Monday, December 31, 2012

puththaandu vaazhthukkal



                       புத்தாண்டு  வாழ்த்துக்கள்

                        நாளும் நாம் வளமும் நலமும்  பெற
                        அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
                        புத்தாண்டு வாழ்த்துக்கள்.

                        

Monday, December 24, 2012

dhariyaimaai sol nee manithan thaanaa

தைரியமாய் சொல்  நீ மனிதன்தானா ???.

        டில்லி கற்பழிப்பு சம்பவம்  நாட்டையே உலுக்கி கொண்டிரிக்கிறது .
         ஒவ்வொருத்தர்
ஒவ்வொன்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
       
         நம்ம தத்து பித்து  உளறுவாயன்  மன்னிக்கவும் ஓலக நாயகன்  அவரும்
         அவர் பங்கிற்க்கு  செப்பியிருக்கிறார்.  எப்படி தெரியுமா ?  பத்திரிக்கையில்
          அவர் சொன்னபடியே

                          அந்த பஸ் என்னுடைய பஸ்  --  அந்தப்பெண்  என்னுடைய
                           சகோதரி   --  கற்பழித்த -- அந்த நபர் என்னுடைய சகோதரன் .
                            கற்பழிப்பு குற்றத்திற்கு தூக்கு தண்டனை  தேவையில்லை .


          அடப்பாவி  மக்கா -   பெற்ற தாயே   குற்றப்பின்னணி உள்ளவனை
           தன மகன் என்று சொல்ல கூச்சப்படுவாள் .  ஆனால் அதி மேதாவி நீயோ
           அவனை உன் சகோதரன் என்று சொல்கிறாயே  வெட்கமாயில்லை.

            நடை பெற்ற சம்பவம்  சினிமா ஷூட்டிங்  அல்ல . பாதிக்கப்பட்ட
பெண்ணின்  உறுப்புகள்  சிதைக்க  பட்டிருக்கிறது .  கடந்த சில நாட்களாக
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்  அந்த பெண்.

 இன்று எதேச்சையாக கேபிள் டிவியில்  நாடோடி மன்னன் படம் பார்த்தேன் .
50 வருடங்களுக்கு முன்னாள் எடுத்த படம் . அதில் ஒரு காட்சியில் மக்கள் திலகம்   அரசனாக ஒரு சில அறிவிப்பை வெளியிடுவார். அதில் முக்கியமான
ஒன்று

                         கற்பழிப்புக்கு தூக்கு  தண்டனை . மற்ற குற்றங்களுக்கு
                         மன்னிப்பு உண்டு . கற்பழிப்பு குற்றத்துக்கு மன்னிப்பே கிடையாது
                          என்பார் .

அந்த மக்கள் திலகம் எங்கே . எதோ தன்னை அறிவு ஜீவியாக  பாவித்துக்கொண்டு  தனக்கும் புரியாமல் மற்றவருக்கும் புரியாமல் பேசிக்கொண்டிருக்கும்   நீ எங்கே .  நாளை  பாவங்களை ரட்சிக்கும் ஏசு பிறந்தநாள்.   அந்த ஏசுகூட இந்த பாவத்தை மன்னிக்க மாட்டார்

   பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே  இந்த பாவிகளை
   மறந்தும் கூட மன்னித்து விடாதே . ஆமென் .


Sunday, December 23, 2012

ivar pola yaar endru oor sollavaendum

 24 டிசம்பர்  மக்கள் திலகம் நினைவுதினம்.  இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல  யாரென்று  ஊர் சொல்லவேண்டும். சொல்லியபடியே வாழ்ந்தவர்.  

 நினைத்து  பார்க்கிறேன்.  1965-66 களில்  எங்க வீட்டு பிள்ளை  திரையுலகை கலக்கி பேயோட்டம் ஓடிய படம்.  புதுவை  அஜந்தா திரை அரங்கில் 100 நாள் ஓடி  100வது நாளைக்கு  மக்கள் திலகம்  மட்டும் ஏனைய  கலைஞர்களும் 
மேடையில் தோன்றினார்கள். 

