Monday, September 28, 2015

பண்ணபுரத்தாரே  என்ன இப்பிடி  .பண்ணீட்டீங்க .

நேற்று மாலையில் இருந்தே  இரவு இசைஞானி யின் எம் எஸ் வி  அஞ்சலி நிகழ்ச்சியை  காண  ஆவலாய் இருந்தேன்.  நிகழ்ச்சியை  முழுவதும் பார்த்தேன்.  ஆனால் ====?? 

முதலிலேயே சொல்லி விடுகிறேன்  நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன்.  அதற்காக எம் எஸ் வி பாடல் பிடிக்கவில்லை  என்ற  அர்த்தமில்லை.
எம் எஸ் வி பாடல்கள்  என்னுடைய இளம்பருவத்தில் இரவின் மடியில் தேனாக காதில் பாய்ந்த காலங்கள் உண்டு. .

நேற்றைய நிகழ்ச்சியில்  இளையராஜாவின்  பேச்சு  என்னை  அவ்வளவாக 
ரசிக்க செய்யவில்லை.  என் பார்வையில் அந்த  நிகழ்ச்சி அஞ்சலி நிகழ்ச்சி மாதிரி இல்லை. 

எம் எஸ் வி பாடல்களில்  அற்புதமாக பாடிய  டி எம் எஸ்  அவர்கள் பாடல் ஒன்று கூட  பாடப்படாதது  தற்செயலா அல்லது திட்டமிட்ட புறக்கனிப்பா .

ஒரு பாடலை குறிப்பிட்டு  அது கே  வி  மகாதேவன் இசை அமைத்தது  என்று 
சொன்னார். அது அவசியமா  அல்லது அந்த பாடலையே தவிர்த்திருக்கலாமே. 

ஆஸ்தான இசை அமைப்பாளரை நீக்கி விட்டு  எம் எஸ் வி யை ஒப்பந்தம் செய்த கேள்வியை கேட்டு  அவர் வீட்டில் எம் எஸ் வி  அறை  வாங்கினார் . என்ற தகவல் நினவஞ்சலி யில் தேவையா. .

ஒரு பாடலை குறிப்பிட்டு விட்டு இம்மாதிரி பாடலை  இன்றைய  சூப்பர   ஸ்டார்களுக்கு  போட முடியாது  என்ற சொன்ன ராஜா ,,  ரஜினிக்கு 
சஹானா சாரல் தூறுதே  என்ற பாட  ல்  போடப்பட்டதை  மறந்து விட்டாரா. 

வீடு வரை உறவு , பேசுவது கிளியா   ஒ ஒ  மாம்பழத்து வண்டு  போன்ற பாடல்கலை பற்றி  குறிப்பிட்டது  எப்படி எம் எஸ் வி க்கு அஞ்சலி என்று புரியவில்லை.    ஒரு பாடலை குறிப்பிட்டு    கவிஞர்  தாமரை மனதில் வைத்து  என்று எழுதியுள்ளாரே 
அதில் கிளாரிட்டி இல்லை என்று ராஜா என்னமோ சொன்னார்.  அதற்கு இன்று  காலை முகநூலில்  கவிஞர் மகுடேஸ்வரன்  என்பவர்  விளக்கம் அளித்துள்ளதாக  எனக்கு ஒரு பதி வு  வந்தது. .  அதன் விளக்கம் வருமாறு 

           நீரில் சூழ்ந்து இருந்தாலும் தா மரையோ  அதன் இலைகளோ தண்ணீருடன்  ஒட்டாது . அதை போன்று எனக்கு சுற்றங்கள் இருந்தாலும்  என் மனது அவர்களுடன் ஓட்டாது . அதன் காரணமாக தாமரை மனதில் வைத்தேன்  என்று எழுதியிருப்பதாக  கவிகன்ர் மகுடேஸ்வரன்  கூறியுள்ளார். 

இந்த கேள்வி அந்த நிகழ்ச்சியில் அவசியமே இல்லையே. .

