Saturday, March 30, 2019

  முதலில் நான் வியப்பது  தங்களின் நினைவாற்றல் . கடந்த கால நிகழ்வுகளை  தேதி வாரியாக வருட ம் வாரியாக  விவரிக்கும் பா ங்கு  அற்புதம்
புதுவை எல் ஐ சி கிளையின்   ஆவண காப்பகம் நீங்கள்  என்று  சொல்லலாம். .
நினைவிற்கு வருகிறது  புதுவை கிளையை பற்றி ஒரு தகவல் தேவை படுகிறது  நீங்கள் பனி ஓய்வு ன்பெற்று விட்டர்கள் . அந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை  உடனே தலைமை அலுவலகத்திலிருந்து  உங்கள் பெயரை சொல்லி உங்களிடம் கேட்க சொல்லுகிறார்கள் . உடனே நண்பர்கள் என்னை அணுகுகிறார்கள்  நான் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகிரேன்  உடனடியாக அந்த விபரம் கூடுதல் தகவலுடன் தருகிறீர்கள் . இது மேம்போக்கான சாதாரண  விஷயமாக தெரியலாம் . ஆனால் எவ்வளவு பெரிய செயல்/

நான் எங்கே எல்லாம் என்னை புதுச்சேரி எல் ஐ சி ஊழியன் .என்று சொல்லுகிறோ னோ  அப்போதெல்லாம்  அது எந்த ஊரா இருந்தாலும்  என்னிடம் கேட்கும் அடுத்த கேள்வி  வைத்தியநாதன் எப்படி இருக்கிறார்.
சென்ற வாரம் கூட புதுக்கோட்டையிலும்  ஒரு நண்பர் இதே கேள்வியை கேட்டார். நீங்கள் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றீர்களே தவிர  இன்னமும் நிறைய பேர் உங்களை நினைவில் வைத்திருக்கிறார்கள்.

நினைத்தால்  சிரிப்பு வருகிறது. எத்தனை முறை தங்கள் கருத்துக்களுடன் முரண் பட்டிருக்கிரேன் . நீங்கள் கூட ஆர் பீ எஸ்  சொல்றதுதான்  நீ  கேட்ப என்று சொல்லுவீர்கள். இன்னொன்று  தெரியுமா சார்
ஆர் பீ எஸ் அவர்களின் கருத்துக்களில் முரண்படும்போது  நீ வைத்தி சொல்றதைத்தான்  கேட்பாய் என்று அவர் திட்டுவார்.  ஆனால் நீங்கள் இருவரும் என் இரு கண்கள் போன்றவர்கள். .

இன்னொன்று சுவையான நினைவு சார் . ஒரு முறை  ஒரு அதிகாரியுடன்  ஊழியர் சம்பந்தமாக பிரச்சனை. அலுவலக நேரம் முடிந்து விட்டது .சங்க பொறுப்பாளர்கள் அப்போது யாரும் இல்லை. . உடனே  நானும் சேஷாத்திரியும்  உங்களுடன் அந்த அதிகாரியை சந்தித்தோம் . அந்த அதிகாரி என்னை சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றார். உடன் நீங்கள்   ஆமாம் நீங்கள் பெரிய லார்ட் லில்லித்கோ  என்று நக்கலாக கூற வாக்குவாதம் நீண்டது. விளைவு மறுநாள் அந்த அதிகாரி மேலதிகாரிக்கு  வைத்தியநாதன்  இரண்டு அடியாட்களுடன்  என்னை  மிரட்டினார் என்று புகார் கொடுத்தார் நினைவிருக்கிறதா.சார்   உங்களுக்கு அடியாள் நான் என்பதில் பெருமைதான்.

புதுவை தொழிற்சங்கம் அன்று பலமாக இருந்ததற்கு  நீங்கள் முக்கிய காரணம்  என்பது  அனைவருக்கும் தெரியும்.

பஞ்சாலை  தொழிலாளர்கள் போனஸ் பிரச்சனையில்  ஒவ்வுறு முறையும் நீங்கள்  போனஸ் கேட்பதற்கு  லாப நஷ்ட கணக்கை பார்த்து  செயல் திறனை பார்த்து இவ்வளவு சதவிகிதம் என்று கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறியதை சற்று கூட காதில் வாங்காமல்  வாய்க்கு வந்தபடி  நாற்பது சதவிகிதம்  அறுபது சதவிகிதம் என்றும்  ஆசைகாட்டி  அதை ஓரளவு வெற்றியும் பெற்றவர்கள்  இம்மாதிரியான அணுகுமுறை  காலப்போக்கில் அழிவில் கொண்டுவிடும்  என்று பலமுறை எச்சரித்ததை , நான் அறிவேன். சில முறை உங்களுடன் ன் அந்த பஞ்சாயத்திற்கு வந்துள்ளேன்   இன்று புதுவை பஞ்சாலைகளின் நிலை என்ன .

நீங்கள் அன்று சொன்னதை  துரோகம் என்று சொன்னவர்கள் இன்று  அதையே  செய்யும்போது  காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா  அல்லது  நீங்கள் தீர்க்க தரிசி என்று சொல்லலாமா.

சார் ஒரு நகை முரண் . ஒரு சாரார் உங்களை இடது சாரி என்று சொல்ல  இடதுசாரிகளோ  அவர்களுக்குஎ  திரானவர் என்று கருத  தங்களின் கருத்துக்களில் உறுதியாய் இருந்தது  பெரிய விஷயம் சார்.

வலிமையான   நம் சங்கத்தை .(இடது சார்பு சங்கமாய் இருந்தாலும்)  பிளவு படுத்த  தீவிர இடதுசாரி நண்பர்  முயற்சியை முன்னெடுக்க  இடது சாரியல்லாத நாம் அதனை  பல்வேறு இக்கட்டுகளை சந்த்தித்து  இன்றுவரை அந்த சங்கம்  முன்னிலும் பலமாயிருக்கிறது  என்ற செய்தி  ஒரு நகை முரணாக இருந்தாலும்  பெருமைக்குரிய விஷயம் அல்லவா.

தங்களிடம்  நான் வியந்த   இன்னொரு விஷயம் தங்களது ஆங்கில புலமையும்  ஈடான தமிழ்ப்புலமையும்.. தங்களின் மேடை பேச்சிற்கு  ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.

வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பில் ஒரு கட்சியில் நீங்கள் இருந்தாலும்  எல் ஐ சி ஊழியன என்பதிலும்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழிய சங்க உறுப்பினர் என்பதில் தானே மகிழ்வு கொண்டீர்.

என்னால் எந்த ஒரு விஷயத்தையும்  (குருஷேவ் பற்றி ஆனாலும்  குஷ்பூ பற்றி ஆனலும்   சேகுவாரா பற்றி ஆனாலும் சேங்காலி புறம் அனந்தராம தீக்ஷிதர் பற்றி  ஆனாலும்   தயக்கமின்றி விவாதிக்க  உங்களிடம் கற்றதுதானே.  ஒரு பல்கலை கழகமல்லவா நீங்கள்.

இன்னும் எத்தனையோ  எத்தனையோ சொல்ல இருக்கு.  அனால் பதிவின் நீளம் கருதி  இத்துடன் முடிக்கிரேன் ,.

தாங்கள் நீடுடி வாழ வேண்டும்  என்றும் உங்கள் ஆசி வேண்டி   அன்புடன்   சாய் ஜெயரா ஐ சி புதுச்சேரி.