Friday, January 16, 2015

MGR

எம் ஜி யாரும்  காந்தியாரும் --

மக்கள் திலகம் .. இந்த மனிதரை தமிழகம் அன்பால் கட்டிபோட்டதா  அல்லது இந்த மனிதர் தமிழகத்தை அன்பால் கட்டிப்போட்டரா  ?

எம் ஜி யாரின் பாடல்களை கேட்கும்போதெல்லாம்  எனக்கு ஒரு விழயம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.  திராவிட இயக்கத்தின் முக்கிய தூணான எம் ஜி யார்  தன்  பாடல்களில்  காந்திக்கும்  முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதே  அந்த விழயம். நீங்களே பாருங்களேன் .

        புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
        தோழா  ஏழை நமக்காக.----


         முன்பு இயேசு வந்தார்  பின்பு காந்தி வந்தார்
          இந்த மானிடர் திருந்திட அவர் பிறந்தார் ---


     எனக்கொரு மகன் பிறப்பான் என்ற பாட்டில்  தன்னுடைய மகன் எப்படி                  இருப்பன் என்பதை பாடலில் கூறும் போது

          சாந்தி வழியென்று காந்தி வழி சென்று  கருணை தேன் கொண்டு
           வருவான்  என்று பாடுவார் --

தம்பி நான் படித்தே காஞ்சியிலே நேற்று என்ற பாடலில்

           இந்தியாவின் தந்தை என காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல்  கந்தை அணிந்தார்  என்று பாடுவார்.

இன்னொன்று மக்கள் திலகம் தேசிய எண்ணம் கொண்டவர் என்ற  கருத்துக்கு வலு சேர்ப்பது போல்  இந்த பாடல்களை  பாரு ங்கள்.

     காஷ்மீர்    பியூட்டிபுல்  காஷ்மீர்   என்ற பாடலில்  காஷ்மீரை பற்றி சொல்லும்போது
 
                     என் தாய்  திருநாட்டிற்கு  வாசலிது      என் நாட்டவர்க்கும்
                     கலைக்கோவில் இது  என்று பாடிக்கொண்டு வரும் எம்ஜியாரின்
                     எண்ணம் இங்கே எப்படி என்று பாருங்கள்
                     
                              யாரும்  வந்து சொந்தம் கொள்ள கூடுமோ
                              வீரம் மானம் நம்மை விட்டு போகுமோ

இன்னொரு  பட பாடலில்  நான் ஏன் பிறந்தேன் நாட்டிற்கு நலம் என்ன புரிந்தேன்  என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என்தோழா  என் பாடி இருப்பார்.



           கண் போன  போக்கிலே  கால் போகலாமா  என்ற பாடலில்
           மனிதன் போன பாதையை மறந்து போகலாமா  என்ற இடம் வரும் போது
           கேமரா  ஜூம் ஆகி காந்தியை போல் ஒரு மனிதனை  காட்டும் .

ஒன்றே குலம்  என்று பாடுவோம் என்ற பல்லாண்டு வாழ்க திரைப்பட பாடலில்  பாவம் என்ற கல்லறைக்கு பலவழி  என்றும் தரும தேவன் கோயிலுக்கு ஒரு வழி ------ என்ற வரிகளின் போது  சுவற்றில் காந்தியின் படம் மாட்டப்பட்டிருக்கும். இன்னும் நிறைய படங்களில்  காந்தி படம் இடம் பெற்றிருக்கும்.  பாடல்கள் எழுதியவர்கள் யாரோ பாடியவர்கள் யாரோ என்றாலும் எம்ஜியாரின் அனுமதியின்றி  எதையும் படங்களில் சேர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த விழயமே.
மக்கள் திலகம் திராவிட கட்சியின்  அங்கம் என்றாலும்  என் வரையில் அவரும் ஒரு தேசிய  கலைஞர்தான் .


காணும் பொங்கல்

நினைத்தாலே இனிக்கும்


இதோ அமைதியாக  அமர்ந்திருக்கிறேன்.  வயதானதாலோ , நேரம் கிடைப்பதினலோ  என்னவோ  இப்போதெல்லாம் எனக்கு   பழைய நினைவுகள்  அடிக்கடி வருகிறது. அதை அசை போடுவதிலும் ஒரு சுவை இருக்கிறது.

வாசலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது , ஒரு மொபெட்டில்  ஒருவர்  சில கடிதங்களை  சில வீடுகளின் உள்ளே விட்டெறிந்து விட்டு போனார்.  அநேகமாக  எல்லார் வீடும் கதவு  சாத்தியே இருந்தது..  அவர் யாராக இருக்கும்.  கொரியர்  கம்பனியை  சேர்ந்தவராக இருப்பாரோ ? அல்லது தபால் காரராக இருப்பாரோ.