இன்னொன்றையும் ராஜா  குறிப்பிட்டார் .  எம் எஸ் வியை வைத்து தொடர்ந்து 
படம் எடுத்தவர்  ஒருநாள்  ராஜாவிடம் வர   ராஜா  அவரிடம் தான் ஒப்புக்கொள்ளமுடியாது என்று தெரிவித்தாக கூறினார்.   ஆனால்  பின்னாளில்  அவருக்கு  சில பல படங்கள் பண்ணி இருக்கிறாரே என்ற எண்ணம் என் நினைவிற்கு வந்தது. 

எல்லாவற்றையும் விட  காமராஜர் ஆட்சியில்  அரிசி பஞ்சம் வர  comunist  ஆன
பாவலர்       சுப்ரமணியன் அரிசி வேண்டும்   சுப்ரமணியம்  அரிசி வேண்டும் என்று  பாடினார்கலாம்.

பண்ணையாரே  மன்னிக்கவும் , பன்னைபுரத்தாரே  இவையெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு தேவையா. 

சரி அப்ப இருந்த  அரிசி பஞ்ச காமராஜ்  ஆட்சியும்  பாவலர்   சிந்தனைகளும் 
இப்ப எப்படி இருக்கிறது . காமராஜ் ஆட்சியை விட சிறப்பாக இருக்கிறதா .தங்கள் பொது உடமை சித்தாந்தம் எந்த அளவில் உள்ளது. 

நேற்றைய  நிகழ்ச்சியை பற்றி இவ்வளவு உங்களை விமர்சித்தாலும்  உங்கள் இசையில் எனக்கு தீராத காதல் உண்டு .. 

இசை கேட்டால் புவி அசைந்தாடும்  அது  இறைவன் அருளாகும் . அந்த இசை ஆண்டவன் அருளால் உங்களிடம் அபரிதமாக இருக்கிறது   எனவே தங்களின்  வார்த்தைகளை விட  தங்களின் இசை எங்களை தனி உலகத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறி  தொடரட்டும் உங்களது இசைப்யணம்   என்று முடிக்கிறேன்.  


Thursday, September 24, 2015

kutram  kadithal


குற்றம் கடிதல்  ஒரு திரைப்பார்வை.

குத்து பாட்டு கிடையாது  மனதை வருடும் இசை உண்டு.   அபத்த காமடி  கிடையாது  அர்த்தமுள்ள  காட்சிகள் உண்டு.  த்ரிஷா  நயன்தாரா அனுஷ்க  மாதிரி கவர்ச்சி நாயகி கிடையாது   ஆனாலும்  கதாநாயகி அழகாக இருக்கிறாள் .

ஒவ்வொரு கதா பாத்திரமும் தன்  இயல்பை மீறாமல் அமர்கள படுத்தியிருக்கிறார்கள் .

பாரதி பாடல் பொருத்தமாக கையாளப்பட்டிருக்கிறது.

தலைமை ஆசிரியராக வருபவரும்  தோழராக வருபவரும்  பின்னி இருக்காங்க.

 ஆசிரியைக்கு கடைசி காட்சியில்  கார்கியின்   தாய் புத்தகத்தை  பரிசளிப்பது
கவிதை.

அதே போல் அறிவியல் ஆசிரியை  பிறப்பை பற்றி  படம் வரைந்து பாடம் எடுக்கையில்  மாணவ மாணவிகளின்  குறும்புகளை  சமாளித்து  பாடத்தை முடிக்கும் போது கை தட்டி   கண் கலங்கி மாணவர்கள் நிலை மாறும் காட்சி
அற்புதம்.

நான் நீண்ட நாட்களுக்கு பிறகு  அமைதியாக உணர்வு பூர்வமாக  ரசித்த படம்.
நம்மாலும் நல்ல படத்தை தர முடியும்  என்று நிருபித்த பட குழுவினருக்கு  நன்றி,.

