Monday, August 31, 2015

inteligence


INTELLIGENCE IS NOT ENOUGH.

INTELIGENCE  IN OTHER WORDS COMMON SENSE OR JUDGEMENT. SOME SAY IT IS ABILITY TO ADAPT ONESELF TO JUDGE WELL, UNDERSTAND WELL AND REASON WELL.

IT IS A CAPACITY OF SUCCESFUL ADJUSTMENTTT IN ALL SORTS OF SITUATION.

INTELIGENCE IS NOT ENOUGH.  SOCIAL INTELLIGENCE  AND EMOTIONAL INTELLIGENCE ARE ALSO IMPORTANT FOR SUCCESS.

   INTELLIGENCE  alone is not enough; it has never been enough on its own. You may be an ordinary student but you can be an extraordinary success at whatever you choose to do. The two most important ingredients for a successful life are a goal and persistence with confidence.
   there  are many forms of intelligence.   and any one alone may not lead to success. The key is to know your strengths, but also be aware of weaknesses and know how to compensate for them.BRILLIANT PEOPLE ARE  OFTEN UNDONE BY LACK OF EMOTIONAL INTELLIGENCE.



according to martin luther king

We must remember that intelligence is not enough. Intelligence plus character--that is the goal of true education. The complete education gives one not only power of concentration, but worthy objectives upon which to concentrate. The broad education will, therefore, transmit to one not only the accumulated knowledge of the race but also the accumulated experience of social living."

It is a mistake to assume that intelligent people are necessarily good thinkers. Intelligence is a potential. Without the ability to harness that potential through ‘thinking skills’, however, it can be wasted.


here are social games, money games, status games and little mini-games within each professional discipline.
Intelligence doesn't necessarily give you an advantage in all these games, it might even handicap you (e.g., the social game). Either because a game is simple enough that it doesn't take more than average intelligence to fully master it, or perhaps more commonly because the game is too unpredictable / chaotic for intelligence to model it usefully at all.
For example, it doesn't matter how smart you are, you can't predict the weather reliably more than a week into the future, because the weather is a chaotic system. Predicting the weather isn't just a random example. In the real world you're much more likely to come up against non-linear problems than linear ones. Chaos makes fools of the best of us.
 Unfortunately for the unusually intelligent there aren't many of them around and life is generally not a math puzzle or a game of chess. Being more intelligent certainly makes you different but it won't make you more successful unless you're very careful to choose a lucrative field that can take full advantage of it inside a support structure that frees you from most of the drudgery.


Sunday, August 30, 2015

தனி ஒருவன்


தனி ஒருவன்  ஜெயம் ரவி படம் ஒரு பார்வை===

படத்தின் ஆரம்ப  காட்சியே   ரசிகர்களின் கரவொலிஉடன்தொடங்கி விட்டது..
சவாலான  வில்லன்  சமாளிக்கும் கதாநாயகன் . விறு விறு என்று  கதை நகரத் தொடங்குகிறது. கதை களம் வித்தியாசமாக இருக்கிறது . ஒட்டு மொத்தமாக அருமையான டீம் வொர்க் .  அமர்களப்படுத்தி இருக்கிறார்  அரவிந்த்சாமி .
அருமையாக பொருந்தி இருக்கிறார் ஜெயம் ரவி.  துளி கூட போரடிக்கவில்லை. வசனங்கள் பளீச் . நீங்கள் துப்பறியும்  நாவெல்  படிப்பவர்  என்றால்  நிச்சயமாக பிடிக்கும் . கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாத படம்.


