Monday, July 30, 2012

MUDAL MARIYAATHAI


இது தொடரட்டும் சுகமாக ....


 துப்பாக்கி சுடும் போட்டியில்  3வது  இடம் பிடித்து 

       ககன்  நரங்  இந்தியாவின்  முதல் 
       பதக்கத்தை  வென்றார் .

 சபாஷ் தம்பி உன் செய்கையை போற்றுகிறேன் . 

       

puriyaatha silapaerkku ethu naagareegam

பிறந்த நாள் கொண்டாட்டம் -- பெங்களூர்-- கல்லூரி மாணவ மாணவியர் -- இந்து அமைப்பு -- தாக்குதல் -- போலீஸ் --  இத்யாதி  இத்யாதி  செய்து தாள்களில் வாசித்திருப்பீர்கள்  தொலைகாட்சி வாயிலாகவும் பார்த்து இருப்பீர்கள். இதை தொடர்ந்து கண்டன குரல்கள் எழும்பும் . தனி மனித சுதந்திரம்  பெண்ணடிமை போக்கு பிற்போக்கு செயல் என மெத்த படித்த மேதைகள் மேடை தோறும்  பேசுவார்கள் .கிடைத்த பக்கங்களில் எல்லாம் எழுதி தீர்பார்கள் .

எனது சில கேள்விகளுக்கு மட்டும்  பதில் சொல்லுங்கள்.

நமது பிள்ளைகளோ  அல்லது சகோதர சகோதரிகளோ இப்படி ஒரு பார்ட்டிக்கு  சென்றால் நாம் அனுமதிப்போமா - மனதை தொட்டு சொல்லுங்கள் .

கல்லூரியில் படிக்கும்  மாணாக்கர்களுக்கு இப்படி ஒரு விருந்து தேவையா ? எதை நோக்கி செல்கிறீ ர்கள்  நீங்கள்?

நாகரீகம் என்பது அரைகுறை உடைகளில் இல்லை  அரை கிண்ண மதுவில்
இல்லை  ஆடை  கலைந்த ஆட்டத்தில் இல்லை .

மேற்கத்திய கலாச்சாரம் என்றால்  புகைப்படக்கர படம் எடுக்கும்போது  முகத்தை மூடிக்கொள்வது ஏன் ?

 இதெல்லாம் பிற்போக்குத்தனம் காலம் மாறிபோச்சு நீ ஒரு பழமைவாதி
இப்படிப்பட்ட வசவுகள் கிடைக்கும் என தெரிந்தேதான்  எதை சொல்கிறேன்.
அரைகுறை ஆடைக்கு பதில்லாக   அம்மணமாகவே அலையலாமே.

அந்த மாணவிகள் சொல்வதாக பத்திரிகை செய்தி எங்களை அடித்தவர்கள்  விலங்குக லை போல் நடந்து கொண்டார்கள் . அடப்பாவமே விலங்குகளை போல் இச்சையை தீர்த்துக்கொள்ள  நாகரீகம் என்ற போர்வையில்  கொண்டாட்டம் நடத்திய நீங்கள் கடுமையாக தண்டிக்க படவேண்டியவர்கள்
 
முறையாக வாழ்வோர்க்கு எது  நாகரீகம்  முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் .  

      ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
       உயிரினும் ஓம்பப்படும்.                                        


 நான்சொன்னதை பற்றி    நீங்கள் ?????









Sunday, July 29, 2012

aadi maadham

ஆடி மாதம் ஒரு காலத்தில்  நினைத்தாலே இனிக்கும் திருவிழா.
மழைக்காலம் தொடங்குவதர்க்கான முன்னோட்டம். தென் மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசும்போது சாரல் மழைச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலி சிலு வென்று போடுதம்மா தூறல்.  ஆடிமாத சிறப்பினை  குறிப்பாக பதினெட்டாம் பெருநாள் திருநாளை கல்கியின் பொன்னியின் செல்வன்  நாவல் படித்தோருக்கு நன்றாக நினவு இருக்கும்.
எனக்கு நினைவு தெரிந்தே காவேரி ஆற்றின் ஓரத்தில்  சித்திரான்னமும் 
கூட்டஞ் சோறும் நாங்கள் அனைவரும் சாப்பிட்டது  பசுமரத்து ஆணி போல் நெஞ்சில் இருக்கிறது.  கிராமங்களில் குறிப்பாக ஆற்றின் ஓரமாக  அல்லது நதியின் ஓரமாக குடும்பம் குடும்பமாக  விழாவினை கொண்டாடுவார்கள்ஆ டியில் உழவுத்தொழிலை  துவக்கி தையில் அறுவடை செய்வார்கள் .  ஆடிமாதம் அம்மன் கூழ் ஊற்றும் படலம் இன்றும் தொடர்கிறது . ஊர்கூடி ஒன்றாகும் திருவிழா அது . ஆனால் 
இன்று ஆடிபண்டிகை அப்படியா நடக்கிறது . 

 தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நகரத்து பக்தர்கள்  கொண்டாடும் 
ஆடி  திருவிழா ஒரு நேரடி பார்வை.

     சூரியன் உதிப்பதற்கு முன்னே   கன்ன்ன்னாத்தா  எங்க   செல்லாத்தா 
      கோயில் ஒலிபெருக்கியில் உச்சஸ்தாயில்  ஒலிக்கும். 

     நன்கொடை புத்தகத்தை  தூக்கிக்கொண்டு  மிரட்டலுடன் ஒரு கும்பல் .
      
     கோஷ்டி மோதல் - தன்மான பிரச்சனை,  வசூலில் கொள்ளை .

      கூத்து என்ற பெயரில்  கூத்தடித்தல் , மெல்லிசை  என்ற போர்வையில் 
       ஆபாச அங்க அசைவுகளுடன்  கருத்தாழமிக்க ???? கானங்கள். 

      எல்லாவற்றிற்கும் மேலாக  போக்கு வரத்து நெரிசல் . 

       ஒரே ஒரு நல்ல அம்சம்  பண்பாடு   காக்கும் நம்  பெண் இனம் 
         அன்றைய தினம் மங்களகரமாக இருப்பதுதான் . 

இத்தனை இருந்தாலும் திருவிழா திருவிழா தான். 

   சரி  சரி என்பங்கிற்கு நானும் ஆடி மாதத்தை கொண்டாட எனக்கு பிடித்த 
பாடல  கேக்கிரேன் .  நீங்களும் என்னைய திட்டிகிட்டே கேளுங்க .

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ம்ம்ம்ம்ம்ம்ம் காவிரியின் ஓரம்
ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்
ஆசையென்னும் வேதம் அஹ்ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்
நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த
நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்
அஆஆஅ ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
வீணை அவள் சி்ன்னம்
சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலை கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்
காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
ஆடி வெள்ளி தேடி ஆஆ..
உன்னை நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
காவிரியின் ஓரம்
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
 


                  



Saturday, July 28, 2012

SIRITHU VAAZHVOM 2

 பக்கத்துக்கு வீடு சிறுவன் சொன்ன சிந்திக்கவைத்த நகைச்சுவை.


 ஒரு  குல்லா (CAP)  வியாபாரி  வியாபாரத்துக்கு சென்றபோது  ஓய்வு  எடுக்க எண்ணி ஒரு மரத்தடியில் உறங்கினான் . அவன் உறங்கியபோது மரத்தின் மேல் இருந்த குரங்குகள்  அவனிடம் இருந் தா குல்லா  அனைத்தையும் எடுத்து கொண்டு மரத்தில் மேல் அமர்ந்துகொண்டன . கண் விழித்த வியாபாரி குல்லா க்களை  காணமல் திகைத்து  பின் மரத்தில் குரங்குகள் வைத்திருப்பதை கண்டான்.  உடனே சமயோசிதமாக தான்  அணிந்திருந்த குல்லா வை வீசி எறிந்தான் . உடனே குரங்ககளும் தங்களிடம் இருந்த குல்லாக்களை வீசி எரிந்து விட்டன . வியாபாரியும் குல்லா க்களுடன் வீடும் திரும்பினான் . 


ஆண்டுகள் ஓடின . வியாபாரி நோயுற்றான் . அவன் தன மகனை அழைத்து 
வியாபாரத்தை அவனை தொடர சொன்னது மட்டுமன்றி  குரங்குகளின் சேட்டைகள் பற்றியும் சொன்னான். அப்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் சொன்னான். 


