Friday, August 31, 2012

naan rasiththa anniya nattu padangal

சிறு வயது முதலே எனக்கு சினிமா பார்க்கும் ஆர்வம் உண்டு. அப்போதெல்லாம்  அஜந்தா  தியேட்டேர்  மற்றும் ரத்னா  தியேட்டரில் ஆங்கில படம் போடுவார்கள் .  சக மாணவர்களிடம்  படம் பார்த்த கதையை சொல்லி மகிழுவோம்.  ஆங்கிலம் புரியாத வயதில்  அந்தப்படங்களை விரும்பி பார்த்தோம் என்பது இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. அதற்க்கு காரணம் வசனத்தை விட காட்சிகள் அதிக கவனத்தை ஈர்த்தது.
இன்று மாலை அமைதியாக பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்தபோது  ஆங்கில படங்களை பற்றி நினைவு வந்தது. அது மட்டுமல்ல படங்களின் காட்சி அமைப்பும் படத்தின் பெயரும் நடிகர் நடிகைகள் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் பெயர் கூட நினைவுக்கு வந்தது . எதை ஏன் பதிவு செய்து இன்றைய தலைமுறைக்கு  அறிமுகப்படுதகூடாது  என்பதின் விளைவே  இந்த புதிய இடுகை.

நாளை செப்டம்பர் மாதம் துவங்குகிறது .  என் முதல் நான் ரசித்த அந்நிய நாட்டு  படத்தை   COME SEPTEMBER  PADTHILIRUNTHU  தொடங்குகிறேன்.

ராக் ஹட்சன் , ஜீனா லோலா பிரிகிடா  கதா நாயகன் கதாநாயகி .
ஜீ னா  லோலா ப்ரிகிடா  பெயரை கேட்டாலே  அன்றைய  பதின் பருவத்தினருக்கு  உற்சாகம் கரைபுரளும்.  

COME SEPTEMBER படத்தின் சிறப்பம்சம் அதன இசைதான்.  

சரி கதை என்னனு பார்போம் .      கதாநாயகன் அமெரிக்க கோடீஸ்வரன் .
விடுமுறைக்காக  இத்தாலியில் உள்ள  தன் ஆடம்பர பங்களாவிற்கு
வருகிறான் அத்துடன் தன்  நீண்டகால  காதலியையும் சந்திக்க வருகிறான்
இதற்கிடையில்  நீண்ட நாளாய் காத்திருந்த காதலி  காதலை மறந்து இன்னொருவனை  மணக்க முடிவெடுக்கிறாள் .  இடைப்பட்ட காலத்தில்
கதாநாயகனின் பங்களாவை ஓட்டல் என்று நினைத்து  ஒரு இளைஞர் பட்டாளமே  அங்கு தங்கி இருக்கிறது.  வாலிப  வாலிபி களின்  கூத்தடிப்பே
படத்தின் உயிர்நாடி .  வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை பாருங்கள்.

சரி  இந்தக்கதையை  தமிழில் பார்த்த மாதிரி இருக்கே ? உங்களுக்கு ஏதாவது  நினைவு வருகிறதா.


            

Thursday, August 30, 2012

solla solla

நேற்று நான்  SRI MANAKULA VINAYAGAR ENGINEERING COLLEGE  சென்றிருந்தேன் .  இப்போதுதான் முதல் முறையாக அங்கு செல்வதால்
வழி விசாரித்துக்கொண்டே சென்றேன் .  அப்போது வந்து கொண்டிருந்த
சில மாணவர்களிடம்  கல்லூரிக்கு வழி கேட்க அதில் ஒருவன் , சார் அந்த மரத்தை தாண்டியவுடன்  கல்லுரி  தான் என்றான் .  நான் சும்மா இருந்திருக்கலாம் .   தம்பி என்னால மரத்தை எல்லாம் இந்த வயசில தாண்ட முடியாது  வேற ஏதாவது வழி இருந்த சொல் என்றேன் .

அப்ப ஆரம்பிச்சாங்க பாருங்க பசங்க  நொந்து நூலாகிடேங்க .  அவங்க பாஷையிலேயே  சொல்றேன் கேளுங்க .

       மச்சி இன்னிக்கு பெருசுதான்  நமக்கு  ஜிலேபி . சார்  எப்பநீங்க  எங்களை
       மொக்கையா   சொரண்டிடீங்கலோ   அப்பா எங்கள் மொக்கையையும்
        நீங்க கேட்டுதான் ஆகணும்.

        1.  பஸ்  ஸ்டாப்பிலே  பஸ்  வரும் --  full  ஸ்டாப்பிலே  FULL வருமா ?

