Saturday, December 17, 2016

kolangal


புதுவை யில்  இன்று கோலப்போட்டி ..


கோலம் போடும்   ஜாலங்கள் ..

வெண்ணை திருடிய கண்ணன் ஒரு கோலம்
எண்ண   சிதறல்களில்  பிறிதொரு கோலம்
ஸ்பைடர் மேனாக ஒரு கோலம்
ஜடை  பின்னிய பெண்ணாக  ஒரு கோலம்


கணினி தொடர்புகளில் ஓர் கோலம்
கல்வியை வலியுறுத்தி ஒரு கோலம்
புள்ளிகளில் நாகம் தோன்ற ஒரு கோலம்
பள்ளியில் பசுமை போற்ற ஒரு கோலம்

அம்மாவின் அஞ்சலிக்கு ஒரு கோலம்
அழகு தமிழை கற்க ஒரு கோலம்
சிப்பிகளை  கொண்டு ஒரு கோலம்
புத்திக்கு கல்வி என்றொரு கோலம்.


ஓம் நமச்சிவாயம் ஒரு கோலம்
ஒரு மரமாவது நட ஒரு கோலம்
கண்ணாடியில் ஒரு கோலம்
அண்ணாமலையாருக்கும் ஒரு கோலம்


கண் தானம் வலியுறுத்தி கண்ணப்ப நாயனாருக்கு  ஒரு கோலம்
மறந்து போன மருத்துவத்தை  நி னைவு படுத்தி ஒரு கோலம்

உறுப்பு தானம் வலியுருத்தி  ஒரு கோலம்
மயிலிறகை இழைப்படுத்தி ஒரு கோலம்


எத்தனை கோலங்கள் எத்தனை பார்வைகள் .. அதி ஒரு சில உங்கள் பார்வைக்கு ..

Wednesday, December 7, 2016

cho

நான் அறிந்த சோ ===

பன்முக திறமையாளர்  தெய்வ திரு  சோ அவர்கள்  துணிச்சல் காரர் ...
இதிகாச பாத்திர  சகாதேவன்  போன்றவர்.   துரியோதண னுக்கே
போருக்கு  நாள் குறித்து கொடுத்தவன் அல்லவா  சகாதேவன் . அதைப்போலவே  நியாமான  கருத்துக்களை  விருப்பு வெறுப்பின்றி  துணிச்சலுடன் வெளிப்படுத்துபவர்.

அவசரகால சட்டத்தை நேரடியாக  துணிச்சலாக  எதிர்த்தவர்.
கட்சி தலைவர்கள் மட்டுமன்றி திரை உலக கலைஞர்கள்  மற்றும் பல பிரபலங்கள்  சிக்கலான சூழ்நிலைகளை சந்தித்தபொழுதுகளில்  சோவின் ஆலோசனைகளை நாடுவதுண்டு.

இவர் ஒரு அரசியல் மருத்துவர்.  ஒரு மருத்துவர் எப்படி நோயாளி  நல்லவனா கெட்டவனா , உறவினனா , நண்பனா  பணக்காரனா  ஏழையா  என்று பாக்காமல் நோயை மட்டுமே கண்டு சிகிச்சை  அளி ப்பது போல் , இவரின் அரசியல் கருத்துக்கள்  எந்த கட்சியாய் இருந்தாலும்  தவறு செய்வோர்  எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும்   பட்டென  தவறை சுட்டி
காட்ட  தயங்க மாட்டார்.

எப்படி  சாத்தியம்  என்று  நான் வியக்கும் இவரது குணங்களில் ஒன்று   எதிர்த்த  விமர்சித்த  அத்தனை பேரிடம் உண்மையான  நட்பை தொடர்வது.
எப்படி  என்பதுதான்.  ஒரே  மேடையில்  பா ஜா காவின்   ராஜா , முஸ்லீம் கட்சியை  சேர்ந்த  ஜிஹாருல்லா , இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்த
ராஜா  என பல்வேறு கொள்கைகைகளை  கொண்ட தலைவர்களை  பேச
வைத்து  விழா நடத்துவது என்பது சாதனமான  விஷயமா .  அதை அவர் செய்து காட்டினார்.

அரசியல்  கட்சிகள்  கூட்டணி அமைக்கும்போதெல்லாம்  இவரின்  பங்கு அதில் இருப்பது  செய்தியாக  வெளிவரும் .

பத்திரிகையாளர்  பத்திரிகை தர்மத்தை மீறாதவர்.      எழுத்தாளர்  எடுத்த கருத்தை ஆணித்தரமாக சொல்லுபவர்      நடிகர் .கொடுத்த பாத்திரத்தை நையாண்டி அரசியல் வசனத்துடன்  சிறப்பாக செய்தவர்.
விமர்சகர்.  யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தாதவர்.
எல்லாவற்றிக்கும்  மேலாக அரசியல் ஜாம்பவான்கள் , கலை உலகின் சூப் பர்  ஸ்டார் கள் , அறிஞர் பெருமக்கள் , பத்திரிகை பெரு முதலாளிகள் என்று அத்தனை பேரிடமும்  பழக்கம் இருந்தாலும்  யாரிடமும்  எதற்காகவும் சலுகைகளை எதிர்பார்காதவர்.

இவரின்  முகமது பின் துக்ளக் நாட்டம்  இன்றைக்கும்  பொருந்தும்

அவரின்  ஆன்மா சாந்தி  அடைய இறைவனை வேண்டுரேன் .  .


Monday, December 5, 2016

விழிநீர் துடைத்து வழி அனுப்புகிறோம்

 போய்  வாருங்கள்.  .

 தென்றலை நீங்கள் தீண்டியதை விட  தீயை நிறைய  தாண்டி உள்ளீர்கள்.

 கோவில் கூடாது என்று சொல்லவில்லை  ஆனால் அது  அன்னதான  கூடாரமாக  இருக்க வேண்டும் என்று  நினைத்தீர்கள்  செயல் படுத்தினீர்கள் .

உங்களின் அம்மா உணவு திட்டம்  காகிதப்பூ மண மில்லை  காண்போர் வியக்கும்  கற்சிற்பம் .

அம்மா இந்த ஒரு வார்த்தை   கோடான கோடி மக்களின்  வார்த்தை  மட்டுமல்ல   கம்பீரம்  துணிச்சல்  எதிர்நீச்சல்  அத்தனைக்கும் அடையாளம். பெண்மைக்கும்  பெருமை  சேர்க்கும் .

கடுமையாக எதிர்த்தோர்  நெஞ்சில் மட்டுமல்ல   உன்னை மறுத்தோர்  மனதில் கூட  உன் ஆளுமை திறமை  வியக்கப்படுகிறது.  ..

அந்த உலகிற்கு   பணி  செய்ய    காலம்   உங்களை அழைத்திருக்கிறது .

போய்  வாருங்கள்  விழி நீர் துடைத்து  வழி  அனுப்புகிறோம்.  

Thursday, September 1, 2016

ஒரு தலை  காதல் ==

ஒருதலை காதல் விபரீதங்கள்  தொடர்கிறது. யார்  காரணம் ??  உரக்க சொல்வேன்  திரைப்படங்கள்தான்  என்று.

சினிமா மீது  அளப்பரிய  காதல்  கொண்ட  நான்தான்  சொல்லுகிரே ன் .

