Tuesday, May 28, 2013

padithtathil pidithathu

படித்ததில் பிடித்தது .

இன்றைய தினமணி பத்திரிக்கையில்  வந்த தலையங்கத்தில்  ஒரு பகுதி  நிதர்சனமான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.  இதை நானே  நேரில் கண்டேன்.  ஒரு பொது துறை நடத்திய எழுது தேர்வுக்கு  வந்த மாணவன்  தேர்வு எழுத செல்லாமலேயே  வெளியில் நின்று கொண்டிருந்தான் . ஏன் தேர்விற்கு செல்லவில்லை என்று கேட்டதற்கு  ஆங்கிலம் எனக்கு அவளவாக வராது  அதனால் தேர்வு எழுத செல்லவில்லை
என்றும் வீட்டில் உள்ளவர்களும் நண்பர்களும் சொன்னதால்  இங்கு வந்தேன் என்றும்  கூறினான். இத்தனைக்கும்  அவன் ஒரு முது நிலை பட்டதாரி  இதோ  அந்த பத்திரிகை செய்தியின்  ஒரு பகுதி -------தமிழ் தாய்மொழி. ஆனால், தாய்மொழியில் படிக்க ஆர்வமில்லை. ஆங்கிலத்தில் பட்டம் பெற விருப்பம். ஆனால் அதில் பயிற்சி பெறுவதற்காகக் குறைந்தபட்ச உழைப்பும் ஆர்வமும் மாணவர்களிடம் இல்லை. அவர்களைப் பயிற்றுவிக்கும் திறமையும் புலமையும் ஆசிரியர்களிடம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இந்த போலித்தனத்தால் தமிழக இளைஞர்களால் தமிழிலும் தவறில்லாமல் எழுத முடியவில்லை, ஆங்கிலத்திலும் புலமையில்லை-------------

                

No comments:

Post a Comment