        2.   பஸ் போனா  பஸ் ஸ்டான்ட்  போகாது
              ஆட்டோ போன ஆட்டோ  ஸ்டாண்ட்  போகாது   ஆனா
               சைக்கிள் போன  சைக்கிள் ஸ்டாண்ட்  கூடவே போகும் .

         3.    காசு இருந் தா   call taxi   காசு இல்லேன்னா  நம்ம  கால்தான்  டாக்ஸி

          4.   மொட்டைக்கு  helmet  போடலாம்  ஆனா  helmettukku  மொட்டை போடா முடியுமா

           5.     SUNDAY la   சண்டைபோடலாம்  ஆனா
                    MONDAY la மண்டையை போடமுடியுமா


            6       என்னதான்  வாய்க்கால்லே   வாயும் காலும் இருந்தாலும்
                      அதால பேச முடியுமா இல்ல நடக்கத்தான் முடியுமா

             7.    வாயாலே நாம் நாய்ன்னு சொல்ல முடியும்  ஆனா நாயாலே  வாய் ன்னு  சொல்ல முடியுமா

          பசங்க சொல்ல்லிகிட்டேபோக  அப்பா போதும்டா சாமி இனிமே
          தப்பி த்தவறி கூட  மொக்கை போடமாட்டேன்னு  சத்தியம் செய்யாத
           குறையோடு தப்பி ஓடினேன் .
          

Wednesday, August 15, 2012

neelakkarayin orathil

நீலக்கரையின் ஓரத்தில்  ---

சமீப காலமாக புதுவை கடற்கரையில் அறிய வகை மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குகிறது . இதற்கு பருவ மாற்றம் காரணம் என்று கூறப்படுகிறது .  பருவமாற்றம் காரணமாக இருந்து விட்டு போகட்டும்  ஆனால் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவிஷயம்  ஒன்று உள்ளது . எந்த உயிரினமும் தாம் வாழ்வதற்குரிய சூழல் இருந்தால் தான்  அந்த இடத்தை  தான் வசிக்கும் இடமாக தெரிவு செய்து கொள்ளும் .
அப்படி இருக்க  அறிய வகை  கடல் வாழ் உயிரினங்கள் புதுவை நோக்கி
வருகிறதென்றால்  நாம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா .

நம் கடல்வாழ் உயிரினங்களை ஆராய்ச்சி செய்யும் துறை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் .  சில நாட்களுக்கு முன் புதிய வகை மீன் ஒன்று வலையில் சிக்கியபோது  அது என்ன வகை மீன் என்று தெரியவில்லை என்று
மீன்வளத்துறை  தன தலைமையகத்துக்கு செய்தி அனுப்பியதாக தகவல்.

நாம் காலத்தோடு செயல்பட்டால் சுற்றுலாத்துறையை மேம் படுத்த
பல்வேறு நடவடிக்கையை எடுக்கலாமே.
அறிய வகை மீன்களின்  வாழ்வாதாரத்தை நாம் புதுவையிலேயே  உருவாக்கலாமே . இதற்கு சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும்  மீன்வள துறையும் நம் போன்றவர்களும் நம்மால் ஆனா பங்கை ஆற்ற வேண்டாமா .
குறைந்தபட்சமாக ஒரு விழிப்புணர்வை  உருவாக்க வேண்டாமா.

கொசுறு செய்தி:  பத்திரிகையில் வந்திருப்பதாக  ஒருவர் சொன்ன செய்தி.

 இலங்கை போலீசார்  சீனாவை சேர்ந்த  ஒரு குழுவினரை  தனது கடல் எல்லையில் கைது செய்ததாம்.  அனால் அன்று மாலையே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனாராம் .  விஷயம் என்னவென்றால்  அந்த குழு
சீன அரசாங்கத்தால்  இலங்கையின் அனுமதி பெற்று  கடல் சார்ந்த ஆராய்ச்சிக்காக வந்த குழுவாம் . மிக ரகசியமாய் இருந்த விஷயம் உள்ளூர்
காவலர்களுக்கே தெரியாதாம்.





nalla nalla pillaigalai nambi



          அட்டைக்கத்தி திரைப்படம் இன்று காணப்போன  எனக்கு  ஒரு
          மகிழ்ச்சியான  அனுபவம் ஏற்பட்டது .

                  விடுமுறை தினம் ஆனதால் கொட்டகை இளைஞர்களால்
                  நிரம்பி வழிந்தது . திரைப்படம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை
                  இளைஞா  கூடினால்  அவர்களின் கொண்டாட்டம் எப்படி இருக்கும்
                  என்பது தெரிந்ததுதானே .  ஒரே கும்மளாம்தான்.விசில் சப்தமுடன்.

