Thursday, November 21, 2019

புதுவை மக்களுக்கு ......இந்த பழைய பெயர்களெல்லாம் நினைவில் இருக்கிறதா .  தெரியுமானால்  பகிரவும்.    1.  டூயூப்ளெக்ஸ்  ஸ்ட்ரீட்  ,,,,,,2. செங்கலி தோட்டம்/சங்கிலித்தோட்டம்       3. ஒப்பித்தால் .....4.    சுண்ணாம்பு களவா ........5... நரிமேடு ...........6.....பெரிய  பாப்பார தெரு       7.கவுஸ் கோவில்    8.  ஒத்த தெரு       9. தாயாரம்மா  ஒப்பித்தால்    10. ஒழுகர  11.  கண்ணம்மை  டாக்கீஸ் .   

நண்பர் ஒருவருடன் பேசும்பொது இதில் சில வார்த்தைகள்  அவருக்கு தெரியவில்லை. அதன் விளைவு இந்த பதிவு. 

Monday, November 11, 2019

FIRST LOOK    TEASER  என்று என்னென்னமோ  சொல்கிறார்கள் .  அதுல வேற  இவ்வளோ ஆயிரம் பேர் பார்த்தாங்க  அப்படீன்னு பெருமை வேற.  தம்பிகளா  நடிகர் திலகம் படம் ஒன்று  அந்த காலத்திலேயே  ஒரு புதுமையாய் வந்துருக்கு தெரியுமா. 

அப்பெல்லாம் திரை அரங்கில்  அடுத்து என்ன படம் வருகிறது என்று ஸ்லைடு போடுவார்கள் . இது எல்லார் படங்களுக்கும் உண்டு.  ஆனால் 1972 ஆம் ஆண்டு  ராஜா  படத்தின்  ஸ்லைடு எப்படி வந்தது தெரியுமா . எனக்கு தெரிந்து அதற்கு பிறகு எந்த படமும் அதை போல ஸ்லைடுடன்  வந்ததில்லை.   ராஜா படத்தின்  ஸ்லைடுடன்  பின்னணியில்  சில  வசனங்களும்  வரும்.   இது அப்போது பிரஃமிப்புடன் பார்க்கப்பட்டது .  ஏனென்றால் அப்போதெல்லாம் திரை அரங்கின் வாசலில்  வரப்போகிற படத்தின் ஸ்டில்ஸ்  மட்டும்தான் வைத்திருப்பார்கள். 

புதுவை அஜந்தா திரை அரங்கிலும்  இதே மாதிரி ஸ்லைடு  படம் வெளி  வருவதற்கு   சிலவாரத்திற்கு முன்  போடப்பட்டது.  ராஜா படம்  திரை இடுவதற்கு  முதல் நாள் வரை  அந்த ஒலிச்சித்திர ஸ்லைடு பார்ப்பதற்காகவே
ரசிகர்கள்  திரை அரங்கிற்கு வந்தார்கள்.  அப்போது வந்த  அந்த திரை அரங்கில் வெளியான சுமாரான படங்களும்  கூட இந்த ஸ்லைடு ஒளிபரப்பினால்  வசூல் பார்க்க ஆரம்பித்தது.

எனவே   டீசர்   FIRST LOOK   RECORD   போன்றவைகளுக்கும் முன்னோடி நடிகர் திலகம்தான்.

இந்த பதிவின்  சாராம்சம்  நான் சென்ற வருடம் ஒரு குழுவில் பதிவிட்டிருந்தேன் . இப்போது டீசர் பற்றிய அலம்பல்கள் அதிகமாக இருப்பதினால் மீண்டும் இந்த பதிவு ............./..../..........சாய் ஜெயராமன்  புதுச்சேரி 

Sunday, November 10, 2019

விஜய் டி வீ  சூப் சிங்கர்  இறுதி போட்டியில்   முதல் மற்றும்  , இரண்டாம் இடத்தை  பெற்றவர்கள்  நடிகர் திலகத்தின் படத்தின் பாடலை  உணர்வு பூர் வமாக பாடி  போட்டியில் வென்றனர். 