மாதங்களை  எண்ண  பனிரெண்டும்  வரலாம்  உனக்கேன்  ஆசை  மேலொன்று  கூட்ட ==   வஞ்சி  அவள் உன்னை  எண்ணவில்லை  இன்றும்  உனக்கேன் ஆசை  மன்மதன்  போலே.  ===  எண்பதுகளில் கல்லூரிகளை  கலக்கிய  பாட்டு = ராஜேந்தர்  இசையில்  ஒரு தலை  ராகம்  படத்தில்  .

எங்கிருந்தாலும்  வாழ்க  உன் இதயம்  அமைதியில் வாழ்க  ==இதுவும் ஒரு காதலன்  இன்னொருவருடன்  திருமணமான  பெண்ணை  நினைத்து பாடும் பாடல் .  அறுபதுகளில் வெளியான  நெஞ்சில்  ஓர்  ஆலயம்  பட பாடல் .

இரண்டுமே ஒருதலை காதலை  கண்ணியமாய் வெளிப்படுத்துகிறது.

இன்றைய தலைமுறைக்கான  பாடல்   வரிகளை கூட  சொல்ல
 முடியவில்லை ===  வெட்றா   அவளை    குத்துறா அவளை   ===
எவண்டி  உன்ன  பெத்தான்.  ==  என்பது  போன்ற  உசுப்பே த்தும்  வரிகள்.

இன்றைய படங்களில்  குறிப்பாக  நான்கு  இளைஞர்கள்  சேர்ந்து வரும்  காட்சியில்  கட்டாயம்  மது குடிப்பது போன்றோ  சரக்கு  அடிப்பது பற்றியோ காட்சியோ  பாடலோ  அமைக்கப்பட்டு  இருக்கும்.

இன்னொன்று  அந்தக்கால படத்தில்  (அந்தக்காலம்  என்றால் சுமார்  ஒரு இருபது வருடங்களுக்கு முன் ). வில்லன்கள் தான் குடிப்பார்கள்  என்று எழுதப்படாத விதி இருந்தது. கதா நாயகர்கள் குடித்தால்  பின் திருந்துவார்கள் .இப்போது  எதிர்மறை  பாத்திரங்களே  கதையில் உருவாக்கப்பட்டு  அவைகள் வெற்றியும்  பெறுகின்றன.

ஊடகங்களோ சொல்லவே  தேவையில்லை . பரபரப்புக்காக  மலிவான செய்திகளை  அதி முக்கியத்துடன் வெளியிடுவது  ஒன்றையே  தலையாய கடமையாய்  கொண்டுள்ளனர்.   சமூக  ஆர்வலர்களோ  எதை உயர்த்தி பிடிக்க வேண்டும்  எதை கண்டிக்க வேண்டும்  என்று குழம்பி போயிருக்கிறார்கள்.

பெண்கள் அனாவசியமாக  சுற்ற  வேண்டாம்   அரை குறை  ஆடை  வேண்டாம்  என்றால்  நம்மல  பாய்ந்து  பிராண்டி  ஆணாதிக்கவாதி  என்று  கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய  பெரும்பாலான இளைஞர்களின்  பேச்சில்  PICK  UP    BREAK UP ,
PARTY  GIFT  ENDRU  எதையுமே  சுலபமாக  எடுத்து கொண்டு விடுகிறார்கள்   ஆனால் POSSESIVENESS MATTUM  இரும்பு பிடியாக  பிடித்து கொள்கிறார்கள்.  

பசும்பால்  விலை தெரியாத இளைஞர்கள்  அமலா  பால்  விவகாரத்தை அக்கறையோடு  விவாதிப்பது  அதை ஊடகங்களில்  வெளியாவது  என்பதே
சினிமாவின்  வீச்சை  தெரிவிக்கிறது.

இம்மாதிரி கொடூரங்கள் (ஒரு தலை காதல் விவகாரம்)   ஓரளவாவது  தடுக்கப்பட  வேண்டும்  திரைத்துறையினரே  நல்ல  படங்களை கொடுங்கள். மக்கள்  காக்க  முட்டை, ஜோக்கர், தர்மதுரை போன்ற  படங்களையும் வெற்றி பெற செய்கிறார்கள். எனவே  மக்கள்  மீது  பழியை  போடாதீர்கள்.




சென்சார் போர்டு  மது அருந்தும்  காட்சிகளையும் , கெட்டவனை  மஹாத்மா  அளவிற்கு  காட்டும்  திரைப்படங்களுக்கு  கத்திரி  போடுங்கள்.   பாவம்  நீங்கள்  என்ன  செய்வீர்கள்  சமீபத்தில் வெளியான  ஒரு பிரபல படத்திற்கு  ஏகப்பட்ட வன்முறை காட்சிகள் இருந்தும்    படத்திற்கு  U  செர்டிபிகேட்  என்று  வரையறுப்பதில்  இருந்தே  உங்கள்  குழப்பம்  தெ ரிகிறது. ..  
  
 எம்ஜியார் சிவாஜி ஜெமினி  இன்னும் பல கலைஞர்கள்  காதல்  காட்சிகளில் நடிக்கும்  போது   அவர்கள் வயதானவர்கள்  ஆனாலும்  அந்த காதலில்  நம்பக தன்மை இருந்தது.  ரியலிசம் என்ற பெயரில்  பிளஸ் டூ  மாணவர்களை  காதலிக்க வைத்தது  புரட்சி படம்  என்று வெற்றி பெற்றதன் விளைவு   காதல் என்பதை கடை சரக்கு ஆகியது  .           அந்த  அலைகள் ் இன்னமும்  ஓயவில்லை.     விளைவே
இன்றைய கொடூரங்கள்.  .

திரை உலகினரே  மீண்டும்  என் வேண்டுகோள் . பொருந்தாத  காதல், துரத்தி துரத்தி காதல் , என்பதை வலியுறுத்தும்  காதல்  படங்களை எடுக்காதீர்கள்.  இயல்பாக  அரும்பும்  காதல்  தோல்வியுறும்  காதலை  கண்ணியமாக  ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்றவைகளை  தங்கள் படங்களில்  கொண்டு வாருங்கள்.  பாடல் வரிகள் .  கண்ணியமாக அமைவதாக இருக்கட்டும் .



Thursday, August 25, 2016

வாழ்த்துக்கள்  கேப்டன்.  உங்களுக்கு  இன்று  பிறந்த  நாளாமே ..

என்பார்வையில் நீங்கள்  எப்படி  என்று  சற்று யோசித்ததின் விளைவே  இந்த பதிவு.

தூரத்து  இடி முழக்கம்  படத்தில்  இடம்பெற்ற  உள்ளமெல்லாம்  தள்ளாடுதே.  என்ற  பாடலும்   அகல் விளக்கு  படத்தில்    ஏதோ  நினைவுகள் கனவுகள்  மனதிலே   காவேரி  ஊற்றாகவே  என்ற  பாடலும்  உங்கள் படத்தை  பார்க்க தூண்டியது.   சாதாரணமாக சென்று கொண்டிருந்த  உங்கள் திரை பயணம்  சட்டம்  ஒரு  இருட்டறை  படத்திற்கு  பிறகு  நாலு  கால் பாய்ச்சலில்  ஓடத்துவங்கியது.  ரஜினி  கமல்  மத்தியில் உங்களுக்கும்  ஒரு இடம்.   அந்த காலகட்டத்தில்  திரை இலக்கணத்திற்கு சற்றும் பொருந்தாத உங்கள் தோற்றம் , அதையும் மீறி  நீங்கள்  பெற்ற  வெற்றி  வியப்புக்குரிய ஒன்று.

