Tuesday, June 2, 2015

mandhaiyilae nindraalum ivar veera paandi thaeru

மந்தையிலே நின்னாலும் இவரு வீர பாண்டி தேரு .

ஒரு நண்பரிடம் பேசிகொண்டிருந்தபோது  கலைஞர் பற்றியும்  சிவாஜி பற்றியும் பேச்சு வந்தது.  பேச்சின் நடுவே  நண்பர்  கலைஞர்  வசனத்தால்  சிவாஜி  பெருமை பெற்றார் என்று கூறினார்.  உடனே நான் மறுத்து  இல்லை என சொல்ல  நண் பர் பராசக்தியையும்மனோகராவையும்  சுட்டி காட்டினார்.

அவருக்கு நான் அளித்த பதில்  இதோ.

நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற வசனம்   வானம் பொழிகிறது  பூமி விளைகிறது === இதன் வசனகர்த்தா  சக்தி கிருஷ்ணசாமி அவர்கள்.

பாசமலர் படத்தில் சிவாஜியும்  ஜெமினியும்  தொழிற்சாலையில்  மோதும்  வசனங்கள்  இன்றும் கைதட்டல்களை வாரி குவிக்கிறது.  இதற்கு வசனம்  அரூர்தாஸ்.

பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் ஒரு சில வார்த்தைகளில் அவர் பேசிய  வசனங்கள்  இன்றும் மறக்க முடியாது.  உதாரணம்.  கவுரவம் படத்தில்  கண்ணா நீ எங்கடா போவே -    போகணும்னு மட்டும்தான்  தோன்றது எங்க போகணும்னு தெரியலையே. என்று  சொல்லும் வசனம்  இன்றளவும் மறக்க முடியாதது..

தேவர்  மகன் படத்தில்  ஒரு காட்சியில்  --    நாளைக்கு நான் இருப்பனான்னு தெரியாது   ஆனா  வெதை  நான் போட்டது . இது என்ன பெருமையா  ம்ம்
கடமை  இதற்கு வசனம் யார்.

சத்ரபதி சிவாஜியாக  ராமன் எத்தனை ராமனடி படத்தில்  சிவாஜி பேசி நடித்த வசனங்கள்  கவியரசு கண்ணதாசனுக்கு சொந்தமானவை. .


வியட்நாம் வீடு படத்தில்  அத்தே  நீ முந்திண்டா நோக்கு  நான் முந்திண்டா நேக்கு இது சுந்தரத்தின் வசனம்.

இது போல் ஏராளமாக சொல்லலாம்.  இறுதியாக நான் சொன்னது
ஏன் கலைஞரின் வசனத்தை மற்ற படங்களில் பேசிய நடிகர்கள்   சிவாஜி அ ளவிற்கு  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ..

கலைஞர் மிக சிறந்த வசனகர்தாதான் ஆனால் அவர்  வசனத்தினால்தான்
திலகத்தின் புகழ் உயர்ந்தது என்பதை  எக்காலத்திலும் ஏற்க இயலாது..

ulaga paal dhinamum

 உலக பால் தினம்.

உலக நாடுகள் பாலை பற்றியும் பால் பொருட்கள் பற்றியும்  விழிப்புணர்வு ஏற்படுத்த  ஜூன் 1 தேதியை  பால் தினமாக  அனுசரித்து வருகிறது.
பதிவு அதை பற்றி அல்ல  ஆனால் பால் பற்றிதான் .

முதலிலையே நான் ஒன்றை தெளிவாக சொல்லிவிடுகிறேன். கடவுள் நம்பிக்கைகளிலும்  வழிபாடுகளிலும்  நம்பிக்கை  உள்ளவன் .நான்.  ஆனாலும் சில விஷயங்களை  என் மனம் ஒப்ப மறுக்கிறது. அதில் ஒன்று பிரதோஷம்

சமீப காலமாக  பிரதோஷ வழிபாடு  மிகவும் அதிகமாகவும் விமரி சையாகவும் கொண்டாடபடுகிறது.  ஏற்கனாவே நான் பலமுறை இதைப்பற்றி பதிவு செய்து விட்ட்டேன். இருந்தாலும்  உலக பால் தினம் பற்றி அறிந்ததிலிருந்து  பிரதோஷத்தின் மீதே கோபம் வருகிறது.   நான் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடக்கும். ஆனால்  அபிஷேகம் என்ற பெயரில்  குடம் குடமாக பாலை ஊற்றுவது என்பது  எனக்கு சரியாக படவில்லை.  சோமாலி போன்ற நாடுகளில்  பட்டினியால் லட்சக்கணக்கான குழந்தை பால் கூட இல்லாமல் மடிகின்றனர். மறுபடியும் சொல்கிறேன்  நான் புரட்சி சமுதாயம்  என்றெல்லாம்  பேசவில்லை.  பக்தர்கள் எவ்வளவு பால் கொடுத்தாலும்  சிறிதளவு இறைவனுக்கு அபிஷேகம் நடத்தி விட்டு மீதமானதை  பக்தர்களுக்கோ , அல்லது அரசு  மருத்துவ  மனையில் உள்ள
பச்சிளம் குழந்தைகளுக்கோ  அல்லது ஆதரவு அற்ற குழந்தகளுக்கோ கொடுக்கலாமே.

