Friday, February 23, 2018

இல்லீங்க  இல்லீங்க  நிச்சயமாய் இல்லீங்க ....

சில நாட்களுக்கு முன் கமல் கட்சி தொடங்குவதை  பற்றி எனக்கு வந்த ஒரு செய்தியை  பகிர்ந்தேன். உடனே சென்னையில் இருக்கும் எனது  உறவினர் ஒருவரும்   புதுவையில் உள்ள எனது சகோதரனும்  நான்  கமல் கட்சியில் சேரப்போவதாக  எண்ணி விட்டனர்.  மேலும் எனது சகோதரனை   அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்களும்  என்ன உங்க அன்னான் கமல் கட்சியில் சேர்ந்து விட்டார் போலிருக்கிறதே  என்று கேட்டார்களாம். 

இல்லீங்க  நான் என்றுமே தேசிய கட்சியின் அபிமானி  குறிப்பாக  பெருந்தலைவர்  ஐயா அவர்களும்  எங்கள் நடிகர்திலகம்  இருக்கும் இடமே  என் அ பிமானத்திற்குரிய  கட்சி.  இந்த நிலை மாறவே  மாறாது.

மூன்று நாட்களுக்கு முன்  ஒரு  விபத்தில்  சிக்கிக்கொண்டு  காலில்  அடி பட்டது. , நல்ல வேலை பலமான  அடி .  கிடையாது.  ஆனால் கால் வீங்கி நடக்க முடியாத நிலை. மேலும் நான் சர்க்கரை நோயாளி ஆனதால் காலில் ஏற்பட்ட காயம்  கொஞ்சம் பிரச்சனையை உண்டாகி விட்டது.  அதனால் முகநூலில் சில நாட்களாக  என் பதீவு இடம் பெறவில்லை. .


 விஷயத்திற்கு வருவோம்.  கமலின் கட்சி பற்றி இணையத்தில்  பலவேறு கருத்துக்கள்  வருகின்றன . இருப்பினும்  அரசியல் ஆர்வலர் என்ற முறையில் எனது கருத்தையும் பதிவிடுகிறேன். 

கமலுக்கு ப்ரனாயி  விஜயனை பிடிக்குமாம். மம்தா    பானெர்ஜியையும்
பிடிக்குமாம். .  என்ன மாதிரியான கொள்கை  இது.

தமிழகத்தில் நல்லாட்சி வேண்டும் என் நினைப்போர்  முன்  நல்லாட்சி என்றவுடனே நினைவிற்கு வரும் பெயர்  பெருந்தலைவர்  ஐயா பெயர்.  அதை மறந்தும் கூட   கமல் குறிப்பிடவில்லை. . 

ஜாதி மத  விளையாட்டுகள் இருக்காது என்று கூறியுள்ளார்.  இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை . ஒரு வேலை தன்  படத்திற்கு  தேவர் மகன்  சபாஷ் நாயுடு  ஹாய் ராம்  என்று பெயர் இனிமேல் வைக்க மாட்டே ன்    என்று சொல்லுகிறாரா .

கோபத்தில் பொங்கி எழுந்த  பருக்கை யாம்.  அது என்ன கலைஞர் செயல் பட முடியாத நிலையில் இருக்கும் போதும்   ஜெயலலிதா  மறைந்த பிறகும் கோபம் பொங்கி வருகிறது.

ஐயா உங்கள் பட வெளியீட்டில் சிக்கல் என்றவுடனே  நாட்டை விட்டு வெளியேறுவேன்  என்றீர்களே  அரசியலில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்குமே  என்ன செய்வதாக  உததேசம்

தங்கள்  கட்சி கொ டியில் தென்னிந்தியா  குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கிறது  என்று சொன்னீர்கலாமே .   வடக்கு  வாழ்கிறது  . தெற்கு தேய்கிறது  என்று ஒரு காலத்தில் கவர்ச்சி  கோஷம் உலா வந்ததே. நினைவிருக்கிறதா. நிலைமை அப்படித்தான் இருக்கிறது என்று சொன்னால்  அதை சொல்லி ஆட்சிக்கு வந்த த்ராவிடங்கள்  ஏன் அதை மாற்ற முயற்சி செய்யவில்லை.  இல்லை இல்லை அப்படி இல்லை என்றால் எதற்கு  எதற்கு இப்படி ஒரு விளக்கம். தங்கள் கொள்கையின் ஊடே  தேசியம் என்றும்   சொல்கிறீர்கள்.

 சந்திரபாபு நாயுடுவை பிடிக்கும் என்று சொல்லி இருக்கிறீர்கள் .இருக்கட்டும்  அவர் ஹய் டெக்   முதல்வர்   நவீன . தொழில் நுட்பத்தில்  ஆந்திராவை   மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்.  இங்கே தமிழக விவசாயிகள்  தண்ணீருக்கே தள்ளாடிக்கொண்டிருக்கிறார்கள் . உடனடி  தேவை நமக்கு எது என்று தெரியாமல்  விவசாய பிரதிநிதி ஒருவரை பக்கத்திலே வைத்துக்கொண்டு  சந்திரா பாபு  நாயுடுவை  பிடிக்கும் என்றால்  தமிழக விவசாயின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டுமா  அல்ல  விஞ்ஞான  . முன்னேற்றம்  அவசியமா.

