Tuesday, March 3, 2015

antha varisail ippothu santhiyum.

அந்த வரிசையில் இப்போது சாந்தியும் ===

பழமை புதுமையாய் மாறும்போது  எண்ணங்கள் எப்படியெல்லாம் பயணிக்கிறது.  சென்னை சாந்தி தியேட்டர்  பொழுதுபோக்கு வளாகமாக மாறப்போகிறது  என்ற செய்தி  என் நினைவுகளை பின்னோக்கி செலுத்துகிறது.

கட்டிடங்கள் வெறும் கற்கள் அல்ல அவைகள் எத்தனையோ ஆச்சர்யங்களையும் , சாதனைகளையும், வரலாறுகளையும் , சோகங்களையும் ,இனிப்புகளையும்  சோர்வுகளையும்  இ ன்னும் எண்ணற்ற  உணர்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  அதை அதில் உணர்ந்து பார்த்தவருக்குத்தான்  உண்மையான வீச்சு புரியும்.

இப்படி ஒரு-- அல்ல அல்ல -- சில அனுபவங்கள்  எனக்கும் உண்டு.

முதலில்  35 A  செட்டி தெரு   பாண்டிச்சேரி , எங்கள் வீட் டு விலாசம். . அரவிந்தர்   ஆஸ்ரமம்  இந்த தெருவில்தான் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக  எங்கள் முன்னோர்  காலத்திலிருந்தே  அதுதான் எங்கள் வசிப்பிடம்.
எண்பதுகளில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் குடும்பம்  பெரிது ஆனதினாலும்  அந்த வீட்டை விற்று விட்டு சகோதரர்கள் அனைவரும் தனி தனியாக வீடு வாங்கி விட்டோம் . என்னதான் இப்ப்போது என்னுடைய வீடு சற்றேறக்குறைய  வசதிகளுடன் இருந்தாலும்  செட்டி  தெரு வீடு  வீடுதான்.
காரணம்  திண்ணை , ரேழி , முற்றம்  தாவாரம்  வீட்டின் பின்புறம்  கிணறு.
என்று சகல் அம்சங்களுடன்  ஓடு எப்போது தலையில் விழும் என்ற நிலையுடனும் ஒரு நிம்மதி வாழ்கை அங்கே இருந்தது.  அது மட்டுமல்ல
மகா பெரியவா  புதுவை வந்த போது  எங்கள் இல்லத்தில் அவருக்கு சொர்ண அபிஷேகம்  நடந்ததாக எங்க தாத்தா சொல்ல கேட் டிருக்கிரேன். . புரட்சிக்கவி பார திதாசன் எங்கள் வீட்டில்  எங்கள் அப்பாவுடன் பேசிகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டை வாங்கியவர் அதை புதுப்பிக்க வேண்டி இடித்த  போது  மனம் அழுதது  முதல் முறை..

அஜந்தா தியேட்டர்  புதுவையின் பெருமைக்குரிய திரை அரங்கம் . ஏனெனில்
அந்த காலத்தில்   BENHUR,  TEN COMMANDMENTS, PHSYCO,  HATARI ,மற்றும்  JERRY LEWIS  நடித்த  அத்தனை படங்களும்,  CHRISTOPHER LEE  நடித்த  டிராகுல படங்கள் என வரிசை கட்டி அடித்த திரை அரங்கம். எங்க வீட்டு பிள்ளை படத்திற்காக மக்கள் திலகம் இங்கு வந்ததும் , பாவை விளக்கு படத்திற்கு நடிகர் திலகம் இங்கு  வந்ததும்   இன்னொரு மகுடம் .  அறுபதுகளிலேயே  கண்ணாடி போட்டுகொண்டு அனைவரும் பார்த்த படம்  13 GHOSTS என்ற ஆங்கில படம். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல்  இந்த திரை அரங்கில்  metro goldwyn mayor (MGM)  என்று  ட்ரைலர்  போடுவார்கள் . எதற்கு இவ்வளவு பீடிகை என்றால்  எனது தந்தையார்  இந்த தியே டேரில்தான்  ஆரம்பம் முதல் இறுதிவரை மேலாளராக பணி  புரிந்தார்..