அரங்கம் நிறைந்து  பின் தெருவெல்லாம் திருவிழா கூட்டம் . அப்போது புதுவை  இன்று போல் வளர்ச்சி அடையவில்லை. அஜந்தா திரை அரங்கிற்கும் முத்தியால்பேட்டை ஊருக்கும் இடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வீடுகளே இருக்காது. மக்கள்  கூட்டம்  முத்தியால்பேட்டை  மணி கூண்டிலிருந்து  காந்தி ரோடு பெருமாள் கோவில் வரை  நீண்டிருந்தது .
திரை அரங்கினில் உள்ளேதான் கலைஞர்களுக்கு  பாராட்டும் பரிசளிப்பும் கூடியுள்ள  கூட்ட்டத்தை  கண்ட காவல் துறையினர்  உடனே  வெளியே 
ஏற்பாடு செய்தனர் 

எனது அப்பா  ராதா  அங்கு மேலாளராக  பனி புரிந்ததால்  நிகழ்ச்சி அனைத்தும் அவர் பொறுப்பிலே .  அதனால் எனக்கும் அரங்கினில் செல்ல  சிறப்பு அனுமதி கிடைத்தது.  நிகழ்ச்சி முடிந்ததும்  திரை அரங்கினின் மேல்பகுதியில் 
கலைஞாகள் மற்றும் சிறப்பு  அழைப்பாளர்களுக்கு  விருந்து.   mgr  sarojadevi
nagesh matrum  சில பேருடனும்  நானும் உட்கார்ந்து சாப்பிட்டேன்.  அன்று 
என் சக மாணவர்கள் மத்தியில் எனது மதிப்பு ஜிவ்வென்று ஏறியது .

இருந்தாலும் அன்றைக்கு  எனக்கு ஒரு அலட்சிய மனோபாவமே இருந்தது. 
ஏனென்றால்  அப்போதே நான் நடிகர் திலகத்தின்  தீவிர விசிறி.  மக்கள் திலகத்திற்கு  அளிக்கப்படும் அந்த மாபெரும் மரியாதைகள்  அந்த வயதில் 
நடிகர் திலகத்திற்கு எதிரானது போன்று  எனக்கு தோன்றியது. 

ஒருபக்கம் அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் நான் மக்கள் திலகத்துடன் இருக்கிறேன்  என்ற பெருமையாய் இருந்தாலும்   ஒரு  சிவாஜி ரசிகன் அப்படி 
அங்கு  நிற்கலாமா  என்ற குற்ற உணர்சியுடன்  நின்றேன்.  

அதை இப்போது நினைத்தாலும்  அவமானமாக இருக்கிறது.  எப்பேர்பட்ட மனிதர் அவர்.  ஒரு முறை வெளிநாட்டினர் மக்கள் திலகத்தை சந்தித்து 
தமிழ்படம் பார்க்க வேண்டும்  என்ற விருப்பத்தை தெரிவித்தனர் . 
எல்லோரும்ம் அவர் படத்தைதான் போடுவார் என்று நினைத்தனர். மாறாக 
அவர்களுக்கு தில்லான மோகனம்பா ள்  படத்தை திரையிட்டு காண்பித்தார். 
அதோடு மட்டுமில்லாமல்  நம்முடைய தமிழனின் திறமையை அறிய 
தம்பி சிவாஜி யின்  படம்தான் சரியாக இருக்கும் என்றும் கூறினார் 

இன்றளவும் நான் சிவாஜியின் தீவிர விசிறியாய் இருந்தாலும்  மக்கள் திலகம்  என் இதயத்தின் ஓரிடத்தில்  சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். .

                                                                  ---

சம்மதமா  நான் உங்கள் கூட வர சம்மதமா என்று பாடியவரை ஞாபகம் .
இருக்கிறதா . அவருக்கும் இன்று அதாவது 24 டிசம்பர் நினைவுதினம். 
யார் தெரிகிறதா  திருமதி பானுமதி ராமகிரிஷ்ணாதன். 

Saturday, December 22, 2012

irukkum idaththaivittu illatha idam thaedi

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ---


       இரண்டு ஒட்டகங்கள்  பேசிக்கொள்கின்றன .