பி      கு. பதினைந்து வயதிலேயே  தமது  சாமர்த்தியத்தினால்  குறுக்கு வழியில்
வாழ்கையின் உச்சத்துக்கு போகும்  ஒரு பாத்திரம் , ஊரிலுள்ள   அத்தனை தொழில்களையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும்  மகனின்   அரசியல் வாதி அப்பா   ஹவாலா மோசடி  மணல் கொள்ளை  இவைகளை படத்தில் பாக்கும்போது  ஏதோ  ஒரு குடும்பம் ஞாபகத்திற்கு வருது  ஆனால் படத்தின் ஆரம்பத்திலேயே  இவை கற்பனை பாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல  என்று போட்டு விடுகிறார்கள்.  அதனால் என் எண்ணம் தப்பு ..

வாதி               அப்பா  

Friday, August 21, 2015

chemmeen

செம்மீன்


இன்றைய முக நூல் பதிவில் தோழர்  ராமன் அவர்கள்  தகழி சிவசங்கரன் பிள்ளையின்  தோட்டியின்  மகன்  என்ற கதையை பற்றி  பதிவிட்டிருந்தார். நண்பர் மனோகரன்  சில வருடங்களுக்கு முன்  எனக்கு படிக்க கொடுத்த புத்தகம் அது. அற்புதமான  கதை.

எனக்கு ரொம்ப வருடங்களுக்கு  முன்பே  தகழி  என்ற எழுத்தாளரை பற்றி தெரியும் . ஏனெனில்  அவரின் செம்மீன்  கதையையும், கயறு  என்ற கதையையும்  படித்திருக்கிறேன்.  நீ எப்ப அந்த கதையை  தேடி படித்தாய் என்று  கேட்டால்  அதற்கு காரணம் சினிமாதான்.

ஒரு சுவாரசியமான செய்தி நேற்றுடன்  செம்மீன் வெளியாகி சரியாக ஐம்பது வருடம் ஆகிறது. .  என் நினவு இந்த படம்  சரியாக இருக்குமானால்  தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் தேசிய விருது பெற்ற படம்.
நான்  படத்தை பார்த்த பிறகுதான்  கதையை படித்தேன்.

கதையை சிதைக்காமல்  இயக்குனர்  ராமு காரியத்  படத்தை மிக இயல்பாக
எடுத்திருந்தார். இந்த படம் மீனவர்களின் வாழ்க்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது  என்ற  போராட்டமும்  நடைபெற்றது.  ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  பின்னாளில்  இயக்குனரை  கதையின் நாயகி மணந்து கொண்டார்  என்ற செய்தியும் உலா வந்தது .உண்மையா தெரியவில்லை.

மீனவர்களின் வாழ்கையை   எழில் கொஞ்சும் கேரள அழகில், வட  இந்திய இசை அமைப்பாளர் மற்றும் பாடகர்களை கொண்டு  உருவாகிய அந்த படத்தின் பாடல்  அற்புதம்.

தகழி சிவா சங்கர் பிள்ளை நிறைய எழுதி இருந்தாலும் , செம்மீன் , தோட்டி மகன்  கயறு போன்றவைகள்  காலத்தால் அழிக்க முடியாதவை .

என் எண்ண  அலைகளை பல வருடங்கள் பின்னோக்கி  செலுத்த காரணமாயிருந்த  தோழர் ராமனுக்கு நன்றி. 

Wednesday, August 19, 2015

ஐயா பதில் சொல்லுங்க ஐயா

 நானொரு முட்டாளுங்க ....

தெரியாம சில கேள்விகளை கேட்டா   முட்ட்டாபயன்னு  திட்றாங்க .

என்ன கேள்வின்னு கேக்கறீங்களா ?  இதோ கேள்விகள்


ஒரு தியாகி  மது கூடாதுன்னு  ரொம்ப வருஷமா போராடிக்கிட்டு இருந்தாராம்  அறவழியில.   ஆனா திடீர்னு  செல்போன் டவர்லே  ஏறி
போராட்டம் பண்ணும்போது செத்து போயிட்டாராம்.  நோக்கம்  போராட்டம் எல்லாம் சரிதான். செல்போன்  டவர்ல ஏறலாமா ?  கேட்ட்ட என்ன முட்டாப்பயன்னு  சொல்றாங்க ==