அதுவும் அவர்கள் பாடலை பாடும்போது  நடிகர் திலகத்தின் படத்தையே  பார்த்ததொரு உணர்வு எழு ந்தது. பாடியவர்கள்  இளவயதினர். இந்த தலைமுறையும் அந்த  பாடலை   ரசித்து பாடுகிறது என்றால்  அன்றைய கலைஞர்கள் எப்படி ஆற்றல் மிக்கவராக இருந்திருக்கிறார்கள் . சிவாஜி பாடலைகளை  பாடும்போது பாடகர் மட்டுமில்லாமல்  பார்வையாளர்களும் உணர்ச்சி வசப்பட்டது  நெகிழ்ச்சியாக இருந்தது.  

போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் . 

Saturday, November 9, 2019

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாள் . ...

புதுச்சேரி ராமன் திரை அரங்கம் காலை 5  மணிக்கே  களை  கட்ட தொடங்கி விட்டது . ஊரெங்கும் திருவிழா கூட்டம் . சிவந்த மண் வெளியாக உள்ள நாள்.
நான் ஆறுமணிக்கு  திரை அரங்கம் நோக்கி  நடக்கிறேன் . இன்றுவரை அப்படி ஒரு ஜனத்திரள் நான் கண்டதில்லை. போட்டி போட்டுகொண்டு ரசிகர் மன்றத்தினர்  வண்ண வண்ண அலங்காரங்கள்  கட்  அவுட்டுகள்  வைத்திருந்தனர்.  கண் கொள்ளா காட்சி என்பார்களே அதுதான் .  ஒரு பக்கம்  வாத்தியம்  முழங்குகிறது .  மறு  பக்கம் பட்டாசு  சத்தம் . இன்னொருபுறம் ரசிகர்களின்  ஆனந்த கூக்குரல்கள் .  திரை அரங்க வளாகம் நிறைந்து  வீதிகளில் கூட்டம் குவிய தொடங்கியது . முன் பதிவெல்லாம் கிடையாது. புதுவை எப்போதும்  நடிகர்திலகத்தின் கோட்டை . பதிவு  பெற்ற  மன்றங்களோ . நூற்றுக்கணக்கில். தங்களின் சொந்த பணத்தை போட்டு  கட்  அவுட் வைத்திருந்தவர்கள்  முதல் காட்சியை பார்க்க டிக்கெட்டுக்கு காத்திருந்தார்கள்.  சிவாஜி மன்ற நிர்வாகிகளோ  முதல் காட்சி டிக்கெட்டை  யார் யாருக்கு கொடுப்பது   என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தார்கள். எப்போதுமே முதல் நாள் முதல் காட்சி பார்த்து
 விடும் எனக்கு  சற்று பயம் தொற்றிக்கொண்டது.  இன்னிக்கு நாம் படம் பாக்க முடியாது  என்ற காரணம்தான் .

இது ஒரு புறம் இருக்க  அந்த நடிகரின் படம் இரண்டு நாளுக்கு முன் வெளிவந்தது . அவர்கள் வேறு நமது படத்திற்கு எதிராக செய்தி பரப்பி கொண்டிருந்தார்கள்.  படம் வரலை படம்  வராது.  என்று. .

புதுவையில் ஒரு வழக்கம்  புதுப்படம் வரும்போது படப்பெட்டியை  மணற்குள விநாயகர் கோயிலில்  வைத்து பூஜை செய்து விட்டுத்தான் வருவார்கள் . அதனால் படம் வந்துவிட்டதா என்று தெரிந்து கொள்ள கோயில் வாசலில் திரளாக ரசிகர்கள்.  திடீரென்று பொ ட்டி வந்துவிட்டது என்று  ஒரு குரல் எங்கேயோ கேட்க  அவ்வளவுதான். என்ன நடந்தது என்று தெரியவில்லை அத்தனை கூட்டம் ஒரே நேரத்தில்  திரை அரங்கில் நுழைய  காவல் துறையும் திரை அரங்கு நிர்வாகமும் ம் சிவாஜி மன்ற நிர்வாகிகளும்  செய்வதறியாது திகைத்து  நிற்க  எங்கேயோ நின்ற நான் திரை அரங்கின்  உள்  புறத்தில் இருந்தேன் .  பின் காவல் துறை யின் ஆலோசனைப்படி உள்ளிருந்தவர்களை  அப்படியே விட்டு விட்டு  வெளியில் இருந்தவர்களை கலைஃ ந்து போக செய்தார்கள்.   பெயருக்கு சில டிக்கெட்டுகள் மட்டும் கொடுத்து விட்டு  உள்ளெ  இருந்த எங்களுக்கு  உள்ளேயே டிக்கெட்டுகள்  வழங்கினார்கள்.  படம் முதல் காட்சி பார்த்தாகி விட்டது.

