Sunday, September 1, 2019

கடிதம் எழுதும் தினம்.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் தேதி  கடிதம் எழுதும் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் கடிதம் எழுதுவது என்பது ஏறக்குறைய மறந்தே போன விழயம்.   நேரு தன மகளுக்கு எழுதிய கடிதம் பிரசித்து பெற்றது. கலைஞர் உடன் பிறப்பிற்கு எழுதும் கடிததிற்கு பெரும் வாசக வட்ட மே உண்டு. 

சுமார் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்  கடிதம் தான் முக்கிய தொடர்பு சாதனம்.  அப்போது வரும் கடிதங்களில் தங்கள் குடும்ப சரித்திரம் மட்டுமல்லாமல் பக்கத்துக்கு வீடு பக்கத்துக்கு தெருவில் உள்ளவர்களின் நலன்விசாரிப்புகள், வீட்டில் வளர்க்கு செல்ல பிராணிகளின் நிலை , அந்தநதன்ஊர் வெதர் ரிப்போர்ட் போன்றவை கட்டாயம் இடம் பெரும். 

எங்கள் வீட்டில் தபால் கார்டுகளை ஒரு கம்பியில் சொருகி வைத்திருப்போம். அந்த வருடத்தில் வந்த அத்தனை கடிதங்களும்  அதில் சொருகி இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை விஜயம் செய்யும் ஒரு உறவினர்  ஓய்வாக அமர்ந்து அத்தனை கடித்தங்களை படித்து ஒரு வருட விழயங்களை தெரிந்து கொள்வார்.  

தொழில்  நுட்பம் வந்தாலும்  கையால் எழுதப்படும் அந்த கடிதம்  நம் உணர்வுகளை அப்படியே  எதிரொலிக்கும். 

எதனை வாட்ஸ் அப்  எஸ் எம் எஸ்  செய்திகளில்  நேசத்திற்கு உரியவரின் செய்தி வந்தாலும் அன்று ஒரு கடிதம் கையால் எழுதி வரும்போது அதை ஓராயிரம் முறை படித்து பார்த்து மகிழ்வு அடைவது போல் இருக்காது. .  

நானும்  அலுவலக நண்பர் ஒருவரும் இனிமேல் நாமும் கடிதம் எழுதலாம் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு முயற்சி எடுத்தோம். அது  இன்றைய கால கட்டத்தில் வெளியாகும் புதிய திரைப்படம் போல  ஆரம்பித்த சுவடே தெரியாமல்  மறைந்து விட்டது.  .  

இப்போதெல்லாம் எழுதும் வேலை குறைந்து விட்டதால்  நம் கையெழுத்தே மறந்து விட்டது.  அதற்காகவாவது வாரம் ஒரு முறை கடிதம் எழுதி பழக்கத்தை தொடங்குவோம். 

No comments:

Post a Comment