Friday, November 30, 2012

நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்      திரை விமர்சனம்.

     படத்தின் தலைப்பே  வித்தியாசமாக இருந்ததால்  அரை மனதுடன்
      படத்திற்கு சென்றேன்.  ஆனால் ஒரு சிறு நம்பிக்கை. பீட்சா படத்தின்
      நாயகன்  விஜய் சேதுபதி கதாநாயகன்  என்பதுதான் அது.

      முற்றிலும் புதுமுகத்தை கொண்டு ஒரு நகைச்சுவை காவியத்தை
       இயக்குனர்  ஸ்ரீதரால்  மட்டுமே கொடுக்க முடியும்.  என்ற  எண்ணத்தை
       உடைத்து இருக்கிறார்  புதிய இயக்குனர்.

       படத்தில் பங்கேற்ற அணைத்து பாத்திரங்களுமே  ஒரு துளி கூட மிகை இல்லாமல்  தெளிவாக நடித்துள்ளனர்.

       மறு நாள் தான்  காதலித்த  பெண்ணுடன் வரவேற்பு அதற்க்கு மறுநாள்
திருமணம் என்ற நிலையில்  கிரிக்கெட் விளையாட சென்ற கதநாயகனுக்கு
மண்டையில் அடி பட்டு  temporary memory loss  ஏற்பட அதை மறைத்து அவன்  நண்பர்கள்  திருமணத்தை முடிக்க படும் பாடே படத்தின் கதை. ஒரு வித்தியாசமான  கதை களம்.

        கிளைமாக்ஸ்  காட்சியில் என்னை மறந்து சிரித்தேன்.

       தமிழ் சினிமா உலகத்தரத்திற்கு  நிச்சயம் உயரும் என்பது   சமீப  கால
       இளம் இயக்குனர்கள் தேர்வு செய்யும் கதையின் கருதான்.

     நல்ல படம் 

Friday, November 23, 2012

aasiriyar

சரியா தவறா எனக்கு தெரியலே .

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே  ஆசிரியர் தொழில் புனிதமானது என எண்ணம் கொண்டவன் நான். எவ்வளவு கண்டிப்பு இருந்தாலும் தம் மாணவர்களிடம் தனி அன்பு செலுத்துவதும்  பாடத்தை ஒழுங்காக நடுத்துவதும் தான்  நான் அறிந்த வரையில் ஆசிரியரின் பணியாக இருந்தது .
மாணவர்கள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு  அமைதியாக தன கடமையை ஆசிரியர்கள் ஒழுங்காக
செய்து வந்தனர்.  ஆனால் இன்றைய நிலை என்ன.  ஆசிரியர்கள் தன்பணியின்
ஊடே  வேறு சில வணிகங்களிலும் ஈடுபட்டு வரும்   காட்சியை  பார்க்கிறோம் ,கேட்கிறோம். நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை . எனக்கு நிறையஆசிரிய நண்பர்கள் உண்டு. அவ்வளவு ஏன் எங்கள் வீட்டிலேயே  ஆசிரியர்கள் உள்ளனர்.  என் ஆசிரிய நண்பர்களில் சிலர் சொந்த பணத்தை செலவழித்து  மாணவர்களுக்கு தேவையான  உதவிகளை செய்து வருகின்றனர். தன்  பணி  நேரம் தவிர்த்து  சுயமாகவே  சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர் .  எதற்கு இவ்வளவு பீடிகை என்கிறீர்களா ?   காரணமாத்தான்.

புதுவையில் ஒரு ஆசிரியர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கார் .
கொலைக்கான காரணம் தெரியவில்லை .  பத்திரிகை செய்திகள்   அந்த  ஆசிரியர் நில  வணிக தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும்  அதன் காரணமாக
கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது  என்று செய்திகள்
தருகின்றன  மேலும் அவரது கை பேசியில்  நிறைய  பெண்களின் தொலை பேசி எங்கள் இருந்ததாகவும்  அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாகவும்
செய்திகள் தருகின்றன. எது உண்மை என்று நமக்கு தெரியாது.  ஒரு ஆசிரியர் கொலை செய்யப்பட்டிருப்பது  வேதனையான விழயம்தான்.  ஆனால்
ஆசிரியர் சங்கத்தினர்  ஆசிரியருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று வகுப்பை
புறக்கணித்து போராட்டம்  நடத்தியதாக  ஊடகங்கள் தெரிவித்தன .

என் எண்ணத்தில் தோன்றிய எண்ணம் இதுதான்.

இதுவரையில் பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில், இது  தனி  மனித விரோத போக்கின் காரணமாக  நடந்ததாக தெரிகிறது.  இதற்க்கு எதற்கு
ஊழிய சங்கங்கள் வகுப்பை  புறக்கணித்தன.