மதுவை விட  புகைபிடிப்பது ஒன்னும் பெரிய பாதிப்பு இல்லைன்னு  ஒருத்தர் சொல்றாராம்.  பின்னே புகை பிடித்தால் புற்று நோய் வரும்னு
ஏன் சொல்றாங்க  கேட்டா என்ன முட்டா பயனு சொல்றாங்க

ஆட்சிக்கு வந்து கடையை திறந்தவரே   நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்
கடையை மூடுவோம் என்கிறாரே - கேட்டா  என்ன முட்டா பயன்னு சொல்றாங்க ==

முன்னெல்லாம்  வர்க்கப்போராட்டம்   முதலாளி தொழிலாளி  அப்படின்னு பேசியவங்க எல்லாம்  இப்ப  தீண்டாமை , மது விலக்கு  மக்கள் நல கூட்டணி  என்று  பாதையை மாற்றி விட்டார்களே என்று கேட்டால்  என்ன முட்டா பயன்னு
 சொல்றாங்க .

 நாம குடிக்க கூடாத  மது உற்பத்தி செய்யற முதலாளியும் , பிடிக்கவே கூடாத சிகரெட்டை  விக்கிற முதலாளியும்  செழிப்பா  வாழறாங்க  ஆனா  நாம் சாப்பிட்டே ஆகவேண்டிய  உணவு பொருட்களை  உற்பத்தி செய்யற  விவசாயி  ஏன்  வறுமையிலே வாடராங்கனு  கேட்டா  முட்டா பயனு என்னை திட்றாங்க.

ஏங்க நான் முட்டாபயனாங்க ..

Tuesday, August 4, 2015

traffic lights

நாங்கெல்லாம்  எப்பவும் அப்படித்தான்.

டிராபிக் சிக்னல்ஸ்  இன்று நூற்றாண்டு விழா  கானுகிரதாம் . தகவல் உபயம் வழக்கம்போல் இணையம்தான்.    ம் ம் ம்  ஒன்னுமில்லீங்கோ  எங்க ஊரை நெனைச்சி   ட்ராபிக் சிக்னலை  நினைச்சிதாங்க  பெருமூச்சி.

நாங்க மனுசங்களுக்கு  தாங்க மரியாதை கொடுப்போம் .அக்றிணை களுக்கு  மரியாதை கொடுக்கலாமா.  நாங்க வாகனம் ஓட்டும்போது  சிக்னலை பாக்கமாட்டோமுங்க . பதிலா போலீஸ்காரர் எங்க இருக்கார்னு பாப்போம் .அவரு இல்லன்னு வச்சிகுங்க  ஒரே ஜாலிதான் சும்மா சர் புருன்னு  சர்க்கஸ் மாதிரி வண்டி ஓட்டுவோம் பாருங்க . அட போங்க அதுக்கு ஒரு  தில் வேனுங்க.                                                                                                                                  

போலீஸ்காரங்கன்ன  சும்மாவா .  அவங்க சிக்னலா யாரும் பாக்காத இடத்துல  நின்னுகிட்டு கபால்னு  வந்து மடக்குவாங்க பாருங்க  சூபேரா இருக்கும் .

சமயத்துல வேற வழியில்லாம  சிக்னல்ல நிக்கறோம்னு வச்சிக்கிங்க
உயிரை கைல பிடிச்சிக்கிட்டு  நிப்போம் பாருங்க . அப்ப பீ  பி   டெஸ்ட் எடுத்தீங்க   ரீடிங்  எப்படி இருக்கும் தெரியுமா . வாணாம் உடுங்க  அத பாத்தாலே மறுபடியும்  ரீடிங் ஏறும்.

