Sunday, July 22, 2012

UNARVUGALIN SANGAMAM

 கோபிநாத்தின்  இன்றைய (22.7.12)   நீயா  நானா  நிகழ்ச்சி   மனதை  மயில்
  இறகால்  வருடியது போல ஒரு சுக அனுபவத்தை கொடுத்தது.   ஒரு திரைப்பட பாடல்தானே  என்றில்லாமல் ரத்தத்துடன்  கலந்ததுபோல்
ஒவ்வொருவரும் லயித்து சுகித்து பாடியது  நெஞ்சம் முழுதும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது.  80களின் பாடல்களும்  வாழ்கையும்  என்ற
தலைப்பில்  பங்கேற்றவர்கள் பேசினர் அல்ல அல்ல பாடினர்.

அது  ஒரு டிவி நிகழ்ச்சி என்பதையும் மறந்து  நானும் 40 வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்டேன் .  அன்றைய பெல்பாட்டம்  பேன்ட்
சைடு கிருதா  பெரிய காலர்  வாய்த்த சட்டை  இளையராஜா பாடல்கள்  என்று  வாழ்க்கை யின்  வசந்த காலத்தை   இதயபூர்வமாக அனுபவித்ததை  நிகழ்ச்சியை பார்த்த யாராலும் மறுக்க முடியாது,

எந்த பாடலை சொல்வது.   வான் நிலா நிலா அல்ல  பாடலுக்கு ஒரு கதை,
ஒரே நாள் உன்னை நான் நிலவில் பார்த்தது  பாடலுக்கு ஒரு கதை.
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேலையில்  என்ற பாடலை குடும்பமே  ரசித்தது என்ற செய்தி.   நிகழ்ச்சி பெண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது . ஒரு பங்கேற்பாளருக்கு ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மலர்ந்தது .
ஒரு ராகம் பாடலோடு  காதில்    கேட்டது  ஒரு அன்பருக்கு.
 

டீக்கடையில்  10- 15  தேநீர்    குடித்து விருப்ப பாடலை  திரும்ப திரும்ப கேட்டு         மனதை ஆற்றிகொண்ட ஒரு  நண்பர் . இப்படி எண்ணற்ற உணர்வுகளின் சங்கமமாக 80களின் பாடல்களும் வாழ்கையும்  நிகழ்ச்சி  அமைந்தது .

பார்வை பரிமாற்றங்களை  வார்த்தை  கோர்வையாக்கி  இசையுடன்  இணைத்து  காதலை  வளர்த்த  சாகா வரம் பெற்ற பாடல்கள் அவை.

வார்த்தை வரிகள் அல்ல  வாழ்கையின்  புரிதலுக்கு  வளம் சேர்த்த உரம் அது.

வாழ்க்கையில் வென்றவர்களுக்கும்  தோற்றவர்களுக்கும் , வென்று தோற்றவர்களுக்கும் , தோற்று  வென்றவர்களுக்கும்  இந்த நிகழ்ச்சி
அரிக்கும் இடத்தில்(  ரணம் ஆனாலும்).  சொரியும் சுகம் போல  இருந்திருக்கும் .
ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் வடுக்களை வருடும்போது  எப்போதோ
பெற்ற ரணங்களும் ரசிக்கப்படும்.

வாழ்க்கையின் பிளாஷ் பேக்கை  வெளிச்சம் போட்டு காட்டிய  கோபிநாத்
அவர்களுக்கு ஒரு பாராட்டுதல்களை தெரிவிப்போம்.

நிகழ்ச்சியை   தவறவிட்டவர்கள்  மறு ஒளிபரப்பின் பொது  கட்டாயம் பாருங்கள்.

2222



No comments:

Post a Comment