வெற்றி பெற்றபின்  திரையுலகில்  பிலிம் இன்ஸ்டிடியூட்  மாணவர்களுக்கு  ஒரு சரியான  அங்கீகாரம்   கொடுத்தது நீங்கள்  தான்.
உங்களை இப்போது  எல்லோரும்  கோவக்காரர்  என்று சொல்லுகிறார்கள்  அந்த கோ பத்தில்   அர்த்தம்  இருப்பதை  மறந்து விடுகிறார்கள்.

நன்றாக  நினைவிருக்கிறது  நடிகர் திலகம்  இறுதி  ஊர்வலம்   மயானத்தை  அடைகிறது . கட்டுப்படுத்த முடியாத  அளவில்  கூட்டம் நெருங்குகிறது.  வி ஐ பி  இருக்கும்  பகுதிகளிலும்  கலைஞர்களும் தலைவர்களும் சூழ்ந்து இருக்கிறார்கள் . நடிகர் திலகத்தின்  உடல் உள்ளே  எடுத்து செல்ல  முடியாத படி  நெரிசல்.  அப்போது  நீங்கள்  அந்த  கூட்டத்தில்  இருப்பவர்  யார்  எவர்  என்று  பார்க்காமல்  அனைவரையும்  புறம்தள்ளி   எளிதாக வழி அமைத்து   கொடுத்தீர். சிலரை கோபமாக  தள்ளியும் சிலரை வசை மாறி பொழிந்தும்  நிலைமையை சமாளித்தீர்கள். அப்போதே  உங்களை பார்த்து  வியந்தவன்  நான்.

தங்களின்  சிவப்பு  மல்லி , ரமணா போன்ற படங்கலும்  மனதில் பட்டதை தைரியமாய் சொல்லும்  பா ங்கும் , ஈழ தமிழர்கள் பால் நீங்கள்  காட்டிய பரிவும் தமிழகம் நம்பும்   ஒரு தலைவருக்குரிய  தகுதியை  காட்டியது. .

பிறகு  நீங்கள்  அரசியலுக்கு  வந்தீர்கள் . கூட்டணி அமைத்து   எதிர்க்கட்சி  தலைவராகவும்  ஆனீர்கள் .  இது வரை  எல்லாம்  சரியாக தான் போய்க்கொண்டிருந்தது.   இரு பெரும்  கட்சிகளுக்கு  சரிசமமாய்  ஏ ன்  ஒரு  கட்டத்தில்  அவர்களையே  விஞ்சும் அளவிற்கு  உங்கள் செல்வாக்கு உயர்ந்தது.  .  கலைஞரே உங்களுக்காக  எதிர்பார்த்து நின்றார். அத்தனை  கட்சிகளும்  உங்களின் நிலையை  எதிர்பார்த்திருந்தது.   இதிலதான்  நீங்க  சறுக்கிவிட்டீர்கள்.

சிவப்பு மல்லி  படத்தில்  நீங்கள்  கண்கள் சிவக்க , கம்யூனிஸ்ட் கொடிகள் சூழ  பறை அடித்து கொண்டு -- எரிமலை  எப்படி பொறுக்கும்  என்று பாடிக்கொண்டு வரும்போது  நிறைய இளைஞர்கள் நீங்கள்  கம்யூனிஸ்ட் என்று  நினைத்தார்கள்.   இலங்கை தமிழர் பிரச்சனையில்  சிலர்  உங்களை  திராவிட இயக்கத்தின்  ஆதரவாளர்கள்  என்றார்கள்.  ஆனால்  நீங்கள் வேறு  பாதை கண்டீர்கள்.

ஒரு உண்மையை மறந்து விட்டீர்கள்  கேப்டன்.  தமிழகத்தில் கம்யூனிச  இயக்கமோ   திராவிட  இயக்கமோ  சந்தர்பத்திற்க்கேற்ப  கூட்டணி  அமைப்பதில்  வல்லவர்கள்.  இந்த தேர்தலை  பொறுத்தவரையில்  நீங்கள் தனியாக  நின்றிந்தால்  கூட  கணிசமான வாக்குகள்  பெற்றுருக்க  முடியம்.

இன்னொன்று  கைதேர்ந்த அரசியல் வாதிகள்  ஊடகங்களை பகைத்து  கொள்ள  மாட்டார்கள். நீங்கள்  எப்படி  என்று  உங்களுக்கே   தெரியும்..   உங்கள் வெள்ளந்தி  மனதை பயன்படுத்தி  ஆசை காட்டி  ஒட்டுமொத்தமாக  உங்களை குப்புற தள்ளியவர்கள் யார் என்று  இனியாவது யோசியுங்கள்.  உங்களுக்கு தெரியுமா  கேப்டன் பொது உடமை கட்சிகளுக்கு  முதல் முறையாக தமிழக சட்ட சபையில் இடம் இல்லை.  இதற்கு  அர்த்தம்  என்னவென்றால்  இதற்கு  முன்னர் அவர்கள்  ஊழல்  பின்  இவர்கள் ஊழல் என்று  சொல்லி  எப்படியாவது   ஒரு  கூட்டணியில்  இ டம் பெற்று  சட்ட சபையில்  இடம்  பிடித்த்து  விடுவார்கள்.  இம்முறை  அவர்களை  சேர்க்கவில்லை . அதன்  விளைவு  நீங்கள்  பலிகடா. சிறு குழந்தைக்கு  கூட  தெரியும்  தாங்கள்  வேறு ஏதாவது கூட்டணியில்  இடம் பெற்றிருந்தால்  நிச்சயம்  நீங்கள்  கௌரவமான நிலையில்  இருந்திருப்பீர்கள். என்று.  என்ன செய்வது  காலம்  நாம் நினைப்பதை  எல்லாம்  செய்வதில்லையே.

அதெல்லாம்  ஒருபுறம்  இருக்கட்டும்,  தங்களின்  மனித நேயம், சிறுமை கண்டு  பொங்குதல்  எங் களில்  ஒருவர் போன்ற  உணர்வு  போன்றவைகளே  என் போன்றவர்களை  உங்கள்  பக்கம்  ஈர்க்க செய்கிறது.

அரசியல் வாதி  கேப்டனைவிட  போ லித்தனமில்லாத  தனி மனித கேப்டனை மிகவும்  பிடித்திருக்கிறது.   பல்லாண்டு  வாழ்க  கேப்டன்.  


Tuesday, August 23, 2016

செவாலியே விருதும்  சிவாஜி ரசிகர்களும் --

ரஜினிகாந்த்  தனது ட்விட்டேர்  பக்கத்தில்  எங்கள்  தலைமுறையின்  நடிகர் திலகம்  கமல்  என்று பதிவிட்டிருந்ததாகவும் , எத்தனை தலைமுறை ஆனாலும் நடிகர் திலகம்  என்பது  ஒருவர்தான்  என்கின்ற  ரீதியில்  நடிகர்திலகத்தின்  தீவிர ரசிகர்கள்  பதிவிட்டு வருவதை  பார்க்கிரேன் .

