Tuesday, May 28, 2013

padithtathil pidithathu

படித்ததில் பிடித்தது .

இன்றைய தினமணி பத்திரிக்கையில்  வந்த தலையங்கத்தில்  ஒரு பகுதி  நிதர்சனமான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.  இதை நானே  நேரில் கண்டேன்.  ஒரு பொது துறை நடத்திய எழுது தேர்வுக்கு  வந்த மாணவன்  தேர்வு எழுத செல்லாமலேயே  வெளியில் நின்று கொண்டிருந்தான் . ஏன் தேர்விற்கு செல்லவில்லை என்று கேட்டதற்கு  ஆங்கிலம் எனக்கு அவளவாக வராது  அதனால் தேர்வு எழுத செல்லவில்லை
என்றும் வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் சொன்னதால்  இங்கு வந்தேன் என்றும்  கூறினான். இத்தனைக்கும்  அவன் ஒரு முது நிலை பட்டதாரி  இதோ  அந்த பத்திரிகை செய்தியின்  ஒரு பகுதி -------தமிழ் தாய்மொழி. ஆனால், தாய்மொழியில் படிக்க ஆர்வமில்லை. ஆங்கிலத்தில் பட்டம் பெற விருப்பம். ஆனால் அதில் பயிற்சி பெறுவதற்காகக் குறைந்தபட்ச உழைப்பும் ஆர்வமும் மாணவர்களிடம் இல்லை. அவர்களைப் பயிற்றுவிக்கும் திறமையும் புலமையும் ஆசிரியர்களிடம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இந்த போலித்தனத்தால் தமிழக இளைஞர்களால் தமிழிலும் தவறில்லாமல் எழுத முடியவில்லை, ஆங்கிலத்திலும் புலமையில்லை-------------

                

Tuesday, May 21, 2013

rajiv gandhi

RAJIV GANDHI.


தன்  தாயார் வஞ்சகர்களின் குண்டுக்கு இரையான போது  அந்த இளைஞனை
கவ்விஇருந்த  சோகம் அன்றைய தினம் தொலைகாட்சியை பார்த்த நாம் அனைவரும்  உணர்ந்தோம்.  அந்த இளைஞன்  பிரதமர் பதவி ஏற்றபோது
ஏகடியம் பேசியோர் ஏராளம். ஆனால் அந்த இளைஞன்  கொண்டு வந்த மாபெரும்  மலர்ச்சிதான் கணினிமயம். இருபத்தியோராம்  நூற்றாண்டை
கனவாக இல்லாமல் நினைவாக்கி காட்டினார் அந்த இளைஞன் . இன்று பட்டி தொட்டி எங்கும் கணினிமயம். இதற்கு வித்திட்டவர் அந்த இளைஞன் அல்லவா .

கணினி வந்தால் வேலை போய்விடும்  என்று  வெற்று   கோஷங்களால்
மாய்மால ஜாலங்கள் காட்டி  மக்களை ஏமாற்றிய ஒரு  கூட்டம்   குறிப்பாக
உலகத்தை  காக்க  வந்த ரட்சகர்கள் என்று சொல்லிகொண்டிருக்கும் அறிவுஜீவிகள்   இன்று கணினியே  அவர்கள்  பிரசாரத்திற்கு உதவியாய் இருக்கிறது என்பதை இன்றாவது எண்ணிப் பார்பார்களா.

IRONY ( கேலிகூத்து  என்று சொல்லலாமா)  என்ன வென்றால்  யாரெல்லாம்
கணினிமயத்தை எதிர்த்தார்களோ  அவர்களின் வாரிசுகள்  இன்று  கணினி துறையில்  வித்தை காட்டுபவர்களா இருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல உலகம் சுற்றும் வாலிபர்களாக வலம் வருகிறார்கள் .  

இதைதான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்  அன்றே பதிபக்தி படத்தில்

        பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில்
         அநேக வித்தியாசம்

என்று பாடல்  புனைந்தாரோ . 

Saturday, May 18, 2013

padithtathil pidiththathu

படித்ததில் பிடித்தது.


        ஹல்லோ  ராம் இருக்காரா ?    அப்பா வெளியிலே  போலீஸ் அங்கிள் கிட்டே பேசிகிட்டு இருக்கார்.          அம்மா இருக்காங்களா ?  அவங்க  fire service
uncle கிட்டே பேசிகிட்டு இருக்காங்க .  வெளியே ஒரே சத்தமா கூச்சலும்  குழப்பமுமா  இருக்கே  என்னப்பா நடக்குது அங்கே?  fire service காரங்க வந்திருக்காங்க  போலீஸ் வந்திருக்கு .இப்ப என்னமோ  டூர் டூர்  சதம் வேற
கேட்குது  அது என்னப்பா. அது  helicoptersaththam uncle.

        சரி அவங்க எல்லாம் அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க .

         என்னை தேடி கிட்டு இருக்காங்க அங்கிள் .