               அம்மா நமக்கு ஏன்   கால் எல்லாம் குச்சி குச்சியாய்   இருக்கு.

                மகனே நாம் பாலைவனப்பகுதியில் வேகமாக நடப்பதற்கு கடவுள்
                இம்மாதிரி படைத்திருக்கிறார்

                 அம்மா நமக்கு ஏன்  முதுகில அசிங்கமா  ஒரு முண்டு இருக்கு

                 மகனே நாம் நீண்டதுரம் பயணிக்கும்போது , கொழுப்பை சேகரிக்க
                 ஆண்டவன் நமக்கு  அளித்தது .

                  அம்மா நமக்கு ஏன்  பல்லு இப்படி அசிங்கமா இருக்கு .

                  மகனே பாலைவனத்தில் இருக்கிற  செடி கொடிகளின் இலைகளை
                 தின்ன  ஆண்டவன்தான்  இப்படி ஒரு பல்லை  அளித்திருக்கிறான் .

                 அம்மா அப்புறம் ஏம்மா  நம்மை  கூண்டில  அடைச்சி  வச்சிருக்காங்க .

                 ???????.

             என்  வீட்டில் நானும் என் மகளும் பேசிகொண்டிருக்கிறோம் .

                     எங்கப்பா போயிட்டு வந்தே
                      ஒரு கூட்டத்திற்கு போயிட்டு  வந்தேம்மா .
                      எதைபத்தி பேசினாங்க அப்பா.
                       மக்கள் ஒற்றுமையை பற்றி .
                      மக்கள் ஒற்றுமை நம் ஊர்ல இருக்காப்பா
                       என்னம்மா இப்படி கேட்டுட்டே  நம்மூர்தான் உதாரணம் அம்மா.
                       இங்கதான் முஸ்லிம் முருகர் கோயில்னு ஒன்னு இருக்கு.
                        வேளாங்கண்ணிக்கு  பொய் மொட்டை அடிச்சுக்கிற  இந்துக்கள்
                        நாமூர்ல இருக்காங்க. ஏம்மா நாம கூட அடிகடி
                        வேளாங்கண்ணிக்கு  போவேமே நினைவு இல்லையா.
                        அது மட்டும் இல்லைம்மா மனற்குல வினயாகர் கோயிலுக்கு
                         எல்லோரும் வராங்களே .

                அப்புறம் ஏம்ப்பா  மக்கள் ஒற்றுமையை பற்றி இங்க வந்து பேசினாங்க .

           ??????????

Wednesday, December 19, 2012

mayan padithathum viyanthathum

 மயன்காலேண்டர்  மாயன் நாட்காட்டி -- உலகம் அழியப்ப்போகிறது  என்று எல்லா இடங்களிலும் பேச்சு அடிபட்டு கொண்டிருப்பதால்  அது என்ன என்று
தெரிந்து கொள்ளும் முயற்சியில் இனையத்தில் உலவி வந்தேன் . படித்த செய்திகள் வியப்பின் உச்சத்திற்கே  இட்டு சென்று விட்ட து .

கமலஹாசன் ஒரு  படத்தில்  காயேஸ் (chaos )  theory  பற்றி சொல்லிருப்பார்.
அதே போல சில தொடர்புகள்  நம்மை அதிர வைக்கிறது.

MELGIBSON,   INDIANA JONES, ENTHIRAN, WWW WRESTLING  MAN, ROCKET,
THAMIZHAN , THAMIZHAN MAYAN THODARBU  விமானங்கள்  பல்லவ கால சிற்பங்கள்  அமெரிக்கன்   DOLLER   EURO, GEORGE WASHINGTON, RAJINI BAABA SYMBOL,  இந்திய ஆன்மிகம்  ஒற்றைக்கண்   குறியீடு , மயனின் கால்பந்தாட்டம்   சாத்தான்   சனி   உலக வெப்பம் ஒரு கடைந்தெடுத்த   பொய்
இப்படி ஒன்றுக்குள்   ஒன்று   எப்படி தொடர்பு படுத்தப்படுகிறது  என்பதை படிக்கும் போது  ஒரு மர்ம கதையை படிப்பது போல் உணர்ந்தேன் .