                   திடீரென்று  விளக்குகள் அணைக்கப்பட  படத்தை எதிர்பார்த்து
                   காத்திருந்த ரசிகர்களின் ஆரவாரம் மேலும் அதிகமாகியது.
                   ஆனால்  திரையில்  தேசிய கொடி  ஜனகன மன பாடலுடன்
                   தோன்றத் தொடங்கியது.

                   அப்போதுதான் அந்த வியப்புக்குரிய  காட்சி அரங்கேறியது
                   கூச்சலும் கொண்டாட்டமுமாக இருந்த திரை அரங்கு
                   திடீரென்று  அமைதி ஆனதுடன் நில்லாமல்  கூடவே  எழுந்து  நின்று
                    தேசிய கீதம் பாடியது.  இதை யாரும் சொல்லிதரவில்லை.
                 
                    தானாகவே  இளைஞர்களின் எழுச்சியை காண முடிந்தது.

                                                                                                                                             

                      நம் இளைஞர்கள்   தேசத்தின் மீது அக்கறை இல்லாதவர்கள்
                      அவர்களுக்கு  காதலும் சினிமாவும் குடிப்பதுவும் தான் தெரியும்
                      என்று நினைக்கும்  நெஞ்சங்களுக்கு  சவுக்கடி கொடுத்தது போல் 
                      இருந்தது அந்த நிகழ்ச்சி. 

                       இதை கண்ட எனக்கோ  விழிகளில் ஈரம் கசிந்தது . மனம் 
                        நெகிழ்ந்தது . 

                         இம்மாதிரி இளைஞர்கள்  இருக்கும் வரை இந்தியா என்னும் 
                          இரும்பு  கோட்டையை  எந்த சக்தியாலும்  அசைத்துக்கூட 

                          பார்க்கமுடியாது.




























                     

attakaththi

அட்டகத்தி திரை விமர்சனம்- சில படங்கள் எனக்கு காரணம் இல்லாமலே முதல் நாள் முதல் கட்சி பார்கத்தோ ன்றும் .  அந்த வரிசையில் அட்டகத்தியும்.

கதை என்று பார்த்தால்  காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக  ஒரு ஒரு பெண்ணாக காதலித்து  அது சொதப்பலாகிவிடுவதுதான் கதை,

அங்கங்கே சிறிது  தொய்வு  ஏற்பட்டாலும்  அழகான காட்சி அமைப்புகளினால்
நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார் புது இயக்குனர்  ரஞ்சித்.
அண்ணன் அம்மா அப்பா  தாத்தா  கேரக்டரில்  நடிப்பவர்கள் இயல்பாக நடிப்பதும்  அந்த காட்சி அமைப்புகளும்  ஒரு அழகான ஹை கூ .

படத்தின் கதாநாயகன்  மிக நன்றாக செய்திருக்கிறார்.  குறிப்பாக  சோகமாக
தெரிவதற்காக  அவர் முக பாவங்களை மாற்றி மாற்றி  முயலும்போது  அசர
வைக்கிறார்

கதாநாயகி நாம் அன்றாடம் சந்திக்கும் பெண் போல இயல்பாக  வலம் வருகிறார்.

இசை பற்றியும் பின்னணி பற்றியும் அவசியம் சொல்லியாக வேண்டும்.
கிடார் வாத்தியத்தை அழகாக பயன் படுத்தி இருக்கிறார் இசை  அமைப்பாளர் .

பாடல்கள் அழகாக படமாக்கபட்டிருக்கிறது .  ஒளிப்பதிவு துல்லியம்.

படத்தின் எடிட்டிங் நன்றாக இருந்தாலும் , dissolve editing  என்ற பாணி பின்பற்றபட்டிருக்கிறது . சாதாரணமாக ஒரு சீன் முடிந்தபிறகுதான் இந்த
முறை பயன்படுத்தப்படும்.  ஆனால் புதிய முயற்சியாக   shot by shot இதை பயன்படுத்தி இருப்பதால் கண்கள்  உறுத்து வது  என்னவோ  நிஜம் .

விரசம் இல்லாமல்  யதார்த்தமான  படம் பார்க்க விரும்பினால் , சிறிது காலம் பின் நோக்கி  நாம் பயணிக்க விரும்பினால்  தாராளமாய் பார்க்கலாம்.