வியாபாரத்துக்கு சென்ற மகனும் ஓய்வுக்கு மரத்தடியில்  தூங்க  குரங்குகளும் குல்லா வை திருட  ஒரு நமுட்டு சிரிப்புடன் குரங்குகளை பார்த்த வியாபாரியின் மகன்  தன தந்தை சொன்னது போல குல்லா வை 
வீசி எறிந்தான் . பதிலுக்கு குரங்குகள்  குல்லா வை வீசவில்லை.   இதைகண்டு  திகைத்து நின்ற வியாபாரியின்  மகனிடம்  வந்த ஒரு குட்டி குரங்கு 


         ஒனக்கு மட்டும்தான் ஒங்கப்பா  சொல்லித்தருவாரா ?











    

sirithu vaazhvom

நகைச்சுவை மனிதனுக்கு இன்றி அமையாத ஒன்று . வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி , பிறர் வயிர் எரிய சிரிப்பவர் மிருக ஜாதி என்ற ஒரு திரைப்பாடல்கூட உண்டு. சிரிப்பில் எத்தனை வகையுண்டு என்று கலைவாணர்  N.S.K.  ஒரு படத்தில் சிரித்தே  காண்பித்திருப்பார் . தினம் ஒரு நகைச்சுவை என்னும் சுவையை எந்த  வடிவிலாவது சுவைக்க நேர்ந்தால்  அந்த நாளே இனிமையாக இருக்கும்.  இப்போது நான் படித்த நகைசுவை ஒன்று உங்கள் பார்வைக்கு.


ஒரு அரசன் தன மந்திரியை ஒரு நாள் அழைத்து  இந்த நாட்டில் உள்ள மிகச்சிறந்த 5 முட்டாள்களை தன கண் முன் நிறுத்துமாறு கட்டளை இட்டான். மந்திரி செய்வதறியாது  திகைத்து பின் மனதை தேற்றிக்கொண்டு  ஒரு வாரத்தில் 5 முட்டாள்களை அழைத்து வருவதாக மன்னனுக்கு  வாக்களித்துவிட்டு  சென்றான்.


ஒரு வாரம் கழிந்தது . அரச சபை முன்னே மந்திரியும்   ஒவ்வொரு முட்டாளாக அறிமுகப்படுத்தினான். 


 அரசே  இவன் மாட்டு வண்டியின் மீது  அமர்ந்துகொண்டு கையில் பெரிய வைக்கோல் கட்டை  சுமந்துவந்துகொண்டிருந்தான்.  கேட்டதற்கு  மாட்டிற்கு வலிக்குமே என்றான்.  இவன் 5வது முட்டாள் .
                                                                                  
வேந்தே  தன் வீட்டின் கூரையில் முளைத்த புல்லை மேய  எருமை மாட்டை விட்டிருந்தான் . இவன்தான் 4வது முட்டாள்.                                                             


என்பணியை விட்டுவிட்டு முட்டாள்களை தேடி அலைந்தேனே  நான்தான் 
3வது முட்டாள். 


நாட்டில் எவ்வலோவோ பிரச்சனைகள் இருக்க  முட்டாள்களை கொண்டு வரச் சொன்னீர்களே  நீங்களே 2 வது முட்டாள் என்று கூற சபையே மிரண்டுபோய்  நின்றது.  ஆனால்  அரசரோ மந்திரியின் கூற்றை ரசித்தவாரே ஒப்புக்கொண்டு  சரி சரிமுதலாம்  இடத்தை பிடித்த முட்டாள் யார் என்று வினவ  ---     மந்திரி சிரித்துகொண்டே 


              வீட்டில, நாட்டுல , அலுவலகத்திலே , ஆன்மீகத்திலே , அரசியல்லே  இலக்கியத்திலே  சினிமாவிலே இன்னும் எது எதிவிலோ 
பிரச்சினகைகள்  இருக்க  வேலை மெனக்கட்டு இதை  படிக்கின்ற வர்களை  தவிர வேற  யார் இருக்க முடியும்    என்றார் 






       




