Wednesday, August 14, 2019

ஐயா முண்டாசுக்கவிஞனே  பெண்மையை போற்றும் படம் என்று சொன்னார்களே என்று  நேர் கொண்ட பார்வை என்ற படத்திற்கு போனேன்   .பாரதி ஐயா எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..கதையா  சுருக்கமாக சொல்லி  விடுகிறேன் .  மூன்று  புதுமை பெண்கள் ??? ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கலில் மாட்டி கொண்டு விடுகிறார்கள். என்ன சிக்கல் தெரியுமா ? ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார்கள் ஆன் நண்பர்ளுடன்  மதுவும் உண்டு. அதில் ஒரு நண்பன் ஒரு பெண்ணை பாலுறவிற்கு அழைக்க அவள் மறுக்க இவன் பலாத்காரம் செய்ய முயல தன்னை காத்துக்கொள்ள அவனை ஓங்கி மண்டையில் அடித்து விடுகிறாள். பின் அந்த பெண்கள் மீது பல்வேறு பி ரிவுகளில் வழக்கு பதியப்படுகிறது. அதிலிருந்து  நேர் கொண்ட பார்வையுடன் அந்த பெண்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பது கதை..

படத்தில் அவர்களுக்காக ஆஜ ராகும் வக்கீல்   அந்த பெண்ணிடம்   நீ கன்னித்தன்மை உள்ளவளா  என் கேட்க  அந்த பெண் இல்லை  என்று சத்தமாக சொல்கிறாள் . பின் செக்ஸிற்கு காசு வாங்கினியா என்று கேட்க  இதுக்கெல்லாம் காசு எதுக்கு என்று இழுத்து இழுத்து பதில் கூறுகிறாள் .பின் பிடிச்சிருந்தது அதனால் செக் ஸ் என்கிறாராம். அன்றைக்கு பிடிக்கலையாம்  அதனால்  நோ  வாம்.  பெண்ணிற்கு விருப்பம் இல்லையெனில் அவளை தொடக்கூடாது என்பது இந்த படத்தின் மைய கருத்து. அந்த கருத்து வரவேற்க தக்கத்துதான் . இதில் வேறு ஒரு கட்டத்தில் அந்த வக்கீல் ஆவேசமாக  பெண்களை வேலைக்கு அனுப்பாதீர்கள் வீட்டிலேயே பூட்டி வையுங்கள் அல்லது கல்யாணம் செய்து கொடுங்கள் என்று கூறுகிறார். . ஏன்யா வேலைக்கு போனா அரைகுறை ஆடை வேணுமா  குடிக்கணுமா பிடிச்சுதுன்னு  செக்ஸ் வச்சிக்கினமா .  என்ன ஒரு விஷ கருத்து. 

ஐயா பாரதி இதுவா நீ கண்ட பெண் விடுதலை.   கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று படித்திருக்கிறான் ஐயா .

ஐயா இந்த பதிவிற்கு எனக்கு கண்டனங்கள் வரும். ஆனால் படத்தை பார்த்து விட்டு அவர்கள் மனதோடு பேசிவிட்டு பின் கண்டனம் தெரிவிக்கவும். 

மத்தபடி அஜீத்குமார் அற்புதமாக நடித்துள்ளார். அதுவும் ஒரு சண்டைக்காட்சி நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றுகிறது.

ஐயா பாரதி இந்த படத்தை என்ன ஏற்க முடியவில்லை. . போகட்டும் நான் பழமை வாதியாகவே  இருக்கிரேன்.. .      

Friday, August 2, 2019

சுழித்து ஓடும் ஆறு . இரு கரையிலும் நாணல்  சலசலவென்று தாள நயத்துடன் தண்ணீர் பாய்தல். பதின் வயது நண்பர்களுடன் . பெண்கள் புது துணி அணிந்து  வண்ண  வண்ண மலர்கள் சூடி  ஆண்கள் வேட்டியை மடித்துக்கொண்டு பாத்திரங்களை சுமந்து கொண்டு  ஆற்றங்கரையில் வைக்க  அவரவர் குடும்பங்களுடன் அமர மந்தார இலையும் தாமரை இலையும் தரப்பட அதில்  கலந்த சாதங்கள் பரிமாறப்பட உற்சாகத்தின் உச்சத்தில் அனைவரும் மகிழ  ஒரு ஆடி பதினெட்டு.      மேலே சொன்னது  பொன்னியின் செல்வன் நாவலில் வரும்  காட்சி  அல்ல  நான் நானே  சிதம்பரத்தில் எங்கள் கிராமத்தில் அனுபவித்தது.   

இன்றும்  ஆடிதான் . வறண்ட காற்றில் மோட்டார் வாகன் இரைச்சளுடன  ஆடி தள்ளுபடி விளம்பரங்களை பார்த்து கொண்டிருக்கிறேன். . தூரத்தே  ரசீது புத்தகத்துடன்  பேய் கூச்சலில்  எல் ஆர்  ஈஸ்வரியை  அலறவைத்துகொண்டு சிலர் வருகிறார்கள் நான் அப்புறம் பாக்கிறேன். வாழ்க ஆடி.