Thursday, August 25, 2016

வாழ்த்துக்கள்  கேப்டன்.  உங்களுக்கு  இன்று  பிறந்த  நாளாமே ..

என்பார்வையில் நீங்கள்  எப்படி  என்று  சற்று யோசித்ததின் விளைவே  இந்த பதிவு.

தூரத்து  இடி முழக்கம்  படத்தில்  இடம்பெற்ற  உள்ளமெல்லாம்  தள்ளாடுதே.  என்ற  பாடலும்   அகல் விளக்கு  படத்தில்    ஏதோ  நினைவுகள் கனவுகள்  மனதிலே   காவேரி  ஊற்றாகவே  என்ற  பாடலும்  உங்கள் படத்தை  பார்க்க தூண்டியது.   சாதாரணமாக சென்று கொண்டிருந்த  உங்கள் திரை பயணம்  சட்டம்  ஒரு  இருட்டறை  படத்திற்கு  பிறகு  நாலு  கால் பாய்ச்சலில்  ஓடத்துவங்கியது.  ரஜினி  கமல்  மத்தியில் உங்களுக்கும்  ஒரு இடம்.   அந்த காலகட்டத்தில்  திரை இலக்கணத்திற்கு சற்றும் பொருந்தாத உங்கள் தோற்றம் , அதையும் மீறி  நீங்கள்  பெற்ற  வெற்றி  வியப்புக்குரிய ஒன்று.

வெற்றி பெற்றபின்  திரையுலகில்  பிலிம் இன்ஸ்டிடியூட்  மாணவர்களுக்கு  ஒரு சரியான  அங்கீகாரம்   கொடுத்தது நீங்கள்  தான்.
உங்களை இப்போது  எல்லோரும்  கோவக்காரர்  என்று சொல்லுகிறார்கள்  அந்த கோ பத்தில்   அர்த்தம்  இருப்பதை  மறந்து விடுகிறார்கள்.

நன்றாக  நினைவிருக்கிறது  நடிகர் திலகம்  இறுதி  ஊர்வலம்   மயானத்தை  அடைகிறது . கட்டுப்படுத்த முடியாத  அளவில்  கூட்டம் நெருங்குகிறது.  வி ஐ பி  இருக்கும்  பகுதிகளிலும்  கலைஞர்களும் தலைவர்களும் சூழ்ந்து இருக்கிறார்கள் . நடிகர் திலகத்தின்  உடல் உள்ளே  எடுத்து செல்ல  முடியாத படி  நெரிசல்.  அப்போது  நீங்கள்  அந்த  கூட்டத்தில்  இருப்பவர்  யார்  எவர்  என்று  பார்க்காமல்  அனைவரையும்  புறம்தள்ளி   எளிதாக வழி அமைத்து   கொடுத்தீர். சிலரை கோபமாக  தள்ளியும் சிலரை வசை மாறி பொழிந்தும்  நிலைமையை சமாளித்தீர்கள். அப்போதே  உங்களை பார்த்து  வியந்தவன்  நான்.

தங்களின்  சிவப்பு  மல்லி , ரமணா போன்ற படங்கலும்  மனதில் பட்டதை தைரியமாய் சொல்லும்  பா ங்கும் , ஈழ தமிழர்கள் பால் நீங்கள்  காட்டிய பரிவும் தமிழகம் நம்பும்   ஒரு தலைவருக்குரிய  தகுதியை  காட்டியது. .

பிறகு  நீங்கள்  அரசியலுக்கு  வந்தீர்கள் . கூட்டணி அமைத்து   எதிர்க்கட்சி  தலைவராகவும்  ஆனீர்கள் .  இது வரை  எல்லாம்  சரியாக தான் போய்க்கொண்டிருந்தது.   இரு பெரும்  கட்சிகளுக்கு  சரிசமமாய்  ஏ ன்  ஒரு  கட்டத்தில்  அவர்களையே  விஞ்சும் அளவிற்கு  உங்கள் செல்வாக்கு உயர்ந்தது.  .  கலைஞரே உங்களுக்காக  எதிர்பார்த்து நின்றார். அத்தனை  கட்சிகளும்  உங்களின் நிலையை  எதிர்பார்த்திருந்தது.   இதிலதான்  நீங்க  சறுக்கிவிட்டீர்கள்.