அந்த தியேட்டர்  நவீன சொகுசு ஓட்டலுக்காக  இடிக்கப்பட்டபோது  இரண்டாம் முறை இதயம் வலித்தது.

கலவை கல்லூரி == நான் படித்த பள்ளி =நூறாண்டு பாரம்பரியம் உள்ள பள்ளி.
ஆங்கில வழியில் அரசு பள்ளி . மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதினால் அரசு  இதை புனரமைப்பு  செய்ய வேண்டி  தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக செய்தி. வானளாவிய மரங்களுடன்  நகரின் மைய்யபகுதியில் கொத்து கொத்தாக  மாணவர்கள் அருகில் உள்ள திடலுக்கு உடற்பயிற்சி செய்ய  P.T. PERIODல்  வெளியே செல்ல திரும்ப வரும்போது பாதி மாணவர்கள் எஸ்கேப் ஆகி இருப்பது  மறுநாள் ரகளையான ரசனையாக மாறும்.

அந்த பள்ளியை புதுப்பிக்க இடிக்கும்போது  எனக்கும் வலிக்கும்தானே.

சாந்தி  தியேட்டர் :   மாணவ பருவத்திலே  நாங்கள் பெருந்தலைவர்  ஐயாவை
காண செல்லும்போதெல்லாம்  அன்னை இல்லத்திற்கு விஜயம் என்பது கட்டாயம்.  அந்த சிங்கம் படப்பிடிப்பிற்காக  வெளியூர் சென்று இருந்தால்  எங்கள் அடுத்த இடம் சாந்தி  திரை அரங்க வளாகம்தான் . சிவாஜி ரசிகர்களின் அறிவிக்கப்படாத அரங்கமாக இருந்தது  சாந்தி திரை அரங்கம். அங்கு அப்போது தினசரி ஆஜராகும்  சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்  மகாதேவன் (மகாதேவா இப்ப எங்க இருக்க ?))  துபாய்க்கு போக முயற்சி செய்து கொண்டிருந்த  அன்சாரி பாய்  இன்னும் நாகர் கோயில் அண்ணாச்சி என்று ஏராளமான நண்பர்கள்.

நான்  LIC EMPLOYEE    ஆன பின்பும் சென்னைக்கு செல்லும்போதெல்லாம்  சாந்தி திரை அரங்கிற்கு  அருகில் உள்ள எல் ஐ சி கிளையில் உள்ள நண்பர்களை  பார்த்து விட்டு சாந்தி திரை அரங்கிற்கு வருவேன். அப்போதும் நான் ரசிகர்களை பார்ப்பது  உண்டு.

சில மாதங்களுக்கு முன் சென்னையில்  என் மகள் ஒரு தேர்வு எழுத வேண்டி இருந்ததால்  நானும கூட  சென்றேன்.  அப்போது வா சரவணா பவனில் சாப்பிடலாம் என்று கூறி  சாந்தி திரை அரங்க வளாகத்திற்கு  விஜயம் செய்தேன்.

உண்மையை நான் சொல்லியிருந்தால்  என் மகள் என்னை விநோதமாக பார்திருப்பாள் . காரணம்  இன்றைய தலைமுறைகளுக்கு எல்லாமே சாதாரணமாக போய்விட்டது.

உங்களில் சிலர் கூட என்னை திட்டலாம்  ஆனால்  சட்டென்று  உணர்வுக்குள் மூழ்கிடும் 
சராசரி மனிதன் தானே நான்.

DAVINCI CODE படித்த நான்தான்  TED MARKAIYUM  படித்தேன். சே குவரா படித்த நான்தான்  சத்திய சோதனையும் படித்தேன். சுஜாதா ஈர்த்தார் என்றால்
ஜெயமோகனை  தவிர்க்க வேண்டுமா. ?  கம்பனும் ஆழ்வார்களும்  தமிழ் சொல்லி கொடுத்தனர். நான் ஏ நாத்திகனானே என்று கேட்டுகொண்டே  அர்த்தமுள்ள  இந்து மதம் படிக்கிறேன்.  எனக்கு எத்தனை முகமூடிகள்.

ஆனாலும் நான் நானேதான்  என்று உணர்சிகள் சொல்கிறதே.



.

No comments:

Post a Comment