Saturday, January 10, 2015

thodarum thenkural

மனம் இனிக்க இனிக்க.

அகவை எழுபத்தைந்து -  யாருக்கு -  இந்திய  மக்களை இசையால்  மயக்கிய  திரு ஜேசுதாஸ் அவர்களுக்குத்தான்.

ஜேசுதாஸ்  இந்தியாவின் அடையாளம்.  மத நல்லிணக்கத்திற்கு  அற்புதமான  எடுத்துக்காட்டு.  இசையால்  பல்வேறு மொழி பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்களை  மகுடி கேட்ட நாகம் போல் மயங்க வைப்பது  ஒரு சாதாரண  செயலா?  சாதித்து இருக்கிறார்  அந்த இந்தியன்.

ஹிந்தி எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த நேரத்தில்  ஜாநேமன்  ஜநேமன்  என்று ஒரு தேன் ஹிந்தியில் சொட்டியதை  மறக்க முடியுமா ?  கடலின் அக்கர போனோரே --- - போய்  வரும் போழ் என்ன கொண்டுவரும்  பதினாறாம் ராவிலே --  மலையாள வரிகள்  மனதை வருடியதை மறக்க முடியுமா.
தமிழில் நீயும் பொம்மை நானும் பொம்மை  என்று ஆரம்பித்த  அந்த வசீகர குரல் இன்றுவரை ஆட்சி செய்து வருகிறதே.

என் நினைவில் இன்றும் அன்றும் என்றும் நினைவில் தங்கியுள்ள சில பாடல்களை  அசைபோடுகிறேன்.

பியானோவின்  இசைபிர தானமாக கொண்ட  உன்னிடம் மயங்குகிறேன் --உள்ளத்தால் நெருங்கிறேன்   என்ற ஜேசுதாஸ் பாடிய பாடலே  இன்றளவும் என் மனத்தில் முதல் இடத்தில் உக்காந்திருக்கிறது.

கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை  என்ற பாடலில்
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்  சொந்தம் இந்த சொந்தம் அம்மா  என்ற வரிகளை  ஜேசன்னா  குரலில் கேட்கும்போது  அந்த தாம்பத்தியத்தின்  அர்த்தம்  அழகாக வெளிப்படுமே.

இந்த பச்சைக்கிளிக்கு செவ்வந்திபூவினில் தொட்டிலை கட்டி வைத்தேன்
பாடல் ஒரு முறை கேட்டு பாருங்கள் .

அதிசய ராகமும் மலரே குறிஞ்சி மலரேவும்  நம்மை ஆகாயத்தில் ஊஞ்சலாடும்படி செய்திடுமே.

சபரி மலை   சென்றவர்கள்  அந்த அதிகாலையில்  குளிர் நிலையில்  வானில் மிதந்து வரும்  ஹரிவராசனம்  விஸ்வமோகனம்  பாடலை கேட்கும் சுகானுபவத்தை   பெற்றிருப்பார்கள்.

சாஸ்திரீய சங்கீதம் தெரியாதவர்களையும்  தன்  இனிமையான குரலால் கட்டிபோட்டவர்.

ஒரு முறை புதவை கம்பன்  கலை அரங்கிற்கு  ஜேசுதாஸ் வந்தபோது
அவர் கர்நாடக சங்கீதம் பாட ஆரம்பித்தார். உடனே ஒரு கும்பல் எழுந்து சினிமா பாடலை பாடவேண்டும் என்று கூச்சலிட்டனர்.  அப்போது அவர்  நான்இந்த மேடைக்கு கர்நாடக பாடலை பாடுவதற்குதான் வந்துள்ளேன்  . அதை தவிர வெறுத்தும்  பாட மாட்டேன் என்று உறுதி பட கூறி உடன் ஒரு கர்நாடக சங்கீத பாடலை பாட ஆரம்பித்து விட்டார். அவரின் குரல் இனிமையை சட்டென்று உணர்ந்த அந்த கும்பல்  அமைதியாக  கச்சேரியை கேட்க  ஆரம்பித்தது..

இவர் எத்தனை மொழிகளில் பாடி இருக்கிறார் தெர்யுமா.  தமிழ்,  தெலுங்கு மலையாளம், ஹிந்தி  கன்னடம்  பஞ்சாபி ,குஜராத்தி , ஒரிய  மராத்தி  வங்காளம்  சமஸ்க்ருதம்  துளு ,மலாய் மொழி  ரஷ்ய மொழி இலத்தீன் மொழி  ஆங்கில மொழி  ஆகியவற்றில் திரைப்பாடல்களும் இன்னும் பிற பாடல்களும்  பாடி சாதனை புரிந்துள்ளார்.

ஆன்மிகம் , மத நல்லிணக்கம், தேசிய பார்வை  மனித நேயம்  எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்ட  இந்த இசை விருட்சம்  நீண்ட ஆயுளை பெற்று  தனன் சேவையை  தொடர  இறைவனை  வேண்டுகிறேன். 

1 comment:

  1. அவரது பல பாடல்கள் என்றும் ரசிக்கத்தக்கவை...

    ReplyDelete