Saturday, October 27, 2012

pizza thiraipadam oru paarvai

இன்று மாலை என் நண்பன் போன் செய்து  pizza padam paarthu vaa  என்று கட்டளை
இட்டான். நானும் அவனும்  வித்தியாசமான படங்களை தேடி பார்க்கும் குணம்
கொண்டவர்கள் . உலக படம் முதல் உள்ளூர்  படம் வரை  பார்த்து விடுவோம்.
சில படங்கள் வித்தியாசங்கள் என்ற பெயரில் கழுத்தறுத்து தொலையும் .
சிலபடங்கள்  காட்சி அமைப்பில் வித்தியாசம் கொண்டிருக்கும்.

நண்பன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு  மாலை காட்சிக்கே சென்று விட்டேன்.  நானும் பேய் படத்தில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்று  நினைத்து கொண்டே  படத்திற்கு சென்றேன்.  ஆனால் படம் பார்க்காமல் இருந்திருந்தால் ஒரு யூகிக்க முடியாத கதையையும் கிளைமாக்ஸ்  காட்சியையும்   காணத் தவறியவனாய் இருந்திருப்பேன் .

நகைச்சுவை இல்லை, பிரபலங்கள் இல்லை, களியாட்டங்கள் இல்லை
இருந்தும் நம்மை திகிலுடன் படம் முழுக்க கை பிடித்து அழைத்து செல்லும்
இயக்குனருக்கு ஒரு சபாஷ் நிச்சயமாய் போடலாம்.

மசாலா மனம் இல்லாத இந்த pisssa  எருமைதயிரில் சாதம் பிசைந்து வத்தக்குழம்பு  ஊற்றி  சாப்பிட்டது போல்  இருந்தது.

அசைவ பிரியர்களுக்கு  வைரமுத்து பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் உப்பு கருவாடு ஊற வைத்த சோறு ..

JAMES BOND ORU PAARVAI

ஆவலுடன் எங்களைபோன்றவர்களால் எதிர்பார்க்கப்படும்   JAMES BOND இன்
புதிய  படம்  நவம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.  தமிழ் கதா நாயகர்களின்  படங்களின் சில   CHARACTER  போன்று  ஆங்கில படத்தின்  JAMESBOND CHARCTER  மிகவும் பிரசித்தி பெற்றது.

ஏறக்குறைய 20 படங்களுக்கு மேல்  பாண்டின்  படம் வந்திருக்கும். ஐந்துக்கும் மேற்பட்ட  நடிகர்கள்  BOND ஆக நடித்துள்ளனர்.  ஆனால் என்னை கவர்ந்தது
ROGER MOORE தான் . SEAN COONERY PARAVAAYILLAI...  ON HER MAJESTYS SECRET SERVICE  என்ற  ஒரு படத்தில் மட்டும்  GEORGE LAZENBY BOND ஆக  நடித்திருப்பார் .

இதோ  JAMESBOND  படத்தின் பட்டியல் .


TitleYearActorDirector
Dr. No1962Sean ConneryTerence Young
From Russia with Love1963
Goldfinger1964Guy Hamilton
Thunderball1965Terence Young
You Only Live Twice1967Lewis Gilbert
On Her Majesty's Secret Service1969George LazenbyPeter R. Hunt
Diamonds Are Forever1971Sean ConneryGuy Hamilton
Live and Let Die1973Roger Moore
The Man with the Golden Gun1974
The Spy Who Loved Me1977Lewis Gilbert
Moonraker1979
For Your Eyes Only1981John Glen
Octopussy1983
A View to a Kill1985
The Living Daylights1987Timothy Dalton
Licence to Kill1989
GoldenEye1995Pierce BrosnanMartin Campbell
Tomorrow Never Dies1997Roger Spottiswoode
The World Is Not Enough1999Michael Apted
Die Another Day2002Lee Tamahori
Casino Royale2006Daniel CraigMartin Campbell
Quantum of Solace2008Marc Forster
Skyfall2012Sam Mendes