 இதை படிக்க இந்த தளத்திற்கு செல்லுங்கள் .

                  KELVIYUM NAANEPATHILUMNAANAE.BLOGSPOT.IN.
அவசியம் படிங்க .  வியப்பையும், மர்மத்தையும்  வரலாற்று நிகழ்வையும்
ஒரு சேர உணர   அவசியம் படிங்க.

Friday, December 14, 2012

kumki thirai vimarsanam

கும்கி  பட பாடல்கள் , சிவாஜி பேரன், பிரபு சாலமன்  கூட்டணி எதிர்பார்ப்பை
கூட்டி இருந்தது,

சினிமா  என்பது ஒரு  visual  மீடியா என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து இருக்கிறது  கும்கி படம். என்ன ஓர்  location. இப்படி ஒரு பசுமையான காட்சி கள் சமீபத்தில் .எந்த படத்திலும் வந்ததாக தெரியவில்லை.  

விக்ரம்  பிரபு - சிவாஜி பேரன்--, பிரபு மகன் -- நடிப்பில் துளிகூட சிவாஜி சாயலோ  பிரபுவின் சாயலோ இல்லை என்பதிலிருந்து தான் ஒரு சிறந்த நடிகர்தான் என்று நிருபித்து இருக்கிறார்.

கதாநாயகி  லக்ஷ்மி மேனன்  பாந்தமான முகம் . அளவான தைத்த சட்டை போல் அவரின் பாத்திரம் காண கச்சிதமாய் பொருந்துகிறது.

தம்பி  ராமைய்யா  கலகலபூட்டினாலும்  அந்த இடத்தில் வடிவேலு இருந்திருந்தால்  காமெடி காட்சிகள் உட்ச்த்திர்க்கு சென்று இருக்கும்.

பாடல்கள்.  ஆஹா  அந்த அருவி, மலை முகடுகள் , புல்வெளிகள்  அதிக ஆர்ப்பாட்டமில்லாத நடன அசைவுகள், இதமான பாடல் வரிகள் எல்லாவற்றிற்கும் மேலாக தேர்ந்த இசை . கேட்டு, பார்த்தால் தான் அதன் சுகம் புரியும்.

கதை களம் வித்தியாசமானது. ஆனால் கரு அருதப் பழசான  காதல் தான்.
எனினும் இயல்பான ஆபாசமற்ற  கண்ணிய காதல்  தென்றலாக வீசுகிறது.

படத்தின் உச்சகட்ட காட்சி யாரும் எதிர்பாராறது .

பிரபு சாலமன்  நம்மை மலை பகுதிகளுக்குள் கையை பிடித்து இழுத்து செல்கிறார்.

கும்கி மனதிற்கு மட்டுமல்ல  கண்ணுக்கும் குளுமையாக உள்ளது.

       திரை அரங்கில்  சிவாஜி ரசிகர்கள்  வைத்து இருந்த ஒரு  banner
        என்னை  கவர்ந்தது

         -------  1952ல்    நடிகர் திலகத்தின்            பராசக்தி
                      30 வருடங்கள் கழித்து
                      1982 ல்   இளையதிலகத்தின்         சங்கிலி
                      60 வருடங்கள் கழித்து
                      2012ல்  jr.இளைய திலகத்தின்       கும்கி

         தாத்தா , அப்பா போல   இவரும்  பெயர் பெறுவார் .


                     
                         

Wednesday, December 12, 2012

naadu paarthathu undaa?

இன்று இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும்போது  ஒரு நண்பர் எழுதிய ஒரு உண்மை சம்பவத்தை  காண நேர்ந்தது . இப்படியும் ஒரு மனிதரா ?
கண்கள் பனித்தன  நெஞ்சம் நெகிழ்ந்தது ( இந்த வார்த்தைகள்  வேறு எதற்கோ
வேறு ஒருவரால் பயன்பட்டது) இருந்தாலும் இந்த பதிவை படித்தபோது  உண்மையிலேயே ----- என்ன சொல்ல  எனக்கு வார்த்தை வரவில்லை.  இதோ அந்த நண்பரின் பதிவை  கீழே தருகிறேன்

காமராஜர் சொன்னது..."நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு!"...