Thursday, July 26, 2012

oothukira sangai oodhi vaippom

 புதுவை சட்டமன்றத்தில்  பஞ்சாலை பற்றி குறிப்பிடும்போது முதல்வர் தெளிவாக ஒரு  செய்தியை சொன்னார். அந்த பஞ்சாலை கடந்த பல  வருடங்களா கவே  நஷ்ட்டத்தில் இயங்கி வருவதாகவும் , பஞ்சாலை  செயல்பட்டால் 8 கோடிக்கு மேல் நஷ்டம் என்றும் அதுசெயல்படாவிட்டால்  3 கோடி மட்டும் நஷ்டம் என்று சொல்லிவுள்ளார்.  புதுவையில் பல் வேறு தரப்பினரும் சில பஞ்சாலை யில் வேலை  செய்பவர்களும்  பலவருடங்களாக வேலை இன்றி சம்பளம் பெறுவதை விரும்பவில்லை. பஞ்சாலைக்கு LAY OFF அளிக்கலாம் என்ற
ஆலோசனையை புதுவை முதல்வர் நிராகரித்து விட்டார்.  நம் முன் எழும் கேள்வி என்னவென்றால் எத்தனை நாட்களுக்கு  இது தொடரும் . இதற்கு தீர்வுதான் என்ன   தீர்வாக நான் சில முன் யோசனையை அடுத்த பதிவில் ஆலோசனையாக வைக்கலாம் என்று  நினைத்துள்ளேன்  அதற்குமுன்  உங்களிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் சொல்லுங்களேன் . . 

valimai ullavan vaichathu ellam

கொச்சி மங்களூர் பெங்களூர்  இடையே குழாய் வழியே ஏரி வாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின்  கெயில் நிறுவனம் செயல்படுத்த உள்ளது . இத் திட்டத்திற்காக தமிழ்நாட்டின் சேலம் கோவை கிருஷ்ணகிரி நாமக்கல் தருமபுரி திருப்பூர் போன்ற மாவட்டங்களின் வழியாக குழாய் பதிக்கபடவுள்ளது . இதனால் அப்பகுதிகளில் நிலம் கைய கப்படுதபடுகிறது .
அப்பகுதி மக்கள் தங்களின் நிலம் கைய கபடுத்தகூடாது என்று போராடி வருகின்றனர் .  இந்நிலையில்  கெயில் நிறுவனம்  தங்களின் குழாய்  பதிக்கும் பணிக்கு காவல் துரையின் பாதுகாப்பு வேண்டும் என உச்ச நீதி  மன்றத்தில் மனு செய்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம்  ஒரு  ஆரோக்கியமான  தீர்ப்பை  வழங்கியுள்ளது . அதன் சுருக்கமான விபரம் இது .

          தங்களின் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில்  விவசாயிகள் போராடுவது இயல்பான ஒன்று. அதை உத்தரவு என்ற பெயரில் நசுக்க முடியாது. இதனை வெறும்  ஒரு சட்டம் ஒழுங்கு ப்ரசினையாக பார்க்க
முடியாது . விவசாயிகள் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளித்து
அவர்கள்  ஏற்றுகொள்ளும் வகையில் தீர்வுகளை ஏற்படுத்தும் கடமை அரசுக்கு  உண்டு . எனவே  கெய்லின் மனுவை ஏற்க முடியாது .

           மேலும் அந்த தீர்ப்பில் நந்திகிராமம்  சிங்கூர் போன்ற நிலைமை வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இம்மாதிரி தீர்ப்புகளை பார்க்கும்போது  நம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது ..  இந்த நேரத்தில் புரட்சி தலைவர் ஒரு படத்தில் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
                                                                                                                                                                                       
   வலிமை உள்ளவன் வச்சவன் எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவன் சொல்லுவது எல்லாம் சட்டம் ஆகணும் தம்பி.

     




Sunday, July 22, 2012

UNARVUGALIN SANGAMAM

 கோபிநாத்தின்  இன்றைய (22.7.12)   நீயா  நானா  நிகழ்ச்சி   மனதை  மயில்
  இறகால்  வருடியது போல ஒரு சுக அனுபவத்தை கொடுத்தது.   ஒரு திரைப்பட பாடல்தானே  என்றில்லாமல் ரத்தத்துடன்  கலந்ததுபோல்
ஒவ்வொருவரும் லயித்து சுகித்து பாடியது  நெஞ்சம் முழுதும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.  80களின் பாடல்களும்  வாழ்கையும்  என்ற
தலைப்பில்  பங்கேற்றவர்கள் பேசினர் அல்ல அல்ல பாடினர்.