ரமணி சந்திரன்  MILLS AND BOON   ராஜேஷ்குமார்  கதைகளை போன்று 

மேல் அட்டையை கிழித்துவிட்டு பார்த்தால்  எல்லாம் ஒன்று போலத் தான் தெரியும்  ஆனால் நாம் விரும்பி படிப்பதில்லையா , அதைப்போலத்தான்  

JAMESBOND படமும் .விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது   ரமணிச்சந்திரன் மில்ல்ஸ் அண்ட் பூன் ராஜேஷ்குமார்  கதைகள் ஒரு பருவத்தை தாண்டிய பிறகு  சுவாரசியம் இருக்காது. ஆனால்  JAMESBONDஎல்லா காலத்திலேயும் 
எல்லா பருவத்திலேயும் விறுவிறுப்பாகவும் கம்பீரமாகவும் நடைபோடுவார்.
 
ஆர்வத்துடன் வரவேற்போம்   DANIEL CRAIG ஐ  மன்னிக்கவும்  JAMESBOND ஐ .











airtel super singer GRAND FINALE

மிகுந்த  எதிபார்ப்புக்கிடையே  நேற்றுநள்ளிரவு வரை நடந்த AIRTEL SUPER SINGER GRAND FINALE  உப்பு சப்பு இல்லாமல்  நடந்து முடிந்தது . கடந்த வருடம்
முதலிடம் குறித்த சர்ச்சைகள் இருந்தாலும் நிகழ்ச்சி  சுவாரசியமாக இருந்தது.
மாலை 7 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு ஒரு மணியை தாண்டியும் ஓடிக்கொண்டிருந்தது. பாடும் திறமையில்  எல்லோருமே சிறப்பாக பாட நிகழ்ச்சியில் விறுவிறுப்பு என்பது மருந்துக்கு கூட இல்லை.

சிறப்பம்சமாக  ரஹ்மான்  கலந்து கொண்டது  ஒரு திடீர் அதிசயம் கலந்த
ஆச்சரியம் . ஆனால் ஏனோ தானோவென்று  ஓரிரு  வார்த்தைகளில்  பாடகர்களை  பற்றி கூறியது   தன்னடக்கம் என்பதா அசுவாரசியம் என்பதா .
என்னசொன்னாலும் அந்த ஆஸ்கார் நாயகன்  அரங்க்கினுள்  நுழைந்ததும்
அணைத்து தரப்பினரும்  ஒரு பரவச நிலையில் எழுந் து நின்று அவரை வரவேற்றது  ஒரு கண் கொள்ளா காட்சி,

போட்டியாளர்களில்  நான்கு மற்றும் ஐந்தாம்  இடத்தை பிடித்தவர்களின் பெயர்களை கூறும்போது , நமக்கு மட்டுமல்ல  போட்டியாலர்களுக்கே  கூட அதிர்ச்சியாக இருந்ததை  தொலைகாட்சியில் பார்க்க முடிந்தது.  ஏனெனில்
சுகன்யா என்ற  போட்டியாளர்  முதல் மூன்று இடங்களில் ஒன்றை பிடிப்பார்
என்பது தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வந்த பெரும்பாலோரின்  கருத்தாக
இருந்தது.

பிரகதி என்ற போட்டியாளர்  இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் ஆம் தள்ளப்பட்டார் . ஏனெனில் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நிகழ்ச்சி
என்று சொல்லப்பட இந்த போட்டியில்  பிரகதி  வயது 15 என்று யாரோ சொன்னதாக தகவல். மேலும் ஒரு பதிவரின் முகநூலில்  பிரகதி 15 ஆவது
பிறந்த நாளை கொண்டாடும்  போட்டோவையும்  இணையத்தில் நான் பார்த்தேன். அதன் காரணமாக அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம்  என்பது என் யூகம் .