இது  ஒன்றும்  புதிதல்ல .  அந்த கால கட்டத்திலேயே  சிவாஜி  அவர்களை  தென்னிந்தியாவின்  மார்லன்  பிராண்டோ  என்று  ஒரு  அரசியல்  தலைவர் புகழ்ந்தார்.   அப்போதே  எங் களைப்போன்ற  அல்லது  எங்கள் வயதை ஒட்டிய  திலகத்தின்  ரசிகர்கள்  அதை ஒப்புக்கொள்ளவில்லை.  மார்லன் பிராண்டோ நல்ல நடிகர் தான்  ஆனால்  பலதரப்பட்ட  பாத்திரங்களை  ஏற்று  நடித்திட  அவருக்கு  வாய்ப்பில்லை. ஆனால் உலகளவில்  அப்போது அவரது  பெயர் பிரபலமானதாக  இருந்ததால்.  அந்த உவமை  அப்போது  பெரிதாக  எடுத்து  கொள்ளப்பட்டது . ஆனால்  நம் நடிகர் திலகம்  ஏற்று நடித்த  கதா பாத்திரங்கள்  எத்தனை. எத்தனை.  பேசும் வட்டார வழக்கில் மாற்றம்  உடல் மொழியில்  வித்தியாசம், புராண  இதிகாச  தேசிய மற்றும்  இயல்பான மனித ர்களின்  வாழ்க்கையை  தத்ரூபமாக வடித்துக்காட்டிய  எங்கள் திலகத்தின்  திறமை  உலக ளவில்  யாராலும் தொட்டு விட முடியாது.   அன்றைய தமிழ் சினிமாவின் வீச்சு உலகளவில்  இல்லை . அதனாலேயே  திலகத்தின் திறமை  உலகமெங்கும்  தெரியாமல் இருந்தது. ஆனால் ஆசிய  ஆப்ரிக்கா  படவிழாவில் நடிகர் திலகத்திற்கு  சிறந்த நடிகர்  விருது கிடைத்தபின்தான்  அவரின் புகழ் தமிழ்நாட்டை  தாண்டி  தெரிய ஆரம்பித்தது.ஹாலிவூட்  நடிகர்களே  சிவாஜி அமெரிக்கா சென்றபோது  சிவாஜியின்  திறன் கண்டு  வியந்தனர். அதில்  மார்லன்  ப்ராண்டோவும் ஒருவர். .  

அதே போல்  அன்றைய பொதுக்கூட்டங்களில்  அடைமொழியுடன்  தலைவர்களை  அழைப்பது  என்பது  ஒரு  மரபாகவே  இருந்தது.

தென்னாட்டு  பெர்னாட்ஷா ,  இந்நாட்டு  இங்கர்சால்  காஞ்சி  கரிபால் டி  ,  வாழும்  வள்ளுவம்  என்பன போன்றவை  சில சான்றுகள்.

அன்பு நடிகர் திலகங்களின்  ரசிகர்களுக்கு , இவைகளை எல்லாம்  பெருது படுத்த  வேண்டாம். .  ஒரு பொருட்டாகவும்  எடுத்துக்கொள்ள  வேண்டாம்.

கமல் மிக சிறந்த  நடிகர்.  ரஜினி அவர்களும்  நடிகர் திலகத்தின்  மேல்  மிகுந்த  மரியாதை  வைத்திருப்பவர்.

எத்தனை பட்டங்கள்  யாருக்கு கொடுத்தாலும் யாரை
  எப்படி எல்லாம்  வர்ணித்தாலும்
V.C. கணேசன்  என்பது மாறி  சிவாஜி கணேசன்  ஆனாரே  அதுவே  அவரை பற்றி சொல்கிறதே.

எத்தனை இஷ்ட தெய்வங்களை  பூஜித்தாலும்  முதல்  வணக்கம்  கணபதிக்கே  /கணேசனுக்கே .




Sunday, July 17, 2016

kaatril unthan geetham


பாடல் ஓர் நூறு  பேசும் இவர்  பேரு ==

இலங்கை வானொலி கேட்டோர்க்கு     பிறந்த நாள்  இன்று பிறந்த  நாள்  நாம்  பிள்ளைகள் போலே தொல்லைகளை மறந்த  நாள்   இந்த வரிகளை  மறக்க  முடியுமா.

வானமெனும்  வீதியிலே  குளிர் வாடையெனும்  தேரினிலே   ஓடி  வரும்  மேகங்களே  கொஞ்சம்  நில்லுங்கள்   உறவுக்கு  யார்  தலைவன்  என்று கேட்டு சொல்லுங்கள்   மாதாவை  கேட்டு சொல்லுங்கள்  -  அமுத வரிகள் அல்லவா==

உங்கள்  கைகளில்  கனத்திடும்  பணப்பை    வந்த காரணம் உழவனின்  கலப்பை   எங்கள் தோழர்கள்  வழங்கிய  உழைப்பை  உண்டு கொழுத்தது உங்கள்  இரைப்பை     அனல்  தெறிக்கிறதா ...


மூன்றாம்  பிறையில்  தொட்டில்  கட்டி  முல்லை  மல்லிகை  மெத்தையிட்டு ===   இதமாக  இருக்கிறதா --

கற்பனை என்றாலும்  கற்சிலை  என்றாலும்  கந்தனே உனை  மறவேன் =
பத்தி பரவசம் தோன்றுகிறதா ==

வாழ்வில்  சௌபாக்கியம் வந்தது  வந்தேன்  என்றது  தேன்  தந்தேன்  என்றது ====  இனிப்பாக  இருக்கிறதா

சிலர்  ஆசைக்கும்  தேவைக்கும்  வாழ்வுக்கும்  வசதிக்கும்  ஊரார்  கால் பிடிப்பார்   ஒரு  மா னமில்லை   அதில்  ஈனமில்லை  அவர்  எப்போதும்
வால் பிடிப்பார்.    அரசியல் அவலங்களை  கண் முன் நிறுத்துகிறதா ==

இந்த வரிகளின்  சொந்தக்காரர்  யார்   =  வாலியை  தவிர  வேறு யார்.

புதுவை நகரின் புரட்சி கவியின் குயிலோசைதான்  உன் வாய்மொழியோ  என்றும் பவளக்கொடியிலே  முத்துக்கள்  பூத்தால்  புன்னகை  என்றே  பேரா கும்  என்ற வரிகளுக்கு  இன்னொரு கவிஞன்  சொந்தக்காரன்  என்று நாம் நினனைத்துள்ளோம்   ஆனால் இது வாலியின் வரிகள்..

அந்த வாலிப கவிஞரின்  நினைவாக  இந்த பதிவு.

பல நூல் படித்து நீ அறியும்  கல்வி   பொது  நலம் நினைத்து  நீ வழங்கும் செல்வம்   பிறர் உயர்விலினிலே  உனக்கிருக்கும்  இன்பம்   இவை அனைத்திலுமே இருப்பதுதான்  தெய்வம்   என்று வாலியின்  அர்த்தமுள்ள வரிகளுடன்  முடிக்கிரேன் .



Thursday, June 23, 2016

kannadasan

தன்  எழுத்தால் தணிக்கை குழுவை  வென்றவர் ==

கண்ணதாசன்  பாடல்களில்  அவரின் வார்த்தை நயங்கள்  தணிக்கை குழுவையே திகைக்கவும்  ரசிக்கவும்  செய்திருக்கிறது. 

