Tuesday, June 2, 2015

mandhaiyilae nindraalum ivar veera paandi thaeru

மந்தையிலே நின்னாலும் இவரு வீர பாண்டி தேரு .

ஒரு நண்பரிடம் பேசிகொண்டிருந்தபோது  கலைஞர் பற்றியும்  சிவாஜி பற்றியும் பேச்சு வந்தது.  பேச்சின் நடுவே  நண்பர்  கலைஞர்  வசனத்தால்  சிவாஜி  பெருமை பெற்றார் என்று கூறினார்.  உடனே நான் மறுத்து  இல்லை என சொல்ல  நண் பர் பராசக்தியையும்மனோகராவையும்  சுட்டி காட்டினார்.

அவருக்கு நான் அளித்த பதில்  இதோ.

நடிகர் திலகத்தின் புகழ் பெற்ற வசனம்   வானம் பொழிகிறது  பூமி விளைகிறது === இதன் வசனகர்த்தா  சக்தி கிருஷ்ணசாமி அவர்கள்.

பாசமலர் படத்தில் சிவாஜியும்  ஜெமினியும்  தொழிற்சாலையில்  மோதும்  வசனங்கள்  இன்றும் கைதட்டல்களை வாரி குவிக்கிறது.  இதற்கு வசனம்  அரூர்தாஸ்.

பக்கம் பக்கமாக வசனம் பேசாமல் ஒரு சில வார்த்தைகளில் அவர் பேசிய  வசனங்கள்  இன்றும் மறக்க முடியாது.  உதாரணம்.  கவுரவம் படத்தில்  கண்ணா நீ எங்கடா போவே -    போகணும்னு மட்டும்தான்  தோன்றது எங்க போகணும்னு தெரியலையே. என்று  சொல்லும் வசனம்  இன்றளவும் மறக்க முடியாதது..

தேவர்  மகன் படத்தில்  ஒரு காட்சியில்  --    நாளைக்கு நான் இருப்பனான்னு தெரியாது   ஆனா  வெதை  நான் போட்டது . இது என்ன பெருமையா  ம்ம்
கடமை  இதற்கு வசனம் யார்.

சத்ரபதி சிவாஜியாக  ராமன் எத்தனை ராமனடி படத்தில்  சிவாஜி பேசி நடித்த வசனங்கள்  கவியரசு கண்ணதாசனுக்கு சொந்தமானவை. .


வியட்நாம் வீடு படத்தில்  அத்தே  நீ முந்திண்டா நோக்கு  நான் முந்திண்டா நேக்கு இது சுந்தரத்தின் வசனம்.

இது போல் ஏராளமாக சொல்லலாம்.  இறுதியாக நான் சொன்னது
ஏன் கலைஞரின் வசனத்தை மற்ற படங்களில் பேசிய நடிகர்கள்   சிவாஜி அ ளவிற்கு  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை ..

கலைஞர் மிக சிறந்த வசனகர்தாதான் ஆனால் அவர்  வசனத்தினால்தான்
திலகத்தின் புகழ் உயர்ந்தது என்பதை  எக்காலத்திலும் ஏற்க இயலாது..

1 comment: