Friday, November 23, 2012

aasiriyar

சரியா தவறா எனக்கு தெரியலே .

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே  ஆசிரியர் தொழில் புனிதமானது என எண்ணம் கொண்டவன் நான். எவ்வளவு கண்டிப்பு இருந்தாலும் தம் மாணவர்களிடம் தனி அன்பு செலுத்துவதும்  பாடத்தை ஒழுங்காக நடுத்துவதும் தான்  நான் அறிந்த வரையில் ஆசிரியரின் பணியாக இருந்தது .
மாணவர்கள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு  அமைதியாக தன கடமையை ஆசிரியர்கள் ஒழுங்காக
செய்து வந்தனர்.  ஆனால் இன்றைய நிலை என்ன.  ஆசிரியர்கள் தன்பணியின்
ஊடே  வேறு சில வணிகங்களிலும் ஈடுபட்டு வரும்   காட்சியை  பார்க்கிறோம் ,கேட்கிறோம். நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை . எனக்கு நிறையஆசிரிய நண்பர்கள் உண்டு. அவ்வளவு ஏன் எங்கள் வீட்டிலேயே  ஆசிரியர்கள் உள்ளனர்.  என் ஆசிரிய நண்பர்களில் சிலர் சொந்த பணத்தை செலவழித்து  மாணவர்களுக்கு தேவையான  உதவிகளை செய்து வருகின்றனர். தன்  பணி  நேரம் தவிர்த்து  சுயமாகவே  சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர் .  எதற்கு இவ்வளவு பீடிகை என்கிறீர்களா ?   காரணமாத்தான்.

புதுவையில் ஒரு ஆசிரியர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கார் .
கொலைக்கான காரணம் தெரியவில்லை .  பத்திரிகை செய்திகள்   அந்த  ஆசிரியர் நில  வணிக தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும்  அதன் காரணமாக
கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது  என்று செய்திகள்
தருகின்றன  மேலும் அவரது கை பேசியில்  நிறைய  பெண்களின் தொலை பேசி எங்கள் இருந்ததாகவும்  அந்த கோணத்தில் விசாரணை நடப்பதாகவும்
செய்திகள் தருகின்றன. எது உண்மை என்று நமக்கு தெரியாது.  ஒரு ஆசிரியர் கொலை செய்யப்பட்டிருப்பது  வேதனையான விழயம்தான்.  ஆனால்
ஆசிரியர் சங்கத்தினர்  ஆசிரியருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று வகுப்பை
புறக்கணித்து போராட்டம்  நடத்தியதாக  ஊடகங்கள் தெரிவித்தன .

என் எண்ணத்தில் தோன்றிய எண்ணம் இதுதான்.

இதுவரையில் பத்திரிக்கையில் வந்த செய்தியின் அடிப்படையில், இது  தனி  மனித விரோத போக்கின் காரணமாக  நடந்ததாக தெரிகிறது.  இதற்க்கு எதற்கு
ஊழிய சங்கங்கள் வகுப்பை  புறக்கணித்தன.

ஆசிரிய பணியில் இருப்போர் ( எல்லோரும் அல்ல )  பணி நேரம் போக  மீதி நேரத்தில்  வட்டிக்கு விடுதல் , நில வணிகம்  இன்னும் பல பணிகளை செய்யலாமா

ஆசிரிய பணி  காரணமாக இந்த கொலை  நடந்திருந்தால்  போராட்டம்  ஒரு
அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும் .

சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று போராட்டம் நடத்தினால்  அதில் ஒரு அர்த்தம் உண்டு.  சமுதாய நோக்கமும் உண்டு .

தனி நபர் விரோதம் , குற்றவாளிகள்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ற அளவில்  தான்  என்னால் பார்க்க முடிகிறதே தவிர  ஆசிரியர் பாதுகாப்பு பிரச்சனை  என்று யோசிக்க முடியவில்லை. யார் சரி யார்தப்பு  யாரை கைது செய்ய வேண்டும் என்பது சட்டம் சார்ந்த பிரச்னை.  ஒரு உயிர்பலி  வேதனையான விழயம்தான் .  இருந்தாலும் சங்க அணுகுமுறை சரி இல்லை என்பதே  என் வாதம்
--- சரியா தப்பா  நீங்கள் சொல்லுங்கள்  எதுவாய் இருந்தாலும் .

 . 

No comments:

Post a Comment