Tuesday, February 23, 2016

அன்பு  நண்பர்களுக்கு  வணக்கம்

Wednesday, February 10, 2016

thaathaa kathai sollu

வாங்க பசங்களா   போரடிக்குதா   ஏதாவது  பேசிகிட்டு  இருக்கலாமா ==

போங்க தாத்தா  நீங்க  எப்பவும்  அரசியலே பேசறீங்க -- நல்ல கதை சொல்றதா இருந்தா  ஒக்காந்து  கேக் கிறோம்.

சரி  வாங்க .

அம்பது வருஷத்துக்கு  முன்னாடி  ஒரு காடு இருந்ததாம் . அந்த காட்டை சிங்க  ராஜா  ஆண்டுக்கிட்டு இருந்தாராம் .   ஒரு   நரிக்கு  அந்த காட்டுக்கு ராஜா  ஆகணும்னு  ஆசையாம் . அந்த ஆசைக்கு  கூடவே ஜால்ரா  தட்டி வந்ததுலே  மூணு  பேரு  எப்போதும் உண்டாம் . அது யாருன்னா  ஒரு  வல்லூறு , ஒரு மீன்   ஒரு  நண்டு . எப்படியோ  பொய் சொல்லி  பித்தாலாட்டம்  பண்ணி  அந்த  சிங்க  ராஜாவை வெரட்டிட்டு  நரி  ராஜா ஆயிடுத்தாம் .  நரி பண்ண  அளப்பரைகளை  தாங்க முடியாம  யானை ஒன்னு நான்  ராஜா  ஆகப்பொறேன்னு  சொல்லிச்சாம். உடனே நரி கூட இருந்த  மூணுபேரும்        யாரு  மூணு  பேறு --

 வல்லூறு  மீன்  நண்டு   தாத்தா .

கரெக்ட் . அந்த மூணு பேரும்  யானை  கூட  போய்   ஒட்டிகிச்சாம் . யானையும் காட்டுக்கு ராஜா ஆயிடுச்சாம் .  கொஞ்ச  வருஷம்  போச்சாம் . யானை ராஜாவுக்கு  அடிக்கடி  மதம் புடிக்கிறத பாத்துட்டு  மூணு பேரும்  மறுபடியும்  நரி காலிலேயே  விழுந்து நீங்க  ராஜா ஆகுங்க  என்று சொல்லி  மறுபடியும் எப்படியோ  நரி ராஜாவாயிடிச்சு . மறுபடியும் கொஞ்ச வருஷம் கழிச்சி  யானை மறுபடியும் ராஜா  ஆயிடுச்சி . அப்ப அதுகூட அந்த மூணுபேரும்  இருந்தாங்களாம்

தாத்தா  திருப்பி  திருப்பி  அதையே சொல்றீங்க  போரடிக்கிறது  இப்ப  என்னாச்சு  சொல்லுங்க.

இப்ப  என்ன  ஆச்சுன்னா   நரி  மேலேயும்  யானை  மேலேயும்  காட்டுல உள்ள  மத்த  மிருகங்களுக்கு  வெறுப்பு  வர ஆரம்பிச்சிடுச்சி .  பழைய
சிங்க  ராஜ  காலத்திலேயே  நாம  சுகமாய் இருந்தோமேன்னு  நெனைக்க ஆரம்பிச்சிடுச்சி .

இனிமே  அவங்க கூட  இருந்தா  நம்ப  கதை  கந்தல்  என்று புரிந்து கொண்ட  மூணு  பேரும்     நாம மூணு பேரும்  ஒன்ன  சேர்ந்து  காட்டுக்கு  ராசாவா   ஆயிடலாம்னு  முடிவு பண்ணி  எல்லா  மிருகங்களுக்கு  மத்தியில  இந்த  யோசனையை  சொல்லிச்சாம் .

உடனே  ஒரு மிருகம்  எழுந்து  உங்களை  எப்படி  நம்பறது. இத்தனை  வருஷமா  நரியையும்  யானையும்  நம்பிதானே  அவங்க கூட இருந்தே  இப்ப எப்படி  உங்களாலே  ஆளமுடியும் . ==

இன்னொரு மிருகம் எழுந்து   ஏ  வல்லூரே    நீ அடிக்கடி பறந்து  போய் விடு கிறாய்.     ஏ   மீனே  நீ தண்ணிக்குள் இருக்கும் உங்களை  காக்க  எங்களை தண்ணிக்குள்  இழுப்பே    ஏ  நண்டே  உன் குணமே  மேலே வருபவனின் காலை  பின்னோக்கி  இழுப்பது தானே .  இயல்பிலேயே  மாற்று குணம் கொண்ட  நீங்கள்  எப்படி   ஒற்றுமையாக  எப்படி ஆட்சி  செய்ய  முடியும்  என்று கேட்டிச்சாம்.



சிங்கம் என்னாச்சு தாத்தா.   சிங்கமா   அதுக்கு  ஆட்சி  போனவுடனே  தான் சிங்கம்  என்பத மறந்து   குணத்தை  மறந்து  எடுப்பார்   கைபிள்ளையாக   நொந்து  நூலாகி  படுத்த  படுக்கையாக  கிடக்கு.

இதற்கிடையிலே  நரி , வல்லூறு  மீன்  நண்டு  எல்லாம்  தவளையை  எங்க கூட  வந்திரு   காட்டுக்கு  ராஜாவாகலாம்  என்று  கூப்பிட்டது.

தவளை எந்த பக்கம்  தாவலாம்  என்று யோசனை பண்ணி   நான் ராஜா  ஆகிறதிற்கு  உதவி பண்றவாங்க  என் கூட  வாங்கன்னு  சொல்லிட்டு அமைதியாய்  இருக்கு .

இன்னொரு பக்கம்  ஒரு மிருகம்  நாந்தான்  ராஜா  நான்தான்  ராஜா  என்று சொல்லிக்கிட்டு  அது பாட்டுக்கு  ஓடிகிட்டே  இருக்கு.

இவங்க  கதைதான்  இப்படீனா   அந்த பக்கம்  ஒரு தும்பி  வாங்க  என்கூட நான் ராஜாவாகனும்  அப்படீன்னு  கொய்ங்  கொய்ங்  நு  ரீங்காரம் இட்டுகிட்டு இருக்கு.

 அப்ப  யாரு  தாத்தா  ராஜா   ஆனாங்க .

தெரியலையே .  நீங்க  வளர புள்ளைங்க  யோசிக்க  கூடியவங்க  யார்  காட்டுக்கு  ராஜாவா  வந்தா நல்லா  இருக்கும்னு  நினைக்கறீங்க..

தாத்தா  இந்த  கதை  போரடிக்குது  தாத்தா

டேய்  நில்லுங்கடா  , பாலாஜி   சித்தார்த்  யூனஸ்    மயில்சாமி  சகாயம்   எங்கடா  ஓடறீங்க  நில் லுங்கடா .

 அங்க  யாரோ உதவின்னு   கத்தறாங்க  தாத்தா   உங்கள  அப்பறமா பாக்கிறோம். 



.