அன்று படம் பாக்க வந்தவர்களுக்கு  ரசிகர்கள்  கை  விசிறி , சென்ட் கார்ட் (வரவேற்கிறோம் என்ற கார்டில்  சென்ட் வாசனை அடிக்கும்)  சிறு பாக்கெட்டில் சக்கரை  லட்டு  என்று அசத்தினார்கள் . 

ஐம்பது ஆண்டுகள் சென்ற பின்னும் அந்த இனிய நினைவுகள்  மாறவே மாறாது.   அப்படி ஒரு காலம் இனி வருமா என்று நினைக்கும் போதுதான் கர்ணன்  திரும்ப வந்தது. இப்போது வசந்த மாளிகை.  திலகமே காலத்தின் முன்னே நீங்களும் நாங்களும் வேறல்ல.  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கள் உற்சாகம் மாறவே மாறாது.

நடிகர் திலகம் அவர்களின்     தர்பார்      ஐம்பது  ஆண்டுகளுக்கு முன்பே  தொடங்கி விட்டது.    வெற்றிக்கான     பிகில்   அவரால் எப்போதோ ஊதப்பட்டுவிட்டது.   . 

அன்புடன் சாய் ஜெயராமன் .. புதுச்சேரி. 

Monday, September 23, 2019

 புதுச்சேரி வானொலி நிலையம்.....   காலங்கள் மாறி விட்டன  வானொலி கேட்பது குறைந்து விட்டது. இருப்பினும்  நான் இன்னும் வானொலியின் ரசிகன்தான்.

நினைத்து பார்க்கிரேன் . புதுவை கடற்கரை  சாலையில்  வானொலி நிலையம். அது ஒலி  பரப்பும் நேயர் விருப்பமும் பக்தி பாடல்களும்  மனதில் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.

காலையில் நம் மண்டையி அடித்து எழுப்பி விடும்  பக்கத்தின் பாடல்களில் சில....தட்டுங்கள் ர்    முக்காடு போட்டுக்க முஸ்லீம் பெண்னே      கந்தன்  திருநீறணிந்தால் கண்டா பிணி ஓடி விடும் ... மனசை விட்டு அகலா பாடல்கள். 

நேயர் விருப்பம்  மதியம் ஒரு மணி முதல் ஒன்று முப்பது வரை . வயிற்றுக்கும் செவிக்கும் உணவு / 

நிறைய பேருக்கு தெரியாது  காலையில் அரை மணி நேரம் ஹிந்தி வகுப்பு நடை பெரும் . புது வை தமிழ் அறிஞர்களின் ஒருவரும் பட்டிமன்ற  பேச்சாளருமான  திரு ராமசாமி அவர்கள் வகுப்பு  எடுப்பார். எனது சகோதரன் சீனுவாசன் ஒரு மாணவனாக அதில் பங்கேற்றான். 

அப்போது நிலையத்தில்  இருந்த ரேடியோ அண்ணா  சிதம்பரம்  திருமதி கங்கா  மணி  பாலு மற்றும் சிலர் எங்கள் குடும்ப நண்பர்கள். மேலும் நிலைய கலைஞர்கள்  திரு வைத்தியநாதன்  ஆணையம் பட்டி கணேசன் ஆகியோரும் பழக்க்கம். ஒரு கொசுறு செய்தி  திரு வைத்தியநாதன் அவர்களின் புதல்வர்கள் தான் பிக் பாஸ் மோகன் வைத்யா  வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்யா

புதுவை எல் ஐ சி கிளையில்  அப்போது கதிரவன் என்று ஒருவர் இருந்தார். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் ம்கொண்டவர். அவர் புதுவை வானொலிக்கு ஒரு நாடகம் எழுதி அது ஒளிபரப்பாகியது. அவர் என்னையும் ஊக்கப்படுத்தி ஒரு நாடகம் எழுக சொன்னார். நானும் எழுதினேன். என்னால் கூட அதை நாடகம் என்று ஏற்க மனமில்லை. இன்னும் அது அப்படியே இருக்கிறது.  இன்னொரு கொசுறு செய்தி  அந்த கதிரவன் சார் வைரமுத்து திரைக்கு வருவதற்கு முன் என்னை அவரிடம் அறிமுக படுத்தி வைத்தார்.. 