கண்ணதாசன்  திமுகவில்  இருந்த நேரம் . அன்றைய காலகட்டத்தில்   அண்ணா  திமுக  உதயசூரியன்  போன்ற வார்த்தைகள் பாடல்களில்  இடம் பெறுவதை   தணிக்கை துறை  ஏனோ  அனுமதி மறுத்தது.  ஆனால்  
 கவிஞர் அவர்களோ  தன் சொல்வன்மையால் அதை இடம்பெறச்செய்தார். 

ராணி சம்யுக்தா  என்றொரு  படம்.  அதில் ஒரு  பாடல் ==

        இதழ்  இரண்டும்  பாடட்டும்       இமை இரண்டும் மூடட்டும் 
         உதய சூரியன்  மலரும்போது  உனது  கண்கள்  மலரட்டும். 

தணிக்கை குழுவுக்கு எப்படி உதயசூரியனை  வார்த்தையை  நீக்குவது என்று திகைத்து  அதை அனுமதித்தனர்  என்பது  அன்றைய  செய்தி. (மனதிற்குள் அவர்கள்  அதை ரசித்தார்கள் என்பது  வேறு விஷயம் }

பாவாடை  தாவணியில்  பார்த்த உருவமோ  இது பூவாடை  வீசி வர பூத்த பருவமா .  என்ற  பாடல் வரிகளை  அனுமதிக்கலாமா  என்று விவாதம் நடந்ததாக  சிலர்  பேட்டிகள்  கூட  அளித்தனர். 

பாசமலர் திரைப்படத்தில்   வாராயோ தோழி  வாராயோ  மணப்பந்தல்  காண வாராயோ  என்ற பாடல்  ஒவ்வொரு  திருமண வீட்டிலும்  இந்த பாடல் நிச்சயமாக இடம்பெறும்.  தணிக்கை  குழு  விமர்சித்து வியந்து ரசித்து  அனுமதி அளித்த பாடல்  வரிகள்  எது  தெரியுமா ==

  மலராத  பெண்மை  மலரும்  முன்பு புரியாத உண்மை தெரியும் 
  மயங்காத கண்கள்  மயங்கும்  முன்பு விளங்காத கேள்வி விளங்கும் 
  இரவோடு நெஞ்சம் உருகாதோ  இரண்டோடு  மூன்றும் வளராதோ =
  (இந்த பாடல்  காட்சியை  காண நேர்ந்தால்  நடிகர் திலகத்தின்  முக பாவனையை பாருங்கள்  )

இதோ இன்னொரு பாடல் வரிகள்    வாழ்கைபடகு  படத்தில்  --
தணிக்கை குழுவினர்  இந்த வரிகளை கடுமையாக எதிர்த்ததாகவும்  பின்  மறைபொருளாகவும்  வார்த்தை நயமும் உள்ள காரணத்தால்  அதை அனுமதித்தனர்  என்பதும் பின்னர்  நான் அறிந்த செய்தி.  அது என்ன வரி தெரியுமா

சின்ன சின்ன கண்ணனுக்கு  என்னதான் புன்னகையோ  என்ற பாடலில் வரும்
 வரிகள் ===  ஒருவரின்  துடிப்பினிலே விளைவது  கவிதையடா     இருவரின் துடிப்பினிலே  விளைவது  மழலையடா   ஈரேழு மொழிகளிலே  என்ன  மொழி பிள்ளை மொழி ====

இம்மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம் . கண்ணதாசனே  இலக்கியத்தை எளிமையாக்கி  என் போன்றோருக்கு சுவையாக பரிமாறிய  காலத்தை வென்ற கவிஞனே  உம்மை என்றும்  நினைவு கொள்வோம்.
     


Friday, June 10, 2016

ஒரு நாள்  கூத்து ====== திரைப்பார்வை

மூன்று பெண்களின்  கதை . சமீப  காலமாக  பெண்களை முன்னிறுத்தி  பெண்ணியம்  பேசும்  கதைகள் வந்ததில்லை.  அப்படி சில படங்கள் வந்திருப்பதாக  சொன்னால்  அவை  பெண்ணிய  படங்களே  அல்ல.

தெளிவாக,  அழகாக , அந்த மூன்று பெண்களின் குடும்பத்தில் நாமும்  ஒரு பார்வையாளாராக  நம்மை  கட்டி போட்டதே  இயக்குனரின்  வெற்றி.
என்ன  ஒரு  அளவான நடிப்பு.

எனக்கு டைரக்டர்  ஸ்ரீதர் ,  பாலச்சந்தரின்  படங்களை   தற்கால  சூழலில்  பார்ப்பது  போன்ற  உணர்வு  ஏற்பட்டது.  கடைசி காட்சியில்  வீட்டை விட்டு வெளியேறிய பெண்  திரும்ப வீட்டுக்கு  வரும்போது , அனைவரும்  அவளை பார்க்கும்போது   இப்ப  என்னாச்சி என்று  தண்ணீரில்  முகத்தை கழுவும்போது   ஜெயகாந்தன் நினைவுக்கு  வந்தார்.

.. தலைமுறை காரணமாகவோ  என்னவோ   என்னால் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சியை (ஆபாசமற்று இருந்தாலும்) ஏற்க முடியவில்லை..

மற்றபடி  அத்தி  பூத்தது போல்  ஒரு  கதையின்  போக்கிலேயே  பெண்ணியம்  பேசும்    நல்ல  படம் . 

Saturday, June 4, 2016

முஹமது  அலி   காலமானார்.

எழுபது  எண்பதுகளில்  நாங்கள்  வியந்து   பார்த்த  பிரபலங்கள்   ,   மெக்கன்ரோ ,  போர்க் (borg)  ப்ரூஸ் லீ   ஸ்டெப்பி  கிராப் ,  BONEY M    BEATLES, பிரேசிலின்  பெலே   போன்றவர்கள் .  அவர்களில்  ஒருவர்  காஸ்யுஸ் கிளே  அதாவது  முஹம்மத்  அலி .

குத்து சண்டையில்  உலக புகழ் பெற்றவர்.  அதனிலும்  மேலாக  அமைதியை  விரும்புபவர்.   வியட்நாம் போரை  எதிர்த்தவர் .. மரணம் இயல்பானதுதான்.  ஆனால் நமக்கு வேண்டியவரோ  அல்லது  நாம்  ஆராதித்த  அந்த  கதாநாயகர்களோ  காலாமாகும்  போது  அந்த சோகம்  நம்மை கேளாமலேயே  நமக்கு  தொற்றி கொள்கிறது .  

அலி  அவர்களே  உங்கள்  வாழ்க்கை சுற்றின்  இறுதி  மணி  அடிக்கப்பட்டுவிட்டது. நிம்மதியா  போய்  வாருங்கள் . உங்களின் அவ்வுலக  பயணம் இனிதாகட்டும். . 


