Thursday, September 13, 2012

IRUBATHIN THODAKKAM

இன்று மதியம்  LIC  புதுவை கிளை ஒன்றில் பணி புரியும் நண்பர்கள் (இரு பாலரும்)  தாம் பணியில் சேர்ந்த இருபதாம் வருட தொடக்க நாளை  மிக விமரிசையாக  அனைவருக்கும்  மதிய  உணவுடன்  சிறப்பித்து மகிழ்ந்தனர் .

 அந்த  மகிழ்வில் நானும் பங்கு பெற்றேன்.  என்ன ஒரு சிறப்பான ஏற்பாடு .
  சுமார் 100 பேருக்கு மேல் கலந்துகொண்ட அந்த உணவு விருந்தில் சிறப்பு அம்சமே   பல்வேறு நிலைகளில் இருக்கும் பணியாளர்கள்  ஒரு சேர உணவு
உண்டது அதுவும் மகிழ்வுடன் கலந்துரையாடி உண்டது   LIC ல்  ஒரு  அற்புத
காட்சி.

 அனைவரின்  முகங்களிலும்  சந்தோஷ ரேகை . சாத்தியமாகுமா  என்பதை
சாத்தியமாகி இருக்கிறார்கள்  நண்பர்கள். சிட்டென பறந்து  உணவு பரி மாறுதல் ,  சட்டென  முகமலர்ந்து  வரவேற்ற பாங்கு  அழகான ஒருங்கிணைப்பு  அத்தனையும் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

தாம்பூல பை கொடுத்திருந்தால்  அது நம் வீட்டு  திருமண நிகழ்ச்சி போல் இருந்திருக்கும் .

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழுமாயின்  குழுமனப்பான்மை பெருகி  தாம்  பணிபுரிகின்ற  நிறுவனம் நிச்சயம் மென் மேலும் வளரும்.

இரும்புகோட்டையை  போல் உள்ள நம் LIC   நிறுவனம் தற்போது திட்டமிட்டு
பல் வேறு தாக்குதலுக்கு ஆளாகிறது . இந்த கோட்டையின்  நம்பிக்கையை காப்பது  நம் அனைவரின் கடமை .  அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் ,முகவர்கள் , ஊழியர்கள்  என அனைவரும் இணைந்து  இப்படி ஒரு தொடக்கத்தை  துவங்க காரணாமாய் இருந்த  நண்பர்களே  நீங்கள் மேலும் மேலும் வளரவேண்டும் .


  உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

   இ து தொடரட்டும் சுகமாக ...






     

Monday, September 3, 2012

punch punch

இன்று கடற்கரையில் என் பழைய நண்பர்களை பார்த்தேன். அனைவரும்
அமர்ந்து  சில மணி நேரம் நிறைய   விஷயங்கள்  பேசினோம் . இதில் என்ன
சுவாரசியம் என்கிறீர்களா? உரையாடல்களின் ஊடே திரைப்படங்களின்  பஞ்ச்
வசனங்கள் சரளமாக வந்து விழுந்து உரையாடல்களை உற்சாகமாக ஆக்கியது..    திரைப்பட வசனங்களுக்கு இவ்வளவு தாக்கமா.  அப்படி என்ன பஞ்ச் வசனம் என்கிறீர்களா.  இதோ  எங்கள் பேச்சின் இடையிடையே  வந்த
திரை வசனங்கள்.

1.   ஆணியே புடுங்க வேண்டாம்
2.    பத்த வச்சிட்டியே பரட்டை
3.    போகணும்னு மட்டும்தான் தோணுது எங்க போறதுன்னு தெரியலையே
4.     என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.
5.     அது
6.      நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
7.      சாந்தா ஏன் பாட்டை நிறுத்து விட்டாய்  பாடு  சாந்தா பாடு
8.      முருகன் ஒரு மா மேதை
9.       தெய்வமே கலங்கி நின்ன அதுக்கு யாரால மாமா ஆறுதல் சொல்ல
         முடியும்.
10.     பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
11.     பிங்கலன் ஒரு அப்பாவி
12.     சித்தப்பா உடன் பிறந்தே கொல்லும்  வியாதி 
13.      நான் ஒரு தடவை  சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி
14       தமிழ்லே எனக்கு  பிடிக்காத வார்த்தை
15      மாப்பிள்ளை என்ன செய்றாரு  போண்டா   சாப்பிடுறாரு
16.     ஆனந்தா  என் கண்களையே உன்கிட்டே ஒப்படைக்கிறேன்
17.     வரும்  ஆனா வராது
18.     அவனனவன்  பத்து பதினைஞ்சு   friends ய்  வைச்சிக்கிட்டு  சந்தோஷமா
           இருக்கான்  நான் ஒரே ஒரு friend அ  வச்சிக்கிட்டு  ஐயையோ
19           ஆண்டவன் தடுக்கிறத யாராலும் கொடுக்க முடியாது.
20       நீயெல்லாம் நல்ல வருவடா
21       என்னத்த சொல்லி  என்னத்த செய்ய
22       எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
 இதெல்லாம் நாங்கள் ஒருவரை பற்றி ஒருவர் விசாரித்துகொண்டு இருக்கும் போது  விழுந்த வார்த்தைகள் .  எந்த மாதிரி இன்னும் எத்தனை  வசனங்கள்  இருக்கோ  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்.
மேலே உள்ளவைகள் எந்த படத்தில் வருது யார் பேசியது என்று உங்களால்
முடிந்தால் எனக்கு தெரிவிங்கலேன் .