Monday, March 9, 2015

andru arasukku indru thaniyaarukku

அன்று அரசுக்கு  இன்று தனியாருக்கு ---

முதலிலேயே சொல்லி விடுகிறேன் இது அரசியல் பதிவல்ல.

விஜய்  டிவியின்  சூப்பர் சிங்கர் முடிந்து வாரங்கள் சில ஓடிய பின்னும் அது பற்றிய சர்ச்சைகள்  இணையத்தில் இன்னும் ஓய்ந்த பாடில்லை.  இவருக்குதான் முதல் பரிசு கொடுத்திருக்கணும்  இல்ல இல்ல இவர்தான் சூப்பர் , ஐயோ எல்லார விட இவர் தூள்  என்று  ஏகப்பட்ட  கண்டன குரல்கள் .

இதை பார்க்கும்போது  நான் படித்துகொண்டிருக்கும்போது  நடந்த ஒரு பரிசு போட்டி  ஞாபகத்திற்கு  வருகிறது.

ஒரு வெற்றிபெற்ற திரைப்படத்தை பற்றிதான் போட்டி.  என்னவென்றால்
அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களில்  சிறந்த  நடிப்பை நல்கிய கதா பாத்திரம் எது  அதை வரிசைபடுத்த வேண்டும் என்பதே போட்டி . படக்குழுவினர்  ஏற்கனவே  வரிசை படுத்தியுள்ள   வரிசையுடன்  நாம் அனுப்பும்  வரிசையும் ஒத்துப்போனால்  நமக்கு பரிசு . கேட்பதற்கு  சுலபமாக இருக்கும் இந்த போட்டி  மிக கடினமானது . நாம் வரிசைபடுத்திய  கதா பாத்திரங்கள் போஸ்ட் கார்டில் தான் அனுப்ப  வேண்டும். அப்போது மின்னஞ்சல், குறுஞ்செய்தி  வலைத்தளம்  போன்றவைகள் கனவில் கூட வந்திராத காலம் .

நாங்கள் ஒரு நண்பர்கள் குழு ஆரம்பித்து  ஒவ்வொரு நண்பனும் ஒவ்வுறு பாத்திரத்தின் நடிப்பை வரிசைபடுத்தி  தபால் கார்டில் போஸ்ட் செய்தோம் . அப்போது அது மிக கடினமான வேலை என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள்  பத்து பேர்  ஒன்பது விதமாக வரிசைபடுத்தி  பத்தாவது போஸ்ட் கார்டில் குருட்டாம்போக்கில் கதா பாத்திரத்தின் நடிப்பை  வரிசை படுத்தினோம். பரிசு நிச்சயம் எங்களுக்குத்தான் என்று இருந்தோம்  ஆனால் அது சுலபமானது அல்ல என்பது போட்டியின் முடிவை பார்த்த போதுதான் தெரிந்து கொண்டோம் . ஏனென்றால்  ஆயிரக்கணக்கில் கடிதங்கள்  வேறு வேறு மாதிரி  வரிசைபடுத்தப்பட்டு.

எந்த படம்  எந்த காதாபாத்திரம் என்று நீங்கள் சரியாக ஊகித்திருந்தால்  நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுகொள்ளுங்கள்.

தெரியாதவர்குக்கும் இன்றைய தலைமுறையினருக்கும்   விடை : படம்  நவராத்திரி   வரிசைபடுத்தவேண்டியது  நடிகதிலகம் நடித்த ஒன்பது வேடங்களில்  எந்த பாத்திரம் சிறப்பாக இருந்தது.

அந்த ஒன்பது கதா பாத்திரங்கள்  விபரம்:  கதாநாயகன் , அற்புதராஜ், முரடன் ,
குடிகாரன், டாக்டர், நாடக நடிகன், விவசாயி , போலீஸ் அதிகாரி  தொழுநோயாளி .

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது  நான் வரிசைபடுத்தியது.  அவைகள்
1) டாக்டர்     2)  விவசாயி   3  தொழு நோயாளி       போலீஸ் அதிகாரி      நாடக நடிகன்   குடிகாரன்     முரடன்    அற்புதராஜ்     கதாநாயகன்

எதற்கு பரிசு கிடைத்தது என்று ஞாபகம் இல்லை . யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சரி விழயதிர்க்கு வருவோம்.  முடிவு வெளியானவுடன்  இதே போன்று   சர்ச்சைகள்  அப்போதெல்லாம்  இதை விமரிசிக்க     நமது கருத்தை வெளிபடுத்த  இவ்வளவு   வாய்ப்பும்  வசதியும் அப்போது இல்லை . இருந்தாலும்  நண்பர்களுக்குள்  இது சரியில்லை  அது சரியில்லை  என்ற விவாதங்கள்  தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதில் தெரிந்தது என்னவென்றால் ஒரு முடிவு என்றால் எந்த காலமாய் இருந்தாலும்  அதிருப்தி  என்பது இருக்கத்தான் செய்யும்.

ஒரே நடிகர் நடித்து ஒன்பது பாத்திரங்களிலேயே   சிறந்தது எது எனும், முடிவை  அறிவிக்கும் போது  விமர்சனத்திருக்கு  ஆளாகும்போது , ஆறு போட்டியாளர்கள்    வேறு  வேறு  மாநிலங்களை  சேர்ந்தவர்கள்  கலந்து கொண்ட போட்டியின் முடிவுகள் அனைவரும் ஒத்து  போகும்  படியாகவா இருக்கும்.

அந்த போட்டியினால்  தபால்  துறைக்கு .  நல்ல வருமானம் . நிறைய  தபால்  விற்றல் லாபம் தானே .

இப்போது போட்டிகளில் முடிவை தீர்மானிக்க மினஞ்சல் , குறுஞ்செய்தி ,வலைத்தளம் என்ற  வாய்ப்பு  இருந்தாலும்  வருமானம் என்னவோ தனி யாருக்குத்தான் .

உங்களில் நவராத்திரி படம்பார்தவர்கள்  இன்றைய சூழ்நிலையில்  அதில் நடிகர் திலகத்தின்  எந்த பாத்திரத்தின்  நடிப்பு  முதல் இடம்  இரண்டாம் இடம்  .என்று  வரிசை படுத்துங்களேன்  

 
ஆயுள் காப்பீட்டு கழகத்தின் வருமானம் தற்போது நாட் டு நலன்களுக்காக  செலவ செய்யப்படுகிறது.   அதில் அந்நிய முதலீட்டை அதிகபடுத்தினால்  அது சாத்தியமா.  இன்று நாடெங்கிலும் உள்ள  எல் ஐ சி ஊழியர்கள்  அந்நிய முதலீட்டை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.  இதற்கும் மேலே உள்ள பதிவின்  தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை. . தோன்றியது  எழுதினேன் .


No comments:

Post a Comment