Tuesday, April 19, 2016

idathu saarigal


நண்பர்  ஆரோக்கியராஜ்  எனது  தெறி  படத்தின்  விமர்சனத்தில்  அரசியல் சார்பான  கருத்தொன்றை வெளியிட்டு ருந்தார்.  நானும் அவருக்கு  பதில் பதிவு செய்தேன். இருப்பினும் நான்  பதிவில் கேட்ட கேளவிகளுக்கு  பதில்  சொல்லாமல்  காங்கிரஸ் கட்சியின்  கொள்கைகளை  விமர்சித்து பதிவிட்டார்.   அது  அவரின்  இடது சாரி இயக்கத்தின்  மீதுள்ள  நம்பிக்கை காட்டுகிறது.  பாவம்  அவருக்கு சில  விழயங்களை சொல்லி  விளக்கம்  கேட்க  விரும்புகிறேன் ,

  பால பாரதிக்கு  தொகுதி ஒதுக்காமல்  அல்வா கொடுத்து விட்டார்களே  அது பற்றி சொல்லவும் .

  மாநில குழு  முடிவென்றால்  ஐயா  ஜோதி பாசு  அவர்கள் நீண்ட காலம் பதவியில்  இருந்தாரே  . அப்போ  மாநிலத்திற்கு  மாநிலம் ஒரு கொள்கையா?

காங்கிரஸில்  கோஷ்டி பூசல்  என்கிறீர்களே .  கேரளாவில்  நடப்பதற்கு  பெயர்  என்ன .

பொதுத்துறையை  காங்கிரஸ்   பாதுகாக்கவில்லை  என்று  நீங்கள்  சொல்லும்போது , அந்த பொதுத்துறையை உருவாக்கியதே  காங்கிரஸ்  அரசுதான்  என்பது  தங்களுக்கு  தெரியுமா.  எல் ஐ சி  நேருவின் முயற்சியாலும்  ஜி ஐ சி  இந்திராவின்  முயற்சியாலும் வந்தது .

ஏழைகளின் நிலத்தை புடிங்கி  வசதி படைத்தோர்க்கு  தாரை வார்த்தது (மேற்கு வங்கத்தில்} தானே  அந்த மாநிலத்தில்  நீங்கள் தோற்க  காரணமாய் இருந்தது. .  அது என்ன  கொள்கை  அது.

தமிழகத்தில்  பூரண மது  விலக்கு  என்று  கோஷமிடும்  நீங்கள்  கேரளாவில்  உம்மன்  சாண்டி  அவர்கள்  எடுத்த  நிலை  பற்றி  உங்கள்  கருத்தென்ன .

முல்லை  பெரியார்  அணைபிரச்சனயில் உங்களுக்கு  எந்த மாநில  கொள்கையில் உடன்பாடு.  நீங்கள்  கேரள  தோழரா   தமிழக  தோழரா?

மேற்கு வங்கத்தில்  காங்கிரஸ் உடன்  உடன்பாடாமே . இது என்ன  கொள்கை

நண்பரே  ஒன்றை மட்டும் ஞாபகபடுத்த விரும்பிகிறேன் .  நீங்கள்  எந்த காங்கிரேசை விமர்சிக்கிறீர்களோ  எந்த திராவிட இயக்கத்தை விமர்சிக்கிறீர்களோ  நீ   ன்  ன்  ன்  ட  வருடங்களாக  அதற்கு  சாமரம்  வீசி கொண்டிருந்தீர்கள்  என்பதை சுலபமாக  மறந்து  விட்டீர்களே ..

அப்புறம்  தோழர்  மார்க்ஸ்  லெனின்  சே குவாரா  புரட்சி  என்று எப்போதும்  பேசும் நீங்கள்  புரட்சி  கலைஞரின்  தலைமையை  ஏற்றுகொள்வது  அருமையான  கொள்கையா. மாநில குழுவின்  முடிவா.

நேற்று வரை  புதுவை முதல்வர்  ரங்கசாமியின் ஆட்சியை விமர்சித்து விட்டு  பின்  அக்   கட்சி யுடன் கூட்டணியை  எதிர்பார்த்ததாக  செய்தி  புதுவையில் பரவலாக பேசப்படுவது  உங்களுக்கு தெரியுமா.

முக நூல் நண்பர்களே  என்னுடைய  பதிவின் பின்னூட்டத்தில்   தேவையில்லாமல்  அரசியலை நுழைத்ததால் , அவர் என்ன பதிவிட்டார்  நான் என்ன பதில் சொன்னேன்  என்பது பலருக்கு  தெரியாமல் போகும். எனவேதான்  இதை தனி பதிவாக செய்கிறேன்.

நண்பர்  ஆரோக்கியராஜிற்கு  தங்களிடம் இருந்து  நேரடி பதிலை எதிர்பார்கிறேன்.

கடைசியாக  ஒன்று   எல்லா கட்சிகளும்  கொள்கைகளை  தூர  வைத்து  ரொம்ப வருஷமாச்சி.   கவுண்டமணி  சொல்வது போல்  அரசியல்ல இதெல்லாம்  சகஜமப்பா.  இனிமேலும்  கொள்கை  கோட்பாடு  புரட்சி  என்று பேசினால் சிரிப்புதான்  வரும்.

Tuesday, February 23, 2016

அன்பு  நண்பர்களுக்கு  வணக்கம்

Wednesday, February 10, 2016

thaathaa kathai sollu

வாங்க பசங்களா   போரடிக்குதா   ஏதாவது  பேசிகிட்டு  இருக்கலாமா ==

போங்க தாத்தா  நீங்க  எப்பவும்  அரசியலே பேசறீங்க -- நல்ல கதை சொல்றதா இருந்தா  ஒக்காந்து  கேக் கிறோம்.

சரி  வாங்க .

அம்பது வருஷத்துக்கு  முன்னாடி  ஒரு காடு இருந்ததாம் . அந்த காட்டை சிங்க  ராஜா  ஆண்டுக்கிட்டு இருந்தாராம் .   ஒரு   நரிக்கு  அந்த காட்டுக்கு ராஜா  ஆகணும்னு  ஆசையாம் . அந்த ஆசைக்கு  கூடவே ஜால்ரா  தட்டி வந்ததுலே  மூணு  பேரு  எப்போதும் உண்டாம் . அது யாருன்னா  ஒரு  வல்லூறு , ஒரு மீன்   ஒரு  நண்டு . எப்படியோ  பொய் சொல்லி  பித்தாலாட்டம்  பண்ணி  அந்த  சிங்க  ராஜாவை வெரட்டிட்டு  நரி  ராஜா ஆயிடுத்தாம் .  நரி பண்ண  அளப்பரைகளை  தாங்க முடியாம  யானை ஒன்னு நான்  ராஜா  ஆகப்பொறேன்னு  சொல்லிச்சாம். உடனே நரி கூட இருந்த  மூணுபேரும்        யாரு  மூணு  பேறு --

 வல்லூறு  மீன்  நண்டு   தாத்தா .

கரெக்ட் . அந்த மூணு பேரும்  யானை  கூட  போய்   ஒட்டிகிச்சாம் . யானையும் காட்டுக்கு ராஜா ஆயிடுச்சாம் .  கொஞ்ச  வருஷம்  போச்சாம் . யானை ராஜாவுக்கு  அடிக்கடி  மதம் புடிக்கிறத பாத்துட்டு  மூணு பேரும்  மறுபடியும்  நரி காலிலேயே  விழுந்து நீங்க  ராஜா ஆகுங்க  என்று சொல்லி  மறுபடியும் எப்படியோ  நரி ராஜாவாயிடிச்சு . மறுபடியும் கொஞ்ச வருஷம் கழிச்சி  யானை மறுபடியும் ராஜா  ஆயிடுச்சி . அப்ப அதுகூட அந்த மூணுபேரும்  இருந்தாங்களாம்

தாத்தா  திருப்பி  திருப்பி  அதையே சொல்றீங்க  போரடிக்கிறது  இப்ப  என்னாச்சு  சொல்லுங்க.