சிவப்பு மல்லி  படத்தில்  நீங்கள்  கண்கள் சிவக்க , கம்யூனிஸ்ட் கொடிகள் சூழ  பறை அடித்து கொண்டு -- எரிமலை  எப்படி பொறுக்கும்  என்று பாடிக்கொண்டு வரும்போது  நிறைய இளைஞர்கள் நீங்கள்  கம்யூனிஸ்ட் என்று  நினைத்தார்கள்.   இலங்கை தமிழர் பிரச்சனையில்  சிலர்  உங்களை  திராவிட இயக்கத்தின்  ஆதரவாளர்கள்  என்றார்கள்.  ஆனால்  நீங்கள் வேறு  பாதை கண்டீர்கள்.

ஒரு உண்மையை மறந்து விட்டீர்கள்  கேப்டன்.  தமிழகத்தில் கம்யூனிச  இயக்கமோ   திராவிட  இயக்கமோ  சந்தர்பத்திற்க்கேற்ப  கூட்டணி  அமைப்பதில்  வல்லவர்கள்.  இந்த தேர்தலை  பொறுத்தவரையில்  நீங்கள் தனியாக  நின்றிந்தால்  கூட  கணிசமான வாக்குகள்  பெற்றுருக்க  முடியம்.

இன்னொன்று  கைதேர்ந்த அரசியல் வாதிகள்  ஊடகங்களை பகைத்து  கொள்ள  மாட்டார்கள். நீங்கள்  எப்படி  என்று  உங்களுக்கே   தெரியும்..   உங்கள் வெள்ளந்தி  மனதை பயன்படுத்தி  ஆசை காட்டி  ஒட்டுமொத்தமாக  உங்களை குப்புற தள்ளியவர்கள் யார் என்று  இனியாவது யோசியுங்கள்.  உங்களுக்கு தெரியுமா  கேப்டன் பொது உடமை கட்சிகளுக்கு  முதல் முறையாக தமிழக சட்ட சபையில் இடம் இல்லை.  இதற்கு  அர்த்தம்  என்னவென்றால்  இதற்கு  முன்னர் அவர்கள்  ஊழல்  பின்  இவர்கள் ஊழல் என்று  சொல்லி  எப்படியாவது   ஒரு  கூட்டணியில்  இ டம் பெற்று  சட்ட சபையில்  இடம்  பிடித்த்து  விடுவார்கள்.  இம்முறை  அவர்களை  சேர்க்கவில்லை . அதன்  விளைவு  நீங்கள்  பலிகடா. சிறு குழந்தைக்கு  கூட  தெரியும்  தாங்கள்  வேறு ஏதாவது கூட்டணியில்  இடம் பெற்றிருந்தால்  நிச்சயம்  நீங்கள்  கௌரவமான நிலையில்  இருந்திருப்பீர்கள். என்று.  என்ன செய்வது  காலம்  நாம் நினைப்பதை  எல்லாம்  செய்வதில்லையே.

அதெல்லாம்  ஒருபுறம்  இருக்கட்டும்,  தங்களின்  மனித நேயம், சிறுமை கண்டு  பொங்குதல்  எங் களில்  ஒருவர் போன்ற  உணர்வு  போன்றவைகளே  என் போன்றவர்களை  உங்கள்  பக்கம்  ஈர்க்க செய்கிறது.

அரசியல் வாதி  கேப்டனைவிட  போ லித்தனமில்லாத  தனி மனித கேப்டனை மிகவும்  பிடித்திருக்கிறது.   பல்லாண்டு  வாழ்க  கேப்டன்.  


Tuesday, August 23, 2016

செவாலியே விருதும்  சிவாஜி ரசிகர்களும் --

ரஜினிகாந்த்  தனது ட்விட்டேர்  பக்கத்தில்  எங்கள்  தலைமுறையின்  நடிகர் திலகம்  கமல்  என்று பதிவிட்டிருந்ததாகவும் , எத்தனை தலைமுறை ஆனாலும் நடிகர் திலகம்  என்பது  ஒருவர்தான்  என்கின்ற  ரீதியில்  நடிகர்திலகத்தின்  தீவிர ரசிகர்கள்  பதிவிட்டு வருவதை  பார்க்கிரேன் .