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின் றி தவித்தேன்…
அப்போது காமராஜர் முதல்வர். பழை ய சட்டமன்ற விடுதியில் மண் ணாங் கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழிய ராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர் கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒரு முறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறேன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந் தார்.
ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டு தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்தது ம் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும் னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ் வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரிய மா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….
அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந் தது. அந்த உத்தரவை படித்து காட் டச் சொல்லி வீட்டில் அழுது புரண் டு கதறினார். ’அரசாங்க உத்தியோ கத்தில் எழதப்படிக்கத் தெரியாத வர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காம ராஜர் போட்ட உத்தரவு தான் அந்த கடிதம். 2  நாள் கழித்து பழைய சட்ட மன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடி வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவதுகாப்பாத்துங்க ஐயா’ என்று பித்து ப் பிடித்தவராக அழுகி றார். ஏதாவது சமாதானம் சொல்லனு மே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறி விட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறு முனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக் கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தி ல் இருந்து
யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல் வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.
மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாரு ங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில் லை….
அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட் டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங் கட்டி. உங்களை கை யோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசி யிருப்பது முதல்வரிடம்  என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங் கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என் று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமரா ஜை நோக்கி வாகனம் பறக்கிறது.
முதல்வரின் அறையில் உள்ள ஷோ பாவில், கண்ணத்தில் கைவைத் தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கா ர்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங் கட்டி முதலில் நுழைய அதி காரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண் டார்கள். நீங்க தான் மண்ணாங்கட்டி யா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்
தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதி காரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா… வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற் றுப் பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துகும் பிட்டுநான் தப்பு பண்ணிட்டேன். தெரி யாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச் சே… ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லி யாமே.
சமைக்கலயாமே…. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க … எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ் சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்க கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது
தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவுசொல்ல மண்ணாங் கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…
அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப் பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிக ளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடு த்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தை ங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிற கென்ன நினைத்தாரோ சற்று தயங்கி’போகிறபோது வெறு ம் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப் பாடு வாங்கிட்டு போய் கொ டுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்கமாட் டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.
மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்ட படியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.
ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியு ம். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தா ர்..
நன்றி – தமிழால் இணைவோம், முகநூல்
 .
இப்ப சொல்லுங்க இப்படி ஒரு தலைவரை நாடு பார்த்ததுண்டா . அவரை என் தலைவன்  என்று சொல்லி அவரின் கொள்கையினை  பின்பற்றுவதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.

    

Tuesday, December 11, 2012

bharathi

பாரதி            11.12 2012

 ஒப்பனை இல்லா  கவிஞன்
  ஒப்பற்ற கவிஞன்
  வீட்டை மறுதலித்து
   நாட்டை நேசித்த உத்தம கவிஞன்

   அடிமை  தேசத்தை  விடிவிக்க
    கவிதை ஆயுதம் எடுத்தான்
    கண்ணம்மா வை  காதலித்தான் 
    கயவர் மீது கவிதை சாட்டை வீசினான்
   
     தரித்திரத்தில் தவழ்ந்தான் ,
      சரித்திரத்தில் வாழ்கிறான்

       புதுவையின் தத்து புதல்வன்
       புதுமையின்  வித்தானவன் .

       அந்த அக்னி குஞ்சுக்கு இன்று பிறந்த நாள் .

        பாரதியை மறந்த  குருடர்களாய்  இருந்தாலும்
        பாரதியின்  பார்வையிலாவது  பாரதத் தை  பாப்போம் . 

Friday, December 7, 2012

viswaroopam

கமல் திறைமையான கலைஞர் தான்  அதில் சந்தேகம் இல்லை.  ஆனால்  திரையுலகில் இப்போது வருகிறவர்கள் கூட அவரை தாண்டி உயரமான இடத்துக்கு சென்று கொண்டிருகிராகர்கள் வியாபார ரீதியான வெற்றி படங்களை தருவதி.ல் ..