இப்போதுகூட  நான் பணியாற்றியபோது உடன் பனி புரிந்த திருமதி ஸ்ரீ ப்ரியா கணவரும் வானொலியில் பனி புரிகிறார்.  மற்றொரு இடது சாரி சிந்தையாளர் ராம் ம்குமார் கூட அங்கு பனி புரிகிறார்ட்.    என்னுடைய புதுச்சேரி  வானொலி நிலையத்தின் தொடர்பு நீடித்து கொண்டிருக்கிறது.  வாழ்க புதுச்சேரி வானொலி நிலையம்  .. 


    . 

Sunday, September 22, 2019

ஒருமுறை  எனது காரில் சென்னை  சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஒரு கேசட் போட்டு பாட்டு கேட்டுக்கொண்டே வந்தோம்.  . ஏன்  தெரியவில்லை டிரைவர் கடுப்படித்து கொன்டே வந்தார்/ பொறுத்து பொறுத்து பாத்தேன்  பின் அவரிடம் என்ன உங்களுக்கு பிரச்சனை  என்று கேட்டதும்  பின்ன என்ன சார்  இந்த பாட்டெல்லாம் போட்ட  நான் எப்படி வண்டி  ஓட்றது , ஒரே தூக்கமா வருது என்றா. நான் பாட்டை நிறுத்தி விட்டேன்

அந்த பாடல்கள்      காலங்களில் அவள் வசந்தம் ,  நிலவே என்னிடம் நெருங்காதே   பாடாத பாட்டெல்லாம் பாட வந்த ஆள் . பிறகு அவரே என்னிடம் சார்கோ ச்சிக்காதீங்க  எனக்கு பீ பீ சீனிவாஸ் பாட்டுன்னா உசுரு சார்  ஆனா வண்டி ஓட்டும் போது  அர்த்தமில்லாதம் லாப திபோன்னு கத்துற பாட்டுதான் சார் எங்களுக்கு தூக்கம் வராது இருக்கும் என்றா. இது எப்படி இருக்கு. 

 பீபி  சீ னுவாஸ் பாடல்களை  ரசிக்கும்போது  கிருஷ்ணா ஸ்வீட்ஸ்   மைசூர் பா  சாப்பிடும்போது  நாக்குல கரையுமே  அந்த மாதிரி  காதுல கரையும் . உண்மைதானே ..
மண்டை கொழம்புது  மகாதேவா ..

நீண்ட நாள் கழித்து என் நண்பன் ஒருவனை சந்தித்தேன். இருவருமே திரை இசையில் ஆர்வம் உள்ளவர்க. பேச்சு இசையை பறி வரும்போது  என்னமோ எனக்கு இளையராஜாவை ரொம்ப பிடிக்கும்  காரணம் அவர் பாடலில் நம் மண் சார்ந்த இசை இருக்கும் என்று சொன்னேன்.. பின் எங்கள் உரையாடல் வேறு தளத்திற்கு சென்றது . பிறகு நண்பன் உனக்கு பிடித்த அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் சில யோசிக்காமல் சொல் என்றான்.  நான் சொல்ல ஆரம்பித்தேன்   . 
முதல் பாடல்  உன்னிடம் மயங்குகிறான் உள்ளத்தால் நெருங்குகிறான் என்ற பாடல் அதன் ஆர்ப்பாட்டமில்லாத இசையினால் பிடிக்கும். ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்  என்ற இனிமையான குரலுக்காகவும் கருத்துக்காகவும் பிடிக்கு.ம்       அடுத்து  கங்கை நதி ஓரம் ராமன்  நடந்தான்  என்ற பாடலும்  வைகை காற்றே நில்லு என்ற பாடலும் இனிமைக்காக பிடிக்கும்.  யார் அந்த நிலவு பாடல் சிவாஜி ஸ்டைலுக்காக பிடிக்கும்  இவையெல்லாம் தனிமையில் எப்போதாவது என்னையும் மீறி முணுமுணுக்கும் பாடல்கள் என்று சொல்ல  நண்பன் இடைமறித்து  இதில் இளையராஜா இசை அமைத்த பாடல் எது என்று கேட்க திரு திரு  என்று முழித்தான். எம் எஸ் வீ  கே வீ  மஹாதேவன்  இளையராஜா   போன்ற இசை மேதகைகளின் பாடல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் இளைய ராஜாவின் இசை என்னை வேறு உலகிற்கு கொண்டு செல்லும் ,

