Tuesday, May 21, 2013

rajiv gandhi

RAJIV GANDHI.


தன்  தாயார் வஞ்சகர்களின் குண்டுக்கு இரையான போது  அந்த இளைஞனை
கவ்விஇருந்த  சோகம் அன்றைய தினம் தொலைகாட்சியை பார்த்த நாம் அனைவரும்  உணர்ந்தோம்.  அந்த இளைஞன்  பிரதமர் பதவி ஏற்றபோது
ஏகடியம் பேசியோர் ஏராளம். ஆனால் அந்த இளைஞன்  கொண்டு வந்த மாபெரும்  மலர்ச்சிதான் கணினிமயம். இருபத்தியோராம்  நூற்றாண்டை
கனவாக இல்லாமல் நினைவாக்கி காட்டினார் அந்த இளைஞன் . இன்று பட்டி தொட்டி எங்கும் கணினிமயம். இதற்கு வித்திட்டவர் அந்த இளைஞன் அல்லவா .

கணினி வந்தால் வேலை போய்விடும்  என்று  வெற்று   கோஷங்களால்
மாய்மால ஜாலங்கள் காட்டி  மக்களை ஏமாற்றிய ஒரு  கூட்டம்   குறிப்பாக
உலகத்தை  காக்க  வந்த ரட்சகர்கள் என்று சொல்லிகொண்டிருக்கும் அறிவுஜீவிகள்   இன்று கணினியே  அவர்கள்  பிரசாரத்திற்கு உதவியாய் இருக்கிறது என்பதை இன்றாவது எண்ணிப் பார்பார்களா.

IRONY ( கேலிகூத்து  என்று சொல்லலாமா)  என்ன வென்றால்  யாரெல்லாம்
கணினிமயத்தை எதிர்த்தார்களோ  அவர்களின் வாரிசுகள்  இன்று  கணினி துறையில்  வித்தை காட்டுபவர்களா இருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல உலகம் சுற்றும் வாலிபர்களாக வலம் வருகிறார்கள் .  

இதைதான் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்  அன்றே பதிபக்தி படத்தில்

        பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில்
         அநேக வித்தியாசம்

என்று பாடல்  புனைந்தாரோ . 

No comments:

Post a Comment