ஆசிரிய பணியில் இருப்போர் ( எல்லோரும் அல்ல )  பணி நேரம் போக  மீதி நேரத்தில்  வட்டிக்கு விடுதல் , நில வணிகம்  இன்னும் பல பணிகளை செய்யலாமா

ஆசிரிய பணி  காரணமாக இந்த கொலை  நடந்திருந்தால்  போராட்டம்  ஒரு
அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும் .

சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று போராட்டம் நடத்தினால்  அதில் ஒரு அர்த்தம் உண்டு.  சமுதாய நோக்கமும் உண்டு .

தனி நபர் விரோதம் , குற்றவாளிகள்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ற அளவில்  தான்  என்னால் பார்க்க முடிகிறதே தவிர  ஆசிரியர் பாதுகாப்பு பிரச்சனை  என்று யோசிக்க முடியவில்லை. யார் சரி யார்தப்பு  யாரை கைது செய்ய வேண்டும் என்பது சட்டம் சார்ந்த பிரச்னை.  ஒரு உயிர்பலி  வேதனையான விழயம்தான் .  இருந்தாலும் சங்க அணுகுமுறை சரி இல்லை என்பதே  என் வாதம்
--- சரியா தப்பா  நீங்கள் சொல்லுங்கள்  எதுவாய் இருந்தாலும் .

 . 

Thursday, November 22, 2012

intha yosanai saathiamaa

இது சாத்தியமா?

 சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி பார்த்தேன்.
 ஒரு வருடதிற்கு  சுமார் ஒரு லட்சம் மாடுகள்  தமிழகத்திலிருந்து  அண்டை மாநிலத்திற்கு இறைச்சிக்காக  கடத்தப்படுகின்றன  என்பதுதான் அந்த செய்தி.

பயோ கேஸ்  மூலம் எரிவாயு  கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

மின் தட்டுப்பாடு இப்போது நம் முன் உள்ளமிகப்பெரிய பிரச்சினை . அணு நிலையங்களை பயன்படுத்துவது நிலக்கரியை பயன் படுத்துவது ஆகட்டும்
அது ஒரு பக்கம் நடக்கட்டும் .  மாட்டின் சாணத்தின் மூலம்  எரிவாயு பயன்படுத்துவது  சாத்தியம்தானே .

இறைச்சிக்காக மாடுகளை விற்பதை விட  அரசே அதைபராமரித்தால்
ஒரு லட்சம் மாடுகளின் சாணம் சிறிது அளவாவது  எரிபொருள் பயன் பாட்டை  குறைக்கும் அல்லவா.

மேலும் அரசே கால்நடை வளர்ப்பை  ஊக்க்கப்படுத்தினால் .  இன்னமும்
எரிவாயுவை சேமிக்கலாம் அல்லவா .

Wednesday, November 14, 2012

thuppakki thirai vimarsanam.

என்னை போன்ற ஆட்களுக்கெல்லாம்  தீபாவளி அன்று படம் பார்த்தால்தான் தீபாவளி  கொண்டாடியது போல் இருக்கும்.  இந்த வருடமும் நான் தீபாவளி கொண்டாடினேன் .  ஆம் துப்பாக்கி படம் பார்த்தேன்.

 துப்பாக்கி  முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது முருகதாஸ் படம். விஜய் தன பங்கை சரியாக செய்திருக்கிறார்.  திரைகதை ஒரு பர பர  விறு விறு . புத்திசாலித்தனம் நிறைந்த   மசாலா படம்.  லாஜிக் ஓட்டைகள்  இருந்தாலும்.
அது தெரியாதவாறு  சுவையான மசாலாவை அள்ளி தெளித்திருக்கிறார்  முருகதாஸ் .

காஜல்  அழகு பதுமையாக பல்வேறு சுகமான முகபாவங்களை வெளிப்படுத்தி
ரசிக்க செய்கிறார்'  விஜய் காஜல்  காதல்  கூழாங்கல் இருக்கும் தெள்ளிய நீரோடையில் கால் நனைப்பது  போன்ற அனுபவத்தை தருகிறது.

சத்யனும் ஜெயராமும் சுட சுட பொங்கலில் நெருடும் முந்திரியை போல சுவை  கூட்டுகின்றனர் .
பல இடங்களில் கைத்தட்டல் காதை பிளக்கிறது . அந்த காட்சியை விவரித்தால் படம் பார்க்கும் சுவாரிசியம் போய்விடும்.

நடனம் விஜய்க்கு மட்டுமே கை வரும் கலை.  அதை இதிலும் நிருபித்திருக்கிறார் .

தமிழில் jamesbond  படங்கள் மாதிரி வராதா என்ற என்போன்றவர்களின் ஏக்கம் இப்படத்தின் மூலம் ஒரளவு  சரி செய்யப்பட்டிருக்கிறது.  

