Monday, November 12, 2012

vara vara kaadhal kasakkuthaiyaa

காதல் - வேலை அற்றோரின் பொழுது போக்கு  - பொழுது போகாதோரின் வேலை. இன்னும் என்னன்னமோ  காதலை பற்றி சொல்லி இருக்கிறார்கள் .  ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்  ஒரு காதல் நிறைய பேரின் வாழ்க்கையை சின்னபின்னமாக்கி உள்ளது. 

காதல் எதோ ஒருகட்டத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை வீசியிருக்கும். அது ஒரு தலை காதலாக இருக்கலாம் ,இரு மன காதலாக இருக்கலாம் சொல்லப்பட்ட காதலாக இருக்கலாம் , சொல்லப்படாத காதலை இருக்கலாம். 

இந்த காதல் சாதிப்பது என்ன . காதலுக்கு சமுதாய அந்தஸ்து இருக்கிறதா 
 எல்லா காதலும் திருமணத்தில்  முடிகிறதா. திருமணத்தில்  முடிந்தது சுகமாக தொடர்கிறதா . சுகமாக தொடர்வது எத்தனை சதவிகிதம். இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் காதலுக்கு எதிரி என்று சொல்லிவிடுவார்கள். 
காதல் ஜாதி மத பேதங்களை ஒழிக்கும் என்பார்கள்.  நடைமுறையில் இது  
பெருமளவு சாத்தியப்பட்டு இருக்கிறதா.  எல்லா காதலும் கல்யாணத்தில் 
முடிவதில்லை . அதனால் என்னகெட்டு விட்டது. காதல் என்பது ஒரு சுகானுபவம் . காதல் நிறைவேறவில்லை என்றாலும்  ஒருவரின் உள் மனதில் இன்னொருவரின் நலத்திற்காக வேண்டும் எத்தனயையோ காதல்களை நான் பார்த்திருக்கிறேன்.  

காதலர்கள் இரு வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்டுவிட்டாலும்  வருடங்கள் எவ்வளவு ஆனாலும்  எப்போதோ 
சந்திக்கும்போது  நலமா என வினவும் போது  கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே  அப்பாப்பா அது காதல்.  

மறுக்கப்பட்ட காதல், நிராகரிக்கப்பபட்ட காதல், தோல்வி அடைந்த காதல்  இன்னும் எத்தனையோ வகை காதலன்  காதலிகள் வேறு ஒருவருடன் இல்லறத்தை நல்லறமாகத்தான்  நடத்தி கொண்டிருக்கிறார்கள் .  எப்பவாவது இதயத்தின் ஒர்ரத்தில் ஒரு சிறு வலியுடன்.  எதற்கு இவ்வளவு  பீடிகை  என்கிறீர்களா .வாருங்கள் தர்மபுரி 
காதலுக்கு போவோம். 

தாழ்த்தப்பட்ட ஒருவனை இன்னொரு ஜாதியை சேர்ந்த பெண் திருமணம் செய்து விட்டாளாம் . அதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டாராம் . பொங்கி எழுந்த அவரது ஜாதியை சேர்ந்த மக்கள் ஒன்று 
சேர்ந்து அந்த தாழ்த்தப்பட்ட இளைஞனின்  ஊரை  சேர்ந்தவர்களின் வீட்டை  மற்றும் உடைமைகளை நாசம் செய்து விட்டனர் . பெருத்த சேதம் 
என்கிறது பத்திரிக்கை செய்தி.  அரசியல் வாதிகளுக்கு  லட்டு மாதிரியான 
தகவல். நாம் அரசியலுக்கு போக வேண்டாம்.  ஜாதி பிரச்சினைக்கும் போக வேண்டாம் . 

இவ்வளவு  எதிர்ப்பை மீறி வெற்றிகரமாக  திருமணம் செய்து கொண்ட 
அந்த ஜோடி  நடந்து முடிந்த கலவரங்களுக்கு பிறகு  நிம்மதியாய் 
வாழ்வை தொடங்க முடியுமா .   கிட்டத்தட்ட  200 வீடுகள் சூரையாடபட்டிருபபதாக  தகவல். மாணவசெல்வங்களின்  சான்றிதழ்கள்,
மதிப்பெண் பட்டியல்  புத்தகங்கள் , வாகனங்கள்  இன்னும் அந்த குடும்பத்தினர்  சேர்த்து  வைத்திருந்த  நகை மற்றும் அவர்களது சேமிப்புகள் அத்தனையும் கொள்ளையடிக்க பட்டு உள்ளது.  இவர்களின் காதலுக்கும் அவர்களின் உடமைக்கும் என்ன சம்பந்தம் .

இவர்களின் இந்த காதலால் விளைந்த விளைவுகள் .

    1. உறவினர்களின் வெறுப்பு  2)  வெறுப்புடன் கூடிய  பகை உணர்வுகள் .
     3.  நூறுக்கு மேற்பட்ட குடும்பங்கள்  தங்கள் வசிப்பிடங்களை விட்டு 
          அனாதையாக  ஒரு பொது இடத்தில சமைத்து  சாப்பிட்டு  உறங்கி  என்ன வாழ்கை இது என்று நொந்து  போனது. 4) எல்லாவற்றிற்கும் மேலாக  ஒரு வித பயத்துடன் எந்த நேரம் எது நடுக்குமோ என்ற அச்சத்துடன் வாழ்வது .  அமைதி ஏற்பட்டாலும்  அது நிலைக்க வேண்டுமே  என்ற தவிப்பு . இன்னும் சொல்லிகொண்டே போகலாம். 

இந்த காதல் ஜோடி என்ன செய்திருக்க வேண்டும் . பெற்றோர் சம்மதம் கிடக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் . அவர்களுக்கு  தெரியாதா இப்படி எல்லாம் நடக்கும் என்று.  காதலில் வெற்றி பெற இவ்வளவு 
இழப்பு தேவையா .  இன்னும் ஒரு படிமேலே   இப்படி ஒரு காதல்  தேவையா . 

காதலின் சின்னம் தாஜ் மஹால். நம் அனைவருக்கும் தெரியும் .
அனால் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்   mumtaaj  sha jehaanin
பதினொன்றாவது மனைவியோ  பதினாறாவது மனைவியோ .

வர வர காதல் கசக்குதையா --






No comments:

Post a Comment