இப்ப  என்ன  ஆச்சுன்னா   நரி  மேலேயும்  யானை  மேலேயும்  காட்டுல உள்ள  மத்த  மிருகங்களுக்கு  வெறுப்பு  வர ஆரம்பிச்சிடுச்சி .  பழைய
சிங்க  ராஜ  காலத்திலேயே  நாம  சுகமாய் இருந்தோமேன்னு  நெனைக்க ஆரம்பிச்சிடுச்சி .

இனிமே  அவங்க கூட  இருந்தா  நம்ப  கதை  கந்தல்  என்று புரிந்து கொண்ட  மூணு  பேரும்     நாம மூணு பேரும்  ஒன்ன  சேர்ந்து  காட்டுக்கு  ராசாவா   ஆயிடலாம்னு  முடிவு பண்ணி  எல்லா  மிருகங்களுக்கு  மத்தியில  இந்த  யோசனையை  சொல்லிச்சாம் .

உடனே  ஒரு மிருகம்  எழுந்து  உங்களை  எப்படி  நம்பறது. இத்தனை  வருஷமா  நரியையும்  யானையும்  நம்பிதானே  அவங்க கூட இருந்தே  இப்ப எப்படி  உங்களாலே  ஆளமுடியும் . ==

இன்னொரு மிருகம் எழுந்து   ஏ  வல்லூரே    நீ அடிக்கடி பறந்து  போய் விடு கிறாய்.     ஏ   மீனே  நீ தண்ணிக்குள் இருக்கும் உங்களை  காக்க  எங்களை தண்ணிக்குள்  இழுப்பே    ஏ  நண்டே  உன் குணமே  மேலே வருபவனின் காலை  பின்னோக்கி  இழுப்பது தானே .  இயல்பிலேயே  மாற்று குணம் கொண்ட  நீங்கள்  எப்படி   ஒற்றுமையாக  எப்படி ஆட்சி  செய்ய  முடியும்  என்று கேட்டிச்சாம்.



சிங்கம் என்னாச்சு தாத்தா.   சிங்கமா   அதுக்கு  ஆட்சி  போனவுடனே  தான் சிங்கம்  என்பத மறந்து   குணத்தை  மறந்து  எடுப்பார்   கைபிள்ளையாக   நொந்து  நூலாகி  படுத்த  படுக்கையாக  கிடக்கு.

இதற்கிடையிலே  நரி , வல்லூறு  மீன்  நண்டு  எல்லாம்  தவளையை  எங்க கூட  வந்திரு   காட்டுக்கு  ராஜாவாகலாம்  என்று  கூப்பிட்டது.

தவளை எந்த பக்கம்  தாவலாம்  என்று யோசனை பண்ணி   நான் ராஜா  ஆகிறதிற்கு  உதவி பண்றவாங்க  என் கூட  வாங்கன்னு  சொல்லிட்டு அமைதியாய்  இருக்கு .

இன்னொரு பக்கம்  ஒரு மிருகம்  நாந்தான்  ராஜா  நான்தான்  ராஜா  என்று சொல்லிக்கிட்டு  அது பாட்டுக்கு  ஓடிகிட்டே  இருக்கு.

இவங்க  கதைதான்  இப்படீனா   அந்த பக்கம்  ஒரு தும்பி  வாங்க  என்கூட நான் ராஜாவாகனும்  அப்படீன்னு  கொய்ங்  கொய்ங்  நு  ரீங்காரம் இட்டுகிட்டு இருக்கு.

 அப்ப  யாரு  தாத்தா  ராஜா   ஆனாங்க .

தெரியலையே .  நீங்க  வளர புள்ளைங்க  யோசிக்க  கூடியவங்க  யார்  காட்டுக்கு  ராஜாவா  வந்தா நல்லா  இருக்கும்னு  நினைக்கறீங்க..

தாத்தா  இந்த  கதை  போரடிக்குது  தாத்தா

டேய்  நில்லுங்கடா  , பாலாஜி   சித்தார்த்  யூனஸ்    மயில்சாமி  சகாயம்   எங்கடா  ஓடறீங்க  நில் லுங்கடா .

 அங்க  யாரோ உதவின்னு   கத்தறாங்க  தாத்தா   உங்கள  அப்பறமா பாக்கிறோம். 



.

Sunday, January 31, 2016

memes

அறிவுரை அல்ல  ஆதங்கம்தான்.

சமீப காலமாக இணையத்தில்  ஒரு   அரசியல் தலைவரை   அளவுக்கு  மீறி  கலாய்ப்பதை  காண்கிறேன். சமீபத்திய  கலாய்ப்பு    " லதா புருஷந்தானே  நீங்க    ஊர்ல  பத்மா புருஷன்னு  பேசிக்கிறாங்க  : என்று  கலாய் த்திருந்தாங்க.  அதுக்கு  பேரு  மீம்சாம் .


எழுபதுகளில்  ஒரு பிரதான  எதிர் கட்சி கூட்டங்களில் தரம் குறைந்து  காமராஜரை  கிண்டல்  செய்வார்கள்.  காமராஜர்  ஒரு பயணத்திற்கு தயாராக இருக்கும் போது  பத்திரிகை நிருபர் ஒருவர்  அவருடன்  ஆங்கிலத்தில்   ஆர் யு  ரெடி  என்று கேட்டதாகவும் , உடன் காமராஜர்   நோ  நோ ஐ  ஆம்  நாடார்  என்று சொன்னதாகவும்  கிண்டலடிப்பார்கள் .  தன்  அனுபவத்தினால்  காமராஜ்  ஆங்கிலம் அறிவார் என்பதை அறியாத  கூட்டம்  பட படவென கைத்தட்டும்.  . இன்றும்  மூன்றாவது கூட  படிக்காத  புதுவை  ரிக்க்ஷா தொழிலாளிகள்  ஆங்கிலம்  பிரெஞ்சு , ஜெர்மன்  ஹிந்தி மொழிகளை  சர்வ சாதாரணமாக  பேசுவதை  காணலாம் .

அது மட்டுமலாமல்  அவர்களின் கட்சி தலைவர்   வெளிநாடு சென்ற
போது  ஒரு பல்கலைகழகத்தில்  ஒரே வாக்கியத்தில்  ஒரே சொல்  மூன்று தடவை  தொடர்ச்சியாக  வருவது  போன்ற வாக்கியம்  ஆங்கிலத்தில்  சொல்லுங்கள்  என்ற உடன்  உடனே  அவர் சொல்லிவிட்டாராம்.  தங்களது  தலைவரின் ஆங்கிலப்புலமையை  கண்டு  வியந்து கை தட்டுவார்கள்.

நிகழ் காலத்திற்கு வருவோம். இன்றைய  இளைஞர்கள்  காமராஜரை  வியந்து பார்கிறார்கள்.  சமீபத்தில் நடந்த ஒரு கருத்து கணிப்பில்  தமிழகத்தின்  சிறந்த  முதலமைச்சர்  காமராஜர்  என்று  பெரும்பான்மையினர்  கருத்து தெரிவித்து  இருந்தனர்.  அன்று ஆங்கிலப்புலமை பெற்றிருந்த  அந்த அறிஞர்  அவர்கள் கட்சிகாரகளே  மறந்து  வருகிறார்கள்.

