Thursday, November 21, 2019

புதுவை மக்களுக்கு ......இந்த பழைய பெயர்களெல்லாம் நினைவில் இருக்கிறதா .  தெரியுமானால்  பகிரவும்.    1.  டூயூப்ளெக்ஸ்  ஸ்ட்ரீட்  ,,,,,,2. செங்கலி தோட்டம்/சங்கிலித்தோட்டம்       3. ஒப்பித்தால் .....4.    சுண்ணாம்பு களவா ........5... நரிமேடு ...........6.....பெரிய  பாப்பார தெரு       7.கவுஸ் கோவில்    8.  ஒத்த தெரு       9. தாயாரம்மா  ஒப்பித்தால்    10. ஒழுகர  11.  கண்ணம்மை  டாக்கீஸ் .   

நண்பர் ஒருவருடன் பேசும்பொது இதில் சில வார்த்தைகள்  அவருக்கு தெரியவில்லை. அதன் விளைவு இந்த பதிவு. 

Monday, November 11, 2019

FIRST LOOK    TEASER  என்று என்னென்னமோ  சொல்கிறார்கள் .  அதுல வேற  இவ்வளோ ஆயிரம் பேர் பார்த்தாங்க  அப்படீன்னு பெருமை வேற.  தம்பிகளா  நடிகர் திலகம் படம் ஒன்று  அந்த காலத்திலேயே  ஒரு புதுமையாய் வந்துருக்கு தெரியுமா. 

அப்பெல்லாம் திரை அரங்கில்  அடுத்து என்ன படம் வருகிறது என்று ஸ்லைடு போடுவார்கள் . இது எல்லார் படங்களுக்கும் உண்டு.  ஆனால் 1972 ஆம் ஆண்டு  ராஜா  படத்தின்  ஸ்லைடு எப்படி வந்தது தெரியுமா . எனக்கு தெரிந்து அதற்கு பிறகு எந்த படமும் அதை போல ஸ்லைடுடன்  வந்ததில்லை.   ராஜா படத்தின்  ஸ்லைடுடன்  பின்னணியில்  சில  வசனங்களும்  வரும்.   இது அப்போது பிரஃமிப்புடன் பார்க்கப்பட்டது .  ஏனென்றால் அப்போதெல்லாம் திரை அரங்கின் வாசலில்  வரப்போகிற படத்தின் ஸ்டில்ஸ்  மட்டும்தான் வைத்திருப்பார்கள். 

புதுவை அஜந்தா திரை அரங்கிலும்  இதே மாதிரி ஸ்லைடு  படம் வெளி  வருவதற்கு   சிலவாரத்திற்கு முன்  போடப்பட்டது.  ராஜா படம்  திரை இடுவதற்கு  முதல் நாள் வரை  அந்த ஒலிச்சித்திர ஸ்லைடு பார்ப்பதற்காகவே
ரசிகர்கள்  திரை அரங்கிற்கு வந்தார்கள்.  அப்போது வந்த  அந்த திரை அரங்கில் வெளியான சுமாரான படங்களும்  கூட இந்த ஸ்லைடு ஒளிபரப்பினால்  வசூல் பார்க்க ஆரம்பித்தது.

எனவே   டீசர்   FIRST LOOK   RECORD   போன்றவைகளுக்கும் முன்னோடி நடிகர் திலகம்தான்.

இந்த பதிவின்  சாராம்சம்  நான் சென்ற வருடம் ஒரு குழுவில் பதிவிட்டிருந்தேன் . இப்போது டீசர் பற்றிய அலம்பல்கள் அதிகமாக இருப்பதினால் மீண்டும் இந்த பதிவு ............./..../..........சாய் ஜெயராமன்  புதுச்சேரி 

Sunday, November 10, 2019

விஜய் டி வீ  சூப் சிங்கர்  இறுதி போட்டியில்   முதல் மற்றும்  , இரண்டாம் இடத்தை  பெற்றவர்கள்  நடிகர் திலகத்தின் படத்தின் பாடலை  உணர்வு பூர் வமாக பாடி  போட்டியில் வென்றனர். 

அதுவும் அவர்கள் பாடலை பாடும்போது  நடிகர் திலகத்தின் படத்தையே  பார்த்ததொரு உணர்வு எழு ந்தது. பாடியவர்கள்  இளவயதினர். இந்த தலைமுறையும் அந்த  பாடலை   ரசித்து பாடுகிறது என்றால்  அன்றைய கலைஞர்கள் எப்படி ஆற்றல் மிக்கவராக இருந்திருக்கிறார்கள் . சிவாஜி பாடலைகளை  பாடும்போது பாடகர் மட்டுமில்லாமல்  பார்வையாளர்களும் உணர்ச்சி வசப்பட்டது  நெகிழ்ச்சியாக இருந்தது.  

போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் . 

Saturday, November 9, 2019

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாள் . ...

