Tuesday, June 5, 2012


பழைய பாடல்கள் என்றால் சிவாஜி எம் ஜி யார்  பாடல்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் கார்த்திகை தீபம்  என்னும் படத்தில்
அசோகண் பாடும்  இந்தப்பாட்டு காலத்தை கடந்து இன்றும் நிலைத்து நிற்கிறது .
எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறதா  உன் இமை களிலே உறக்கம் வர கண்கள் மறுக்கிறதா
 தென்றல் பாடும் தாலாட்டில்  நீ இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திரிந்தால்  துன்பம் தரவில்லையா?
காதலன் கண்ணியமாக  தன  உள்ளக்கிடக்கையை  இசையின் வடிவாக  எவ்வளவு அழகாக  விவரிக்கிறான்.

உன் துயர் கண்டால் என் உயிர் இங்கே
துடிப்பது தெரியலையா
உண்மை அறிந்தும் உள்ளம் வருந்த நடப்பது  தவறில்லையா

பாடல் வரிகளில் நெறிமுறைகள் இருந்தது பழைய பாடல்களில் . ஆனா இப்போ .?
ஊஞ்சலை போல பூங்கரம் நீட்டி
அருகில்  நெறிங்கடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப்போல
அள்ளி அணைத்திடவா
பாடலை கேளுங்கள் ஊஞ்சலில் ஆடுவது போலவே இருக்கும்.
என்ன இருந்தாலும் அந்தகால பாடல் பாடல்தான்.

No comments:

Post a Comment