Tuesday, October 9, 2012

october 10 postal day

எதேச்சையாக செய்தித்தாளை புரட்டும் போது  அக்டோபர்  10  postal thinam  என்று
தெரியவந்தது. தபால் என்ற சொல் இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை.  ஆனால் எனக்கு சிறுவயது முதல் இன்று வரை தபால்
என்பது பல்வேறு அனுபவங்களை கொடுத்துள்ளது.

பள்ளி நாட்களில் நாங்கள் வாய்ஸ் ஆப்  அமெரிக்கா , ருசியன் எம்பசி
இன்னும் பல பெயர் தெரியாத தூதரகங்களுக்கு  ஒரு கடிதம் எழுதுவோம்.
ஒரு சில நாட்களில்  அந்தந்த ஊர்களில் இருந்து  கட்டு கட்டாக  வழு வழு பேப்பரில் நிறைய புத்தகங்கள் வரும் .  தபால்காரர்  நம் பெயரை கூப்பிட்டு
அந்த கடிதங்களை நம்மிடம் கொடுக்கும்போது   எங்களுக்கு ஒரு கர்வம் வரும் பாருங்கள்  அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது . மதியம்  வீட்டிற்கு வரும் அப்பா  அம்மாவிடம் தபால் எதாவது  வந்ததா என்று கேட்க , உங்களுக்கு ஒன்னும் இல்லீங்க , ஜெயராமனுக்குதான் வந்தது என்று சொல்லும்போது நான் அப்பாவை ஒரு பார்வை பார்பேன் பாருங்கள் , நாங்களும் வளர்ந்துட்டோமில்லே  என்ற  தொனி  அதில்  இருக்கும்.

எங்கள் உறவினர்  வருடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வருவார் . அவரின் முதல் வேலை என்ன தெரியுமா ? ஒரு கம்பியில் சொருகி இருக்கும்
அத்தனை பழைய கடிதங்களையும் ஒரு வரி விடாமல் படிப்பார் . அந்த வருடத்தில் நிகழ்ந்த அத்தனை செய்திகளையும் அந்த கடிதங்கள் மூலமாகவே
தெரிந்து கொள்வார் .

இப்போது நாம் தபால்கரர்களையே பார்க்க முடிவதில்லை. அன்றைய தினத்தில்  தபால்காரருக்கு நம் அனைவரின் குடும்பத்தை பற்றியும் தெரியும் .
காணும் பொங்கல் அன்று  தபால் கரருக்குத்தான்  முதல் மரியாதை.

கல்லூரியில்  இடம் கிடைத்துவிட்டது ,  lic ல்  வேலை  கிடைத்துவிட்டது
என்ற தபாலை இன்று காணும் போதும் என்ன சுகம் தெரியுமா . தபால்கார தெய்வமாக  அல்லவா தெரிந்தார் .

ஒரு முறை எனது நெருங்கிய நண்பருக்கும் எனக்கும் அலுவலகத்தில் ஒரு சிறிய  பிரச்சினை . நண்பர் கேரளாவை சேர்ந்தவர் .நாங்கள் பணி  புரிவது சிதம்பரத்தில்.  பிரச்சனையின் காரணமாக  அன்று மதியமே நண்பர்  கேரளாவிற்கு  யாருடனும் சொல்லிகொல்லாமல்  சென்று விட்டார். என் மீது
கோபத்தின் காரனமாககத்தான் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த  ரகசியம்.
ஒரு வாரம் ஓடிவிட்டது  நண்பர் அலுவலகத்திற்கு வர அறிகுறியே தென்படவில்லை . எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி . அப்போதுதான்  இந்த தபால்  விரிசல் விட இருந்த எங்கள் நட்பை பாறையாக இறுக்கியது. எப்படி தெரியுமா ? நட்பின் வலி என்ன என்பது அந்த ஒரு வாரத்தில் நான்  உணர்ந்தேன் .  நீண்ட யோசனைக்குப்பின்  ஒரு தபால் கார்டை எடுத்து
இரண்டு வரி எழுதினேன் .

             " உன் உயிர்  என் உயிர் என்றது ஆனபின்
                என்னிடம் கோபம் கொள்ளுவதேன் .

பொன் எழில் பூத்தது  புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில்  என்ற பாடலின் வரிகள்தான் மேலே உள்ளவை.

கடிதம் கிடைத்தவுடன்  நண்பரின் பதில் கடிதம் என்ன தெரியுமா?
                    நிம்மதி அடைந்தேன்   நாளை வருகிறேன்.
அந்த தபால் இன்னமும் என்னிடம்.

ஒரு புரிதலுக்கு அந்தக்கால தபால் வழிவகுத்தது . ஆனால் இன்று   எத்தனையோ  நவீன தொடர்பு  சாதனங்கள் இருந்தபோதும்  தற்போது  நான் இழந்த சில உன்னதமான  நட்புகளை  மீண்டும்  பெற  அந்தகால தபால் வராதா
என்ற ஏக்கம்தான் என்னுள் இன்னும் நிறைந்திருக்கிறது.

இன்னொரு சுவாரசியமான  கடிதம் . ஒரு முறை   நான் நண்பர்களுடன்
பெட்டிக்கடையின் அருகே நின்று கொண்டிருந்தேன் . நண்பர்கள் அனைவரும்
என்னை தவிர  புகை பிடித்துகொண்டிருந்தார்கள் . ஆனால் என் துரதிர்ஷ்டம்
எனக்கு வேண்டிய ???? ஒருவர்  ஒரு முறை முறைத்து  கொண்டே சென்றார்
பயந்து போன நான்  reply cardல்

                    மன்னிக்க மாட்டாயா  உன் மனம் இறங்கி  என்று எழுத

வந்த  reply  "    இந்த ஒரு முறை மட்டும் "   என்று  கை எழுத்து இல்லாமல்
வந்தது.  இந்த தபாலும்  எத்தனை ஆண்டுகள் ஆனாலும்  சுவை குன்றவே  குன்றாது .

        எங்களின்  உணர்வுகளின் ஊடே  ரத்த நாளங்களில்  அத்தனை உணர்ச்சிகளுடன்  பின்னி பிணைந்து விட்ட இந்த தபால்  -- தபால் தினம்
வாழ்கவே .

 கடைசியாக  சில வருடங்களுக்கு முன் தபால் எழுதும் பழக்கத்தை தூண்ட  என் நண்பர் மனோவுடன் சேர்ந்து சில நாட்களுக்கு மட்டும்  கடிதம்  எழுதினேன் . பின் கால சக்கரத்தில்   sms  email  endru naanum maarikkondirukkiraen..






No comments:

Post a Comment