Thursday, May 24, 2012

பெட்ரோல் விலை  ஏறிப்போச்சுன்னு  கேட்ட உடனே  எதாவது கிருக்க்கலாம்னு  நினைத்த எனக்கு  எத்தனையோ 
வருடங்களுக்கு முன்னாடி  பார்த்த, கேட்ட  இந்த  பாடல்தான் மனிசிலே  ஓடிச்சு .ம்ம் , ம்ம்  நீங்களும்  படிங்க .







நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏண்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
விலைவாசி மாறிபோச்சி விஷம்போல ஏறிப்போச்சி
வேலள கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
விலைவாசி மாறிபோச்சி விஷம்போல ஏறிப்போச்சி
வேலை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
சக்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்கிறப்போ
சிந்திக்காமே கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
சக்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்கிறப்போ
சிந்திக்காமே கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
அவ‌ச‌ர‌மா வ‌ந்து பொற‌க்க‌னுமா
உங்கொப்ப‌ன‌ போல் நீயும் த‌விக்க‌ணுமா
அவ‌ச‌ர‌மாய் வ‌ந்து பொற‌க்க‌னுமா
ஒங்கொப்ப‌ன‌ போல் நீயும் த‌விக்க‌ணுமா
கியூவிலே நீ வ‌ந்து நிக்க‌ணுமா
குடும்ப‌த்தின் பார‌த்தை சும‌க்க‌ணுமா
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
பெட்ரோல் விலை ஏறிப்போச்சி
பாக்கெட்டையே மீறிப்போச்சு
பீச்சுப் ப‌க்க‌ம் கார‌ப் பாத்து நாளாச்ச்சு
பெட்ரோல் விலை ஏறிப்போச்சி
பாக்கெட்டையே மீறிப்போச்சு
பீச்சுப் ப‌க்க‌ம் கார‌ப் பாத்து நாளாச்ச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவ‌ண்டி தேடிப் போனா
நில‌க்க‌ரி பஞ்சம் வ‌ந்து நின்னு போச்சி
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவ‌ண்டி தேடிப் போனா
நில‌க்க‌ரி பஞ்சம் வ‌ந்து நின்னு போச்சி
பூசணிக்கா விலை இப்போ பொட‌ல‌ங்கா
வெண்டைய்க்கா விலை இப்போ சுண்டைக்கா
பூசணிக்கா விலை இப்போ பொட‌ல‌ங்கா
வெண்டைய்க்கா விலை இப்போ சுண்டைக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனைவெலை
மக‌னே உன‌க்கேன் தெரிய‌வில்லை
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையை படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
அட‌ நான் பெத்த மகனே நடராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா ?
 

Wednesday, May 23, 2012


மதிப்பெண் மனோபாவம் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்  வெளியாகிவிட்டது . எதிர்பார்ப்புகள்ஏமாற்றங்கள்
ஆச்சரியங்கள், அதிசயங்கள்  இன்னும் பல்வேறு உணர்வுகளின் கலவையாக 
வெளிவந்துவிட்டது பிளஸ் 2 முடிவுகள் . ஒரு பார்வையாளனாக  இதை பார்க்கும்போது  இவ்வளவு உணர்வுகள்  தேவைதானா .  1076 மதிப்பெண் பெற்ற 
மாணவன் ஒருவன் வீடு  சோகமயமாக காட்சி அளித்தது . இந்த மதிப்பெண் போதாதாம் .  இந்த பெற்றோர்கள என்ன   எதிர்பார்கிறார்கள்.

வெற்றிபெற்ற மாணவனுக்கு  அதில் சந்தொஷபடுவதற்கு கூட  இடம்  கொடுக்காத  சமூகம்  .

தோல்வி   அடைந்தவனை தூக்கி எரிய நினைக்கும்  சமூகம் 

இரண்டும் மாறி  கல்வி சுமையாகஇல்லாமல்  சுவையாக மாறும் காலம்  வருமா 


Friday, May 11, 2012

காலத்தை வென்ற காவியம் கர்ணன் .


சிறு வயதில் கர்ணன் திரைப்படத்தை பலமுறைபார்த்து   வியந்து இருக்குறேன்ஆனால்  இப்போது பார்க்கும்போதும்  இம்மி அளவேனும்   சுவாரசியம்  குறையாமல்  அதே  அனுபவம். . தொழில்நுட்ப வசதி  இளசுகளின்என்ன ஓட்டங்கள்  .  தற்கால  சினிமாவிற்கு உண்டான எந்த  நியதியும் இல்லாமல்  ஏறைக்குறைய 30 ஆண்டுகளுக்கு பிறகும் அதே கம்பீரம்  மெய் சிலிர்க்க வைக்கும் சிவாஜியின் நடிப்பு, ஒலிப்பதிவின் பிரமிப்பு,வசனங்களின் ஆளுமை  பாடல் வரிகளின் கருத்தாழம் ,இசையின் மயக்கம் அப்ப்பா  சொல்லிகொண்டே போகலாம் ..

இன்றைய  தலை முறையை சார்ந்த ரசிகர்களே  இதுபோன்ற  படங்களைபார்த்து  நல்ல ரசனையை வளர்த்துகொள்ளுங்கள.
.
இதுபோன்ற  நல்ல  படங்களை  அதிகமாக வெளியிடுங்கள் .தயாரிப்பாலர்களே