Monday, January 15, 2018

நண்பா உனக்காகத்தான் ..

இன்று காலை கோயிலில் சந்தித்த   எனது நண்பன்   ஏன்டா சும்மா முகநூலில் பழைய நினைவுகள், அரசியல்  காமராஜ் சிவாஜி  என்று எழுகிட்டிருக்கியே  நகைச்சுவையாய் ஏதாவது பகிர மாட்டாயா  என  கேட்டான் .. 
சரி  இன்று பதிவிடுகிறேன்  என்று சொன்னதினால் இந்த  பதிவு. .

இது எனக்கு வாட்ஸ் அ ப்பில்   வந்தது. 


அது  ஐம்பது வருடத்திற்கு  முன்னால்  ஒரே கல்லூரியில்  படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.  அதில் சங்கரும்  ரூபாவும்  பங்கேற்க வந்திருந்தனர். 
இவர்கள் பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி வரைக்கும் ஒன்றாக படித்தவர்கள். தற்போது வேறு வேறு மாநிலங்களில்  பேரன் பேத்திகளோடு  சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.  ஒரு துரதிர்ஷடம்  இருவருமே தங்கள் வாழ்க்கை  துணை யை இழந்தவர்கள்.  . 

இடையில் ஒரு சின்ன பிளாஷ் பேக் .   இவர்கள் இருவருமே  மனதிற்குள் ஒருவரை  காதலித்தார்கள். ஆனால்  ஒருவருக்கொருவர் அந்த எண்ணத்தை வெளிப்படுத்தவே இல்லை. 

இப்போது நிகழ் காலம்.  நிகழ்ச்சி  முடிந்து  இரவு  டின்னெர் . .  அப்போது  சங்கர் தன்   அருகில் இருந்த ரூபாவிடம்    நாம் ஒருவருக்கொருவர் துணையாக சேர்ந்து வாழலாமா .  சரி அல்லது முடியாது  என்று ஒரே வார்த்தையில் பதில்  சொல்லு   என்று சொன்னார்.   ரூபாவும்  சரி  என்று  சொல்லி விட்டார்.  இருவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று விட்டனர். 

சங்கருக்கு  மகிழ்ச்சி தாங்கவில்லை . ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்க வில்லை.   வயதானவர்க்கே உரிய  மறதி  நோய்  சங்கரனுக்கு உண்டு.  அதன் விளைவாக தாம் கேட்ட கேள்விக்கு ரூபா  சரி  என்று சொன்னாளா  அல்லது  முடியாது என்று சொன்னாளா  என்பது நினைவிற்கு வரவில்லை . எவ்வளவு முயற்சித்தும் நினைவிற்கு வரவில்லை. 

சரி  அவளிடமே   கேட்டுவிடலாம் என்றெண்ணி  ரூபாவிற்கு  போன் செய்தார்  சங்கர்.. போனை எடுத்தவுடன்  ரூபா  நான்  கேட்ட கேள்விக்கு  நீ சரி என்று சொன்னாயா  அல்லது முடியாது என்று சொன்னாயா  என்பது நினைவில்லை  நீ என்ன சொன்னாய் என்று கேட்டார் .  அடப்பாவி  நான் சரி என்றுதான் சொன்னேன்  என்று ரூபா  சொல்ல  சங்கருக்கு ஆனந்தம் தாங்க வில்லை.  

இங்கே ரூபா மனதிற்குள்   நல்லவேளை   நாம் சேர்ந்து வாழலாமா  என்று யார்என்னை  கேட்டது என்று நினைவில்லாமல்  இவ்வளவு நேரம் குழம்பிக்கொண்டிருந்தேன்  நல்லவேளை  சங்கரே போன் பண்ணி குழப்பத்தை தீர்த்து விட்டான்.  என்று சொல்லியவாரே தூங்க  சென்றாள் .