சிக்னல்ல நிக்கும்போது நிச்சயமா நம்மள  உரசின மாதிரி  ஒரு பஸ்சோ , லாரியோ, அல்லது  குப்பை வண்டி லாரியோ பக்கத்துல நிக்கும் . பின்னாடி ஒரு இநோவாவோ  தவேராவோ  மோதுவதற்கு தயாராக நி க்கும் . இதெல்ல பாத்துகிட்டு இருக்கும்போதே  சர்ருன்னு  ஒரு இளவட்டம் வித்தியாசமான
ஒலி எழுப்பிக்கொண்டு  எந்த பக்கம்  போகப்போரானு தெரியாமலே குறுக்க நிப்பான்.  திடீரென்று வண்டி எல்லா ம் ஓட ஆரம்பிக்கும்  ஆனா சிக்னல்ல  சிகப்பு விளக்கு எரிஞ்சிகிட்டே இருக்கும். நீங்க விதிகளை மதிச்சி பச்சை விளக்கு வரட்டும்னு காத்திருந்தீங்க  உங்க விதி முடிஞ்சிடும். நீங்க உலகத்தோட ஓட்ட ஒழுகினால் தா ன்  ஒழுங்க வீடு போக முடியும் .

இதெல்லாம் பாத்துகிட்டு  நூற்றாண்டு காணுகிற  சிக்னல் லைட்டு  ஏ வீ எம் சரவணன்  கையை கட்டிக்கிட்டு அமைதியாய் இருக்கிற மாதிரி  தேமேன்னு நிக்கும்.

ஆனா ஒன்னு மட்டும் புரிய மாட்டேங்குதுங்க . சிக்னலோ  போலிசோ இல்லாத இடத்துல  ட்ராபிக் மிக அழகாக இருக்குதுங்க.  

Sunday, August 2, 2015

friendship day

நட்பு  உறுதியானது அல்ல -  அது ஒரு நீர்க்குமிழி ===

பிடிக்காதவர்கள் படிக்காதீர்கள் --

நண்பர்கள் தினம் . நம் வாழ்க்கையில்  எத்தனை நண்பர்களை சந்தித்து இருப்போம் . ஒவ்வொரு கால கட்டத்தில்  ஒவ்வொரு உயிர  நண்பன்  இருந்திருப்பான். இங்கு நான் நண்பன்  என்று  நண்பர் என்று குறிப்பிடுவது  ஆண் பெண் இரு பாலரையும்தான் .
 என் அனுபவத்தில் இருந்தே கூறுகிறேன் .

பள்ளி நாட்களில் முக்கியமான  கட்டத்தில் ஜாமெட்ரி பாக்ஸ்  கொடுத்தவன் உற்ற நண்பனாகினான் . இருவரும் ஒன்றாகவே சுற்றினோம்  காக்கா கடி கடித்து  கமர்கட் சாப்பிட்டோம்   வருடங்கள் ஓடி  வகுப்புகள் மாறியபோது
வேறு ஒரு  நண்பன்  அவனுக்கு ஏதோ உதவி செய்ய போக  அவன் என்னை உயிர் தோழனாக கருதினான்.  இருவரும் வகுப்பை  புறக்கணித்து  திரைப்படம்  பாப்போம்   சில நாட்கள் அவன் வீட்டில் சென்று நான் படிப்பேன் . அவன் என்வீட்டில் வந்து சில நாள் படிப்பான்   தெருவே எங்கள் ஒற்றுமையை கண்டு வியந்து பேசும் ..இதுதான் நட்பு என்று நினைதேன்

அடுத்து  கல்லூரி  அங்கு மூன்று நண்பர்கள்  . நாங்கள் நால்வரும்  ஓர் அணியாகவே சுற்றுவோம் . பெல் பாட்டம்  சைடு  கிருதா   ஒரே
 மாதிரி  உடைகள் . அவரவர்  வீடுகள் வேறு வேறு பகுதியில் இருந்தாலும் , ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி ஒன்றாகத்தான்  வருவோம் போவோம் . அட் இதுவல்லவோ நட்பு  என்று புளகாங்கிதம்  அடைந்தேன்.

