Sunday, January 31, 2016

memes

அறிவுரை அல்ல  ஆதங்கம்தான்.

சமீப காலமாக இணையத்தில்  ஒரு   அரசியல் தலைவரை   அளவுக்கு  மீறி  கலாய்ப்பதை  காண்கிறேன். சமீபத்திய  கலாய்ப்பு    " லதா புருஷந்தானே  நீங்க    ஊர்ல  பத்மா புருஷன்னு  பேசிக்கிறாங்க  : என்று  கலாய் த்திருந்தாங்க.  அதுக்கு  பேரு  மீம்சாம் .


எழுபதுகளில்  ஒரு பிரதான  எதிர் கட்சி கூட்டங்களில் தரம் குறைந்து  காமராஜரை  கிண்டல்  செய்வார்கள்.  காமராஜர்  ஒரு பயணத்திற்கு தயாராக இருக்கும் போது  பத்திரிகை நிருபர் ஒருவர்  அவருடன்  ஆங்கிலத்தில்   ஆர் யு  ரெடி  என்று கேட்டதாகவும் , உடன் காமராஜர்   நோ  நோ ஐ  ஆம்  நாடார்  என்று சொன்னதாகவும்  கிண்டலடிப்பார்கள் .  தன்  அனுபவத்தினால்  காமராஜ்  ஆங்கிலம் அறிவார் என்பதை அறியாத  கூட்டம்  பட படவென கைத்தட்டும்.  . இன்றும்  மூன்றாவது கூட  படிக்காத  புதுவை  ரிக்க்ஷா தொழிலாளிகள்  ஆங்கிலம்  பிரெஞ்சு , ஜெர்மன்  ஹிந்தி மொழிகளை  சர்வ சாதாரணமாக  பேசுவதை  காணலாம் .

அது மட்டுமலாமல்  அவர்களின் கட்சி தலைவர்   வெளிநாடு சென்ற
போது  ஒரு பல்கலைகழகத்தில்  ஒரே வாக்கியத்தில்  ஒரே சொல்  மூன்று தடவை  தொடர்ச்சியாக  வருவது  போன்ற வாக்கியம்  ஆங்கிலத்தில்  சொல்லுங்கள்  என்ற உடன்  உடனே  அவர் சொல்லிவிட்டாராம்.  தங்களது  தலைவரின் ஆங்கிலப்புலமையை  கண்டு  வியந்து கை தட்டுவார்கள்.

நிகழ் காலத்திற்கு வருவோம். இன்றைய  இளைஞர்கள்  காமராஜரை  வியந்து பார்கிறார்கள்.  சமீபத்தில் நடந்த ஒரு கருத்து கணிப்பில்  தமிழகத்தின்  சிறந்த  முதலமைச்சர்  காமராஜர்  என்று  பெரும்பான்மையினர்  கருத்து தெரிவித்து  இருந்தனர்.  அன்று ஆங்கிலப்புலமை பெற்றிருந்த  அந்த அறிஞர்  அவர்கள் கட்சிகாரகளே  மறந்து  வருகிறார்கள்.

உடனே  காமராஜரும்   கிண்டலுக்கும்  கேலிக்கும்  உள்ளாகும்  இன்றைய  தலைவரும்  ஒன்றா  என்று  கேட்காதீர்கள்.

மீம்ஸ்  என்பது  ஒரு படத்தையோ  காட்சியையோ  சிறிது மாற்றம்  செய்து  நகைச்சுவையை  வரவழைக்க  செய்யும்  ஒரு காரியம்.

அரசியல் தலைவர்களை  அவர்களின் செயல்பாடுகளை  கிண்டல்  செய்யலாம் , கொள்கையை விமர்சிக்கலாம். ஆனால்   தாய்மொழி  அல்லாமல்  வேற்று மொழி தெரியாததூ  கிரிமினல்  குற்றம் இல்லை.

இதே  போன்று தான்  சர்தார்ஜி  ஜோக்  என்று  சொல்லி  சர்தார் ஜிகளை   கிண்டலடித்தார்கள்.   ஆனால்  சர்தார்ஜி  எங்காவது   பிச்சை எடுத்து பார்த்தது உண்டா.  கடும்  உழைப்பாளிகள் அவர்கள்.                                            


இனியாகிலும் நண்பர்களே  வரைமுறைகள்  வைத்துகொள்ளுங்கள் .தங்களின்  மீம்ஸ்களில் அறிவைபெருக்க்கும்  நகைச்சுவைகளை  தாருங்கள் .

மீண்டும் சொல்கிறேன்  இது அறிவுரை அல்ல  ஆதங்கம்தான்.

 ிஅள்ளிதெளியுங்கள். .

No comments:

Post a Comment