Tuesday, March 24, 2015

ennaparavai

நினைவோ ஒரு பறவை ===

வழக்கம்போல்  பத்திரிகைகளை  படித்துகொண்டிருந்தபோது  ஒரு செய்தியை காண நேர்ந்தது.  சுவாரசியமாய் கூட இருந்தது.   GBBC   கேள்வி பட்டிருகிரீர்களா ?  ஒவ்வுறு ஆண்டும் பெப்ரவரி  மாதம்  பதிமூன்றாம் தேதி முதல் பதினைந்தாம் தேதி வரை உலகெங்கும் நடக்கும் ஒரு நிகழ்வு.  GREAT BACKYARD BIRD COUNT (GBBC).   இது என்னவென்றால்  மேலே கூறிய தினங்களில் ஒரு பதினைந்து நிமிடம்  ஒதுக்கி , நம் வீட்டின் புழக்கடையில் அமர்ந்து  எத்தனை வகையான  பறவைகள் வருகிறது என்று கணக்கெடுத்து  அதன் கணக்கை  அதற்கென்று  உள்ளை இணையத்தில் பதிவிட வேண்டும் .இது உலகம் முழுதும் உள்ள பறவை ஆர்வலர்களும் இயற்கையை ரசிப்போரும்  கொண்டாடும் ஒரு திரு விழா  சென்ற வருட விழாவின் போது  ஒரு ஆச்சர்யமான செய்தி  அதிக அளவு பல்வேறு வகையான பறவைகள் இந்தியாவில் இருந்துள்ளன , இவ்வளவு இயற்கை சீரழிவுக்குபின்னரும் ..

சரி  நாமும் அப்படி ஒரு முயற்சியில் இறங்கலாமே  என்று  இறங்கியதன் விளைவு== சோகம்தான் மிஞ்சியது.

நம்புங்கள் நண்பரே  காக்கையை தவிர  ஒரு பறவையை கூட காணோம்.

முப்பது  வருடங்கள்  பின்னோக்கி பார்கிறேன்  வழக்கம்போல். =

புதுவை நகரின் மையப்பகுதியில்தான் வீடு.  இருந்தாலும் எத்தனை
எத்தனை  பறவைகள்.

தத்தி தத்தி தாவிப்பறக்கும் சிட்டுகுருவி  அதன் கீச் கீச் சத்தம்  எவ்வளவு இனிமை.

மாடி  வீடுகளிலே  ஒய்யாரமாக  வாலாட் டிகொண்டிருக்கும் கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு குருவியும் பழுப்பும் மஞ்சளும் கலந்த ஒரு குருவியும்  பார்க்க எவ்வளவு அழகு. அந்த குருவிகளுக்கு பெயரே  வாலாட்டிகுருவி.

சட்டென்று பச்சை பசேலென்று  கூட் டமாக கொஞ்சி விளையாடும் பச்சைகிளிகள் .

ஆனைச்சாத்தான் குருவிகள். கேள்விப்பட்டதில்லையா  நம்ம ரெட்டைவால் குருவிதான்தாங்க.  மின் கம்பிகளின் மேல் ஒரு ஒழுங்குடன்  வரிசையாக அமர்ந்திருக்கும்  காட்சி .

இன்னும் தேன் சிட்டு குருவி,   சிட்டான் குருவி   அப்ப்புறம் மஞ்ச குருவி.
வெ ப்ப மரத்தில்  அதிகமாக வசிக்கும் ..

ஹூம்  கொட்டிகொண்டே இருக்கும் குருவியை இன்றைய தலைமுறையினர்  பார்திருப்பாகளா என்பது சந்தேகம்.. அதுக்கு பேறு கனான் குருவி .

மனதை வருடும் ஒரு லயத்தோடு மரத்தை கொத்தும மரங்கொத்தி பறவை .

அப்புறம் இருக்கவே இருக்கிறது  மணிபுறா  மாடப்புறா .

அப்போதெல்லாம்  காராசேவ்  முறுக்கு  பகோடா போன்றவைகளை  மனதார இலையில் கட்டி தருவார்கள்.  நாம் கடையிலிருந்து வீட்டிக்கு வருவதற்குள்

நம்மை பின்தொடர்ந்து வரும்  பருந்துகள் அசந்த நேரத்தில் கையில் உள்ளதை பிடுங்கி  விறென்று பறக்கும். அவைகள் எங்கே.

வியாழக்கிழமை  கருடனை பார்த்தால்  கன்னத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும்  அதனுடனே

  குங்குமான்கித  வர்ணாய  குந்தேந்து தபலாயஸா
   விஷ்ணு வாஹந    விச்துப்யம்  பட்சிராஜா நமஹா

என்ற ஸ்லோகத்தை சொல்லவேண்டும்  என்று பெரியவர்கள் சொல்லி யிருந்தார்கள் .  அந்த சுலோகம் நான் சரியாக சொல்லிருக்கேனா  அதன் அர்த்தம் என்னவென்று  எனக்கு தெரியாது.  அனால் இப்போது தப்பாக இருந்தாலும் பரவாயில்லை  சுலோகம் சொல்ல தயாராய் இருக்கிறேன்.
கருடனைதான் காணோம்.

 ஒன்று மட்டும் உண்மை  இயற்கையிலிருந்து விலகி வெகு தூரம் நாம்  வந்துவிட்டோம்.

என் ஜோடி மஞ்ச குருவி ,  பூஞ்சிட்டு குருவிகளா ,  அந்த கானன்காத்த குருவிக்குத்தான் கழுத்துல வெள்ள ,  தூக்கணாம்  குருவி எல்லாம் தானறிந்த
பாஷையிலே  ,  பொன் பட்டாடை  மூடிசெல்லும்  தேன் சிட்டோடு மெல்ல,
 சிட்டான்  சிட்டான்  குருவி  உனக்குத்தானே   என்ற பாடல்கள் மூலமாவது
இவைகளை அறிவது  ஒரு நல்ல விழயம் தான்.






No comments:

Post a Comment