பல நூல் படித்து நீ அறியும்  கல்வி      பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்   பிறர் உயர்வினிலே  உணகிருக்கும் இன்பம்   இவை அனைத்திலுமே  இருப்பதுதான்   தெய்வம் என்று உணர்ந்து  நம் பக்தியின் போக்கை பயனுள்ள பாதையில் திருப்பலாமே.

புயலொன்று பூவானது ==

1976 ஆம் வருடம் திரை இசை உலகில்  திடீரென ஒரு புயல்.. அந்தபுயலின் பெயர் இளையராஜா .அன்னகிளியில்  ஆரம்பித்த உலா  அகிலம் முழுதும் சுற்றியது.  முதல் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் என்று ஏகடியம் பேசியோர்க்கு ,
இசையாலேயே  பதில் சொனார் அந்த ராஜா. திரை இசை கால ஓட்டங்களில் புது புது  பரிணாமங்களில்  தன்னை வெளிப்படுத்தி வருகிறது. எத்தனை  எத்தனை ஜாம்பவான்கள்  அன்றும் இன்றும் .ஆயினும் இவரின் தனி  சிறப்பு  என்ன. ? ஏன் இவர் மட்டும் என்னை அதிகமாக கவர்ந்தார்.  என்னை மட்டுமா.?

மழை  பெய்து  விட்டபின்  கிராமிய  வரப்புகளில்  நடந்த  அனுபவம் உண்டா. ஈரமான பாதையும், மண்ணின் வாசனையும் , மெலிதான காற்றில் ஈரம் சொட்ட சொட்ட தலை ஆட்டும்  வண்ணப் பூக்களின் நேர்த்தியும்  மனதில் சிலீரென்ற  உணர்வை உண்டாகும்.  அத்தனை உணர்வுகளையும்  தன்  இசையில் குழைத்து  விருந்து படைதவரல்லவா  ராஜா.

நினைவோ ஒரு பறவை  விரிக்கும் அதன் சிறகை .கேட்கும்போதே நாமே சிறகை விரித்து பறப்பது போல் இல்லையா ?

நீரோடை போலவே  சிரித்தாடி ஓடினால் வலை ஓசையே காதிலே சிந்து பாடுதே  என்ற வரிகளின்  போது  நீரோடையும்  வலை ஓசையும்  இசையாலே நம் முன்னே நிறுத்தியவர அல்லவா.

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்  சொந்தம் இந்த சொந்தமம்மா  வாழ்விருக்கும் நாள்  வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம்மம்மா --இசை வடிவில்  அழகு தாம்பத்தியத்தை  வாசித்து காட்டிய  உன்னத ராஜா.

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம்  நனையும் முகிலெடுத்து
முகம் துடைத்து  விடியும் வரை நடை பயிலுவதை  கிடார் இசையுடன்  கேக்கும்போது  பனி நிலா முகில்  அத்தனையும் இசையில் நனைந்து வழிவதை சாத் தியமாகியதே ராஜாதானே .

தூக்கணாம் குருவிஎல்லாம் தானறிஞ்ச  பாஷையிலே  மூக்கோடு மூக்கு வச்சு  முனு முனுன்னு  பேசயிலே  மடையை திறந்து விட்டா  மழை தண்ணி நெறைஞ்சிருக்கும் -- இப்படி ஒரு காட்சி வடிவத்தை  இசை சிற்பமாகும் ரசவாதம்  ராஜாவிற்கு மட்டும் உரியது தானே.

ஒருகாலத்தில் இரவின் மடியில் என்ற நிகழ்ச்சிக்காக தவமிருந்தோம்.
இன்றைய கால கட்டத்தில்  உடம்பையே ஆட வைக்கிற இசையையும் ரசிக்கிறோம் .  ஆனால்  உணர்வு பூர்வமாக , இசை கருவிகள் குறிப்பாக நமது பண்பாடு இசைகருவிகள்  ராஜாவின் கைவண்ணத்தில்  மனதை வருடுவதை மாறாக இயலுமா.

ராசாவே வருத்தமா  ஆகாயம் சுருங்குமா   என்ற சோகத்தில் கூட ஒரு சுகமானா இசை.

ஏ ஆத்தா ஆத்தோரமா  என்ற இசை வரும்போது  ஒரு துள்ளல் ,
போடா போடா புண்ணாக்கு என்ற போது  ஒரு எள்ளல்.  ஜகதாரிணி  சிம்மவாகினி  என்ற போது  இசையின் ரீங்காரம் ,, வாய் பேசிடும் புல்லாங்குழல்  நீதான் ஒரு பூவின் மடல் என்றபோது ஒரு  மென்மை .

சொல்லிகொண்டே போகலாம் .. ராசாவே   நீ எங்கள் மண்ணின் அடையாளம் .
வாழ்க பல்லாண்டு.