அடுத்த கட்டம்  சற்று முதிர்ந்த மன நிலை கொண்ட பருவம் . இதில்தான்
எத்தனை அனுபவங்கள். ஏராளமான  உற்ற நண்பர்கள்  கிடைத்த பருவம் இது.
சில நண்பர்களுடன் தனியாக எடுத்த படங்கள்  ஒரு கனவு போல் இருக்கிறது .
சிலர் பெயர்கள் எனக்கு மறந்து கூட விட்டது. அந்த நண்பர்கள் எனது நெருங்கிய நண்பர்கள்  அந்த கால கட்டத்தில்.

 நண்பனின் திருமணத்திற்கு செல்வது, திருமண வேலைகளில் உதவிகரமாக இருப்பது , திருமணத்திற்காக  நண்பர்கள்   மனமகனான நண்பனின் வீட்டிற்கு .வெள்ளை அடிக்கும் பொறுப்பை கூட  ஏற்றுகொண்ட நட்பு கூட இருந்தது.

அது மட்டுமல்ல  தங்களின் காதலை  நம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் உண்டு. . மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியாத  விழயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர்களும் உண்டு . அது போல்  என்னை சார்ந்தவர்களுக்கு  தெரியாத என்னை பற்றிய  இன்னொரு பக்கத்தை  தெரிந்த நண்பர்கள் உண்டு . நட்பு இல்லையென்றால் உலகம் அழிந்திருக்கும் , நட்பு புனிதமானது  என்றெல்லாம் வசனம் பேசிய பருவமிது.

அத்தனை நட்புகளும்இன்று தொடர்கிறதா. ஏதோ ஒரு காரணத்திற்காக , கால மாற்றத்தினால், இட மாற்றத்தினால், குண மாற்றத்தினால்  பதவி மாற்றத்தினால்  சிறு சிறு மனத்தாங்கல்களால் , புதிய நட்பு கிடப்பதால்
எதை எல்லாம் உயிர் நட்பு என்று   நினைத்து இருந்தோமோ  அவை எல்லாம்
நீர்க்குமிழி மாதிரி தானே.

அப்போது உண்மையான நட்பே இல்லையா.  இருக்கிறது  அது ஆத்மார்த்தமானது . இத்தனை வயதில்  யோசித்து பார்த்தல்  ஒரு பத்து உயிர் நண்பர்கள் தேறுவது கடினம்.  ஆனால் எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஒரு சிலரே  மனதில் அழுத்தமானவர்களாய்  அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் வெகு தூரத்தில் இருக்கலாம் , நம்மை  காரணமின்றி வெறுப்பவராக இருக்கலாம் . சில நிர்பந்தங்களுக்காக  நம்  நட்பை  விலக்கும்  கட்டாயத்தில் இருக்கலாம் .
   
சிறு வயதி ல்   என்சகோதரனை  அவனது ஆசிரியர்   தோழன் என்பவன் யார்
என்று கேள்வி கேட்க  அதற்கு அவன்     நம்ம கூடவே வருவானே  அவன்தான் சார்னு  என்று   சொன்னது  இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.

இதோ நண்பர்தின வாழ்த்து அட்டைகளையும்  கைபட்டையும்  வாங்க இளைஞர்கள் குழு குழுமி இருக்கிறது   சில  வருடங்கள் கழித்து பார்த்தால் எத்தனை  நண்பர்கள்  இதே உணர்வுடன் இருப்பார்கள் என்று நினைக்கும் போதுஒரு மெலிதான புன்னகை  தவழ்கிறது /  அதிலிருந்து ஒரு குரல்  அங்கிள் உங்களுக்கு இதெல்லாம் புரியாது  என்று குரல் கொடுத்தது.


இத்தனையும்  தாண்டி நீண்ட வருடங்களாக  நண்பர்களாக  இருக்கிறோம் என்று சொல்லும் நண்பர்களுக்கு  சிறப்பு நண்பர்தின வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.