முதல் இடத்தை பிடித்த சிறுவன்  ஆதேஷ்  நிச்சயமாக முதல் இடத்துக்கு தகுதியானவன் தான் . மிக அழகாக ,இசைக்கும் வார்த்தைக்கும் கச்சிதமாக
பொருத்தி மிக அனாசியமாக உச்ச ஸ்தாயில்  பாடலை பாடிய நேர்த்தி
சூப்பர்   அவன் தெரிவு செய்த பாடல் வந்தே மாதரம்  சபையினரை  அவன் பாட்டுடன்  உணர்வு பூர்வமாக  ஒன்ற செய்து விட்டது  மட்டுமில்லாமல் .
வெற்றி சிகரத்திற்கும் இட்டு சென்று விட்டது.
 ORU NIGAZHCHIKKU COMPERE  பண்ணுவது என்பது ஒரு கலை. மிகுந்த சமயோசித புத்தியுடனும், சபை அறிந்து பேசுவதிலும்  விருவிருப்பான
பேசும் தேவை . ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில்  கூலிக்கு  மாரடித்தது  போல்
இருந்தது.

இறுதியில் வெற்றி பெற்றது விஜய் டிவி யின் வியாபார நுணுக்கமும் ,விளம்பரதாரரின்  வசூலும்   SMS  மூலம் காசு பார்த்த தொலை பேசி நிறுவனங்களும் தான்.

ஆனால் ஒன்றை மறுக்க முடியாது  இளம் சிறார்களின் குரல் வளத்தை மிக சரியாக வெளிச்சம் போட்டு காட்டிய  விஜய் டிவி யின் இந்த  ப்ரோக்ராம்
வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.


Wednesday, October 24, 2012

pothysil oru pozhudhupothysil oru pozhudu

விஜயதசமி அன்று நாங்கள் தீபாவளிக்கு புது துணிகள் எடுப்பது எங்கள் குடும்ப வழக்கம். அதன்படி இன்று காலை சுமார் 10 மணி அளவில்  குடும்பத்தினர் அனைவருடன்  போத்திஸ்  கடைக்கு சென்றோம். 
 போக்குவரத்து  நெரிசலை எதிர்பார்த்து சென்ற எங்களுக்கு  அண்ணா சாலையில் போக்கு வரத்து சீராக   ஒழுங்குபடுத்த பட்டிருந்தது  மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. 

உள்ளே நுழைந்ததும்  கனிவான வரவேற்பு.  யாருக்கு என்ன தேவை 
என்பதை கேட்டு அந்த பிரிவிற்கு அனுப்புவதில் தொடங்கி  கவுண்டரில் பில் போடுவது வரை ஒரு அழகான ஒழுங்கு முறை கடை பிடிக்கபடுகிறது .  
நூற்றுக்கனக்கான  மக்கள் உள்ளே இருந்து ம்  துணிவகைகளை தேர்வு 
செய்வது  எளிதாக இருந்தது. வகை வகையான மாதிரிகள் நம்மை அசத்துவது என்னவோ  நிஜம்.  விலையும்  நியாயமாகவே  பட்டது.

இதற்கு முந்தைய  வருடங்களில்  நான்கு  அய்ந்து  கடைகளை தேடி 
செல்ல வேண்டும். அந்த கடைகளிலும்  ஓர்  அளவே  சரக்குகள் இருக்கும் .
கூட்டம் காரணமாகவோ அல்லது வேலை  பளு காரணமாகவோ  அல்லது முதலாளிகளின் மேல் உள்ள எரிச்சலின்  காரணமாகவோ  
ஊழியர்கள் நம் மீது  கடுப்பு கலந்த  அன்பினை பொழிவார்கள் . ஏதும் வாங்கவில்லை என்றால் நம் காதுபட வசவும் பொழிவார்கள் . 

இந்த   தொல்லைகள்  எதுவும் இல்லாமல் நிதானமாக தெரிவு செய்ய முடிந்தது.  வந்திருந்த அனைவருக்கும் சர்கரைபொங்கல்   வழங்கப்பட்டது , அதுமட்டும் இல்லாமல்  மாலை  வெண் பொங்கலாம் ,
இரவு கேசரியாம் .   அத்தனை வசதிகளையும் கொடுத்து  தன்  ஆக்டோபஸ் 
கரங்களை நீட்டி  அணைத்து மக்களையும் கபளீகரம்  சப்தமில்லாமல்  
செய்து கொண்டிருக்கிறது இந்த  மெகா ஷாப் . 