                                                                                                                                                     

படத்திற்கு  மதிப்பெண்  என் பார்வையில்

                            direction                                                                                 30               60
                            விஜய்    கஜோல்                                                           10              -----
                            மாறுபட்ட சிந்தனை  கதைகளம்                            10               100
                            பொழுதுபோக்கு அம்சங்கள்                                     10
                                                                                                                          -----
                                                                                                                            60
                                                                                                                           ----       

Monday, November 12, 2012

vara vara kaadhal kasakkuthaiyaa

காதல் - வேலை அற்றோரின் பொழுது போக்கு  - பொழுது போகாதோரின் வேலை. இன்னும் என்னன்னமோ  காதலை பற்றி சொல்லி இருக்கிறார்கள் .  ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்  ஒரு காதல் நிறைய பேரின் வாழ்க்கையை சின்னபின்னமாக்கி உள்ளது. 

காதல் எதோ ஒருகட்டத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை வீசியிருக்கும். அது ஒரு தலை காதலாக இருக்கலாம் ,இரு மன காதலாக இருக்கலாம் சொல்லப்பட்ட காதலாக இருக்கலாம் , சொல்லப்படாத காதலை இருக்கலாம். 

இந்த காதல் சாதிப்பது என்ன . காதலுக்கு சமுதாய அந்தஸ்து இருக்கிறதா 
 எல்லா காதலும் திருமணத்தில்  முடிகிறதா. திருமணத்தில்  முடிந்தது சுகமாக தொடர்கிறதா . சுகமாக தொடர்வது எத்தனை சதவிகிதம். இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் காதலுக்கு எதிரி என்று சொல்லிவிடுவார்கள். 
காதல் ஜாதி மத பேதங்களை ஒழிக்கும் என்பார்கள்.  நடைமுறையில் இது  
பெருமளவு சாத்தியப்பட்டு இருக்கிறதா.  எல்லா காதலும் கல்யாணத்தில் 
முடிவதில்லை . அதனால் என்னகெட்டு விட்டது. காதல் என்பது ஒரு சுகானுபவம் . காதல் நிறைவேறவில்லை என்றாலும்  ஒருவரின் உள் மனதில் இன்னொருவரின் நலத்திற்காக வேண்டும் எத்தனயையோ காதல்களை நான் பார்த்திருக்கிறேன்.  

காதலர்கள் இரு வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்டுவிட்டாலும்  வருடங்கள் எவ்வளவு ஆனாலும்  எப்போதோ 
சந்திக்கும்போது  நலமா என வினவும் போது  கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே  அப்பாப்பா அது காதல்.  

மறுக்கப்பட்ட காதல், நிராகரிக்கப்பபட்ட காதல், தோல்வி அடைந்த காதல்  இன்னும் எத்தனையோ வகை காதலன்  காதலிகள் வேறு ஒருவருடன் இல்லறத்தை நல்லறமாகத்தான்  நடத்தி கொண்டிருக்கிறார்கள் .  எப்பவாவது இதயத்தின் ஒர்ரத்தில் ஒரு சிறு வலியுடன்.  எதற்கு இவ்வளவு  பீடிகை  என்கிறீர்களா .வாருங்கள் தர்மபுரி 
காதலுக்கு போவோம். 

தாழ்த்தப்பட்ட ஒருவனை இன்னொரு ஜாதியை சேர்ந்த பெண் திருமணம் செய்து விட்டாளாம் . அதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டாராம் . பொங்கி எழுந்த அவரது ஜாதியை சேர்ந்த மக்கள் ஒன்று 
சேர்ந்து அந்த தாழ்த்தப்பட்ட இளைஞனின்  ஊரை  சேர்ந்தவர்களின் வீட்டை  மற்றும் உடைமைகளை நாசம் செய்து விட்டனர் . பெருத்த சேதம் 
என்கிறது பத்திரிக்கை செய்தி.  அரசியல் வாதிகளுக்கு  லட்டு மாதிரியான 
தகவல். நாம் அரசியலுக்கு போக வேண்டாம்.  ஜாதி பிரச்சினைக்கும் போக வேண்டாம் . 

இவ்வளவு  எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக  திருமணம் செய்து கொண்ட 
அந்த ஜோடி  நடந்து முடிந்த கலவரங்களுக்கு பிறகு  நிம்மதியாய் 
வாழ்வை தொடங்க முடியுமா .   கிட்டத்தட்ட  200 வீடுகள் சூரையாடபட்டிருபபதாக  தகவல். மாணவசெல்வங்களின்  சான்றிதழ்கள்,
மதிப்பெண் பட்டியல்  புத்தகங்கள் , வாகனங்கள்  இன்னும் அந்த குடும்பத்தினர்  சேர்த்து  வைத்திருந்த  நகை மற்றும் அவர்களது சேமிப்புகள் அத்தனையும் கொள்ளையடிக்க பட்டு உள்ளது.  இவர்களின் காதலுக்கும் அவர்களின் உடமைக்கும் என்ன சம்பந்தம் .