அப்புறம் உங்கள் கட்சியின்  உயர் மட்ட குழு  வேண்டாம் அது உங்கள் கட்சி உள்  விவகாரம் .

கமல் அவர்களே  இப்பவும் சொல்கிரே ன்   தமிழக மக்கள்  விரக்தியின் உச்சத்தில்  இருக்கிறார்கள் , ஏதாவது மாற்றம் வருமா என்று ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.  நீங்கள் புதிதாக காலம் இறங்கி இருக்கிறீர்கள் . உங்களை உங்கள் அரசியலை  விமர்சிப்பதற்கான  காலம்  இதுவல்ல என்று தெரியும்   பொ ருத்திருந்து பார்க்கிறோம். 

ஆனால் ஒன்றை மட்டும் நினைவு படுத்துகிரே ன்.  ஒரு படத்தில் ஜனகராஜ்   தின்பண்டம் வாங்குவார்  எல்லாத்திலும்  கொஞ்சம் கொஞ்சம்  போட்டு ஒரு கிலோ கேட்பார்.  அதைப்போல நகைச்சுவையான விஷயம் கிடையாது  அரசியல்.


Thursday, February 8, 2018

இளைய தலைமுறைகளோடு  பழகி  இன்றைய  ட்ரெண்ட்  எது அதை அப்டேட் பண்ணிக்கணும் என்பது  எனது  முயற்சிகளில்  ஒன்று . அது ஜிமிக்கி கம்மலாயிரூ ந்தாலும்,  சரி  பகத் பாசிலாக  இருந்தாலும் சரி.(ஒரு இடை செருகல் .. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு படம் பாத்திட்டு என் மகளிடம் , அந்த படத்துல ஒரு பையன்  கலக்கலா நடிச்சிருக்கார் பா  என்று சொல்ல என் மகளோ அப்பா அது  பகத் பாசில்பா  ஒனக்கு தெரியாதா  அது மட்டுமில்லப்பா  அவரு நஸ்ரியாவோட புருஷன்ப்பா  என சொல்லி  என்னை ஏளனமாக பார்த்தாள் )   சரி   அதை உடுங்க .  விஷயத்துக்கு வருவோம். 

ப்ரோபோசல்  டே வாம் ... அதை பத்தி தெரியுமா .  நான் தெரிஞ்சுக்கிட்டேனே .

PROPOSAL DAY   அப்படீன்னா  யுவன் யுவதிகள் தங்கள் காதலை  முன் மொழியும் தினமாம்.  அது இன்னிக்காங்க. அதாவது  FEB 8.   அது என்ன FEB 8.

VALNTINES DAY  VAARATHTHIL   இரண்டாவது  நாளா ம் ( FEB 7 --FEB 14) .
வாலெண்டின்ஸ் டே பற்றி நான் அறிந்தது  25 வருடங்களுக்கு முன் ( இந்த நேரத்தில்  அந்த   தினத்தை  எனக்கு அறிமுகம் செய்த  அன்றைய இளைய தலைமுறையை  சார்ந்த  இன்றும்  பல விஷயங்களை  அப்டேட்  செய்து கொள்ள உதவும்  அன்பு நண்பர்கள்  சங்கர் பாபு , அன்னபூர்ணா  வெங்கடேஷ் மற்றும் அவரது குழுவினருக்கு என் நன்றி. )

எதுக்கய்யா இப்ப இந்த பதிவுன்னு கேக்கறீங்களா. ?? பொறாமைதாங்க

எங்க காலத்துல காதல் கெ ட்ட வார்த்தை...  அப்ப  நாம நேசிக்கிற பொண்ண பாக்கறதே  அபூர்வம் . அப்படியே  பா க்க நேர்ந்தாலும்  பேச்சே  வராது   ஒரு வேல  நாம தைரியமா சொல்லணும் னு  நெனைச்சா  பின் விளைவு ஏதாகுமோ  அப்படீன்னு ஒரு பயம் வரும்.   அப்படி இருந்த காலம்  இன்னிக்கு தைரியமா  PROPOSAL DAY  கொண்டாடறாங்கன்னா  பொறாமை வராதா ??

சரி   ஒங்க ப்ரோபோசலை  சம்பத்தப்பட்டவங்க ஏற்றுக்கொள்ளவில்லை  என்றால்  என்ற நான் கேட்க  வேற யாருக்காவது  ப்ரோபோசல்  கொடுக்க வேண்டியது தான்  அதுக்காக  தாடி   வளர்த்துக்கிட்டு  வாழ்க முடிஞ்சிருச்சு என்று  சோக கீதம் பாட மாட்டோம்  என்கிறார்கள். (அது சரி இப்பவே நீங்க தாடில தானே இருக்கீங்க)

அங்கிள்  எங்க பாலிசி ரொம்ப சிம்பிள் . PROPOSAL  -- PICK UP   பிரச்சனைனா
BREAK UP   மறுபடியும்  ப்ரோபோசல்  பிக் அப்   பிரேக் அப் . 

அப்ப கல்யாணம் ??  அது வேற அங்கிள்  நீங்க வேற  எல்லாத்தையும் கொழப்பிக்கிட்டு..

தம்பிகளா  நீங்க எல்லாம் நல்லா   வருவீங்க ...

வாழ்க   PROPOSAL DAY      VALENTINES  DAY   
                                                                                                                            (தொடரும்)
       ..