வெல்லக்கட்டியை எறும்புகள் மொய்ப்பது போல அண்ணா சாலையும் 
திருவிழா முடிந்த  திடலை போல நேரு வீதி காட்சி அளித்ததும்  மனதை என்னவோ  செய்தது.   

போதீசுக்கே  புதுவை இந்தகதி என்றால்  

. .

Saturday, October 20, 2012

50th year indo china warindo china war 50th year

இந்தியசீனப்போர்  1962 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஏறக்குறைய ஒரு மாதம் நடந்த இந்த போர்  நவம்பர் மாதம்  முடிவுற்றது.

அப்போது நாங்கள் பள்ளி மாணவர்கள். இந்தியர்களை சீனர்கள் தாக்க்குகிரார்கள்  என்பது மட்டுமே எங்களுக்கு தெரியும் , அதன் காரணம் 
எதுவும் தெரியாது. எங்களுக்கு தெரிந்தது எல்லாம்  நேரு,  சூ என்  லாய் 
தலை லாமா ஜான்  கென்னடி  என்றசில தலைவர்களின்  பெயர்கள் மட்டுமே. 

ஆனால் தேச பக்தி என்ன என்பது பற்றி அப்போது உருவான எழுச்சி 
என் கண் முன்னே இப்போதும் பளிச்சென தெரிகிறது. 

சிங்க நாதம் கேட்குது சீன நாதம் ஓடுது  என்ற பாடலை நாங்கள் 
அனைவரும் பாடிக்கொண்டு வீதிகளில் வளம் வந்தது, அனைவரிடமும் 
உண்டி ஏந்தி  காசு கேட்டு அந்த காசை  பாது காப்பு அதிகாரிகளிடம் கொடுத்தது  ஒரு சீனனாவது  கிடைத்தால்  உடைக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது போன்றவை  நெஞ்சில் என்றென்றும் நீகாத  நினைவுகள். 

 சீனா   commun ist country. அதனால் தானோ  என்னவோ  communist  களை 
 இன்றுவரை  என்னால் ஏற்க  முடியவில்லை.

Friday, October 12, 2012

maatran vimarsanamMAATRAN VIMARSANAM. CHE PADAM


சூர்யாவின் மாற்றான்  படத்தை காண இன்று காலை முதலே தயாராகி விட்டேன் .  சூர்யா  காஜல்  கே வீ  ஆனந்த்  கூட்டணி வலுவான கூட்டணி அல்லவா .  நீண்ட நாட்களுக்கு  பிறகு ரத்னா   தியேட்டர்  சென்றேன்.பரவாயில்லை ஒலி  ஒளி  அமைப்புகள் கச்சிதம்.

கதை சுலபமாக  ஊகிக்க கூடியதுதான் . ஆனால் காட்சி படுத்தியிருக்கும் விதம் மிக அருமை.  சூர்யா  அப்பப்பா  என்ன ஒரு ஈடுபாட்டுடன்   உழைப்பு
நடனம் அமர்க்களம் என்றால்  சண்டை காட்சியோ  அனல் . குறிப்பாக  ராட்சச
 ராட்டினங்களில் நடைபெறும் சண்டை காட்சி அசத்தல் . ஏறக்குறைய அனைத்து  காட்சிகளிலும் சூர்யாவே வியாபித்திருந்தாலும்  துளி கூட அலுப்பு தட்டவில்லை . சிவாஜி  எம் ஜி யார்  கமல்போன்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் .  hats off  soorya.

அடுத்து காஜல் . எந்த கோணத்தில் பார்த்தாலும்   அழகு பதுமையாய் தெரிகிறார் . ஆபாசம்  கவர்ச்சி  இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பவர்கள்
 இந்த படத்தில்  KAAJALAI  பாருங்கள்.  துளிகூட முகம் சுளிக்க  வைக்காத  அழகு.


