Friday, August 21, 2015

chemmeen

செம்மீன்


இன்றைய முக நூல் பதிவில் தோழர்  ராமன் அவர்கள்  தகழி சிவசங்கரன் பிள்ளையின்  தோட்டியின்  மகன்  என்ற கதையை பற்றி  பதிவிட்டிருந்தார். நண்பர் மனோகரன்  சில வருடங்களுக்கு முன்  எனக்கு படிக்க கொடுத்த புத்தகம் அது. அற்புதமான  கதை.

எனக்கு ரொம்ப வருடங்களுக்கு  முன்பே  தகழி  என்ற எழுத்தாளரை பற்றி தெரியும் . ஏனெனில்  அவரின் செம்மீன்  கதையையும், கயறு  என்ற கதையையும்  படித்திருக்கிறேன்.  நீ எப்ப அந்த கதையை  தேடி படித்தாய் என்று  கேட்டால்  அதற்கு காரணம் சினிமாதான்.

ஒரு சுவாரசியமான செய்தி நேற்றுடன்  செம்மீன் வெளியாகி சரியாக ஐம்பது வருடம் ஆகிறது. .  என் நினவு இந்த படம்  சரியாக இருக்குமானால்  தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் தேசிய விருது பெற்ற படம்.
நான்  படத்தை பார்த்த பிறகுதான்  கதையை படித்தேன்.

கதையை சிதைக்காமல்  இயக்குனர்  ராமு காரியத்  படத்தை மிக இயல்பாக
எடுத்திருந்தார். இந்த படம் மீனவர்களின் வாழ்க்கை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது  என்ற  போராட்டமும்  நடைபெற்றது.  ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  பின்னாளில்  இயக்குனரை  கதையின் நாயகி மணந்து கொண்டார்  என்ற செய்தியும் உலா வந்தது .உண்மையா தெரியவில்லை.

மீனவர்களின் வாழ்கையை   எழில் கொஞ்சும் கேரள அழகில், வட  இந்திய இசை அமைப்பாளர் மற்றும் பாடகர்களை கொண்டு  உருவாகிய அந்த படத்தின் பாடல்  அற்புதம்.

தகழி சிவா சங்கர் பிள்ளை நிறைய எழுதி இருந்தாலும் , செம்மீன் , தோட்டி மகன்  கயறு போன்றவைகள்  காலத்தால் அழிக்க முடியாதவை .

என் எண்ண  அலைகளை பல வருடங்கள் பின்னோக்கி  செலுத்த காரணமாயிருந்த  தோழர் ராமனுக்கு நன்றி. 

No comments:

Post a Comment