இவர்களின் இந்த காதலால் விளைந்த விளைவுகள் .

    1. உறவினர்களின் வெறுப்பு  2)  வெறுப்புடன் கூடிய  பகை உணர்வுகள் .
     3.  நூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள்  தங்கள் வசிப்பிடங்களை விட்டு 
          அனாதையாக  ஒரு பொது இடத்தில சமைத்து  சாப்பிட்டு  உறங்கி  என்ன வாழ்கை இது என்று நொந்து  போனது. 4) எல்லாவற்றிற்கும் மேலாக  ஒரு வித பயத்துடன் எந்த நேரம் எது நடுக்குமோ என்ற அச்சத்துடன் வாழ்வது .  அமைதி ஏற்பட்டாலும்  அது நிலைக்க வேண்டுமே  என்ற தவிப்பு . இன்னும் சொல்லிகொண்டே போகலாம். 

இந்த காதல் ஜோடி என்ன செய்திருக்க வேண்டும் . பெற்றோர் சம்மதம் கிடக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் . அவர்களுக்கு  தெரியாதா இப்படி எல்லாம் நடக்கும் என்று.  காதலில் வெற்றி பெற இவ்வளவு 
இழப்பு தேவையா .  இன்னும் ஒரு படிமேலே   இப்படி ஒரு காதல்  தேவையா . 

காதலின் சின்னம் தாஜ் மஹால். நம் அனைவருக்கும் தெரியும் .
அனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்   mumtaaj  sha jehaanin
பதினொன்றாவது மனைவியோ  பதினாறாவது மனைவியோ .

வர வர காதல் கசக்குதையா --






Thursday, November 1, 2012

ippadiyum kooda

இன்றுமாலை  உறவினர்கள் சிலர் எங்கள் வீடிற்கு வந்திருந்தனர் .
அவர்களுடன் உரையாடியதில் சில  விஷயங்கள்  எனக்கு பிடிபடவே இல்லை.

அவர்கள் இரண்டு நாள் மழையை பற்றியும்,நீலம் புயலை பற்றியும் பேசியபோது  அவர்கள்எடுத்த முன் எச்சரிக்கை  நடவடிக்கை பற்றி 
ஒவ்வுருவரும்  கூறினர் . 

தானே புயல் அனுபவத்தை கொண்டு  தான் முதலிலேயே 6 பாக்கெட் 
பால் வாங்கி விட்டதாகவும், இன்னொருவர்  5 பாக்கெட் மெழு வர்த்தி 
வாங்கி வைத்துவிட்டதாகவும், மற்றொருவர்  வண்டிக்கு பெட்ரோல் 
மொத்தமாக போட்டு விட்டதாகவும் , மேலும் ஒருவர் இன்வேர்ட்டர் ஐ  சரி செய்து விட்டதாகவும்  என்று ஒவவொருவரும்  ஒரு முன் எச்சரிக்கை 
நடவடிக்கை பற்றி கூறினார். நான் கூட பரவாயில்லையே  மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைதேன். 

ஆனால் அடுத்து பேசியதுதான்  என்னை  அதிர்ச்சி அடைய செய்தது.

நாம் இவ்வளவு பாடு பட்டது  வீணாபோச்சே . கொஞ்சம் கூட சேதம் இல்லாமல் புயல்  எங்கோ  போய்  விட்டதே . பால் பாக்கெட் வேஸ்ட் .
பெட்ரோலில் காசைமுடக்கி விட்டேன் . கடன்காரங்க வழக்கமா  போற 
கரண்டை கூட  கொஞ்ச நாழி மட்டும் நிறுத்தி  மத்தபடி சரியா கொடுத்துட்டானே .  நான் டிவி க்கு  கரண்ட் இருக்கதுன்ன்னு  தேடிபிடித்து 
என் பழைய ரேடியோவை கண்டுபிடித்து அதுக்கு நாலு battery  வேறு போட்டு  ம்  ம்   எல்லாம் சுத்த வேஸ்ட்என்று    இந்த ரீதியில் புலம்பல்கள்  

அப்ப்பாடா  ஒரு வழியாக புயல் கடந்தது என்று ஒருசாரார்   மகிழ்ந்து  கொண்டு  இருக்க இன்னொருபக்கம் .  இப்படி ஓர்  விசாரம்.

எனக்கு மண்டை கொழம்புது  நீங்களாவது ஏதாவது சொல்லுங்களேன் .