எழுபதுகளில். அதாவது எங்களது பதின்  வயதுகளில்  தபால்காரர்  எப்போது வருவார் என்று காத்திருப்போம். காரணம்  பொங்கல் வாழ்த்து அட்டைகள்.
உறவினர்களிடமிருந்து , நண்பர்களிடமிருந்து  சமயத்தில் நாங்களே எங்கள் சகோதரர்களுக்கு  அனுப்பிய பொங்கல் வாழ்த்துகளை  எதிர் பார்த்து காத்திருப்போம்.  நமது பெயருக்கு வாழ்த்து அட்டை வரும்போது  ஏதோ நாம்தான் உலகத்தின் உச்சியில் இருப்பது போன்ற மன நிலை  தோன்றும்.
காக்கி சட்டை அணிந்த  தபால்காரர்  மெதுவாக நடந்து வருவார். ஏறைக்குறைய அணைத்து வீடுகளுக்கும் தபால் இருக்கும்.  கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல்  தபால் பட்டுவாடா செய்வர்.

காணும் பொங்கல் அன்று முதல் மரியாதை தபால் கரருக்குத்தான். இரண்டு பேர் வருவார்கள்  ஒருவர்  மணி ஆர்டர்  கொடுப்பவர்  மற்றோவர் தபால் பட்டுவாடா செய்பவர். வெற்றிலை பாக்கு பழம்  மற்றும் ஐந்து ரூபாய் பணம் வைத்து அவருக்கு கொடுப்போம். அவர்களும் புண் முறுவலுடன் ஏற்றுகொள்வார். நிச்சயமாக இது லஞ்சம் அல்ல.  அவர்களில் சேவையின் அங்கீகாரமாக கொடுக்கப்படும் பணம் இது.  இப்போது அந்த நிலை தொடருகிறதா . இப்போது தபால் அனுப்புவதே குறைந்து விட்டதே . அப்படியே வந்தாலும்  எல் ஐ சி  பிரீமிய நோட்டீஸ் , டெலிபோன் கட்டண பில் , வங்கியில்  கிரெடிட் கார்டு வாங்கியிருந்தால் அதன் தவணை நோட்டீஸ்  சில வட்டி கடைகாரர்கள்  தங்களின் வாடிக்கையாளருக்கு தவணை ஞாபகப்படுதுதல்  போன்றவைதான் இருக்கும்.  தபால் காரரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.(ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம் )
மக்களும் அதே மூடில் தபாலை பெற்றுகொள்வார்கள்.

வண்ண வண்ண வாழ்த்து அட்டைகள் . சிவாஜி   எம் ஜி யார் ,  பத்மினி  சரோஜாதேவி , விநாயகர்  சரஸ்வதி , வெங்கடசலபதி, அரசியல்  தலைவர்கள்  காமராஜ்  அண்ணா கலைஞர்  படங்கள் போட்டது  சிறு குடும்பம் மாடு பொங்கல் கரும்புடன் நிற்பது என்று எண்ணற்ற வாழ்த்து அட்டைகள்.  அதனுள் ஒரு ரோஸ்  நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் ஒரு இணைப்புத்தாள் . அந்த இணைப்புத்தாளில்   நம் கையாலே பொங்கல் வாழ்த்தை எழுதி அனுப்பும்போது கிடக்கும் சுகம் இப்போது வருமா.  எங்களில் நிறைய பேர்  கவிதை என்ற பெயரில்  நிறைய கிறுக்கியது  எங்களை கவிஞனாக்கியது  பொங்கல் வாழ்த்து அட்டைகள் தானே.  தற்போது பிரான்சில் வசிக்கும்  .
நண்பர்களில் சிலர்  விடலை பருவத்தில்  தன்  மனதிர்க்கு  இனியவளின்  பெயருக்கு  அவள் விரும்பும்  படத்தை  பொங்கல் வாழ்த்தை கையெழுத்திடாமல்  அனுப்பி விட்டு  பிறகு என்ன ஆகுமோ  என்ற பதை பதிப்பில் தவித்த  தவிப்பை இன்று நினைத்தாலும் இனிக்கிறதே.  அந்த பெண்களோ  அந்த வாழ்த்தை பெற்றுக்கொண்டு நண்பர்கள் எதிரிலேயே  எழுதியவன் எதிரிலே இருப்பது அறியாமல்  ஒரு வேலை அவன் அனுப்பி இருப்பானோ இல்லை இவ ன் அனுப்பி இருப்பானோ  என்று சொல்லும்போது  அந்த நண்பர்களின் முகத்தில்  இரு வேறு உணர்வுகள் தோன்றும் ஒன்று அப்பாடா நம்மை கண்டுபிடிக்கவில்லை  என்ற சந்தோஷமும்  நம்மை தவிர எல்லோரையும் சொல்கிறார்களே  என்ற  எரிச்சலும்  ஒரு சேர  காட் டும் அந்த முகபாவம்  நடிகர் திலகத்திற்கு கூட வராது..  மாமா  பெரியப்பா சித்தப்பா அத்தை  மாமி
தூரத்து உறவினர்  என்று வாழ்த்து அட்டைகளை பெறும்போது உறவு சங்கிலிகள்  பலப்பட்டு இருந்தன . இப்போது  ???  டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது    வாழ்க்கைதரம்  உயர்ந்திருக்கிரதாக  நாம் எண்ணி கொண்டிருக்கிறோம். ஆனால்  விலை மதிக்கமுடியாத சில சந்தோஷங்களை  இன்றைய தலைமுறை இழந்திருக்கிறது என்பதே உண்மை.    பழைய நெனப்புடா பேராண்டி  என்று சொல்லி  வாழ்த்து கூறி முடிக்கிறேன். 