உடனே  காமராஜரும்   கிண்டலுக்கும்  கேலிக்கும்  உள்ளாகும்  இன்றைய  தலைவரும்  ஒன்றா  என்று  கேட்காதீர்கள்.

மீம்ஸ்  என்பது  ஒரு படத்தையோ  காட்சியையோ  சிறிது மாற்றம்  செய்து  நகைச்சுவையை  வரவழைக்க  செய்யும்  ஒரு காரியம்.

அரசியல் தலைவர்களை  அவர்களின் செயல்பாடுகளை  கிண்டல்  செய்யலாம் , கொள்கையை விமர்சிக்கலாம். ஆனால்   தாய்மொழி  அல்லாமல்  வேற்று மொழி தெரியாததூ  கிரிமினல்  குற்றம் இல்லை.

இதே  போன்று தான்  சர்தார்ஜி  ஜோக்  என்று  சொல்லி  சர்தார் ஜிகளை   கிண்டலடித்தார்கள்.   ஆனால்  சர்தார்ஜி  எங்காவது   பிச்சை எடுத்து பார்த்தது உண்டா.  கடும்  உழைப்பாளிகள் அவர்கள்.                                            


இனியாகிலும் நண்பர்களே  வரைமுறைகள்  வைத்துகொள்ளுங்கள் .தங்களின்  மீம்ஸ்களில் அறிவைபெருக்க்கும்  நகைச்சுவைகளை  தாருங்கள் .

மீண்டும் சொல்கிறேன்  இது அறிவுரை அல்ல  ஆதங்கம்தான்.

 ிஅள்ளிதெளியுங்கள். .

Sunday, January 17, 2016

kathakali thiraipaarvai

கதகளி    திரைப்பார்வை


சில வருடங்களுக்கு முன்  புள்ளி  ராஜாவுக்கு  எய்ட்ஸ்  வருமா  என்ற  சொற்தொடர்  பிரபலமாக  இருந்தது.   அதை போல  இந்த படத்தில்   தம்பாவை  போட்டு தள்ளியது  யார்  என்ற  கேள்வியே  பிரதானம். ஓரளவு விறுவிறுப்புடன்  கூடிய   மசாலா படம்.  விஷால்   சண்டை காட்சிகளில்  கத களி  ஆடி இருக்கிறார்.  பார்க்கலாம்.

Saturday, January 16, 2016

thaarai thappattai

தாரை தப்பட்டை  திரைப்பார்வை

மன்னிக்கணும்  பாலா  உங்க படத்தை மிக சுமார்  என்று சொல்ல மனமில்லை .  இருந்தாலும்  வேற வழியில்லை. ரொம்ப சுமார். .பாத்திர  படைப்பில் குழப்பம்  யுகிக்ககூடிய காட்சிகள்   தூக்கலான  வன்முறை  என்னமோ நெனச்சி என்னமோ எடுத்து இருக்கீங்க . இளையராசா  இளைசிடீங்கலே .   ஆனைக்கும்  அடி   சருக்கும்னு  சும்மாவா  சொன்னாங்க .



ரஜினி  முருகன் ====   சிவ கார்த்திகேயன்  சூரி  கூட்டணி  கலக்குது. மதுரையின்  இன்னொரு  பக்கம்  கலகலப்பாக .  சிரிக்க   மட்டும்னா  போங்க . 

Wednesday, January 13, 2016

thamizhar thirunaal

ஒரு வேதனை  வெளியாகிறது.


 நேர்மையாக  அரசியலில்  செயல்பட்ட   ஒரு தமிழன்  நிராகரிக்கப்பட்டான் .  நாம்  தூங்கினோம் .
 
  திரையுலகில்  திறைமையாக  செயல்பட்ட உலகறிந்த   ஒரு தமிழன் அவமானப்படுத்தப்பட்டான்   நாம் சிலையாக  இருந்தோம்

  தன்  உழைப்பால்  ஒரு  நாட்டின் வளர்சிக்கு  ஆணிவேராய்  இருந்த  ஒரு தமிழினம்     மாளாத்துயரில்  மூழ்கியது. நாம்  உயிரற்று  இருந்தோம் .

 நம் பாரம்பரிய   பொருள்களுக்கு  அந்நியர்கள்  காப்புரிமை  பெற முயற்சிக்கும்போதும்  நாம் பேச்சற்று இருக்கிறோம்

நம் கலாச்சாரத்தின்  ஒவ்வொரு அங்கமாக  சிதைக்கப்பட்டு  வருகிறது ஜல்லிக்கட்டு  காளையென  சீற   வேண்டிய நாம்   நத்தை என  சுருங்கி போனோம் .

 விவசாய நிலங்களை  தண்ணீர் உறிஞ்சவும்  நில வளங்களை சுரண்டவும்  மெளனமாக  பார்த்திருப்போம்


நண்பா  தமிழன் என்றொரு  இனமுண்டு  தனியே  அவனுக்கொரு  குணமுண்டு
என்று  நாம்  பழம் பெருமை பேசிக்கொண்டே  மிச்ச சொச்ச காலத்தையும்
மகிச்சியுடன் ???????   கடந்திடுவோம்.


இதையும்  மீறி       ஒரு நாள் உலகம்  நீதி  பெரும்  திருநாள்  நிகழும் சேதி வரும்   என்ற  நம்பிக்கையுடன்     அன்பு  உள்ளங்கள்  அத்தனைக்கும்  இனிய  தமிழர்  திருநாள்  வாழ்த்துகள்..

Monday, January 4, 2016

thamizh paesuvom.

இதை படியுங்கள் ==

வீட்டு கதவை  கள்ள சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும்  கோணிப்பையில்  இருந்த  பப்பாளி பழத்தையும் சப்போட்டாப்பழத்தையும் கொய்யாப்பழத்தையும் திருடிய  சுமார  இருபது வயதுடைய கில்லாடி  ஆட்டோ ரிக்ஷாவில் தப்பி  ஓடியபோது  தகவல் அறிந்த போலீஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனை  தீர்த்து கட்டின. 

 மேலே உள்ளவை நாம் தமிழ் என்று நினைத்திருப்போம் .  ஆனால்  இது தமிழ் அல்ல பல்வேறு மொழி கலவைகளை தமிழில் சேர்த்து  தமிழ் என்கிறோம். 

              சாவி   =  போர்சிகீஸ்            பீரோ       பிரெஞ்சு 

              துட்டு       டச்சு                          கோணி     ஹிந்தி         பப்பாளி    மலாய் 

              சப்போட்டா      ஜப்பானியம்      கொய்யா  பிரேசிலியன் 

              சுமார்     பெர்சியன்       வயது   சமஸ்க்ரிதம்    கில்லாடி   மராத்தி  

              ஆட்டோ   கிரேக்கம்       ரிக்க்ஷா     ஜப்பானியம்     தகவல் - அரபி  

                போலீஸ்    லத்தீன்    ஏட்டு    ஆங்கிலம்    துப்பாக்கி   துருக்கி  

                தொட்ட   உருது .


  எப்போதோ  ஒரு புத்தகத்தில்  படித்தது.  ஆசிரியர்  பெயர்  தெரியவில்லை .  இருந்தாலும்  இந்த செய்திக்கு  அவருக்கு  ஒரு நன்றி.