Monday, July 20, 2015

nadigar thilagam ninaivu naal

ஐயா  சிவாஜி அவர்களே ,

நாளை உங்களுக்கு நினைவு  தினமாம்.  ஒருவரை மறந்தால்தானே  நினவு கொள்ளமுடியும் . உங்களை தமிழகம்  நாள்தோறும்தான்   நினைவில் கொண்டிருக்கிறதே.  அது எப்படி என்கிறீர்களா ? 

கலைஞரின்  திறமை என்று பேசப்படும்போது , கூடவே உங்கள்  மொழி ஆற்றல் பேசப்படுகிறதே.

கவி அரசு கண்ணதாசன்  பாடல்கள் அற்புதம் என்று சொல்லும்போது  நடிகர் திலகமே  நீங்கள் நடித்த காட்சிதானே விழித்திரையில் ஓடுகிறது. 

மெல்லிசை மன்னர் இசை யமைப்பு அற்புதம் எனும்போதே  உங்கள் முக பாவங்கள் இசையுடன் சேர்ந்தே வருகிறதே. அதுவும் யார் அந்த நிலவு  பாடலில் .

சௌந்தரராஜன்  பாடுகிறார்   என்று சொல்வதை விட  சிவாஜி பாட்டு என்றல்லவா சொல்கிறார்கள். 

மாணவர்களின் பிரிவு உபசார விழாக்களில்  இன்ன்றும் நீங்கள் கலந்து கொள்வது ----பசுமை நிறைந்த நினைவுகள் தானே ===

தேசிய தலைவர்கள்  பிறந்த நாட்களை  நினைவு நாட்களை   அரசு  கொண்டாடும்போது  வ வு சியா  எங்கள் கண்ணில் தெரிகிறார்கள்  .

ஆடி மாத கோயில் திருவிழாக்களில்  திருவிளையாடலையும் , சரஸ்வதி  சபதம் பட  வசனங்களையும் ஒலி பரப்பாத   கோயில்கள் உண்டா. 

பரதன், கர்ணன் எனும்போது  விழிவழியே  உலவும் உருவம் நீர்தானே ஐயா. 


முஹூர்த்த நேரங்களில்  பூமுடிப்பால்  இந்த பூங்குழலி  என்று நாதஸ்வரம் 
குழையும் பொது  விழி நீரை  சொந்தங்கள் தொடைத்துகொண்டிருக்கும்போது அங்கே நீ அல்லவா  வாழ்கிறாய். 

தங்கைக்காக  ஒரு அண்ணன்  உருகும்போது   ஆமா இவரு பெரிய பாசமலர் சிவாஜி  அப்படியே உருகராறு என  யாராவது  எந்த வீட்டிலாவது  சொல்வது 

இன்றும் கேட்டுக்கொண்டுதானே இருக்கிறது .

இன்றைய தலைமுறை யினர் , கிண்டலாக  ஆமாம் சிவாஜி  ஐந்து ரூபாய்க்கு 
நடிக்க சொன்னால்  ஆயிரம் ரூபாய்க்கு நடிப்பார்  என்று சொல்கிறார்கள். 
அவர்களுக்கு தெரியாது  ஒருதொழிலின் உச்சம் அது என்பதும்  மற்றவர்கள் ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால்  ஐந்து பைசாவிற்கு கூட  முயற்சி செய்யமாட்டார்கள்  அல்லது முடியாது என்பதும. 

காமராஜ் என்று சொல்லும்போதே  அதினுள்  கடைசி தொண்டன் சிவாஜி என்பதும் அடங்கியதுதானே. .

தனியார் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சியில்  இப்பெல்லாம்  உன் பாடல்களைத்தான்  வெற்றி பெற பயிற்சி செய்கிறார்கள்.  ஐயா அதற்காகவே 
உங்கள் பட கேசெட்டுகள் வாங்கி பயிற்சி செய்கிறார்கள்.  அந்த படங்களையும் 
பாடல்களையும் பார்த்து விட்டு  பிரமித்துபோய் இருக்கிறார்கள்  என்பது நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம் ஐயா .

நேரம்  தவறாமை, தொழில் பக்தி, தேசபக்தி,  தெய்வ பக்தி,  பாச உணர்ச்சி ,
தமிழ் உச்சரிப்பு  சக தோழர்களை ஊக்குவித்தல்  போன்ற அரும் பண்புகளை 
எங்களை போன்றோர் உங்களிடம் தானே கற்றுகொண்டோம் ..

தமிழகத்து  மக்களின்  இதயத்தில் ஒரு பகுதி நிரந்தரமாக உங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது  ஐயா. 

அனுசரிக்கப்படு பிறந்த நாட்களும்  நினைவு நாட்களும்  வெறும் சம்ப்ரதாயங்கலே. . 

இயற்கை உள்ளவரையிலும் , தமிழ் உள்ளவரையிலும்   தேசிய கலைஞனே 
நீ வாழ்கிறாய். 

ஐயா உங்களை என் போன்றவர்கள் என்றுமே நடிகனாக பார்த்தது இல்லை 

No comments:

Post a Comment