கே வீ  ஆனந்த்    DHONI  மாதிரி  எலிகாப்டர்  ஷாட்   அடித்திருக்கிறார் .
PHOTOGRAPHY  கலை இத்தனை அழகானதா .  நாணி கோணி  என்றொரு பாடல்
காட்சி . உலகின் மொத்த அழகையும்  ஒருதிரைக்குள் கொண்டு வரும்  ரசவாத
வித்தை செய்து காண்பித்திருக்கிறார் .

சோலை புஷ்பங்களே என்  சோகம்  சொல்லுங்களே பாடல் காட்சியில் நடித்தவரை  நினைவிருக்கிறதா . அமாம் இங்கேயும் ஒரு கங்கை தாராதான் .அம்மா வேடத்தில் அசத்தியிருக்கிறார்.

இரண்டு சூர்யாக்களும்  குழந்தையில் இருந்து பெரியவர் ஆகும் வரை  ஒரு பாடல் காட்சி மிகவும் நயமாக  செதுக்கபட்டிருக்கிறது.  கலீல் கிப்ரான் , பாரதியார்  பகத் சிங் , செல்போனில் CHE QUARA  படம்  என்று   ஒரு சூர்யாவின் கேரக்டரை  நளினப்படுதியிருக்கிறார்  இயக்குனர்.

உயிர்ருக்கு போராடிக்கொண்டிருக்கும் சூர்யா உதவிக்கு காரில் செல்பவர்களை   கூப்பிட  யாரும் கவனிக்காமல் போக, ஒரு ஆட்டோ அருகில் வரும்போது சூர்யா  அண்ணே காப்பதுங்கன்னே  என்று கூற ஆட்டோ
டிரைவர்  உதவிக்கு வரும்போது  தியேட்டரில் எழுந்த ஆரவாரம்  டைரக்டர்
சொல்ல வந்ததை  அழகாக சுட்டிக்காட்டியது.

இன்னொரு அழகான காட்சி. ஒரு  சூர்யா மங்காத்தா
 படம் போக எத்தனிக்க
ஒட்டிக்கொண்டிருந்த  இன்னொரு சூர்யா நண்பன் படம் பக்க இழுக்க  இருவரும்  சேர்ந்து  கர்ணன் படம் பார்ப்பது  சில நொடிகளே வரும் ஒரு  ஹைக்கூ .. ஹோட்டலில்  காஜல் சூர்யாவிற்கு  இரண்டு ரூம் மேனேஜர்  தர
ஒரே ரூம்  போதும்  என்று சூர்யா சொல்லிவிட்டு , உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று  KAJALAI  பார்த்து சொல்வத  அழகு .

ஆனால் படம் முடிந்து வெளியில் வரும் போது , ஒரு பிரம்மாண்ட பொருட்காட்சியை  கண்டு ரசித்து  வெளியில் வரும்போது  ஒரு வெறுமை  தோன்றுமே  அதை மாதிரியே ஒரு பீலிங் .
   


Tuesday, October 9, 2012

october 10 postal day

எதேச்சையாக செய்தித்தாளை புரட்டும் போது  அக்டோபர்  10  postal thinam  என்று
தெரியவந்தது. தபால் என்ற சொல் இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை.  ஆனால் எனக்கு சிறுவயது முதல் இன்று வரை தபால்
என்பது பல்வேறு அனுபவங்களை கொடுத்துள்ளது.

பள்ளி நாட்களில் நாங்கள் வாய்ஸ் ஆப்  அமெரிக்கா , ருசியன் எம்பசி
இன்னும் பல பெயர் தெரியாத தூதரகங்களுக்கு  ஒரு கடிதம் எழுதுவோம்.
ஒரு சில நாட்களில்  அந்தந்த ஊர்களில் இருந்து  கட்டு கட்டாக  வழு வழு பேப்பரில் நிறைய புத்தகங்கள் வரும் .  தபால்காரர்  நம் பெயரை கூப்பிட்டு
அந்த கடிதங்களை நம்மிடம் கொடுக்கும்போது   எங்களுக்கு ஒரு கர்வம் வரும் பாருங்கள்  அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . மதியம்  வீட்டிற்கு வரும் அப்பா  அம்மாவிடம் தபால் எதாவது  வந்ததா என்று கேட்க , உங்களுக்கு ஒன்னும் இல்லீங்க , ஜெயராமனுக்குதான் வந்தது என்று சொல்லும்போது நான் அப்பாவை ஒரு பார்வை பார்பேன் பாருங்கள் , நாங்களும் வளர்ந்துட்டோமில்லே  என்ற  தொனி  அதில்  இருக்கும்.

