Wednesday, November 11, 2015

vaedhaalam

வேதாளம்  திரைப்பார்வை

சந்தேகமே இல்லாமல்  தல தலைதான்.  படத்தை பற்றி அப்புறம் பாப்போம்
படம் பார்த்த  அனுபவத்தை  பகிர்கிறேன்.   சாதாரணமாக  திரை உலக பாஷையில்  ஒபெநிங் ( அதாவது முதல் காட்சிக்கு வரும் ரசிகர்கள் ) பிரமாதம் என்று சொன்னால் பெரும்பாலும்  அது ரஜினி , கமல்  விஜய்  அஜீத் படமாக இருக்கும். இதில் எப்போதுமே  அஜீத்திற்கு  ஒபெநிங்   நன்றாக இருக்கும்.  ஆனால் இந்த வேதாளம் படத்திற்கு  ஒபெநிங்  இருக்கிறதே  அது அத்தனை   நடிகர்களின் படத்தையும்  தூக்கி  சாப்பிட்டு விட்டது.. புதுவையில் ஏறக்குறைய  அணைத்து பெரிய திரை அரங்குகளிலும் வெளியிடப்பட்ட  வேதாளம்  படம்  மிகப் பெரிய  கூட்டத்தை  ஈர்த்தது.  திரை அரங்கினுள்  படம் தொடங்கியதும்   தல ரசிகர்களின்  ஆர்பரிப்பு  என்னை மிகவும் ஆச்சர்ய பட  வைத்தது. 

இம்மாதிரி  ஆரவாரம் ஆர்பாட்டம்  எல்லாம்  நான்  சிவந்த மண் , உலகம் சுற்றும் வாலிபன்  போன்ற படங்களுக்கு தான்  பார்த்து  இருக்கிறேன்.

அதிகம் பேசாத , ஊடகங்களில்  தலை காட்டாத, விளம்பர படங்களில்  நடிக்காத  சர்ச்சைகளுக்கு  ஆளாகாத  ஒரு  நடிகனாக  மட்டுமே தன்னை வெளிப்படுத்தி கொள்ளும்   அஜீத்திற்கு  எப்படி இப்படி ஒரு மாஸ்.
எத்தனை  காரணங்களை யோசித்தாலும்  புரியாத புதிராக இருக்கிறது.

சரி  இனி படத்தை பற்றி பாப்போம் .
  அடிதடி   அலம்பல்,ஆக்ரோஷம்   ஸ்டைல், அவயங்களை அதிர வைக்கும்  பாடல்கள்  பாச மலர் செண்டிமெண்ட்  பளீச்  ஒலிப்பதிவு  பர பர  காட்சிகள்   பஞ்ச் வசனங்கள்  . மொத்தத்தில்  சரி விகித  மசாலா கலவை.
 சுவையான  மசாலா.


No comments:

Post a Comment