அது சரி  அட்டகத்தி  title  pottu  படம் தொடங்கும்போது  வீட்டில்  MGR  படம்
காண்பிப்பது   கிராமத்து வீடுகளில்  MGR  படம் இருக்கும் என்பதாலா ?
ஏன்  எனக்கு சந்தேகம் என்றால்  அந்தகாலத்தில்  மக்கள் திலகத்தை  அட்டகத்தி வீரர் என்று மாற்று அணியினர்  விமர்சிப்பது உண்டு



                                

Tuesday, August 14, 2012

vaazhga nee emman

இன்று சுதந்திர தினம்.   சுதந்திர தினம் வரும்போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் கூடவே வரும்.   நாம் சுதந்திரம் பெற்ற அன்று மகாத்மா  ஏன் எந்த ஒரு  விழாவிலும் கலந்து கொள்ளவில்லை என்று. அதற்கான  விடை இன்று தான் பத்திரிகை வாயிலாக அறிந்து கொண்டேன். அதன் விவரம் கிழே .

         அந்த சமயத்தில் மகாத்மா கல்கத்தாவில் ஒரு முஸ்லிம் இல்லத்தில்
         தங்கி இருந்தார். அப்போது இந்து முஸ்லிம் கலவரம் .மிகப்பெரிய
         அளவில்கலவரம்   நடந்து கொண்டிருந்தது.  அங்கே அமைதி நிலவ
         மகாத்மா யாரும் போகாத இடத்திர்க்கெல்லாம் சென்று  பாதிக்கபட்ட
          மக்களுக்கு ஆறுதல் கூறியும் அஹிம்சையை வலியுறுத்தியும்
          பாத யாத்திரை மேற்கொண்டார்.   ஆகஸ்ட் 15  மகாத்மாவின் நிழல் போல
          இருந்து வந்த  தேசாய் என்பவற்றின் நினவு நாள். அந்த நாளில் மகாத்மா
          ராட்டினத்தில் நூல் நூற்று  மென் விரதம் இருப்பது வழக்கம். எனினும்
         அன்று இரவு நடைபெற்ற ஒரு  கூட்டத்தில்  பேசினார். அந்த கூட்டத்தில்
          இந்து முஸ்லிம் என சுமார் 30000 பேர்  மூவர்ணகொடியுடன் கலந்து
          கொண்டனர்.  மிகப்பெரிய கலவரத்திற்கு பின் அமைதியை  ஏற்படுத்தும்
          ஒரு நிகழ்வாக அது அமைந்தது.

            இந்திய நாட்டில் அனைத்து  மதங்களை சார்ந்தவரும்   ஒன்றாக
            இணைந்து  இந்திய இறையாண்மைக்கு  பாதுகாப்பாகவும்  நமது
            கலாசாரத்தை  பேணி காப்பதுமே மகாத்மாவின் தலையாய எண்ணமாய்
            இருந்த து .

தினமணி இதழில்  இன்று  வெளியான  இந்த கட்டுரையை முடிந்தால் படித்து பாருங்கள்.



இன்று வெளியான இன்று 

Monday, August 6, 2012

karpanaikku maeni thanthu (1)

ka ka ka

புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளுக்கு  பத்திரிகையில் 
ஏகப்பட்ட விளம்பரங்கள்  பல்வேறு வாசகங்களுடன் வந்த வந்திருந்தது .  அதில் ஒரு வித்தியாசமான விளம்பரம் இதோ 


   =====================================================================

  பிறந்த நாளான இன்று 

                                காகா      பிடிக்கிறேன் 
ஆயுள் காரன் சனிபகவானின் வாகனமாம் 
காக்காவிற்கு மதிய உணவு அளித்து சனி பகவானிடம் 

 எங்கள் அன்பு தலைவர் திரு ரங்கசாமி அவர்களுக்கு 
நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று அவர்களின் பிறந்தநாளான  இன்று அனைத்து தொண்டர்களின் சார்பாக வேண்டுவதற்காக இன்று மதியம் உணவு அளிக்க 
                         காக்காவை  தேடி பிடிக்கிறேன் 

நாள்  4.5.2012                   கிழமை  சனிக்கிழமை 
இடம் காக்கைகள்அதிகம் கூடும் இடம் 

 இவன் அகில இந்திய  NR CONGRESS  கட்சியின் கடை நிலை தொண்டன்    R.தீபக் 


=======================================================================                      


avan ninaithaanaa ithu nadukkum endru

இன்றுதொலைக்கட்சியில்வடிவேலு காமெடியைபார்க்கநேர்ந்தது . ஒரு பத்து நிமிடம்நாங்கள் அனைவரும் எங்களை மறந்து  சிரித்த்துகொண்டிருந்தோம் .  எப்பேர்பட்ட நடிகன் .  உடல்மொழியால்வசன உச்சரிப்பால்  அணைத்து வகை  ரசிகர்களையும் கட்டிபோட்ட அந்த வைகை புயல் எங்கே ?
மதுரையில்     போட்டோவிற்கு  கண்ணாடி போடும் கடையில் வேலை பார்த்த  ஒரு கருத்த  மெல்லிய தேகம ராஜ்கிரனால் கண்டெடுக்கப்பட்டு காதலன் படம் மூலமாய் பிரபலமடைந்து  தமிழகத்திரைப்படத்தில்ராஜாங்கம் நடத்தி வந்தது  திடீரென்று அந்த ராஜாங்கம் சரிந்தது ஏன் .