எங்கள் உறவினர்  வருடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வருவார் . அவரின் முதல் வேலை என்ன தெரியுமா ? ஒரு கம்பியில் சொருகி இருக்கும்
அத்தனை பழைய கடிதங்களையும் ஒரு வரி விடாமல் படிப்பார் . அந்த வருடத்தில் நிகழ்ந்த அத்தனை செய்திகளையும் அந்த கடிதங்கள் மூலமாகவே
தெரிந்து கொள்வார் .

இப்போது நாம் தபால்கரர்களையே பார்க்க முடிவதில்லை. அன்றைய தினத்தில்  தபால்காரருக்கு நம் அனைவரின் குடும்பத்தை பற்றியும் தெரியும் .
காணும் பொங்கல் அன்று  தபால் கரருக்குத்தான்  முதல் மரியாதை.

கல்லூரியில்  இடம் கிடைத்துவிட்டது ,  lic ல்  வேலை  கிடைத்துவிட்டது
என்ற தபாலை இன்று காணும் போதும் என்ன சுகம் தெரியுமா . தபால்கார தெய்வமாக  அல்லவா தெரிந்தார் .

ஒரு முறை எனது நெருங்கிய நண்பருக்கும் எனக்கும் அலுவலகத்தில் ஒரு சிறிய  பிரச்சினை . நண்பர் கேரளாவை சேர்ந்தவர் .நாங்கள் பணி  புரிவது சிதம்பரத்தில்.  பிரச்சனையின் காரணமாக  அன்று மதியமே நண்பர்  கேரளாவிற்கு  யாருடனும் சொல்லிகொல்லாமல்  சென்று விட்டார். என் மீது
கோபத்தின் காரனமாககத்தான் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த  ரகசியம்.
ஒரு வாரம் ஓடிவிட்டது  நண்பர் அலுவலகத்திற்கு வர அறிகுறியே தென்படவில்லை . எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி . அப்போதுதான்  இந்த தபால்  விரிசல் விட இருந்த எங்கள் நட்பை பாறையாக இறுக்கியது. எப்படி தெரியுமா ? நட்பின் வலி என்ன என்பது அந்த ஒரு வாரத்தில் நான்  உணர்ந்தேன் .  நீண்ட யோசனைக்குப்பின்  ஒரு தபால் கார்டை எடுத்து
இரண்டு வரி எழுதினேன் .

             " உன் உயிர்  என் உயிர் என்றது ஆனபின்
                என்னிடம் கோபம் கொள்ளுவதேன் .

பொன் எழில் பூத்தது  புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில்  என்ற பாடலின் வரிகள்தான் மேலே உள்ளவை.

கடிதம் கிடைத்தவுடன்  நண்பரின் பதில் கடிதம் என்ன தெரியுமா?
                    நிம்மதி அடைந்தேன்   நாளை வருகிறேன்.
அந்த தபால் இன்னமும் என்னிடம்.

ஒரு புரிதலுக்கு அந்தக்கால தபால் வழிவகுத்தது . ஆனால் இன்று   எத்தனையோ  நவீன தொடர்பு  சாதனங்கள் இருந்தபோதும்  தற்போது  நான் இழந்த சில உன்னதமான  நட்புகளை  மீண்டும்  பெற  அந்தகால தபால் வராதா
என்ற ஏக்கம்தான் என்னுள் இன்னும் நிறைந்திருக்கிறது.