ஒரே நாளில் தொலைகாட்சியிலும்  திரை அரங்கங்களிலும்  தனது விஸ்வரூபம் படம் வெளியாகும் என்ற அதிர்ச்சி செய்தியை கசிய விட்டிருக்கிறார்.(அதிர்ச்சி நமக்கல்ல )கமல்.

சினிமா வட்டாரத்தில்  மாஸ் ஒபெனிங் என்ற  சொல் வுண்டு . அதாவது படம் திரையிடப்பட்ட அன்று  மிகப்பெரிய ஜனத்திரள் இருக்கும்  முதல் மூன்று நாட்களில்லேயே  கணிசமான வசூலை தயாரிப்பாளர் பெற்றிடுவார் . ஆனால் இந்த மாஸ் ஒபெனிங்  எல்லா நடிகர்களுக்கும் கிடைக்காது,

மாஸ் ஒபெனிங்  உள்ள நடிகர்கள்  முதலிடம் ரஜினி , பின் அஜீத் விஜய் சூர்யா  தான். இதில் கமலுக்கு இடம் கிடையாது.  கமல் படம்  முதல் நாள் அவரது ரசிகர்களால் நிரம்பி வழியும் பின் படத்தின் ரிசல்ட்  பொறுத்து  வசூல் அமையும்.  கமல் உலக நாயகனாய் இருந்தாலும்  இதுதான் படத்தின்  வசூல் நிலை.

சரி விழயத்துக்கு வருவோம் . விஸ்வரூபம் மிக நவீன தொழில்  நுட்பம் பயன்படுத்தப்பட்டு  மிக அதிகமான் பொருட்செலவில்  தயாரிக்கப்பட்ட படம்  .
கமல் இதில்  தான் சம்பாதித்தது அனைத்தையும்  முதலீடு செய்திருக்கிறார் .
கமலின் செலவை பார்த்து இரு விநியோக கம்பனிகள்  அதிலிருந்து விலகிவிட்டன  அதில் ஒன்று ஜெமினி கம்பெனி . போட்ட பணத்தை சிறிது  லாபத்துடன்  எடுக்க வேண்டுமானால்  வேறு எதோ வகையில் தான்  திரையிட வேண்டும்.  எனவே தான் கமல் ஒரே நேரத்தில் டிவி மற்றும் திரை அரங்குகளில் திரையிட எண்ணியுள்ளார் . இது சம்பந்தம்மாக டாட்டா  SKY
நிறுவனத்திடம்  ஒரு இணைப்புக்கு ஆயிரம் ரூபாய்  என்று பேசி இருப்பதாக தகவல் .

சுயநலத்திற்காக செய்தாலும்  ஒரு புதிய பாதைக்கு வழி வகுத்துள்ள  கமலுக்கு  நம் பாராட்டுதல்களை தெரிவிப்போம் 

Monday, December 3, 2012

sandhangal neeyaanaal


 சிப்பி இருக்குது முத்து இருக்குது  திறந்து பாக்க நேரமில்லைடி   ராஜாத்தி
 என்ற பாடலை இன்று கேட்க நேர்ந்தது .

 சில பாடல்கள் கேட்க  நன்றாக இருக்கும்  காட்சி அமைப்பு சகிக்காது .
 சில பாடல்கள் காட்சி ய மைப்பு பிரமாதமாக இருக்கும் . பாடல் சொதப்பி விடும். ஆனால் மேலே கூறிய பாடலில்  இசை, காட்சி அமைப்பு, நடிக நடிகையின் திறமை, பாடல் வரிகள் அத்தனையும் சரிவிகித கலவையாக
சேர்க்கப்ப்பட்டு இருக்கும்.