அதை நண்பன் மறுத்து  எல்லோருடைய இசையும் சிறந்ததுதான் சில பாடல்கள் நம் உணர்வுடன் கலந்து விடுகின்றன . இதே மாதிரி நீ வேறு சிலரிடமும் கேட்டு பார். இப்படித்தான் இருக்கும் என்றான்.  நண்பன் சொன்னது சரியா.

எனக்கு மண்டை கொழம்புது.  உ ங்களுக்கு இது பற்றி கருத்திருந்தால் பதிவிடுங்கள்  .  

Sunday, September 1, 2019

கடிதம் எழுதும் தினம்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் தேதி  கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் கடிதம் எழுதுவது என்பது ஏறக்குறைய மறந்தே போன விழயம்.   நேரு தன மகளுக்கு எழுதிய கடிதம் பிரசித்து பெற்றது. கலைஞர் உடன் பிறப்பிற்கு எழுதும் கடிததிற்கு பெரும் வாசக வட்ட மே உண்டு. 

சுமார் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்  கடிதம் தான் முக்கிய தொடர்பு சாதனம்.  அப்போது வரும் கடிதங்களில் தங்கள் குடும்ப சரித்திரம் மட்டுமல்லாமல் பக்கத்துக்கு வீடு பக்கத்துக்கு தெருவில் உள்ளவர்களின் நலன்விசாரிப்புகள், வீட்டில் வளர்க்கு செல்ல பிராணிகளின் நிலை , அந்தநதன்ஊர் வெதர் ரிப்போர்ட் போன்றவை கட்டாயம் இடம் பெரும். 

எங்கள் வீட்டில் தபால் கார்டுகளை ஒரு கம்பியில் சொருகி வைத்திருப்போம். அந்த வருடத்தில் வந்த அத்தனை கடிதங்களும்  அதில் சொருகி இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை விஜயம் செய்யும் ஒரு உறவினர்  ஓய்வாக அமர்ந்து அத்தனை கடித்தங்களை படித்து ஒரு வருட விழயங்களை தெரிந்து கொள்வார்.  

தொழில்  நுட்பம் வந்தாலும்  கையால் எழுதப்படும் அந்த கடிதம்  நம் உணர்வுகளை அப்படியே  எதிரொலிக்கும். 

எதனை வாட்ஸ் அப்  எஸ் எம் எஸ்  செய்திகளில்  நேசத்திற்கு உரியவரின் செய்தி வந்தாலும் அன்று ஒரு கடிதம் கையால் எழுதி வரும்போது அதை ஓராயிரம் முறை படித்து பார்த்து மகிழ்வு அடைவது போல் இருக்காது. .  

நானும்  அலுவலக நண்பர் ஒருவரும் இனிமேல் நாமும் கடிதம் எழுதலாம் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு முயற்சி எடுத்தோம். அது  இன்றைய கால கட்டத்தில் வெளியாகும் புதிய திரைப்படம் போல  ஆரம்பித்த சுவடே தெரியாமல்  மறைந்து விட்டது.  .  

இப்போதெல்லாம் எழுதும் வேலை குறைந்து விட்டதால்  நம் கையெழுத்தே மறந்து விட்டது.  அதற்காகவாவது வாரம் ஒரு முறை கடிதம் எழுதி பழக்கத்தை தொடங்குவோம். 

