Thursday, September 1, 2016

ஒரு தலை  காதல் ==

ஒருதலை காதல் விபரீதங்கள்  தொடர்கிறது. யார்  காரணம் ??  உரக்க சொல்வேன்  திரைப்படங்கள்தான்  என்று.

சினிமா மீது  அளப்பரிய  காதல்  கொண்ட  நான்தான்  சொல்லுகிரே ன் .

மாதங்களை  எண்ண  பனிரெண்டும்  வரலாம்  உனக்கேன்  ஆசை  மேலொன்று  கூட்ட ==   வஞ்சி  அவள் உன்னை  எண்ணவில்லை  இன்றும்  உனக்கேன் ஆசை  மன்மதன்  போலே.  ===  எண்பதுகளில் கல்லூரிகளை  கலக்கிய  பாட்டு = ராஜேந்தர்  இசையில்  ஒரு தலை  ராகம்  படத்தில்  .

எங்கிருந்தாலும்  வாழ்க  உன் இதயம்  அமைதியில் வாழ்க  ==இதுவும் ஒரு காதலன்  இன்னொருவருடன்  திருமணமான  பெண்ணை  நினைத்து பாடும் பாடல் .  அறுபதுகளில் வெளியான  நெஞ்சில்  ஓர்  ஆலயம்  பட பாடல் .

இரண்டுமே ஒருதலை காதலை  கண்ணியமாய் வெளிப்படுத்துகிறது.

இன்றைய தலைமுறைக்கான  பாடல்   வரிகளை கூட  சொல்ல
 முடியவில்லை ===  வெட்றா   அவளை    குத்துறா அவளை   ===
எவண்டி  உன்ன  பெத்தான்.  ==  என்பது  போன்ற  உசுப்பே த்தும்  வரிகள்.

இன்றைய படங்களில்  குறிப்பாக  நான்கு  இளைஞர்கள்  சேர்ந்து வரும்  காட்சியில்  கட்டாயம்  மது குடிப்பது போன்றோ  சரக்கு  அடிப்பது பற்றியோ காட்சியோ  பாடலோ  அமைக்கப்பட்டு  இருக்கும்.

இன்னொன்று  அந்தக்கால படத்தில்  (அந்தக்காலம்  என்றால் சுமார்  ஒரு இருபது வருடங்களுக்கு முன் ). வில்லன்கள் தான் குடிப்பார்கள்  என்று எழுதப்படாத விதி இருந்தது. கதா நாயகர்கள் குடித்தால்  பின் திருந்துவார்கள் .இப்போது  எதிர்மறை  பாத்திரங்களே  கதையில் உருவாக்கப்பட்டு  அவைகள் வெற்றியும்  பெறுகின்றன.

ஊடகங்களோ சொல்லவே  தேவையில்லை . பரபரப்புக்காக  மலிவான செய்திகளை  அதி முக்கியத்துடன் வெளியிடுவது  ஒன்றையே  தலையாய கடமையாய்  கொண்டுள்ளனர்.   சமூக  ஆர்வலர்களோ  எதை உயர்த்தி பிடிக்க வேண்டும்  எதை கண்டிக்க வேண்டும்  என்று குழம்பி போயிருக்கிறார்கள்.

பெண்கள் அனாவசியமாக  சுற்ற  வேண்டாம்   அரை குறை  ஆடை  வேண்டாம்  என்றால்  நம்மல  பாய்ந்து  பிராண்டி  ஆணாதிக்கவாதி  என்று  கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய  பெரும்பாலான இளைஞர்களின்  பேச்சில்  PICK  UP    BREAK UP ,
PARTY  GIFT  ENDRU  எதையுமே  சுலபமாக  எடுத்து கொண்டு விடுகிறார்கள்   ஆனால் POSSESIVENESS MATTUM  இரும்பு பிடியாக  பிடித்து கொள்கிறார்கள்.  

பசும்பால்  விலை தெரியாத இளைஞர்கள்  அமலா  பால்  விவகாரத்தை அக்கறையோடு  விவாதிப்பது  அதை ஊடகங்களில்  வெளியாவது  என்பதே
சினிமாவின்  வீச்சை  தெரிவிக்கிறது.

இம்மாதிரி கொடூரங்கள் (ஒரு தலை காதல் விவகாரம்)   ஓரளவாவது  தடுக்கப்பட  வேண்டும்  திரைத்துறையினரே  நல்ல  படங்களை கொடுங்கள். மக்கள்  காக்க  முட்டை, ஜோக்கர், தர்மதுரை போன்ற  படங்களையும் வெற்றி பெற செய்கிறார்கள். எனவே  மக்கள்  மீது  பழியை  போடாதீர்கள்.




சென்சார் போர்டு  மது அருந்தும்  காட்சிகளையும் , கெட்டவனை  மஹாத்மா  அளவிற்கு  காட்டும்  திரைப்படங்களுக்கு  கத்திரி  போடுங்கள்.   பாவம்  நீங்கள்  என்ன  செய்வீர்கள்  சமீபத்தில் வெளியான  ஒரு பிரபல படத்திற்கு  ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் இருந்தும்    படத்திற்கு  U  செர்டிபிகேட்  என்று  வரையறுப்பதில்  இருந்தே  உங்கள்  குழப்பம்  தெ ரிகிறது. ..  
  
 எம்ஜியார் சிவாஜி ஜெமினி  இன்னும் பல கலைஞர்கள்  காதல்  காட்சிகளில் நடிக்கும்  போது   அவர்கள் வயதானவர்கள்  ஆனாலும்  அந்த காதலில்  நம்பக தன்மை இருந்தது.  ரியலிசம் என்ற பெயரில்  பிளஸ் டூ  மாணவர்களை  காதலிக்க வைத்தது  புரட்சி படம்  என்று வெற்றி பெற்றதன் விளைவு   காதல் என்பதை கடை சரக்கு ஆகியது  .           அந்த  அலைகள் ் இன்னமும்  ஓயவில்லை.     விளைவே
இன்றைய கொடூரங்கள்.  .

திரை உலகினரே  மீண்டும்  என் வேண்டுகோள் . பொருந்தாத  காதல், துரத்தி துரத்தி காதல் , என்பதை வலியுறுத்தும்  காதல்  படங்களை எடுக்காதீர்கள்.  இயல்பாக  அரும்பும்  காதல்  தோல்வியுறும்  காதலை  கண்ணியமாக  ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்றவைகளை  தங்கள் படங்களில்  கொண்டு வாருங்கள்.  பாடல் வரிகள் .  கண்ணியமாக அமைவதாக இருக்கட்டும் .