Tuesday, August 23, 2016

செவாலியே விருதும்  சிவாஜி ரசிகர்களும் --

ரஜினிகாந்த்  தனது ட்விட்டேர்  பக்கத்தில்  எங்கள்  தலைமுறையின்  நடிகர் திலகம்  கமல்  என்று பதிவிட்டிருந்ததாகவும் , எத்தனை தலைமுறை ஆனாலும் நடிகர் திலகம்  என்பது  ஒருவர்தான்  என்கின்ற  ரீதியில்  நடிகர்திலகத்தின்  தீவிர ரசிகர்கள்  பதிவிட்டு வருவதை  பார்க்கிரேன் .

இது  ஒன்றும்  புதிதல்ல .  அந்த கால கட்டத்திலேயே  சிவாஜி  அவர்களை  தென்னிந்தியாவின்  மார்லன்  பிராண்டோ  என்று  ஒரு  அரசியல்  தலைவர் புகழ்ந்தார்.   அப்போதே  எங் களைப்போன்ற  அல்லது  எங்கள் வயதை ஒட்டிய  திலகத்தின்  ரசிகர்கள்  அதை ஒப்புக்கொள்ளவில்லை.  மார்லன் பிராண்டோ நல்ல நடிகர் தான்  ஆனால்  பலதரப்பட்ட  பாத்திரங்களை  ஏற்று  நடித்திட  அவருக்கு  வாய்ப்பில்லை. ஆனால் உலகளவில்  அப்போது அவரது  பெயர் பிரபலமானதாக  இருந்ததால்.  அந்த உவமை  அப்போது  பெரிதாக  எடுத்து  கொள்ளப்பட்டது . ஆனால்  நம் நடிகர் திலகம்  ஏற்று நடித்த  கதா பாத்திரங்கள்  எத்தனை. எத்தனை.  பேசும் வட்டார வழக்கில் மாற்றம்  உடல் மொழியில்  வித்தியாசம், புராண  இதிகாச  தேசிய மற்றும்  இயல்பான மனித ர்களின்  வாழ்க்கையை  தத்ரூபமாக வடித்துக்காட்டிய  எங்கள் திலகத்தின்  திறமை  உலக ளவில்  யாராலும் தொட்டு விட முடியாது.   அன்றைய தமிழ் சினிமாவின் வீச்சு உலகளவில்  இல்லை . அதனாலேயே  திலகத்தின் திறமை  உலகமெங்கும்  தெரியாமல் இருந்தது. ஆனால் ஆசிய  ஆப்ரிக்கா  படவிழாவில் நடிகர் திலகத்திற்கு  சிறந்த நடிகர்  விருது கிடைத்தபின்தான்  அவரின் புகழ் தமிழ்நாட்டை  தாண்டி  தெரிய ஆரம்பித்தது.ஹாலிவூட்  நடிகர்களே  சிவாஜி அமெரிக்கா சென்றபோது  சிவாஜியின்  திறன் கண்டு  வியந்தனர். அதில்  மார்லன்  ப்ராண்டோவும் ஒருவர். .  

அதே போல்  அன்றைய பொதுக்கூட்டங்களில்  அடைமொழியுடன்  தலைவர்களை  அழைப்பது  என்பது  ஒரு  மரபாகவே  இருந்தது.

தென்னாட்டு  பெர்னாட்ஷா ,  இந்நாட்டு  இங்கர்சால்  காஞ்சி  கரிபால் டி  ,  வாழும்  வள்ளுவம்  என்பன போன்றவை  சில சான்றுகள்.

அன்பு நடிகர் திலகங்களின்  ரசிகர்களுக்கு , இவைகளை எல்லாம்  பெருது படுத்த  வேண்டாம். .  ஒரு பொருட்டாகவும்  எடுத்துக்கொள்ள  வேண்டாம்.

கமல் மிக சிறந்த  நடிகர்.  ரஜினி அவர்களும்  நடிகர் திலகத்தின்  மேல்  மிகுந்த  மரியாதை  வைத்திருப்பவர்.

எத்தனை பட்டங்கள்  யாருக்கு கொடுத்தாலும் யாரை
  எப்படி எல்லாம்  வர்ணித்தாலும்
V.C. கணேசன்  என்பது மாறி  சிவாஜி கணேசன்  ஆனாரே  அதுவே  அவரை பற்றி சொல்கிறதே.

எத்தனை இஷ்ட தெய்வங்களை  பூஜித்தாலும்  முதல்  வணக்கம்  கணபதிக்கே  /கணேசனுக்கே .




No comments:

Post a Comment