Wednesday, August 14, 2019

ஐயா முண்டாசுக்கவிஞனே  பெண்மையை போற்றும் படம் என்று சொன்னார்களே என்று  நேர் கொண்ட பார்வை என்ற படத்திற்கு போனேன்   .பாரதி ஐயா எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..கதையா  சுருக்கமாக சொல்லி  விடுகிறேன் .  மூன்று  புதுமை பெண்கள் ??? ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கலில் மாட்டி கொண்டு விடுகிறார்கள். என்ன சிக்கல் தெரியுமா ? ஒரு இரவு பார்ட்டிக்கு செல்கிறார்கள் ஆன் நண்பர்ளுடன்  மதுவும் உண்டு. அதில் ஒரு நண்பன் ஒரு பெண்ணை பாலுறவிற்கு அழைக்க அவள் மறுக்க இவன் பலாத்காரம் செய்ய முயல தன்னை காத்துக்கொள்ள அவனை ஓங்கி மண்டையில் அடித்து விடுகிறாள். பின் அந்த பெண்கள் மீது பல்வேறு பி ரிவுகளில் வழக்கு பதியப்படுகிறது. அதிலிருந்து  நேர் கொண்ட பார்வையுடன் அந்த பெண்கள் எப்படி வெளியே வந்தார்கள் என்பது கதை..

படத்தில் அவர்களுக்காக ஆஜ ராகும் வக்கீல்   அந்த பெண்ணிடம்   நீ கன்னித்தன்மை உள்ளவளா  என் கேட்க  அந்த பெண் இல்லை  என்று சத்தமாக சொல்கிறாள் . பின் செக்ஸிற்கு காசு வாங்கினியா என்று கேட்க  இதுக்கெல்லாம் காசு எதுக்கு என்று இழுத்து இழுத்து பதில் கூறுகிறாள் .பின் பிடிச்சிருந்தது அதனால் செக் ஸ் என்கிறாராம். அன்றைக்கு பிடிக்கலையாம்  அதனால்  நோ  வாம்.  பெண்ணிற்கு விருப்பம் இல்லையெனில் அவளை தொடக்கூடாது என்பது இந்த படத்தின் மைய கருத்து. அந்த கருத்து வரவேற்க தக்கத்துதான் . இதில் வேறு ஒரு கட்டத்தில் அந்த வக்கீல் ஆவேசமாக  பெண்களை வேலைக்கு அனுப்பாதீர்கள் வீட்டிலேயே பூட்டி வையுங்கள் அல்லது கல்யாணம் செய்து கொடுங்கள் என்று கூறுகிறார். . ஏன்யா வேலைக்கு போனா அரைகுறை ஆடை வேணுமா  குடிக்கணுமா பிடிச்சுதுன்னு  செக்ஸ் வச்சிக்கினமா .  என்ன ஒரு விஷ கருத்து. 

ஐயா பாரதி இதுவா நீ கண்ட பெண் விடுதலை.   கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று படித்திருக்கிறான் ஐயா .

ஐயா இந்த பதிவிற்கு எனக்கு கண்டனங்கள் வரும். ஆனால் படத்தை பார்த்து விட்டு அவர்கள் மனதோடு பேசிவிட்டு பின் கண்டனம் தெரிவிக்கவும். 

மத்தபடி அஜீத்குமார் அற்புதமாக நடித்துள்ளார். அதுவும் ஒரு சண்டைக்காட்சி நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றுகிறது.

ஐயா பாரதி இந்த படத்தை என்ன ஏற்க முடியவில்லை. . போகட்டும் நான் பழமை வாதியாகவே  இருக்கிரேன்.. .      

Friday, August 2, 2019

சுழித்து ஓடும் ஆறு . இரு கரையிலும் நாணல்  சலசலவென்று தாள நயத்துடன் தண்ணீர் பாய்தல். பதின் வயது நண்பர்களுடன் . பெண்கள் புது துணி அணிந்து  வண்ண  வண்ண மலர்கள் சூடி  ஆண்கள் வேட்டியை மடித்துக்கொண்டு பாத்திரங்களை சுமந்து கொண்டு  ஆற்றங்கரையில் வைக்க  அவரவர் குடும்பங்களுடன் அமர மந்தார இலையும் தாமரை இலையும் தரப்பட அதில்  கலந்த சாதங்கள் பரிமாறப்பட உற்சாகத்தின் உச்சத்தில் அனைவரும் மகிழ  ஒரு ஆடி பதினெட்டு.      மேலே சொன்னது  பொன்னியின் செல்வன் நாவலில் வரும்  காட்சி  அல்ல  நான் நானே  சிதம்பரத்தில் எங்கள் கிராமத்தில் அனுபவித்தது.   