இந்தப்பாடலில் கமழும் ஸ்ரீதேவியும்  தூள் கிளப்பி இருப்பார்கள். பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள். கொடுத்த சந்தங்களில்  என் மனதை நீயறிய  நான் உரைத்தேன்  என கமல் பாடும்போது  அதுவரை உற்சாக மூடில் இருந்த ஸ்ரீதேவி சட்டென்று  மௌனமாகி  கண்ணில் நீர் தளும்ப  கமலின் மீது  சாய்வார் . பின்  விரல் கோர்த்து  நடப்பார் .  கண்ணியமான  நயமான காதல்
காட்சி . 

Sunday, December 2, 2012

thamizh ariv

தமிழ் அறிவோம் :

          கீழே குறிப்பிட்டுள்ள சொற்கள் எந்த  ஆங்கில வார்த்தையை  ,குறிக்கிறது
          தெரியுமா.

                 உட்படுசினம்                      உள்ளழற்சி                 உள்ளரவம்

                 உள்ளிடல்                            மிகுஉனர்ச்சி               கை அரவு

                 இழு விசை                           மறுகுதல்                     அலமரல்

                  நிலை திரிதல்                     விதிர் வ்திர்த்து          பதறுதல்

                           விடை   :

                           (TENSION)

                      தினமணி  பத்திரிக்கையில்  சில ஆங்கில வார்த்தைகளுக்கு
                      வாசகர்களிடமிருந்தே  தமிழ்ச் சொல்  கேட்டு பெறுகிறார்கள்.
                       மிக அதிகமான வாசகர்களால்  தெரிவிக்கப்பட்ட  வார்த்தை

                                                மனக்கொதிப்பு

                       பெரும்பாலான வாசகர்கள்  டென்ஷன் என்ற ஆங்கில வார்த்தைக்கு   மனக்கொதிப்பு என்றே தமிழ் ஆக்கம் செய்திருக்கிறாகள்.

                       மேலே குறிப்பிட்ட அனைத்து வார்த்தைகளும் நமது பழைய
 இலக்கிய நூல்களில் இருந் து  ஆதாரத்துடன்  அனுப்பி இருந்தார்கள் .

 அவர்கள் அடுத்து கேட்டுள்ள வார்த்தை     PARANOIA
    நம் நண்பர்கள் இதற்கான  தமிழ் வார்த்தையை தெரியபடுத்தலாமே.

             

Saturday, December 1, 2012

நீர் பறவை  திரை விமர்சனம் .

       எதிர்பார்புகளுடன்  சென்ற எனக்கு ஏமாற்றமே.

        சுவாரசியமே இல்லாத திரைகதை.  கொட்டாவி விட செய்யும் காட்சி அமைப்புகள் . எல்லாவற்றிற்கும் ஒரே முக பாவம் காட்டும் கதாநாயகன் .
காதலை மைய்யப்படுத்துவதா , இலங்கை கடற்படையினரால்  தமிழக மீனவர்கள் சுடப்படுவதை பற்றியா ,  சிறுபான்மை மக்களை  பற்றியா,
கடல் வாழ் மீனவர்களை பற்றியா  இல்லை சாதீய பிரச்சனையா  எதை எடுத்துகொள்வது என்ற தடுமாற்றத்தில்  இயக்குனர்  எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் எடுத்து  நம்மை பாடாய்  படுத்திஇருக்கிறார் .

சில நல்ல விழயங்கள் சொல்ல வேண்டுமானால்  ஒளிப்பதிவை  சொல்லலாம்.
 சரண்யா நடிப்பை சொல்லலாம்.

இப்படத்திற்கு வரி விலக்கு  கேட்டு இயக்குனர் உண்ணாவிரதம் இருந்ததாகவோ  அல்லது இருக்கப்போவதாகவோ  என் நண்பன் என்னிடம் கூறினான் .  அந்த செய்தி உண்மையாக இருந்தால்   அவரது கோரிக்கைக்கு
செவி சாய்த்து  இன்னும்   கூடுதல் சலுகையாக  படத்தை இலவசமாக
பார்க்க வழி செய்யலாம் .  என்னை போன்றவர்களின் பணமாவது மிச்சப்படும்.

இதனால் அறியப்படுவது யாதெனில்    அதி மேதாவித்தனம் ஆபத்தானது .