Saturday, January 10, 2015

thodarum thenkural

மனம் இனிக்க இனிக்க.

அகவை எழுபத்தைந்து -  யாருக்கு -  இந்திய  மக்களை இசையால்  மயக்கிய  திரு ஜேசுதாஸ் அவர்களுக்குத்தான்.

ஜேசுதாஸ்  இந்தியாவின் அடையாளம்.  மத நல்லிணக்கத்திற்கு  அற்புதமான  எடுத்துக்காட்டு.  இசையால்  பல்வேறு மொழி பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்களை  மகுடி கேட்ட நாகம் போல் மயங்க வைப்பது  ஒரு சாதாரண  செயலா?  சாதித்து இருக்கிறார்  அந்த இந்தியன்.

ஹிந்தி எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த நேரத்தில்  ஜாநேமன்  ஜநேமன்  என்று ஒரு தேன் ஹிந்தியில் சொட்டியதை  மறக்க முடியுமா ?  கடலின் அக்கர போனோரே --- - போய்  வரும் போழ் என்ன கொண்டுவரும்  பதினாறாம் ராவிலே --  மலையாள வரிகள்  மனதை வருடியதை மறக்க முடியுமா.
தமிழில் நீயும் பொம்மை நானும் பொம்மை  என்று ஆரம்பித்த  அந்த வசீகர குரல் இன்றுவரை ஆட்சி செய்து வருகிறதே.

என் நினைவில் இன்றும் அன்றும் என்றும் நினைவில் தங்கியுள்ள சில பாடல்களை  அசைபோடுகிறேன்.

பியானோவின்  இசைபிர தானமாக கொண்ட  உன்னிடம் மயங்குகிறேன் --உள்ளத்தால் நெருங்கிறேன்   என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலே  இன்றளவும் என் மனத்தில் முதல் இடத்தில் உக்காந்திருக்கிறது.

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை  என்ற பாடலில்
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்  சொந்தம் இந்த சொந்தம் அம்மா  என்ற வரிகளை  ஜேசன்னா  குரலில் கேட்கும்போது  அந்த தாம்பத்தியத்தின்  அர்த்தம்  அழகாக வெளிப்படுமே.

இந்த பச்சைக்கிளிக்கு செவ்வந்திபூவினில் தொட்டிலை கட்டி வைத்தேன்
பாடல் ஒரு முறை கேட்டு பாருங்கள் .

அதிசய ராகமும் மலரே குறிஞ்சி மலரேவும்  நம்மை ஆகாயத்தில் ஊஞ்சலாடும்படி செய்திடுமே.

சபரி மலை   சென்றவர்கள்  அந்த அதிகாலையில்  குளிர் நிலையில்  வானில் மிதந்து வரும்  ஹரிவராசனம்  விஸ்வமோகனம்  பாடலை கேட்கும் சுகானுபவத்தை   பெற்றிருப்பார்கள்.

சாஸ்திரீய சங்கீதம் தெரியாதவர்களையும்  தன்  இனிமையான குரலால் கட்டிபோட்டவர்.

ஒரு முறை புதவை கம்பன்  கலை அரங்கிற்கு  ஜேசுதாஸ் வந்தபோது
அவர் கர்நாடக சங்கீதம் பாட ஆரம்பித்தார். உடனே ஒரு கும்பல் எழுந்து சினிமா பாடலை பாடவேண்டும் என்று கூச்சலிட்டனர்.  அப்போது அவர்  நான்இந்த மேடைக்கு கர்நாடக பாடலை பாடுவதற்குதான் வந்துள்ளேன்  . அதை தவிர வெறுத்தும்  பாட மாட்டேன் என்று உறுதி பட கூறி உடன் ஒரு கர்நாடக சங்கீத பாடலை பாட ஆரம்பித்து விட்டார். அவரின் குரல் இனிமையை சட்டென்று உணர்ந்த அந்த கும்பல்  அமைதியாக  கச்சேரியை கேட்க  ஆரம்பித்தது..

இவர் எத்தனை மொழிகளில் பாடி இருக்கிறார் தெர்யுமா.  தமிழ்,  தெலுங்கு மலையாளம், ஹிந்தி  கன்னடம்  பஞ்சாபி ,குஜராத்தி , ஒரிய  மராத்தி  வங்காளம்  சமஸ்க்ருதம்  துளு ,மலாய் மொழி  ரஷ்ய மொழி இலத்தீன் மொழி  ஆங்கில மொழி  ஆகியவற்றில் திரைப்பாடல்களும் இன்னும் பிற பாடல்களும்  பாடி சாதனை புரிந்துள்ளார்.

ஆன்மிகம் , மத நல்லிணக்கம், தேசிய பார்வை  மனித நேயம்  எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட  இந்த இசை விருட்சம்  நீண்ட ஆயுளை பெற்று  தனன் சேவையை  தொடர  இறைவனை  வேண்டுகிறேன்.