Tuesday, June 2, 2015

புயலொன்று பூவானது ==

1976 ஆம் வருடம் திரை இசை உலகில்  திடீரென ஒரு புயல்.. அந்தபுயலின் பெயர் இளையராஜா .அன்னகிளியில்  ஆரம்பித்த உலா  அகிலம் முழுதும் சுற்றியது.  முதல் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் என்று ஏகடியம் பேசியோர்க்கு ,
இசையாலேயே  பதில் சொனார் அந்த ராஜா. திரை இசை கால ஓட்டங்களில் புது புது  பரிணாமங்களில்  தன்னை வெளிப்படுத்தி வருகிறது. எத்தனை  எத்தனை ஜாம்பவான்கள்  அன்றும் இன்றும் .ஆயினும் இவரின் தனி  சிறப்பு  என்ன. ? ஏன் இவர் மட்டும் என்னை அதிகமாக கவர்ந்தார்.  என்னை மட்டுமா.?

மழை  பெய்து  விட்டபின்  கிராமிய  வரப்புகளில்  நடந்த  அனுபவம் உண்டா. ஈரமான பாதையும், மண்ணின் வாசனையும் , மெலிதான காற்றில் ஈரம் சொட்ட சொட்ட தலை ஆட்டும்  வண்ணப் பூக்களின் நேர்த்தியும்  மனதில் சிலீரென்ற  உணர்வை உண்டாகும்.  அத்தனை உணர்வுகளையும்  தன்  இசையில் குழைத்து  விருந்து படைதவரல்லவா  ராஜா.

நினைவோ ஒரு பறவை  விரிக்கும் அதன் சிறகை .கேட்கும்போதே நாமே சிறகை விரித்து பறப்பது போல் இல்லையா ?

நீரோடை போலவே  சிரித்தாடி ஓடினால் வலை ஓசையே காதிலே சிந்து பாடுதே  என்ற வரிகளின்  போது  நீரோடையும்  வலை ஓசையும்  இசையாலே நம் முன்னே நிறுத்தியவர அல்லவா.

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்  சொந்தம் இந்த சொந்தமம்மா  வாழ்விருக்கும் நாள்  வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம்மம்மா --இசை வடிவில்  அழகு தாம்பத்தியத்தை  வாசித்து காட்டிய  உன்னத ராஜா.

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம்  நனையும் முகிலெடுத்து
முகம் துடைத்து  விடியும் வரை நடை பயிலுவதை  கிடார் இசையுடன்  கேக்கும்போது  பனி நிலா முகில்  அத்தனையும் இசையில் நனைந்து வழிவதை சாத் தியமாகியதே ராஜாதானே .

தூக்கணாம் குருவிஎல்லாம் தானறிஞ்ச  பாஷையிலே  மூக்கோடு மூக்கு வச்சு  முனு முனுன்னு  பேசயிலே  மடையை திறந்து விட்டா  மழை தண்ணி நெறைஞ்சிருக்கும் -- இப்படி ஒரு காட்சி வடிவத்தை  இசை சிற்பமாகும் ரசவாதம்  ராஜாவிற்கு மட்டும் உரியது தானே.

ஒருகாலத்தில் இரவின் மடியில் என்ற நிகழ்ச்சிக்காக தவமிருந்தோம்.
இன்றைய கால கட்டத்தில்  உடம்பையே ஆட வைக்கிற இசையையும் ரசிக்கிறோம் .  ஆனால்  உணர்வு பூர்வமாக , இசை கருவிகள் குறிப்பாக நமது பண்பாடு இசைகருவிகள்  ராஜாவின் கைவண்ணத்தில்  மனதை வருடுவதை மாறாக இயலுமா.

ராசாவே வருத்தமா  ஆகாயம் சுருங்குமா   என்ற சோகத்தில் கூட ஒரு சுகமானா இசை.

ஏ ஆத்தா ஆத்தோரமா  என்ற இசை வரும்போது  ஒரு துள்ளல் ,
போடா போடா புண்ணாக்கு என்ற போது  ஒரு எள்ளல்.  ஜகதாரிணி  சிம்மவாகினி  என்ற போது  இசையின் ரீங்காரம் ,, வாய் பேசிடும் புல்லாங்குழல்  நீதான் ஒரு பூவின் மடல் என்றபோது ஒரு  மென்மை .

சொல்லிகொண்டே போகலாம் .. ராசாவே   நீ எங்கள் மண்ணின் அடையாளம் .
வாழ்க பல்லாண்டு.















1 comment:

  1. அந்தக் காலம் ஞாபகம் வந்தது... இனிமையான பாடல்கள்...

    ReplyDelete