Sunday, September 20, 2015

trisha illaanaa nayanthaara

த்ரிஷா  இல்லேன்னா  நயன்தாரா. ==


பாஹுபலி, பாபநாசம் , கா க்கா முட்டை  தனி ஒருவன்  என வரிசையாக நல்ல படங்கள் வருகிறது என்று   எந்த மாபாவி கண் பட்டதோ தெரியவில்லை
இப்படி ஒரு படம்.  சாக்கடையாக.  வசனங்கள் கள் ஆபாசத்தின் உச்சம் . பெண்களும்  மது அருந்தும் அவலம் .

ஒரு முறை  ஒரு கவிஞருக்கு  பாராட்டு விழா கலந்துரையாடலாக  நடந்ததாம் .  கூட்டத்தில்  ஒருவர்  உங்கள் கவிதை    ஆபாசமாக இருக்கிறதே  என்றாராம்.  உடனே கவிஞர்  வீடு என்றால் வரவேற்பறை, சமையல் அறை , படுக்க அறையுடன்  ஒரு கழிப்பறையும்  இருக்கும்  அது போலத்தான் என்பாடலும்  என்றாராம்.  உடனே இன்னொருவர்  அது சரிங்க  சமீப காலமா நீங்க வீடு பூரா  முழுக்க கழிப்பறையா  கட்டுரீங்கலே என்றாராம்.

அது இந்த படத்திற்கும் பொருந்தும் .

பதின் வயது இளைஞர்களின் கூட்டம்   திரை அரங்கை  மொய்க்கிறது .
வியாபார ரீதியாக  படம் வெற்றி பெறும்  தார்மீக ரீதியாகவும்  கலாசார ரீதியாகவும் இந்த படம்  நம்மை  சம்மட்டியால் ஓங்கி அடித்திருக்கிறது.

இது குடும்பத்தோடு  பார்க்ககூடாத படம். 

Thursday, September 17, 2015

ganesanai enakku romba pidikkum

கணேசனை எனக்கு  ரொம்ப பிடிக்கும்.  

கண  என்றால் குழு  என்றும்   பதி  என்றால்  முதன்மையானவன்   என்றும்  சமீபத்தில் இணையத்தில் படித்தேன் .

கணேசன்  குழுக்களின்  முதல்வன்  அன்றும் இன்றும் என்றும்.

கணேசன் சிலையை   போற்றவும்  செய்வர்  தூற்றவும் செய்வர். எதை பற்றியும் கவலை இன்றி தன்  வழி செல்லும்  நம்பிக்கைக்கு உரியவர்.

எல்லோர் இதயங்களிலும்   கொலுவிருக்கும்  கணேசன்   சிலையை  உடைத்தொரும் உண்டு  அகற்ற  நினைத்தொறும்  உண்டு.

 தாயை போற்றிய கணேசன்   தாயை    அன்னை இல்லத்தில் வைத்து பூசித்தார்.

கணேசன் படமாகவோ  சிலையாகவோ  வெளி வருகிறார் என்றால்  திருவிழா கோலம்தான் .

 தோரணங்கள்  வாத்தியங்கள்  மக்கள்  கூட்டம்  மகிழ்ச்சி வெள்ளம் .

கணேசன் கலைஞர்களுக்கு  வரப்ரசாதம் . அவரை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் .  இசை கருவிகளை வாசிப்பவனாக ,  விளையாட்டு வீரனாக
எப்படி வேண்டுமானாலும் தோன்றுவார்.

கலைஞருக்கு மிகவும் பிடித்த கணேசன்.

கணேசன் எளிமையானவர்.  

கணேசன்  குழந்தைகளுக்கு பிரியமானவர் . கணேசன் பெரியவர்களுக்கு
நம்பிக்கை நாயகன் .

இனம் மதம்  நாடு கடந்து கணேசன் எல்லார்க்கும்  பிடிக்கும்

எனவே எனக்கு  கணேசனை பிடிக்கும். .

இன்று  பதிவிட்டிருக்கிறேன்   எந்த கணேசன்  உங்கள் யுகத்திற்கு. நீங்கள் எந்த கணேசனை  நினைத்தாலும்  எனக்கு மிகவும் பிடித்தமானவரே .