அது  ஒரு டிவி நிகழ்ச்சி என்பதையும் மறந்து  நானும் 40 வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டேன் .  அன்றைய பெல்பாட்டம்  பேன்ட்
சைடு கிருதா  பெரிய காலர்  வாய்த்த சட்டை  இளையராஜா பாடல்கள்  என்று  வாழ்க்கை யின்  வசந்த காலத்தை   இதயபூர்வமாக அனுபவித்ததை  நிகழ்ச்சியை பார்த்த யாராலும் மறுக்க முடியாது,

எந்த பாடலை சொல்வது.   வான் நிலா நிலா அல்ல  பாடலுக்கு ஒரு கதை,
ஒரே நாள் உன்னை நான் நிலவில் பார்த்தது  பாடலுக்கு ஒரு கதை.
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேலையில்  என்ற பாடலை குடும்பமே  ரசித்தது என்ற செய்தி.   நிகழ்ச்சி பெண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது . ஒரு பங்கேற்பாளருக்கு ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மலர்ந்தது .
ஒரு ராகம் பாடலோடு  காதில்    கேட்டது  ஒரு அன்பருக்கு.
 

டீக்கடையில்  10- 15  தேநீர்    குடித்து விருப்ப பாடலை  திரும்ப திரும்ப கேட்டு         மனதை ஆற்றிகொண்ட ஒரு  நண்பர் . இப்படி எண்ணற்ற உணர்வுகளின் சங்கமமாக 80களின் பாடல்களும் வாழ்கையும்  நிகழ்ச்சி  அமைந்தது .

பார்வை பரிமாற்றங்களை  வார்த்தை  கோர்வையாக்கி  இசையுடன்  இணைத்து  காதலை  வளர்த்த  சாகா வரம் பெற்ற பாடல்கள் அவை.

வார்த்தை வரிகள் அல்ல  வாழ்கையின்  புரிதலுக்கு  வளம் சேர்த்த உரம் அது.

வாழ்க்கையில் வென்றவர்களுக்கும்  தோற்றவர்களுக்கும் , வென்று தோற்றவர்களுக்கும் , தோற்று  வென்றவர்களுக்கும்  இந்த நிகழ்ச்சி
அரிக்கும் இடத்தில்(  ரணம் ஆனாலும்).  சொரியும் சுகம் போல  இருந்திருக்கும் .
ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் வடுக்களை வருடும்போது  எப்போதோ
பெற்ற ரணங்களும் ரசிக்கப்படும்.

வாழ்க்கையின் பிளாஷ் பேக்கை  வெளிச்சம் போட்டு காட்டிய  கோபிநாத்
அவர்களுக்கு ஒரு பாராட்டுதல்களை தெரிவிப்போம்.

நிகழ்ச்சியை   தவறவிட்டவர்கள்  மறு ஒளிபரப்பின் பொது  கட்டாயம் பாருங்கள்.

2222



Wednesday, July 18, 2012

pinnnokkia ninaivugal.

ராஜேஷ்கன்னா  காலமானார் . 

இது ஏதோ ஒரு ஹிந்தி நடிகனின் மரணசெய்தி என்று   சிலர் எண்ணக்கூடும் .  70களின் யுவன் யுவதிகளை கேட்டுப்பாருங்கள் .  ஹோட்டல்  பெயர்களில்  ராஜேஷ் , அந்த வருடத்தில் பிறந்த குழந்தைகளின் பெயர் ராஜேஷ் . அவர் நடித்த ஆராதனா  படத்தின் பெயர் கூட பல டீக்கடைகளுக்கு வைக்கப்பட்டது.  எங்கெங்கு காணினும் ராஜேஷ் ராஜேஷ். 

