Friday, January 16, 2015

MGR

எம் ஜி யாரும்  காந்தியாரும் --

மக்கள் திலகம் .. இந்த மனிதரை தமிழகம் அன்பால் கட்டிபோட்டதா  அல்லது இந்த மனிதர் தமிழகத்தை அன்பால் கட்டிப்போட்டரா  ?

எம் ஜி யாரின் பாடல்களை கேட்கும்போதெல்லாம்  எனக்கு ஒரு விழயம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.  திராவிட இயக்கத்தின் முக்கிய தூணான எம் ஜி யார்  தன்  பாடல்களில்  காந்திக்கும்  முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதே  அந்த விழயம். நீங்களே பாருங்களேன் .

        புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
        தோழா  ஏழை நமக்காக.----


         முன்பு இயேசு வந்தார்  பின்பு காந்தி வந்தார்
          இந்த மானிடர் திருந்திட அவர் பிறந்தார் ---


     எனக்கொரு மகன் பிறப்பான் என்ற பாட்டில்  தன்னுடைய மகன் எப்படி                  இருப்பன் என்பதை பாடலில் கூறும் போது

          சாந்தி வழியென்று காந்தி வழி சென்று  கருணை தேன் கொண்டு
           வருவான்  என்று பாடுவார் --

தம்பி நான் படித்தே காஞ்சியிலே நேற்று என்ற பாடலில்

           இந்தியாவின் தந்தை என காந்தி இருந்தார்
அவர் இடையினிலே ஏழையைப்போல்  கந்தை அணிந்தார்  என்று பாடுவார்.

இன்னொன்று மக்கள் திலகம் தேசிய எண்ணம் கொண்டவர் என்ற  கருத்துக்கு வலு சேர்ப்பது போல்  இந்த பாடல்களை  பாரு ங்கள்.

     காஷ்மீர்    பியூட்டிபுல்  காஷ்மீர்   என்ற பாடலில்  காஷ்மீரை பற்றி சொல்லும்போது
 
                     என் தாய்  திருநாட்டிற்கு  வாசலிது      என் நாட்டவர்க்கும்
                     கலைக்கோவில் இது  என்று பாடிக்கொண்டு வரும் எம்ஜியாரின்
                     எண்ணம் இங்கே எப்படி என்று பாருங்கள்
                     
                              யாரும்  வந்து சொந்தம் கொள்ள கூடுமோ
                              வீரம் மானம் நம்மை விட்டு போகுமோ

இன்னொரு  பட பாடலில்  நான் ஏன் பிறந்தேன் நாட்டிற்கு நலம் என்ன புரிந்தேன்  என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என்தோழா  என் பாடி இருப்பார்.



           கண் போன  போக்கிலே  கால் போகலாமா  என்ற பாடலில்
           மனிதன் போன பாதையை மறந்து போகலாமா  என்ற இடம் வரும் போது
           கேமரா  ஜூம் ஆகி காந்தியை போல் ஒரு மனிதனை  காட்டும் .

ஒன்றே குலம்  என்று பாடுவோம் என்ற பல்லாண்டு வாழ்க திரைப்பட பாடலில்  பாவம் என்ற கல்லறைக்கு பலவழி  என்றும் தரும தேவன் கோயிலுக்கு ஒரு வழி ------ என்ற வரிகளின் போது  சுவற்றில் காந்தியின் படம் மாட்டப்பட்டிருக்கும். இன்னும் நிறைய படங்களில்  காந்தி படம் இடம் பெற்றிருக்கும்.  பாடல்கள் எழுதியவர்கள் யாரோ பாடியவர்கள் யாரோ என்றாலும் எம்ஜியாரின் அனுமதியின்றி  எதையும் படங்களில் சேர்க்க முடியாது என்பது அனைவரும் அறிந்த விழயமே.
மக்கள் திலகம் திராவிட கட்சியின்  அங்கம் என்றாலும்  என் வரையில் அவரும் ஒரு தேசிய  கலைஞர்தான் .


1 comment:

  1. என்றும் ரசிக்க வைக்கும், காலத்தால் அழிக்க முடித்த பாடல்கள்...

    ReplyDelete