Friday, September 11, 2015

baarathi

பாரதி  என்னை மன்னிப்பாயா ??

 உன் பாடல்கள்  எனக்கு மிகவும் இஷ்டம்.  எனக்கு மட்டுமா  உரை வீச்சாலர்களுக்கு , பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு ,  பள்ளி கல்லூரிகளில்  மாறு வேட போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு , அனல் பறக்க ஆவேசமாய் பேசும் அரசியல்வாதிகளுக்கு  எல்லோருக்கும் தான்.

பாரதி ,பெண்ணுரிமை  தேச பக்தி  இன்னும் பலவற்றிக்கு  நீ  BRAND AMBASAADOR   ஆக பயன்படுகிறாய் . அப்போதுதான் கைதட்டல்கள்  அதிகம் கிடைக்கிறது .

உன் வரிகளை நான் உச்சரிக்கும்போதெல்லாம் , அந்த வரிகளுக்கும் நடைமுறைக்கும் துளி கூட சம்பந்தமில்லை என்பது  மட்டும் அல்ல  முரணாகவும் இருக்கிறது .

காணி நிலம் வேண்டும் என்று பாடினாய்   இப்போது ஏக்கர் ஏக்கராக நிலம்    களவாடப்படுகிறது  அல்லது காயடிக்கப்படுகிறது.

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பினர்
வாராது போல வந்த மாமணியை தோற்போமா   என்று  உணர்சிகரமாக பாடும்போது   தாராள  மயமும்   அந்நிய மூலதனமும்   தோற்போம் போலிருக்கிறதே  என்று  எண்ண  தோன்றுகிறது  பாரதி. .

பாரதி  வெள்ளை நிறத்தில் ஒரு பூனை  எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பாடல் வரிகள் ஞாபகம் இருக்கிறது ?  அதை நீ பாடிகொண்டே வரும்போது
வண்ணங்கள் மாறுபட்டால் அதில் மானுடர் வேற்றுமை இல்லை  ஒரு வரி வரும்  அதை நான் நினைக்கும்போது  மனதில் சிறு மின்னல் போல ஒரு எண்ணம் . இப்போது வண்ணங்கள்   ஆன்மீகம  அரசியல்  சாதி  என்று  தங்களை நிறமாக அடையாளப்படுத்தி  கொள்கிறது.

இன்னும் என்னென்னமோ தோணுது பாரதி .  அஞ்சி அஞ்சி  சாவர் அவர் அஞ்சாத பொருளில்லை  என்று நீ பாடினாயே  அது எனக்குத்தான்.  என்ன செய்வது  முக நூலில் எழுதினால் கூட மு ஜாமீன் கிடைக்குமா என்று பார்த்து  எழுத  வேண்டி இருக்கிறது. .

 பாரதி  இன்று நடந்த சம்பவம் ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.  காலை
கடைக்கு சென்ற போது  ஒரு  பதின்  வயது  பெண்  பொருட்கள் வாங்கிய பிறகு எவ்வளவு என்று கடைக்காராய்   கேட்க   அவர்  முப்பத்தி இரண்டு  ரூபாய் என்று சொல்ல  அந்த பெண் திரு திரு என்று விழித்து  பின் மெதுவாக
அப்படீனா எவ்வளுவு அங்கிள்  என்று கேக்க   அருகிலிருந்த ஒரு நண்பர்
தர்ட்டி டூ  ருபீஸ் என்ற. உடனே அந்த பெண்  ஓ  தர்ட்டி டூவா  சாரி அங்கிள் என்று  சொல்லி பணத்தை கொடுத்தது.

மெல்லத்தமிழ் இனி சாகும் என்று சொன்னாயாமே    நீ சொன்னதில் இது  ஒன்றுதான்  உடனே நடக்கும் போல் இருக்கிறது.

இப்படி எல்லாம் எழுதியதிற்கு  என்னை மன்னிப்பாயா   பாரதி.