Thursday, April 9, 2015

ungalukku theriyuma jeyakanthan.

உங்களுக்கு தெரியுமா ஜெயகாந்தன். ??

என் பயணத்தில் ஒரு கட்டத்தில்   நீங்களும் வந்திருக்கிறீர்கள்.-நீங்கள் இறந்து விட்டீர்களாம். உங்களை போன்றவர்களுக்கு  மரணம் என்பதே கிடையாது.

அது கிடக்கட்டும்  நான் எப்படி உன் பயணத்தில்  என்று  அங்கேயிருந்து  கேட்பது புரிகிறது.  சொல்கிறேன். சில பத்து வருடங்கள் பின்னோக்கி  செல்வோம்.

எனக்கு சிறு வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. அநேகமாக பிரபலமான எழுத்தாளர்களின்கதைகளை  தேடிப்படித்து  அதனை விவாதிக்கவும் செய்வோம்.   அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் தங்களின்  யுகசந்தி  எனும் சிறுகதையை படிக்க நேர்ந்தது.  கதையின்  சாராம்சம்  கொஞ்சம் நினைவு படுத்தி பார்கிறேன்.

               "  ஒரு விதவை  பிராமண பாட்டி . ,
                    தன் மகன் வீட்டிற்கு மாதம் ஒரு முறை  வருவாள். மகன் மருமகள்
                    பேரன்  பேத்தி  என அனைவரும் பாட்டியை வரவேற்பார்கள்.
                     பாட்டி  தன  பேத்தி  கொடுத்து அனுப்பிய ஒரு  கடிதத்தை  இந்தாப்பா
                    உன்  பொண்ணு ஒனக்கு  லெட்டர் ஒன்னு கொடுத்திருக்கா என்று
                     மகனிடம்  கொடுப்பார்.  பாட்டியும் இந்த பேத்தியும்  வெளியூரில்
                     வசிக்கிறார்கள் .பேத்தி வேலைக்கு போவதால் பாட்டி துணைக்கு
                     அவளுடன் தங்கி இருக்கிறாள். அந்த பேத்தியும்  இளவயதிலயே
                     விதவை ஆனவள்.  பாட்டி மாதா மாதம் இங்கு வருவது  மகனை
                     பார்க்க மட்டுமல்ல  தனது முடியை மழித்து கொள்ளவும் கூட.
                     அந்த  கடிதத்தில்  விதவை பேத்தி தான்  ஒருவரை  திருமணம்
                     செய்து கொள்ளப்போவதாகவும்   மனமிருந்தால்  வந்து
                     வாழ்த்துங்கள் இல்லையெனில்  தலை முழுகுங்கள்  என்று எழுதி
                     இருப்பாள்.  குடும்பமே கூக்குரலிடும் .  ஆனால் பாட்டியோ
                      காலங்கள் மாறும் போது நாமும் மாறனும்  நான் என் பேத்தியின்
                     முடிவை வரவேற்கிறேன் என்று சொல்லுவாள்.

                      இது கதையின் சுருக்கம் மட்டுமே. . இதை படிக்கும் போது 
                       பாத்திரங்களின் தன்மை  மற்றும் எழுத்தாளரின் சமூக சிந்தனை
                      அழகாக வெளிப்பட்டிருக்கும்.

ஐயா ,  எங்களுக்கு  ரொம்ப தெரிந்த  குடும்பம். அந்த குடும்பத்தில்  ஒரு இளம் வயது  பெண்  திருமணமான சில மாதங்களிலேயே  கைம்பெண்  அதனால்.
குடும்பமே மன உளைச்சலில் திளைத்தது.

ஒரு  நாள்  நான் புத்தகம் படித்து கொண்டிருந்தபோது  எனது அப்பா  என்ன படிக்கிறாய் என்று கேட்க  ஜெயகாந்த கதை  என்றேன். . என்ன கதை என்று மறுபடியும் கேட்க  கதையை சொன்னேன்.   அந்த நேரம் பார்த்து  அந்த குடும்பத்தினரில் சிலர் வர ,அவர்களும்  என்ன பேசி கொண்டிருகிறீர்கள்  என்பர் கேட்க  அப்பா  யுகசந்தி  கதையை பற்றி சொன்னார்.  வந்திருந்தவர்களில் ஒருவர்  இது என்ன கதையா என்று கேட்க   என் அப்பா  என்னதப்பிருக்கு  நான் இதை முழுமையாக ஏற்கிறேன், என்று சொன்னார். நானும் அதான் சரிப்பா   என்றேன் .

அன்று மாலை  அந்த  பெண்ணின் சகோதரன்  பேச்சு வாக்கில் விதவை   பெண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளலாமா  என்று என்னை கேட்டதுடன் நில்லாமல்  உங்கப்பாவும்  அதை சரி என்கிறாரே  என்று  என்னை பார்த்தான். இந்த விழயத்தில்  எங்கள் நிலை சரிதான் என்று சொன்னேன்.

சில நாட்கள் கழித்து  வேறு சில நண்பர்கள்  என் அப்பாவிடம்  நீதான்  விதவை திருமணம் செய்யலாம்னு  யோசனை  சொன்னியாமே  என்று கேட்க  அப்போதுதான் அவர்கள்  தன பெண்ணுக்கு இன்னொரு வரன் பார்கிறார்கள் என்று தெரிந்தது.  அவர்கள் அவர்கள் குடும்பத்தினரிடம்   உறவினர்களிடமும் ராதாதான்  இந்த யோசனையை சொல்லிச்சு என்று சொல்லியிருக்கிறார்கள்.
எங்கப்பாவும்  உறுதியாக  அது தப்பில்லை  என்றே சொன்னார்.  எது எப்படியோ  திருமணம் இனிதாக முடிந்தது. அந்த குடும்பத்தினரின் முகத்தில்
அளவற்ற மகிழ்ச்சி .  இது நடந்து  முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
அந்த பெண்  தன் கணவன்  மகன்களுடன்  சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஜெயகாந்த ஐயா இப்போது சொல்லுங்கள்   உங்கள் கற்பனை சிந்தனை ,
எப்படி ஒருவரின்  வாழ்வில் ஒளி ஏற்றி உள்ளது  என்பதை.

ஜெயகாந்த ஐயா  ஒரு கோரிக்கை ஐயா . நீங்கள் மீண்டும் பிறந்து வந்து
எழுத தொடங்குங்கள்.  ஏன்னா  இப்பவும் கூட சில பேர்   ஒரு  பிரபலத்தை
இன்னமும் இவள்  பூவெல்லாம் வச்சிக்கிட்டு  ஜிமிக்கி போட்டுக்கிட்டு பொது மேடைக்கு   வருது பார்  என்று பினாத்தி கொண்டிருகிறார்கள்.

No comments:

Post a Comment