது என்ன கதையா என்று கேட்க   என் அப்பா  என்னதப்பிருக்கு  நான் இதை முழுமையாக ஏற்கிறேன், என்று சொன்னார். நானும் அதான் சரிப்பா   என்றேன் .

அன்று மாலை  அந்த  பெண்ணின் சகோதரன்  பேச்சு வாக்கில் விதவை   பெண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாமா  என்று என்னை கேட்டதுடன் நில்லாமல்  உங்கப்பாவும்  அதை சரி என்கிறாரே  என்று  என்னை பார்த்தான். இந்த விழயத்தில்  எங்கள் நிலை சரிதான் என்று சொன்னேன்.

சில நாட்கள் கழித்து  வேறு சில நண்பர்கள்  என் அப்பாவிடம்  நீதான்  விதவை திருமணம் செய்யலாம்னு  யோசனை  சொன்னியாமே  என்று கேட்க  அப்போதுதான் அவர்கள்  தன பெண்ணுக்கு இன்னொரு வரன் பார்கிறார்கள் என்று தெரிந்தது.  அவர்கள் அவர்கள் குடும்பத்தினரிடம்   உறவினர்களிடமும் ராதாதான்  இந்த யோசனையை சொல்லிச்சு என்று சொல்லியிருக்கிறார்கள்.
எங்கப்பாவும்  உறுதியாக  அது தப்பில்லை  என்றே சொன்னார்.  எது எப்படியோ  திருமணம் இனிதாக முடிந்தது. அந்த குடும்பத்தினரின் முகத்தில்
அளவற்ற மகிழ்ச்சி .  இது நடந்து  முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
அந்த பெண்  தன் கணவன்  மகன்களுடன்  சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயகாந்த ஐயா இப்போது சொல்லுங்கள்   உங்கள் கற்பனை சிந்தனை ,
எப்படி ஒருவரின்  வாழ்வில் ஒளி ஏற்றி உள்ளது  என்பதை.

ஜெயகாந்த ஐயா  ஒரு கோரிக்கை ஐயா . நீங்கள் மீண்டும் பிறந்து வந்து
எழுத தொடங்குங்கள்.  ஏன்னா  இப்பவும் கூட சில பேர்   ஒரு  பிரபலத்தை
இன்னமும் இவள்  பூவெல்லாம் வச்சிக்கிட்டு  ஜிமிக்கி போட்டுக்கிட்டு பொது மேடைக்கு   வருது பார்  என்று பினாத்தி கொண்டிருகிறார்கள்.