Friday, June 22, 2012

saguni thirai vimarsanam

 ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன்  சகுனி படத்திற்கு சென்ற எனக்கு  ஏமாற்றமே
பதிலாக கிடைத்தது.  இன்னொரு வியாபாரரீதியான  படம்.  கார்த்திக்கை  விட சந்தனமே  அவ்வப்போது சிக்ஸர் அடிக்கறார் . கதாநாயகி ஐயோ பாவம்   இசை  சுமார் ரகம் .  சில இடங்களில்  ஒளிப்பதிவு  ஆஹா சொள்ளவைகிறது .

வசனம் பல இடங்களில் கை தட்ட வைக்கிறது.        

பிரகாஷ்ராஜ்  இப்படி வீணடிக்கபட்டிருக்க வேண்டாம்.   ராதிகா
அவர் என்ன செய்வார்  பாவம்  கொடுத்ததை  செஞ்சு இருக்கார் .   நாசர்   ஹும்
பரிதாபம்.  இயக்குனர் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம் .

எங்கயும் எப்போதும் , வழக்கு என்ன 18/9  ராட்டினம்  என்று ஜெட் வேகத்தில்
தமிழ் பட உலகம்  ஓடிகொண்டிருக்கையில் இந்த படம் ஒரு வேகத் தடையாக
வந்திருக்கிறது .

சந்தான சீசனும்  கார்த்திக் மவுஸும்  வியாபார மசாலாக்களும்  படத்தை  ஓரளவு   தூக்கி  நிறுத்துகிறது .  அது சரி படம் எப்படி . சுமார்தான்  ஆனா  பரவாயில்லே .

Thursday, June 7, 2012

enna sollouvaen en ullam thangalay

பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான் அன்று   புதுவையின் கடற்கரை  அருகில்  நான் கண்ட ஒரு காட்சி  வெற்றியின் வெளிப்பாடு என்று எடுத்து கொள்வதா ? அல்லது சமூக அவலம் என்று எடுத்து கொள்வதா ?

 கூடுதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின்  வெற்றியை சில நண்பர்களுடன்
அவர்களின்  உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடினர் . எப்படி தெரியுமா
ஒரு பெரிய   கேக்கை  வெட்டி  கொண்டாடினர் . இதில் என்ன அதிசயம்  என்கிறீர்களா . அவர்கள  அந்த கேக்கை வெட்டி  யாருக்கும் கொடுக்கவில்லை .
மாறாக  அத்துனை பேரும் அந்த க் கேக்கை ஒருவர் முகத்தில் ஒருவர் பூசிக்கொண்டும் தூரத்தில் இருந்து ஒவ்வொருவர்  மீதும் வீசிக்கொண்டும்
தங்களின்  சந்தோஷத்தை  பகிர்ந்து கொண்டனர. பின் அனைவரும் கலைந்து
சென்றனர் . வீதி எங்கும் சிதறிய   கேக்  துண்டுகள்.  அல்ல  அல்ல வீதியில்
சில இடம்  கேக் கொண்டு  மேழுகப்பட்டது போல்  இருந்தது.

அவர்கள் சென்றவுடன்  இரண்டு மூன்று சிறுவர்கள்  ஓடி வந்து சிதறிக்கிடந்த
கேக் துண்டினை வழித்து உண்ணத்  தொடங்கினர் . அந்த சிதறலை எடுக்க
சிறுவர்களுக்குள் பெரும் போட்டி  அதுவும் பலத்த சண்டையுடன் . பசியின் கொடுமை .

இதப்பார்துக்கொண்டிருந்த   என்ன போன்ற  சிலரின்  மனதில் தோன்றியவை
இவைதான்,

                          என்ன சொல்லுவேன்  என் உள்ளம்  தாங்கலே


இது யார் குற்றம் ?  உன் குத்தமா   என் குத்தமா  யாரை நான் குற்றம் சொல்ல ?

Tuesday, June 5, 2012


பழைய பாடல்கள் என்றால் சிவாஜி எம் ஜி யார்  பாடல்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் கார்த்திகை தீபம்  என்னும் படத்தில்
அசோகண் பாடும்  இந்தப்பாட்டு காலத்தை கடந்து இன்றும் நிலைத்து நிற்கிறது .
எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறதா  உன் இமை களிலே உறக்கம் வர கண்கள் மறுக்கிறதா
 தென்றல் பாடும் தாலாட்டில்  நீ இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திரிந்தால்  துன்பம் தரவில்லையா?
காதலன் கண்ணியமாக  தன  உள்ளக்கிடக்கையை  இசையின் வடிவாக  எவ்வளவு அழகாக  விவரிக்கிறான்.

உன் துயர் கண்டால் என் உயிர் இங்கே
துடிப்பது தெரியலையா
உண்மை அறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது  தவறில்லையா

பாடல் வரிகளில் நெறிமுறைகள் இருந்தது பழைய பாடல்களில் . ஆனா இப்போ .?
ஊஞ்சலை போல பூங்கரம் நீட்டி
அருகில்  நெறிங்கடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப்போல
அள்ளி அணைத்திடவா
பாடலை கேளுங்கள் ஊஞ்சலில் ஆடுவது போலவே இருக்கும்.
என்ன இருந்தாலும் அந்தகால பாடல் பாடல்தான்.