இன்றும்  ஆடிதான் . வறண்ட காற்றில் மோட்டார் வாகன் இரைச்சளுடன  ஆடி தள்ளுபடி விளம்பரங்களை பார்த்து கொண்டிருக்கிறேன். . தூரத்தே  ரசீது புத்தகத்துடன்  பேய் கூச்சலில்  எல் ஆர்  ஈஸ்வரியை  அலறவைத்துகொண்டு சிலர் வருகிறார்கள் நான் அப்புறம் பாக்கிறேன். வாழ்க ஆடி.  

Saturday, March 30, 2019

  முதலில் நான் வியப்பது  தங்களின் நினைவாற்றல் . கடந்த கால நிகழ்வுகளை  தேதி வாரியாக வருட ம் வாரியாக  விவரிக்கும் பா ங்கு  அற்புதம்
புதுவை எல் ஐ சி கிளையின்   ஆவண காப்பகம் நீங்கள்  என்று  சொல்லலாம். .
நினைவிற்கு வருகிறது  புதுவை கிளையை பற்றி ஒரு தகவல் தேவை படுகிறது  நீங்கள் பனி ஓய்வு ன்பெற்று விட்டர்கள் . அந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை  உடனே தலைமை அலுவலகத்திலிருந்து  உங்கள் பெயரை சொல்லி உங்களிடம் கேட்க சொல்லுகிறார்கள் . உடனே நண்பர்கள் என்னை அணுகுகிறார்கள்  நான் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுகிரேன்  உடனடியாக அந்த விபரம் கூடுதல் தகவலுடன் தருகிறீர்கள் . இது மேம்போக்கான சாதாரண  விஷயமாக தெரியலாம் . ஆனால் எவ்வளவு பெரிய செயல்/

நான் எங்கே எல்லாம் என்னை புதுச்சேரி எல் ஐ சி ஊழியன் .என்று சொல்லுகிறோ னோ  அப்போதெல்லாம்  அது எந்த ஊரா இருந்தாலும்  என்னிடம் கேட்கும் அடுத்த கேள்வி  வைத்தியநாதன் எப்படி இருக்கிறார்.
சென்ற வாரம் கூட புதுக்கோட்டையிலும்  ஒரு நண்பர் இதே கேள்வியை கேட்டார். நீங்கள் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றீர்களே தவிர  இன்னமும் நிறைய பேர் உங்களை நினைவில் வைத்திருக்கிறார்கள்.

நினைத்தால்  சிரிப்பு வருகிறது. எத்தனை முறை தங்கள் கருத்துக்களுடன் முரண் பட்டிருக்கிரேன் . நீங்கள் கூட ஆர் பீ எஸ்  சொல்றதுதான்  நீ  கேட்ப என்று சொல்லுவீர்கள். இன்னொன்று  தெரியுமா சார்
ஆர் பீ எஸ் அவர்களின் கருத்துக்களில் முரண்படும்போது  நீ வைத்தி சொல்றதைத்தான்  கேட்பாய் என்று அவர் திட்டுவார்.  ஆனால் நீங்கள் இருவரும் என் இரு கண்கள் போன்றவர்கள். .

இன்னொன்று சுவையான நினைவு சார் . ஒரு முறை  ஒரு அதிகாரியுடன்  ஊழியர் சம்பந்தமாக பிரச்சனை. அலுவலக நேரம் முடிந்து விட்டது .சங்க பொறுப்பாளர்கள் அப்போது யாரும் இல்லை. . உடனே  நானும் சேஷாத்திரியும்  உங்களுடன் அந்த அதிகாரியை சந்தித்தோம் . அந்த அதிகாரி என்னை சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றார். உடன் நீங்கள்   ஆமாம் நீங்கள் பெரிய லார்ட் லில்லித்கோ  என்று நக்கலாக கூற வாக்குவாதம் நீண்டது. விளைவு மறுநாள் அந்த அதிகாரி மேலதிகாரிக்கு  வைத்தியநாதன்  இரண்டு அடியாட்களுடன்  என்னை  மிரட்டினார் என்று புகார் கொடுத்தார் நினைவிருக்கிறதா.சார்   உங்களுக்கு அடியாள் நான் என்பதில் பெருமைதான்.

