Thursday, June 7, 2012

enna sollouvaen en ullam thangalay

பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான் அன்று   புதுவையின் கடற்கரை  அருகில்  நான் கண்ட ஒரு காட்சி  வெற்றியின் வெளிப்பாடு என்று எடுத்து கொள்வதா ? அல்லது சமூக அவலம் என்று எடுத்து கொள்வதா ?

 கூடுதல் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின்  வெற்றியை சில நண்பர்களுடன்
அவர்களின்  உறவினர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடினர் . எப்படி தெரியுமா
ஒரு பெரிய   கேக்கை  வெட்டி  கொண்டாடினர் . இதில் என்ன அதிசயம்  என்கிறீர்களா . அவர்கள  அந்த கேக்கை வெட்டி  யாருக்கும் கொடுக்கவில்லை .
மாறாக  அத்துனை பேரும் அந்த க் கேக்கை ஒருவர் முகத்தில் ஒருவர் பூசிக்கொண்டும் தூரத்தில் இருந்து ஒவ்வொருவர்  மீதும் வீசிக்கொண்டும்
தங்களின்  சந்தோஷத்தை  பகிர்ந்து கொண்டனர. பின் அனைவரும் கலைந்து
சென்றனர் . வீதி எங்கும் சிதறிய   கேக்  துண்டுகள்.  அல்ல  அல்ல வீதியில்
சில இடம்  கேக் கொண்டு  மேழுகப்பட்டது போல்  இருந்தது.

அவர்கள் சென்றவுடன்  இரண்டு மூன்று சிறுவர்கள்  ஓடி வந்து சிதறிக்கிடந்த
கேக் துண்டினை வழித்து உண்ணத்  தொடங்கினர் . அந்த சிதறலை எடுக்க
சிறுவர்களுக்குள் பெரும் போட்டி  அதுவும் பலத்த சண்டையுடன் . பசியின் கொடுமை .

இதப்பார்துக்கொண்டிருந்த   என்ன போன்ற  சிலரின்  மனதில் தோன்றியவை
இவைதான்,

                          என்ன சொல்லுவேன்  என் உள்ளம்  தாங்கலே


இது யார் குற்றம் ?  உன் குத்தமா   என் குத்தமா  யாரை நான் குற்றம் சொல்ல ?

No comments:

Post a Comment