இது  ஒன்றும்  புதிதல்ல .  அந்த கால கட்டத்திலேயே  சிவாஜி  அவர்களை  தென்னிந்தியாவின்  மார்லன்  பிராண்டோ  என்று  ஒரு  அரசியல்  தலைவர் புகழ்ந்தார்.   அப்போதே  எங் களைப்போன்ற  அல்லது  எங்கள் வயதை ஒட்டிய  திலகத்தின்  ரசிகர்கள்  அதை ஒப்புக்கொள்ளவில்லை.  மார்லன் பிராண்டோ நல்ல நடிகர் தான்  ஆனால்  பலதரப்பட்ட  பாத்திரங்களை  ஏற்று  நடித்திட  அவருக்கு  வாய்ப்பில்லை. ஆனால் உலகளவில்  அப்போது அவரது  பெயர் பிரபலமானதாக  இருந்ததால்.  அந்த உவமை  அப்போது  பெரிதாக  எடுத்து  கொள்ளப்பட்டது . ஆனால்  நம் நடிகர் திலகம்  ஏற்று நடித்த  கதா பாத்திரங்கள்  எத்தனை. எத்தனை.  பேசும் வட்டார வழக்கில் மாற்றம்  உடல் மொழியில்  வித்தியாசம், புராண  இதிகாச  தேசிய மற்றும்  இயல்பான மனித ர்களின்  வாழ்க்கையை  தத்ரூபமாக வடித்துக்காட்டிய  எங்கள் திலகத்தின்  திறமை  உலக ளவில்  யாராலும் தொட்டு விட முடியாது.   அன்றைய தமிழ் சினிமாவின் வீச்சு உலகளவில்  இல்லை . அதனாலேயே  திலகத்தின் திறமை  உலகமெங்கும்  தெரியாமல் இருந்தது. ஆனால் ஆசிய  ஆப்ரிக்கா  படவிழாவில் நடிகர் திலகத்திற்கு  சிறந்த நடிகர்  விருது கிடைத்தபின்தான்  அவரின் புகழ் தமிழ்நாட்டை  தாண்டி  தெரிய ஆரம்பித்தது.ஹாலிவூட்  நடிகர்களே  சிவாஜி அமெரிக்கா சென்றபோது  சிவாஜியின்  திறன் கண்டு  வியந்தனர். அதில்  மார்லன்  ப்ராண்டோவும் ஒருவர். .  

அதே போல்  அன்றைய பொதுக்கூட்டங்களில்  அடைமொழியுடன்  தலைவர்களை  அழைப்பது  என்பது  ஒரு  மரபாகவே  இருந்தது.

தென்னாட்டு  பெர்னாட்ஷா ,  இந்நாட்டு  இங்கர்சால்  காஞ்சி  கரிபால் டி  ,  வாழும்  வள்ளுவம்  என்பன போன்றவை  சில சான்றுகள்.

அன்பு நடிகர் திலகங்களின்  ரசிகர்களுக்கு , இவைகளை எல்லாம்  பெருது படுத்த  வேண்டாம். .  ஒரு பொருட்டாகவும்  எடுத்துக்கொள்ள  வேண்டாம்.

கமல் மிக சிறந்த  நடிகர்.  ரஜினி அவர்களும்  நடிகர் திலகத்தின்  மேல்  மிகுந்த  மரியாதை  வைத்திருப்பவர்.

எத்தனை பட்டங்கள்  யாருக்கு கொடுத்தாலும் யாரை
  எப்படி எல்லாம்  வர்ணித்தாலும்
V.C. கணேசன்  என்பது மாறி  சிவாஜி கணேசன்  ஆனாரே  அதுவே  அவரை பற்றி சொல்கிறதே.

எத்தனை இஷ்ட தெய்வங்களை  பூஜித்தாலும்  முதல்  வணக்கம்  கணபதிக்கே  /கணேசனுக்கே .