புதுச்சேரி ராமன் திரை அரங்கம் காலை 5  மணிக்கே  களை  கட்ட தொடங்கி விட்டது . ஊரெங்கும் திருவிழா கூட்டம் . சிவந்த மண் வெளியாக உள்ள நாள்.
நான் ஆறுமணிக்கு  திரை அரங்கம் நோக்கி  நடக்கிறேன் . இன்றுவரை அப்படி ஒரு ஜனத்திரள் நான் கண்டதில்லை. போட்டி போட்டுகொண்டு ரசிகர் மன்றத்தினர்  வண்ண வண்ண அலங்காரங்கள்  கட்  அவுட்டுகள்  வைத்திருந்தனர்.  கண் கொள்ளா காட்சி என்பார்களே அதுதான் .  ஒரு பக்கம்  வாத்தியம்  முழங்குகிறது .  மறு  பக்கம் பட்டாசு  சத்தம் . இன்னொருபுறம் ரசிகர்களின்  ஆனந்த கூக்குரல்கள் .  திரை அரங்க வளாகம் நிறைந்து  வீதிகளில் கூட்டம் குவிய தொடங்கியது . முன் பதிவெல்லாம் கிடையாது. புதுவை எப்போதும்  நடிகர்திலகத்தின் கோட்டை . பதிவு  பெற்ற  மன்றங்களோ . நூற்றுக்கணக்கில். தங்களின் சொந்த பணத்தை போட்டு  கட்  அவுட் வைத்திருந்தவர்கள்  முதல் காட்சியை பார்க்க டிக்கெட்டுக்கு காத்திருந்தார்கள்.  சிவாஜி மன்ற நிர்வாகிகளோ  முதல் காட்சி டிக்கெட்டை  யார் யாருக்கு கொடுப்பது   என்று தலையை பிய்த்துக்கொண்டிருந்தார்கள். எப்போதுமே முதல் நாள் முதல் காட்சி பார்த்து
 விடும் எனக்கு  சற்று பயம் தொற்றிக்கொண்டது.  இன்னிக்கு நாம் படம் பாக்க முடியாது  என்ற காரணம்தான் .

இது ஒரு புறம் இருக்க  அந்த நடிகரின் படம் இரண்டு நாளுக்கு முன் வெளிவந்தது . அவர்கள் வேறு நமது படத்திற்கு எதிராக செய்தி பரப்பி கொண்டிருந்தார்கள்.  படம் வரலை படம்  வராது.  என்று. .

புதுவையில் ஒரு வழக்கம்  புதுப்படம் வரும்போது படப்பெட்டியை  மணற்குள விநாயகர் கோயிலில்  வைத்து பூஜை செய்து விட்டுத்தான் வருவார்கள் . அதனால் படம் வந்துவிட்டதா என்று தெரிந்து கொள்ள கோயில் வாசலில் திரளாக ரசிகர்கள்.  திடீரென்று பொ ட்டி வந்துவிட்டது என்று  ஒரு குரல் எங்கேயோ கேட்க  அவ்வளவுதான். என்ன நடந்தது என்று தெரியவில்லை அத்தனை கூட்டம் ஒரே நேரத்தில்  திரை அரங்கில் நுழைய  காவல் துறையும் திரை அரங்கு நிர்வாகமும் ம் சிவாஜி மன்ற நிர்வாகிகளும்  செய்வதறியாது திகைத்து  நிற்க  எங்கேயோ நின்ற நான் திரை அரங்கின்  உள்  புறத்தில் இருந்தேன் .  பின் காவல் துறை யின் ஆலோசனைப்படி உள்ளிருந்தவர்களை  அப்படியே விட்டு விட்டு  வெளியில் இருந்தவர்களை கலைஃ ந்து போக செய்தார்கள்.   பெயருக்கு சில டிக்கெட்டுகள் மட்டும் கொடுத்து விட்டு  உள்ளெ  இருந்த எங்களுக்கு  உள்ளேயே டிக்கெட்டுகள்  வழங்கினார்கள்.  படம் முதல் காட்சி பார்த்தாகி விட்டது.

அன்று படம் பாக்க வந்தவர்களுக்கு  ரசிகர்கள்  கை  விசிறி , சென்ட் கார்ட் (வரவேற்கிறோம் என்ற கார்டில்  சென்ட் வாசனை அடிக்கும்)  சிறு பாக்கெட்டில் சக்கரை  லட்டு  என்று அசத்தினார்கள் . 

ஐம்பது ஆண்டுகள் சென்ற பின்னும் அந்த இனிய நினைவுகள்  மாறவே மாறாது.   அப்படி ஒரு காலம் இனி வருமா என்று நினைக்கும் போதுதான் கர்ணன்  திரும்ப வந்தது. இப்போது வசந்த மாளிகை.  திலகமே காலத்தின் முன்னே நீங்களும் நாங்களும் வேறல்ல.  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கள் உற்சாகம் மாறவே மாறாது.

நடிகர் திலகம் அவர்களின்     தர்பார்      ஐம்பது  ஆண்டுகளுக்கு முன்பே  தொடங்கி விட்டது.    வெற்றிக்கான     பிகில்   அவரால் எப்போதோ ஊதப்பட்டுவிட்டது.   . 

அன்புடன் சாய் ஜெயராமன் .. புதுச்சேரி.