புதுவை தொழிற்சங்கம் அன்று பலமாக இருந்ததற்கு  நீங்கள் முக்கிய காரணம்  என்பது  அனைவருக்கும் தெரியும்.

பஞ்சாலை  தொழிலாளர்கள் போனஸ் பிரச்சனையில்  ஒவ்வுறு முறையும் நீங்கள்  போனஸ் கேட்பதற்கு  லாப நஷ்ட கணக்கை பார்த்து  செயல் திறனை பார்த்து இவ்வளவு சதவிகிதம் என்று கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறியதை சற்று கூட காதில் வாங்காமல்  வாய்க்கு வந்தபடி  நாற்பது சதவிகிதம்  அறுபது சதவிகிதம் என்றும்  ஆசைகாட்டி  அதை ஓரளவு வெற்றியும் பெற்றவர்கள்  இம்மாதிரியான அணுகுமுறை  காலப்போக்கில் அழிவில் கொண்டுவிடும்  என்று பலமுறை எச்சரித்ததை , நான் அறிவேன். சில முறை உங்களுடன் ன் அந்த பஞ்சாயத்திற்கு வந்துள்ளேன்   இன்று புதுவை பஞ்சாலைகளின் நிலை என்ன .

நீங்கள் அன்று சொன்னதை  துரோகம் என்று சொன்னவர்கள் இன்று  அதையே  செய்யும்போது  காலத்தின் கட்டாயம் என்று சொல்லலாமா  அல்லது  நீங்கள் தீர்க்க தரிசி என்று சொல்லலாமா.

சார் ஒரு நகை முரண் . ஒரு சாரார் உங்களை இடது சாரி என்று சொல்ல  இடதுசாரிகளோ  அவர்களுக்குஎ  திரானவர் என்று கருத  தங்களின் கருத்துக்களில் உறுதியாய் இருந்தது  பெரிய விஷயம் சார்.

வலிமையான   நம் சங்கத்தை .(இடது சார்பு சங்கமாய் இருந்தாலும்)  பிளவு படுத்த  தீவிர இடதுசாரி நண்பர்  முயற்சியை முன்னெடுக்க  இடது சாரியல்லாத நாம் அதனை  பல்வேறு இக்கட்டுகளை சந்த்தித்து  இன்றுவரை அந்த சங்கம்  முன்னிலும் பலமாயிருக்கிறது  என்ற செய்தி  ஒரு நகை முரணாக இருந்தாலும்  பெருமைக்குரிய விஷயம் அல்லவா.

தங்களிடம்  நான் வியந்த   இன்னொரு விஷயம் தங்களது ஆங்கில புலமையும்  ஈடான தமிழ்ப்புலமையும்.. தங்களின் மேடை பேச்சிற்கு  ஒரு மிக பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.

வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பில் ஒரு கட்சியில் நீங்கள் இருந்தாலும்  எல் ஐ சி ஊழியன என்பதிலும்  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழிய சங்க உறுப்பினர் என்பதில் தானே மகிழ்வு கொண்டீர்.

என்னால் எந்த ஒரு விஷயத்தையும்  (குருஷேவ் பற்றி ஆனாலும்  குஷ்பூ பற்றி ஆனலும்   சேகுவாரா பற்றி ஆனாலும் சேங்காலி புறம் அனந்தராம தீக்ஷிதர் பற்றி  ஆனாலும்   தயக்கமின்றி விவாதிக்க  உங்களிடம் கற்றதுதானே.  ஒரு பல்கலை கழகமல்லவா நீங்கள்.

இன்னும் எத்தனையோ  எத்தனையோ சொல்ல இருக்கு.  அனால் பதிவின் நீளம் கருதி  இத்துடன் முடிக்கிரேன் ,.

தாங்கள் நீடுடி வாழ வேண்டும்  என்றும் உங்கள் ஆசி வேண்டி   அன்புடன்   சாய் ஜெயரா ஐ சி புதுச்சேரி.