Friday, July 13, 2012

potta potti kaataa kusdhi

தாராசிங்  - இந்த பெயர்  ஒருகாலத்தில் தமிழ் நாட்டின்  பட்டி தொட்டிகளிலெல்லாம் பேசப்பட்ட பெயர்.  நான் சிறுவனாக இருந்தபோது    தாராசிங்கின் பரம விசிறி . அப்போதெல்லாம்  தொலைகாட்சி  இணையதளம்  எதுவுமே கிடையாது. பத்திரிக்கைகளும் வானொலியும் தான் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் சாதனமாக இருந்தது.  தாராசிங் மல்யுத்தத்தில் கலந்து க்கிறார்  என்றால் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் . அதிலும் அவர் கிங்காங் என்ற  வீரருடன் போட்டி என்றால் இரட்டிப்ப்பு  மகிழ்ச்சி .  எம்  ஜி  யார்  என்றால் நம்பியார்  மாதிரி  தாராசிங்  என்றால் கிங்காங்.

போட்டா போட்டி  காட்ட குஸ்தி --  கில்லெர்    தாரசிங்க்ஹின்  கிடுக்கிபிடி --
மரண அடி ரத்தகளறி  -- கருந்தேளின் உடும்புப்பிடி   காண தவறாதீர்கள்  என்று பல்வேறு  விதமான தலைப்புகளில் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யப்படும் .

என் நினைவுக்கு எட்டிய ஒரு போட்டியில்  கிங்காங்  தாராசிங் மோதிகொண்டிருக்கும் போது  கிங்காங் நடுவரை நோக்கி ஒரு குத்து விட    ஒரே  பரபரப்பு . அந்த போட்டியில்  கிங் காங் தகுதி நீக்கம் செய்யப்பட்டு தாராசிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


தாராசிங் மாவீரன் படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்  ஆனால் அறுபதுகளிலேயே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார் . படத்தின் பெயர் எங்கள் செல்வி .

போட்டியில் கிங் காங் நடுவரை தாக்கினர் என்று சொன்னேன் அல்லவா  அந்த நடுவர் யார் என்றால் இன்னொரு புகழ் பெற்ற மல்யுத்த   வீரர் அஜீத்சிங்கின்  தந்தை ,. இந்த அஜித்சிங் தான்  வரலக்ஷ்மி  என்ற நடிகையை  மணந்து கொண்டவர் . இந்த வரலக்ஷ்மி குலேபகாவலி படத்தில் நடித்தவர் .


இப்போதெல்லாம் சிக்ஸ் pack  என்கிறார்களே அப்போதே தாராசிங் கட்டுமஸ்தான உட்லைமைப்பு கொண்டவர் .

ஒரு அரசியல்வாதியாக , ஒரு நடிகராக, ராமாயணத்தில் ஹனுமான்  வேடம்  போட்டவராக ,  டி வி  நடிகராக  என்று அவர் அறியபட்டலும் , என்னை பொறுத்தவரை  அவர் ஒரு மல்யுத்த கலையின் மாமேதை .  

ஒரு கொசுறு செய்தி -  தாராசிங்கின்  தம்பி   ரந்தாவா   நடிகர் திலகம் நடித்த ராஜா படத்தில் நடித்துள்ளார் .

No comments:

Post a Comment