இன்னொரு சுவாரசியமான  கடிதம் . ஒரு முறை   நான் நண்பர்களுடன்
பெட்டிக்கடையின் அருகே நின்று கொண்டிருந்தேன் . நண்பர்கள் அனைவரும்
என்னை தவிர  புகை பிடித்துகொண்டிருந்தார்கள் . ஆனால் என் துரதிர்ஷ்டம்
எனக்கு வேண்டிய ???? ஒருவர்  ஒரு முறை முறைத்து  கொண்டே சென்றார்
பயந்து போன நான்  reply cardல்

                    மன்னிக்க மாட்டாயா  உன் மனம் இறங்கி  என்று எழுத

வந்த  reply  "    இந்த ஒரு முறை மட்டும் "   என்று  கை எழுத்து இல்லாமல்
வந்தது.  இந்த தபாலும்  எத்தனை ஆண்டுகள் ஆனாலும்  சுவை குன்றவே  குன்றாது .

        எங்களின்  உணர்வுகளின் ஊடே  ரத்த நாளங்களில்  அத்தனை உணர்ச்சிகளுடன்  பின்னி பிணைந்து விட்ட இந்த தபால்  -- தபால் தினம்
வாழ்கவே .

 கடைசியாக  சில வருடங்களுக்கு முன் தபால் எழுதும் பழக்கத்தை தூண்ட  என் நண்பர் மனோவுடன் சேர்ந்து சில நாட்களுக்கு மட்டும்  கடிதம்  எழுதினேன் . பின் கால சக்கரத்தில்   sms  email  endru naanum maarikkondirukkiraen..






Monday, October 1, 2012

solla thudikkuthu manasu

 நேற்றைய நீயா நானா  நிகழ்ச்சி -- எது   சந்தோசம் என்ற கேள்விக்கு  பலர் பலவிதமான  பதில்களை கூறினர் . அத்துடன் அவர்கள் பெற்ற  உச்சகட்ட
சந்தோசம் பற்றியும் கூறினார்.  ஆனால் ஒரு நண்பர் சொன்ன செய்தி என்னை
அதிர்ச்சியின்  உச்சத்திற்கே  கொண்டு  சென்றது .

தன் மகளின் மஞ்சள் நீராடு விழாவை  சிறப்பாக நடத்தியது குறித்து அவர் மிகவும் சந்தோஷப்பட்டார் . பொதுவாக ஒரு பெண்  பூப் பெய்து விட்டால்
அவளின்குடும்பதினர்  சடங்கு என்கின்ற பெயரில்  ஊரை கூடி  விழா  எடுப்பது
வழக்கமான ஒன்றுதான் . அதன்  உள் அர்த்தம்  எனது மகள் திருமண பந்தத்திற்கு தயாராகி  விட்டாள்   என்பதுதான்

காலப்போக்கில் மஞ்சள் நீராடு விழா  என்பது தன்  அந்தஸ்தை வெளிப்படுத்தும்  ஒரு நிகழ்வாக மாறி விட்டது.

ஆனால் இந்த நண்பர்  அந்த விழாவை , தன் பெண்ணை  helicopter ல்
அழைத்து வந்து  விழாவை நடத்தினாராம். அதற்க்கு அவர் பட்ட சிரமங்களையும்  சொன்னார்  helicopter வாடகை   fire service permission, helipad
pondravaigalukka  மெனக்கட்டதையும்  சொன்னார்.  எனக்கு அட பைத்தியக்கார
என்றுதான் சொல்ல தோன்றியது.  டி வீ யில்  அந்த  வீடியோ   காட்சியையும்
காண்பித்தார்கள் .

உளவியல் ரீதியாக பிஞ்சு மனங்கள்  சஞ்சலத்தில் இருக்கும் போது
இப்படி ஒரு விழா தேவை இல்லை என்பதே என் கருத்து . இதில்  helicopter ல்
வைத்து விழாவை நடத்தி அதில் சந்தோசம் கண்டார் என்று சொன்னால் ????

எங்கே போய் கொண்டிருக்கிறோம்  நாம்?