Saturday, October 27, 2012

airtel super singer GRAND FINALE

மிகுந்த  எதிபார்ப்புக்கிடையே  நேற்றுநள்ளிரவு வரை நடந்த AIRTEL SUPER SINGER GRAND FINALE  உப்பு சப்பு இல்லாமல்  நடந்து முடிந்தது . கடந்த வருடம்
முதலிடம் குறித்த சர்ச்சைகள் இருந்தாலும் நிகழ்ச்சி  சுவாரசியமாக இருந்தது.
மாலை 7 மணி அளவில் தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு ஒரு மணியை தாண்டியும் ஓடிக்கொண்டிருந்தது. பாடும் திறமையில்  எல்லோருமே சிறப்பாக பாட நிகழ்ச்சியில் விறுவிறுப்பு என்பது மருந்துக்கு கூட இல்லை.

சிறப்பம்சமாக  ரஹ்மான்  கலந்து கொண்டது  ஒரு திடீர் அதிசயம் கலந்த
ஆச்சரியம் . ஆனால் ஏனோ தானோவென்று  ஓரிரு  வார்த்தைகளில்  பாடகர்களை  பற்றி கூறியது   தன்னடக்கம் என்பதா அசுவாரசியம் என்பதா .
என்னசொன்னாலும் அந்த ஆஸ்கார் நாயகன்  அரங்க்கினுள்  நுழைந்ததும்
அணைத்து தரப்பினரும்  ஒரு பரவச நிலையில் எழுந் து நின்று அவரை வரவேற்றது  ஒரு கண் கொள்ளா காட்சி,

போட்டியாளர்களில்  நான்கு மற்றும் ஐந்தாம்  இடத்தை பிடித்தவர்களின் பெயர்களை கூறும்போது , நமக்கு மட்டுமல்ல  போட்டியாலர்களுக்கே  கூட அதிர்ச்சியாக இருந்ததை  தொலைகாட்சியில் பார்க்க முடிந்தது.  ஏனெனில்
சுகன்யா என்ற  போட்டியாளர்  முதல் மூன்று இடங்களில் ஒன்றை பிடிப்பார்
என்பது தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வந்த பெரும்பாலோரின்  கருத்தாக
இருந்தது.

பிரகதி என்ற போட்டியாளர்  இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் ஆம் தள்ளப்பட்டார் . ஏனெனில் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நிகழ்ச்சி
என்று சொல்லப்பட இந்த போட்டியில்  பிரகதி  வயது 15 என்று யாரோ சொன்னதாக தகவல். மேலும் ஒரு பதிவரின் முகநூலில்  பிரகதி 15 ஆவது
பிறந்த நாளை கொண்டாடும்  போட்டோவையும்  இணையத்தில் நான் பார்த்தேன். அதன் காரணமாக அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கலாம்  என்பது என் யூகம் .

முதல் இடத்தை பிடித்த சிறுவன்  ஆதேஷ்  நிச்சயமாக முதல் இடத்துக்கு தகுதியானவன் தான் . மிக அழகாக ,இசைக்கும் வார்த்தைக்கும் கச்சிதமாக
பொருத்தி மிக அனாசியமாக உச்ச ஸ்தாயில்  பாடலை பாடிய நேர்த்தி
சூப்பர்   அவன் தெரிவு செய்த பாடல் வந்தே மாதரம்  சபையினரை  அவன் பாட்டுடன்  உணர்வு பூர்வமாக  ஒன்ற செய்து விட்டது  மட்டுமில்லாமல் .
வெற்றி சிகரத்திற்கும் இட்டு சென்று விட்டது.
 ORU NIGAZHCHIKKU COMPERE  பண்ணுவது என்பது ஒரு கலை. மிகுந்த சமயோசித புத்தியுடனும், சபை அறிந்து பேசுவதிலும்  விருவிருப்பான
பேசும் தேவை . ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில்  கூலிக்கு  மாரடித்தது  போல்
இருந்தது.

இறுதியில் வெற்றி பெற்றது விஜய் டிவி யின் வியாபார நுணுக்கமும் ,விளம்பரதாரரின்  வசூலும்   SMS  மூலம் காசு பார்த்த தொலை பேசி நிறுவனங்களும் தான்.

ஆனால் ஒன்றை மறுக்க முடியாது  இளம் சிறார்களின் குரல் வளத்தை மிக சரியாக வெளிச்சம் போட்டு காட்டிய  விஜய் டிவி யின் இந்த  ப்ரோக்ராம்
வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.


No comments:

Post a Comment