1965ல் தீவிரமான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில்  பங்கு கொண்டவனில் நானும் ஒருவன். 
அந்த போராட்டத்தின் விளைவாகத்தான்  67ல் தி மு க அரசு பதவி ஏற்றது . ஹிந்தி என்று சொன்னாலே அனைவருக்கும் வெறுப்பு .  ஏறக்குறைய ஒரு தலைமுறை  ஹிந்தியை எதிர்த்து இன்றுவரை ஹிந்தி தெரியாமலே இருக்கிறது என்னை போலே . 

ஆனால் ஒரு ஆச்சரியமான முரண் என்னவென்றால் 70களில் வெளியான ராஜேஷ் கண்ணாவின் ஹிந்தி திரைபடங்கள் தமிழகத்தில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 
ஆராதனா  ஆனந்த்  அந்தாஸ் போன்ற படங்கள்  தமிழகத்தை ஹிந்தி பக்கம் திருப்பியது.

அவரின் படத்தை பார்க்காதவர்கள் நண்பர்கள்  வட்டத்தில்  கேவலமாக பார்க்கப்பட்டனர் .
இரண்டு வரிகளாவது அவர் படத்தின் பாடல்களை பாடவில்லை  என்றால்  நட்பு வட்டம் மட்டும்  அல்ல  கன்னியரின் கூட்டம்  ஒரு பொருட்டாகவே உங்களை மதிக்காது.  எனது நண்பன் ஒருவன்  ஜிந்தகி ஏக சப்பார்  என்று தப்பு தப்பாக பாடி தன் தோழியை  இழந்தான் என்பது ஒரு கொசுறு செய்தி.  பாடல்களுக்க்கவே  ஹிந்தி கற்றுக்கொண்ட நண்பர்களும் உண்டு.

ஒரு அரசாங்கத்தையே மாற்றக்கூடிய  பலம் பொருந்திய ஹிந்தி எதிர்ப்பு என்னும் ஆயுதம் ராஜேஷ்  கண்ணா வரவிற்கு பின் கூர் மழுங்கியது.  பிற்காலத்தில் ஹிந்தி திரைப்பட மோகத்தில் \இருந்த தமிழனை   மீட்டு வந்தது இளையராஜா  என்பது வேறு கதை .                                        

தொடர்ச்சியாக  15க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்தவர் 
தன்னைவிட  13 வயது குறைந்த  டிம்பெல் கபாடியவை மணந்தவர் . 
இந்தியாவையே தன்னை நோக்கி திரும்ப வைத்தவர் 

என்  பதின் பருவத்தை நினைக்க செய்தவர் .  அவரின் மறைவு  என்போன்றவர்களின்  பல்வேறு எண்ணங்களை அசை போடசெய்துவிட்டது .  ரூப் தேரா   மஸ்தானா  என்ற 
பாடல் ஒலிக்கும் போதெல்லாம்  எங்காவது ஒரு யுவனும் எங்காவது ஒரு யுவதியும் 
ராஜேஷ்கன்னா  என்னும் ஒரு புள்ளியில்  மையப்ப்பட்டிருப்பார்கள்.






     
  




Saturday, July 14, 2012

ninaivalae silai seidhu

கொள்கையை  ஒரு கோடியில் ஒதுக்கி விட்டு 
கொள்ளையில் பல  கோடிகள்  ஒதுக்கியோர்  மத்தியில் 
பிள்ளைகள் கல்வி பெறவும் எல்லை இல்லா ஏற்றம் பெறவும் 
நீ விதைத்த விதையின்  விருட்சமாக வளர்ந்த எண்ணற்றவிழுதுகளில் 
ஒரு சிறு விழுது  உன்னை  நன்றியுடன் நினைவு கூறுகிறது . 

                               சரிந்த சரித்திரம் மீண்டும் நிமிர்ந்து நடந்திட 
              தலைவா   மீண்டும் பிறந்து வா  

july 15  காமராஜர்  அவதரித்த தினம் . 

LE QUATORZE JUILLET- RAJA PANDIGAI

le quatorze jullete -- raja pandigai  - வருடா  வருடம் கொண்டாப்படும் ஒரு திருவிழா . பாஸ்டில் சிறையுடைப்பு நாளே ராஜா பண்டிகை என்று கொண்டடபடுகிறது.  இந்த நாளே  பின் நாளில்  french  புரட்சிக்கு வித்திட்டது . இது பிரான்ஸ் நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் .