சாதாரணமாக  பெரியர்வர்களின் வார்த்தைகள் மேற்கோள் காட்டப்படும் . ஆனால் வடிவேலுவின் சில வசனங்கள் 
     எதோ ஒரு சமயத்தில் பேசப்படிகிறது அதுவும் கட்சி வேறுபாடின்உதாரணமாக  . அது போன மாசம்  iஇது இந்த மாசம்                                        .எல்லாம் ஒரு   groupppathaan   அலையிரானுன்களா ?
அட நாதாரி பசங்களா -- இன்னுமா நம்பlலை   நம்பு கிரான்க --
அவனா நீ ? சாதாரண வார்த்தைக்கு உயிரூட்டிய உன்னத கலைஞனுக்கு ஏன் இந்த நிலை .   அரசியல்அரசியல் தவிர வேறொன்றும் iஇல்லை . 

நகைச்சுவை நண்பா அரசியலை ஒதுக்கிவிட்டு  நீ  திரும்ப  எங்களை மகிழ்விக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்கிறோம் .  அது அதுக்கு ஆளுங்க இருக்காங்க  அவங்க பாத்துபபாங்க . திருந்தி வா  திரும்ப வா 
பின்குறிப்பு      இன்னொரு  கோமாளிகூட அரசியலுக்கு  வரப்போகுதாம் .  அண்ணா   வானாங்கன்னா. .
 
 

Sunday, August 5, 2012

nanbargal dhinam

எண்ணிப்பார்க்கிறேன்எத்.தனை எத்தனை  நண்பர்கள் .  பெயரை குறிப்பிடாமல் அனைவரையும் நன்றியுடன் நினைத்து  பார்க்கிறேன் .
யாரை சொல்வதுயாரை விடுவது .

புதுவைக்குநேரு வந்தபோது  மாலையிடும் வாய்ப்பினை  எனக்கு அளித்த நண்பனைபற்றியா என்திருமண நாளிற்காக  தன்திருமண நாளை ஒத்திபோட்ட நண்பனைபற்றியா . நிதிநெருக்கடியில் சிக்கி தவித்தபோது    கேட்காமலேய  உதவிசெய் த lநண்பர்களை பற்றியாஉடல்நலம் குன்றியபோது  கூடவே இருந்து எனக்கு  ஆறுதலாய்  இருந்த நண்பரை  சொல்லவா.

எட்டாம்வகுப்பில்சண்டையிட்டுகல்லூரி முடித்துவேலைக்குசென்ற பின்னும் அடிக்கடிசந்திக்கும் சூழலில்இருந்தும் பேசாமல்இருந்துஅவன்எனக்கும் நான் அவனுக்கும்
ஒருவருக்குlஒருவர் அறியாமல்உதவி செய்ததைமறக்கமுடியுமா .  yயாரோ     சொன்னார்கள் நட்பும் இசையும் இல்லைஎன்றால்
பைத்தியம் பிடித்துவிடும்  என்று  .சத்தியமான uஉண்மை .  

எத்தனை எத்தனை  நண்பர்கள் இருந்தாலும் ஒருசில குறிப்பிட்ட
நண்பர்கள்தான் iஇதையத்தில்உறைந்து  விடுகிறார்கள்.

என்நண்பர்களுக்குவயதுவித்தியாசமில்லை  ஆண் பெண் பேதமில்லை தெள்ளிய நீரோடை போல்  தெளிந்த நட்பு .

பெருமிதம் கொள்கிறேன் எப்படிப்பட்ட நண்பர்கள் எனக்குஎன்று . என் மரியாதை மிக்க நட்பு வட்டத்திற்கு  உங்கள் பார்வையில் நான் எப்படி இருந்தாலும்  நீங்கள் என்னுடன் பாராட்டிய நட்பு  iஇன்னமும் எனநெஞ்சில் பசுமையாக  பெருமையாக  என்றென்றுநினைத்துபார்க்கும்வண்ணம் இருக்கும் .

    நட்பை கூடகற்பைபோல் என்னுபவர்களில் நானும் ஒருவன்