புதுவையிலும்  ஒருகாலத்தில் மிகசிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த திருவிழா இப்போதும் கொண்டாடப்படுகிறது .ஆனால் அன்றைய . நாளில் இருந்த உற்சாகம் இப்போது இல்லை .

இப்போது நேரு சிலை இருக்கும்  இடத்தில்தான் அப்போது பல்வேறு நிகழ்சிகள் நடைபெறும் .நிறைய போட்டிகளும் நடக்கும். அதில்  மிகவும் சுவாரசியாமான போட்டி  வழுக்கு மரம் ஏறுதல்...  ஒரு உயரமான கம்பத்தில் நிறைய பரிசு பொருட்கள் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும். கம்பத்தின் மீது வழுக்கும் வஸ்துக்களை தடவிஇருப்பார்கள்.நாம் அந்த வழுக்கு மரத்தின் மீது ஏறி பரிசுபோருட்களை எடுத்துகொள்ளலாம் . மரத்தில் ஏறும் பொது நாம் வழுக்கி வழுக்கி விழுவோம். பார்க்க மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

பள்ளி நாட்களில் நானும் ஒருமுறை கலந்த கொண்டேன் .  வெற்றிபெறவில்லை என்பது வேறு செய்தி, ஆனால் வீட்டில் விழுந்த அடி இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது . காரணம் என்ன  என்றால்  அந்த வழுக்கு மரத்தில் பன்றி கொழுப்பு தடவி இருப்பதாக  எங்கள் வீட்டில் சொல்லப்படிருக்கிறது . அது மட்டுமில்லை  உடம்பில் உள்ள கொழுப்பு போகவேயில்லை.  நான் அறிந்தவரையில்  வாகனத்தில் பூசப்படும்  greese தான்  வழுக்கு மரத்தில் உள்ளது . இதுஎனக்கு நண்பர்கள் சொல்லி  உசுபேற்றிவிட்டு போட்டியில் கலந்துகொள்ள செய்து  உடம்பை ரணகளம் ஆக்கி விட்டார்கள்.

பிறகு நான் 3 நாட்கள்  செங்கல் கொண்டும், வைக்கோல் கொண் டும் உடம்பை தேய்த்து  தேய்த்து செங்கல்லும் வைக்கோலும் கரைந்ததுதன் மிச்சம்.

இன்று வரை வழுக்கு மரத்தில்  பூசப்படிருந்தது  பண்ணி கொழுப்பா அல்லது க்ரீசா என்று எனக்கு தெரியவில்லை.   உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் .  

Friday, July 13, 2012

potta potti kaataa kusdhi

தாராசிங்  - இந்த பெயர்  ஒருகாலத்தில் தமிழ் நாட்டின்  பட்டி தொட்டிகளிலெல்லாம் பேசப்பட்ட பெயர்.  நான் சிறுவனாக இருந்தபோது    தாராசிங்கின் பரம விசிறி . அப்போதெல்லாம்  தொலைகாட்சி  இணையதளம்  எதுவுமே கிடையாது. பத்திரிக்கைகளும் வானொலியும் தான் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் சாதனமாக இருந்தது.  தாராசிங் மல்யுத்தத்தில் கலந்து க்கிறார்  என்றால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் . அதிலும் அவர் கிங்காங் என்ற  வீரருடன் போட்டி என்றால் இரட்டிப்ப்பு  மகிழ்ச்சி .  எம்  ஜி  யார்  என்றால் நம்பியார்  மாதிரி  தாராசிங்  என்றால் கிங்காங்.

போட்டா போட்டி  காட்ட குஸ்தி --  கில்லெர்    தாரசிங்க்ஹின்  கிடுக்கிபிடி --
மரண அடி ரத்தகளறி  -- கருந்தேளின் உடும்புப்பிடி   காண தவறாதீர்கள்  என்று பல்வேறு  விதமான தலைப்புகளில் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யப்படும் .

என் நினைவுக்கு எட்டிய ஒரு போட்டியில்  கிங்காங்  தாராசிங் மோதிகொண்டிருக்கும் போது  கிங்காங் நடுவரை நோக்கி ஒரு குத்து விட    ஒரே  பரபரப்பு . அந்த போட்டியில்  கிங் காங் தகுதி நீக்கம் செய்யப்பட்டு தாராசிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


தாராசிங் மாவீரன் படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்  ஆனால் அறுபதுகளிலேயே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார் . படத்தின் பெயர் எங்கள் செல்வி .

போட்டியில் கிங் காங் நடுவரை தாக்கினர் என்று சொன்னேன் அல்லவா  அந்த நடுவர் யார் என்றால் இன்னொரு புகழ் பெற்ற மல்யுத்த   வீரர் அஜீத்சிங்கின்  தந்தை ,. இந்த அஜித்சிங் தான்  வரலக்ஷ்மி  என்ற நடிகையை  மணந்து கொண்டவர் . இந்த வரலக்ஷ்மி குலேபகாவலி படத்தில் நடித்தவர் .


இப்போதெல்லாம் சிக்ஸ் pack  என்கிறார்களே அப்போதே தாராசிங் கட்டுமஸ்தான உட்லைமைப்பு கொண்டவர் .

ஒரு அரசியல்வாதியாக , ஒரு நடிகராக, ராமாயணத்தில் ஹனுமான்  வேடம்  போட்டவராக ,  டி வி  நடிகராக  என்று அவர் அறியபட்டலும் , என்னை பொறுத்தவரை  அவர் ஒரு மல்யுத்த கலையின் மாமேதை .  

ஒரு கொசுறு செய்தி -  தாராசிங்கின்  தம்பி   ரந்தாவா   நடிகர் திலகம் நடித்த ராஜா படத்தில் நடித்துள்ளார் .

Thursday, July 5, 2012

konjam sindhikkalamae

பிரதோஷ வழிபாடு : கடந்த சில வருடங்களாகவே  புதுவையில்  பிரதோஷ வழிபாடு நாளுக்கு நாள்  ஆன்மீக அன்பர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது
வழிகிறது  கூட்டம் மட்டும் இல்ல  கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பாலும் தான் .  நான் வசிக்கும் பகுதியில் ஒரு கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும்.. கோவிலில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் எனது வீடு உள்ளது..  நான் வீட்டில் இருந்து கொண்டே பிரதோஷ பூஜை ஆரம்பித்தாகிவிட்டது என்பதை அறிந் து கொள்வேன் . இது என்ன பிரமாதம்  என்கிறீர்களா . நான்  கோவில் மணி அடிக்கும்  சப்தத்தை வைத்தோ  அல்லது வீட்டிலிருந்து பார்த்தோ அறிந்து கொள்ள மாட்டேன் . உண்மையை சொன்னால் எனக்கு என்று பிரதோஷம் வரும் என்றே தெரியாது..

ஆனால் என்னால் சரியாக பிரதோஷ நேரத்தை சொல்லமுடியும்..

எப்படி என்றால்  எங்கள் வீதியில் உள்ள வடிநீர் வாய்க்காலில்  ஓடும் தண்ணீர்
அன்று மட்டும்   பாலாராக ஓடும்.. 600 மீட்டர் தொலைவில் உள்ள எங்கள் வீட்டு   வாய்க்காலில்  பாலாக மூடுகிறது  என்றால்  எத்தனை லிட்டர் பால் ஊத்த்தபட்டிருக்கும் , யாருக்கும் பயன் இன்றி .

நான் ஒன்றும் நாத்திகன் இல்லை.. ஆனால்  இதுபோன்ற  வழிபாடுகள்
மனதை என்னவோ செய்கிறது.  ஆன்மீக அன்பர்களே  தயவு செய்து  ஒரு
நிமிடம் யோசித்து பாருங்கள் . எத்தனை எத்த்தனை  இளம் சிறார்கள்  பாலின்றி தவிகின்றனர்.  இது போன்ற அபிஷேகங்கள் தேவையா..?
தேவையென்றால்  ஒரு குடத்தில் உள்ள பாலை மட்டும் அபிஷேகம் செய்துவிட்டு  மீதியை  பச்சிளம் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யலாமே --
தெய்வமே  குழந்தைக்கு பால்  கொடுத்ததை  நாம் புராணம் வாயிலாக   அறிவோம் . அந்த பாலை இப்படி வீனாக்கலமா .